மல்லிகையே மல்லிகையே - வியட்நாம்(Vietnam!)

வணக்கம் நண்பர்களே....

 நம்மூரு பெண்கள் என்ன தான் அழகா உடை உடுத்தினாலும்(!) பூக்கள் சூடி இருந்தால் தான் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருக்கும்....இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே....அதைப்பற்றிய பதிவு இது...(!)

 இங்கு பூக்களை தினமும் வாங்கி செல்வோர் உண்டு(!)...அதனை தங்கள் வரவேற்ப்பறையில் வைக்கும் பழக்கம் இங்கு நகரத்தில் வாழ்பவர்களிடம் மிகுதியாக காணப்படுகிறது....எனவே தினமும் நடைப்பயிற்சியில் இருந்து வீடு திரும்பும்போது வரும் வழியெங்கும் பூக்கள் நிறைந்து இருக்கும்....நாங்களும் இதை பின்பற்றி வீட்டில் பூக்களை ஒரு சிறிய உயரிய ஜாடியில் வைத்து வீடு முழுதும் மனம் பரப்பி வந்தோம்(!)....

என் மனைவிக்கு என்னை சற்று அலைய விட வேண்டும் என்று தோன்றி இருக்க வேண்டும்....திடீரென்று என்னை பார்த்து...


"என்ன இருந்தாலும் தமிழ் நாட்டில் வாங்கும் மல்லிகைக்கு நிகராகுமா"என்றாரே பார்க்கலாம்...

"ஏன் அப்படி என்று நான் கேட்க்க"...

அதான் இந்த சுற்று சுற்றி வருகிறீர்களே(!)....முடிந்தால் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்கள்.....


நானும் "ஒரு மல்லிகையே மல்லிகை கேற்ப்பது ஞாயமா" என்று கூற....(ஐஸ்!)

இந்த சமாளிப்பு தேவை இல்லை என்று எதிர் தரப்பு(!) கூற....

நானும் அதற்கென்ன வாங்கி தருகிறேன் என்று வாய் வார்த்தையாக கூறிவிட்டேன்....பிறகுதான் தெரிந்தது அந்தப்பூ மட்டும் இங்கு கிடைப்பதில்லை என்று(!).....இருந்தாலும் ஒரு முடிவு செய்தேன்...எப்படியாவது தேடி கண்டுபிடிப்பது என்று(!)....ஒரு காபி கடையில்(cafe!) நான் மற்றும் என் மனைவியும் உட்க்காந்து இருக்கும் போது மல்லிகையை ஒரு சிறிய கண்ணாடி டப்பாவில் தண்ணீரில் மிதக்க விட்டு இருந்தார்கள்...விடுவேனா(!) உடனே அந்த கடைக்கார பெண்ணை அழைத்து இந்த பூ வேண்டும் கூற....(!)


அவள் என்னிடம் நாளை வாங்கி வருகிறேன் என்று கூறினாள்....மற்றும் இந்தப்பூ மிக அரிதாக பூக்கும் வகையை சேர்ந்தது...உங்களுக்கு எதற்கு என்று கூறவே...நானும் எம் குல பெண்கள் இந்த பூவை தலையில் சூடும் பழக்கமுடையவர்கள் என்று கூற(!)...அவள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றாள் எங்கள் இருவரையும்...


அடுத்த நாள் 100 கிராம் மல்லிகை கிடைத்தது($3)...நன்றி கூறினேன் அந்த அன்பிக்கு(!)...எப்படியோ மனைவி கேட்டு இல்லை என்று சொல்லாமல் தப்பித்து விட்ட மகிழ்ச்சி எனக்கு....

சுயபுராணம் தவிர்த்து....இங்கு பலவித பூக்கள் அழகுடன் ஜொலிப்பதை எண்ணி வியக்கிறேன்....அதுவும் ஆள் உயர செடிகளுடன் கூடிய பூக்களும் விற்ப்பனைக்கு வருகின்றன....

என்னதான் சொல்லுங்க நம்மூர்ல பெண்கள் தலையில் சூடிவரும் அழகுக்கு இணை ஏது(!)


கொசுறு: எங்க போனாலும் நம்ம ஊரு(!) போல தேடுறதே பொழப்பா போச்சி ஹிஹி!  
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

31 comments :

  1. யாரையுமே காணோம்?
    பூவுக்காக மாம்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு! வாழ்த்துக்கள் அடிக்கடி இப்பிடி மாட்டுவதற்கு! :-)

    ReplyDelete
  2. இது பூக்கள் மணக்கும் பதிவு...

    ReplyDelete
  3. நல்லவேளை எந்த ஊரு மல்லினாலும் , மதுரை மல்லி மாதிரி வருமா-னு யாரும் சொல்லாமல் விட்டதற்காக சந்தோஷப்படுங்கள்.

    ReplyDelete
  4. பிரகாஷ் கூ ட சேர்ந்தாலே இப்படித்தான்.. மல்லி ஜொள்ளி

    ReplyDelete
  5. வியட்நாம் மல்லி அழகு...

    ReplyDelete
  6. ஆமா விக்கி..மல்லிக்கு தனி அழகு உண்டு.

    ReplyDelete
  7. பேசாம நம்ம தமிழ்வாசிக்கு ஒரு போன் அடிச்சிருந்தா ஒரு கப்பல் புல்லா மல்லி வாங்கி அனுப்பிச்சிருப்பாரே?

    ReplyDelete
  8. உண்மை தான்... மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.... பூக்களில் மல்லிகைக்கு இருக்கும் அழகு வேறு எந்த பூவுக்கும் இல்லை... வாசம் தூக்கும் பாருங்க ஒரு தூக்கு.... அப்பா...சூப்பர் பதிவு பாஸ்

    ReplyDelete
  9. மல்லிகை பற்றி மணமான ஒர் பகிர்வு.

    ReplyDelete
  10. //இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே//

    உங்கள் சோகம் புரிகிறது......

    ReplyDelete
  11. நீங்க மல்லின்னு சொல்றது கொத்தமல்லியா சுக்கு மல்லியா?
    ஐயோ பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டாரு?

    ReplyDelete
  12. மாப்பிள நாங்களும் போடுவோமில்ல வோட்டு...
    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  13. இன்டலி, tamil10 ஓட்டு இப்ப தான் போட்டேன்

    ReplyDelete
  14. எங்க போனாலும் நம்ம ஊரு(!) போல தேடுறதே பொழப்பா போச்சி


    ..... தாய்மண் பாசத்தின் வெளிப்பாடு. :-)

    ReplyDelete
  15. எப்படியோ மனைவி கேட்டு இல்லை என்று சொல்லாமல் தப்பித்து விட்ட மகிழ்ச்சி எனக்கு....

    ...How sweet!

    ReplyDelete
  16. .இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே

    மாப்ளைக்கு ஏக்கமோ ?

    ReplyDelete
  17. மல்லிகையை பத்தி மணக்க மணக்க சொல்லி இருக்கீங்க .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. ”மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் ஒலித்திருக்குமே!

    ReplyDelete
  19. அண்ணே சரிதான் மல்லிகை பூவா வச்சே ஒரு பதிவா ,எங்க ஊருபக்கம் வாங்கன்னே ஓசிலே அள்ளிட்டு போகலாம்

    ReplyDelete
  20. மல்லிகைப்பூ இங்கே லேசில் கிடைக்கிறது... வியட்நாமில் அரிது..

    எப்படியோ வாங்கி கொடுத்துட்டீங்க :)

    ReplyDelete
  21. உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைய அழைக்கிறோம்.

    ReplyDelete
  22. நானும் "ஒரு மல்லிகையே மல்லிகை கேற்ப்பது ஞாயமா" என்று கூற....(ஐஸ்!)


    மல்லிகையே மல்லிகையே
    மாலையிட்ட மன்னனுக்கு
    மல்லிகை கிடைக்க
    மனம் வைத்த அன்பிக்கு
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள்....

    ReplyDelete
  23. மல்லிகைப்பூ மணக்குதய்யா

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி