வியட்நாம் பொழுதுகள் - 2

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?)......இந்த வார்த்தையை நான் முடிக்க விரும்பவில்லை.


ஏன்னெனில் எளியவனுக்கு புல்லும் ஆயுதம்.....அதனை உபயோகப்படுத்த முடியுமானால்....இது ஒரு அறிஞரின் கருத்து.


எல்லோரும் நினைப்பது போல சாதாரண மக்கள் அல்ல வியத்நாமியர்கள். போராடும் குணம், நாட்டுப்பற்று, உயிரை துச்சமாக மதித்தல், பெண்களின் வீரம் இவைகள் அனைத்தும் சேர்ந்தவர்கள். அதனால் தான் போரிட்டு கிடைத்த வெற்றியை தினமும் சந்தோஷமான நாட்களாக கழித்து கொண்டு இருக்கின்றனர்.


விஷயத்துக்கு வருகிறேன்......வல்லரசுக்கும் இந்த சின்ன நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட போரின் போது...இவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னால் இவர்களுக்கு தலைமை வகித்த திரு. ஹோசிமிங் முதன்மைபெறுகிறார். இவர் தான் இந்த கொரில்லாப்போர் முறையை இம்மக்களுக்கு புகுத்தி வழி நடத்தியிருக்கிறார்.

நீங்கள் நம்புவது சிறிது கடினமே.....ஏன்னெனில் இம்மக்கள் போர்க்காலங்களில் உருவாக்கிய சுரங்கங்கள்(Tunnels) இன்றும் காட்சிபொருளாக வைத்திருக்கிறார்கள்.


சும்மா இல்லங்க....வெறும் 2 க்கு 2 என்று சொல்வோமே அந்த அளவுதான் இந்த சுரங்கங்களோட முக அமைப்பு ஆனா கிட்ட தட்ட 200 கிமி தூரத்துக்கு இப்படி செஞ்சி வச்சி இருந்திருக்காங்க.......இல்லன்னா வலிமையான எதிரிய எப்படி எதிர் கொள்றது(!)....


வியத்நாமியர்கள் ரொம்ப மெலிய உடல் வாகு கொண்டவர்கள்......ரப்பர் போல உடம்ப வளச்சி இந்த சுரங்கங்கள் மூலமா உள்ள குடும்பமே நடத்தி இருக்காங்க....இதுக்குள்ள இருந்து கிட்டு சும்மா தண்ணி காட்டி இருக்காங்க வல்லரசுக்கு.........

வல்லரசுக்காரங்க பெரிய திடக்காத்திரமான உடலமைப்பு கொண்டவங்க........இதுக்குள்ள புக முடியாது......


இந்த சுரங்க அமைப்பை பாருங்கள் உள்ளிருந்தே சமைத்து சாப்பிடும் அமைப்பு. காற்றுப்போக்கி உண்டு. அதிலும் வெறும் மரவல்லிகிழங்கை சாப்பிட்டு பல காலம் உயிர் வாழ்ந்து இருக்கின்றனர்.

இதுவரைக்கும் நீங்க பாத்தது டிரைலர் தான்..............


வல்லரசுக்கும், இவங்களுக்கும் சண்ட நடந்த போது..............இந்த நாட்டு மக்களை எளிதாக எங்கு ஒளிந்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க இயலவில்லை. அதற்க்கு ஒரு மோசமான வழிமுறையை வல்லரசு நாடு தேர்ந்தெடுத்தது..........


அதற்க்கு பேர் தான் orange குண்டு எனப்படும் அமில வாயுக்குண்டு.......இது போடும் இடத்தில் மக்கள் அகோரமாக மாறிப்போவர்கள் என்று தெரிந்தும்.......இந்த விஷ அமிலத்தை விமானம் மூலம் பாச்சியது....இந்த விஷயத்தில் கொடுமை என்னவென்றால் இவர்கள் போட்ட இடத்தில இருந்த வல்லரசு மக்களும் இதனால் கொடூரமாகிப்போனர்கள்.



நிறைய படங்கள் கிடைத்தும் பகிர மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட கொடுமையான தருணம் அது. இன்றும் அந்த இடத்தில் பிறக்கும் பல குழந்தைகள் இப்படி ஊனமாகியே பிறக்கின்றன........


கிட்ட தட்ட பல ஆயிரம் பேர்கள் அப்போது இதனால் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது..........இந்த மாதிரி விஷயங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ளவே இந்த சுரங்கங்களை அமைத்து இருக்கிறார்கள் இம்மக்கள். இதன் மூலம் ஊடுருவி இருந்து கொண்டு எதிரி வரும்போது தாக்கி பல்லாயிரம் பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள்.


இந்த நாட்டுப்பெண்கள்தான் கொடிய போரில் எதிரிகள் தோற்று ஓடுவதற்க்கு முழுக்காரணம். இவர்கள் மட்டும் போரில் வல்லரசுக்கு எதிராக திரும்பி இருக்க வில்லை என்றால், முடிவு வேறாய் இருந்திருக்கும்.


இன்றும் இந்த பெண்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. வீட்டில் தங்கா கணவன்...........எந்நேரமும் குடி என்று இருக்கும் இவர்களைக்காக்க கடின உழைப்பை ஏற்று வாழும் பெண்களைப்பார்க்கும் போது, நம் நாட்டுப்பெண்கள் நினைவில் வருகின்றனர்.



இந்திரா காந்தி பார்க் - ஹனோய்

கொசுறு: போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

30 comments :

  1. ஆன் லைன்ல நிக்கிறம் மாப்ளே...

    ReplyDelete
  2. சுரங்க அமைப்பு முறை அவர்களின் நுட்பத்தை காட்டுகிறது.
    எனக்கு என்னமோ அவர்களுக்கு அடத்துவரும் ஆபத்து சீனாவிடமிருந்துதான் என்று தோன்றுது

    ReplyDelete
  3. @
    MANO நாஞ்சில் மனோ
    இல்லை மனோ ஜஸ்டு மிஸ்...

    ReplyDelete
  4. @Jana

    "Jana said...

    ஆன் லைன்ல நிக்கிறம் மாப்ளே..."

    >>>>>>>>>

    வருகைக்கு நன்றி மாப்ள...
    .............................

    "Jana said...

    சுரங்க அமைப்பு முறை அவர்களின் நுட்பத்தை காட்டுகிறது.
    எனக்கு என்னமோ அவர்களுக்கு அடத்துவரும் ஆபத்து சீனாவிடமிருந்துதான் என்று தோன்றுது"

    >>>>>>>>>

    சீனா பெரிய நாடா இருக்கலாம் மாப்ள...ஆனா இந்த அளவுக்கு மக்கள் ஒற்றுமை நான் பாத்ததில்ல...ஜாலியா இருப்பாங்க கோவம் வந்துது கழட்டிடுவாங்க...ஏற்கனவே 1000 வருஷம் சண்டை போட்ட வரலாறு இவர்களது...

    ReplyDelete
  5. இறுதி வரிகள்....

    நச்....

    ReplyDelete
  6. வியத்ன்னமின் வியத்தகு செய்திகள் பாரட்டுகளுக்குரியான வாழ்த்துக் களுடன்

    ReplyDelete
  7. எலேய் இது மீள் பதிவு மாதிரி இருக்கு உண்மைய சொல்லு....!!!

    ReplyDelete
  8. அருமையான ஆதங்கம், ஆரஞ்சு குண்டு பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.frontlineonnet.com/fl2819/stories/20110923281905900.htm

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள் .....
    நன்றி !!!

    ReplyDelete
  10. மாப்ள உன் ஆதங்கம் சரியானதே..

    //போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.//

    ReplyDelete
  11. உண்மையில் பதரவைக்கிறது..கோரில்லா போர்முறை இல்லையென்றால் மிகபெரிய வல்லரசுகளை சில நாடுகள் எதிர்கொள்ள கூடிய வாய்ப்பு இருக்காது...

    தன்னுடைய தாய் நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ண்த்தில் நாம் எந்த போர்முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

    ReplyDelete
  12. மேலை நாடுகளின் தாக்குதல் துரதிஷ்டவசமானது...


    அனுக்கதிர் தாக்குதலில் பாதிப்புகள் போல் உள்ளது இனி இது போன்ற தாக்குதல்கள் இந்த பூமியில் இருக்க கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம்...

    படங்கள் பதிவு சூப்பர்..

    ReplyDelete
  13. வியட்நாமிய மக்களின் போர் வெற்றி சரித்திரத்தில் மறக்க முடியாத சாதனை. அமெரிக்காவும் எப்போதும் மறக்காது.

    ReplyDelete
  14. orange குண்டு எனப்படும் அமில வாயுக்குண்டு என்பதே இவ்வளவு கொடுமை என்றால் அணுஆயுதங்களை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. தங்கள் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை வியட்நாமியர்களை அழிக்க வேண்டுமென்ற வல்லரசுகாரங்க புத்திய என்னன்னு சொல்றது!

    ReplyDelete
  16. சுரங்கம் அமைப்பை பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள். ரொம்ப திறமையானவங்க.

    ReplyDelete
  17. மாப்ள வியக்க வைக்கிறது உங்களின் தகவல் சத்தியமா சொல்றென்யா ரொம்ப சூப்பர் பல அறிய தகவல்கள் நன்றியா

    ReplyDelete
  18. வியட்னாம் மக்களின் போராட்ட வரலாறு உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் தியாகத்துக்கு பேர் போனவர்கள்.அவர்கள்

    ReplyDelete
  19. போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை/

    வியத்தகு வரலாற்றுப் பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. //நிறைய படங்கள் கிடைத்தும் பகிர மனம் வரவில்லை.//

    போதும்.சங்கடமாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. வணக்கம் பாஸ்,

    வியட்னாமிய மக்கள் மீதான அமெரிக்க வல்லாதிக்க படையெடுப்பின் போது அமைக்கப்பட்ட பதுங்குழிகள் பற்றிப் படங்களோடு பகிர்ந்திருக்கிறீங்க.
    நல்லதோர் வரலாற்றை மீட்டிப் பார்க்கும் பதிவு.

    ReplyDelete
  22. வியட் நாம் போன்ற நாடுகளின் மக்களிப்பற்றி அதிகம் தெரிவதில்லை. அவர்களைப்பற்றி எழுத்தும் கம்யுனிஸ்ட்கள் கூட தங்களின் சித்தாந்த முழக்கங்களை பெரிதாக முழங்குவார்களே அன்றி இம்மக்களின் இயல்பான வாழ்கை முறைகளை அதிகம் சொன்னதில்லை. வேறு எந்த ஊடகங்களும் கூட வியட்நாம் நாட்டவர் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    நீங்கள் அங்கிருந்து, உணர்ந்து எழுத்தும் இது போன்ற வரலாற்று துளிகள் வேறு எங்கும் கிடைக்காத ஒன்று விக்கி! நம்மை உணர்ந்து கொள்ள இதுபோன்ற செய்திகள் படிப்பினயாகட்டும்.

    நேரமின்மை காரணமாக முன்போல அதிகம் வலைதளங்களில் உலாவருவது பல காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் முயற்சிக்கிறேன் நண்பரே ! தொடருங்கள் . வாழ்த்துக்கள் ஒரு நல்ல பதிவினை தந்ததற்கு.

    ReplyDelete
  23. அந்த வலிகளும் வேதனைகளும் சுமந்த மக்கள் ஞாபகச் செதுக்கலாக வைத்திருக்கின்றார்கள்.நல்ல பதிவு விக்கியண்ணா!

    ReplyDelete
  24. சுரங்க அமைப்பு போட்டோ பிரமிக்க வைத்தது... கொசுறு சூப்பர்...

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி