வியட்நாம் பொழுதுகள் - 3

வணக்கம் நண்பர்களே....


நான் வாழும்(தற்காலிகமாக!) நாட்டைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை தெளிவாக அடுத்தவங்களுக்கும் தெரிவிக்கனும்னு எண்ணியதன் விளைவே இந்த தொடர்.

   ஹோசிமின்(1890-1969) - வியத்நாமின் சுபாஷ் 

தொழில் நிமித்தமாக தற்போது வாழும் நாடு - வியட்நாம்.
மக்கள் தொகை - 86 மில்லியன்
பேசும் மொழி - வியத்னாமீஸ்
உலகிலேயே பிரசித்தி பெற்ற நாடுகளின் வரிசையில் - 13 வது இடம்
உலகில் உள்ள சந்தோசமான மக்கள் வாழும் வரிசையில் - 5 வது இடம்
நல்லா கவனிங்க மக்கள் சந்தோஷமானவங்க.

அழகிய நாட்டுக்கு சொந்தக்காரங்க இந்த வியத்நாமியர்கள்.



இந்த நாட்டைப்பற்றி நான் என் சிறு வயது பாடப்புத்தகத்தில் மட்டுமே அறிந்து இருந்தேன். அப்போது தெரியாது இங்கு வந்து உலை வைத்து சாப்பிடப்போகிறேன் என்று.

அந்தப்பாடப்புத்தகதிலும் வியத்னாம் என்பதை ஒரு போர் நாடாக மட்டுமே அறிந்திருந்தேன்......இன்று வேலை நிமித்தமாக இங்கு தங்க வேண்டிவந்ததால் சற்று இந்த நாட்டைப்பற்றி நான் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





வியத்னாம் 4000 வருட பாரம்பரியம் கொண்ட நாடு. 1000 வருடமா சைனாவினுடைய  ஆதிக்கததுல இருந்தது வியத்னாம்.மிக நெடும் போர் நடந்த நாடு வியத்னாம்.10 வது நூற்றாண்டுல இருந்து புத்தமதத்த தழுவ ஆரம்பித்தது வியத்னாம். 19 வது நூற்றாண்டுல இருந்து இரண்டாவது உலகப்போர் வரை பிரான்ஸ் நாட்டோட காலனியா இருந்தது வியத்னாம்.


இரண்டாவது உலகப்போர் நடந்த போது ஜப்பான் கைக்கு போனது வியத்னாம். ஆன ரொம்ப நாள் நீடிக்கல. மறுபடியும் பிரான்சு நாட்டோட கைக்கு போனது............மிங் தலைமையில நடைபெற்ற போர்ல 1954 ல பிரான்ஸ் வியத்னாமோட வடக்குல இருந்து வெளியேறியது.........பின்பு ஏற்பட்ட ஜெனிவா ஒப்பந்த அடிப்படையில வடக்கு மற்றும் தெற்குன்னு இரண்டா பிரிஞ்சது.


வடக்கு வியத்னாம் சோசலிச கோட்பாடுடன்(ரஷ்யா, சீனா பின்புலமாக) செயல்பட்டது. தெற்கு வியத்னாம் அமெரிக்க ஆதரவோட செயல்பட்டது.



இரண்டாவது உலகப்போருக்கு பிறகு சோஷலிச நாடுகள் ஒரு வரிசையிலும், ஜனநாயக கோட்பாட்டு நாடுகள் ஒரு வரிசையிலும் நின்றன........இந்த நிலமையில அமெரிக்க நலம்விரும்பிகள் அப்படிங்கற நாடுகள் வரிசையில தெற்கு வியத்னாம் சேந்தது. வடக்கு வியத்னாம் ரஷ்யா மற்றும் சீனா ஆதரவு நாடாகியது.

1945 மற்றும் 1954 வருடங்களில் ஏற்பட்ட பிரான்சுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் இருந்து $2.6 பில்லியன் டாலர்களை உதவியாகப்பெற்றது. இதை வைத்து பிரான்சை வீழ்த்தியது......பின்பு ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைப்படி வடக்கு, தெற்க்கு என தற்காலிகமாக இரு நாடுகளாக பிரிக்கப்பட்டன. கம்யுனிசம் இல்லாத நாடு ஒரு புறமும், கம்யுனிச கொள்கைகொண்ட நாடு மறுபுறமும் எனப்பிரிந்தது. 1956 இல் பொதுவான தேர்தலுக்கு தெற்க்கு நாட்டை சேர்ந்தவர்கள் ஒத்துவர(அமெரிக்க துணை இருந்ததால்!) மறுத்தனர் இதனை அமெரிக்காவும் ஆதரித்தது.

1958 இல் வடக்கு தெற்க்கு மீது போர் தொடுத்தது.......அப்போது தான் "வியட்கோங்" என்றழைக்கப்படும் கம்யுனிச கொரில்லாக்கள் உருவாயினர். 1963 தெற்க்கு நாட்டவரிடம்  இருந்து மேகாங் எனப்படும் வளமான இடத்தை வென்றது வடக்கு.

1964 - இந்த நேரத்துல தெற்குக்கு ஆதரவா அமெரிக்க படை போர்ல இறங்கியது(சின்னப்பசங்கன்னு நெனச்சி இறங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுப்போனது!). ஜனவரி 1973 அமெரிக்கா, போரை நிறுத்தி கொள்வதாகவும் தங்கள் படைவீரர்களை விடுதலை செய்யும் படியும் கேட்டுக்கொண்டது. இதன் பிறகு 1975 ஏப்ரல் தெற்க்கு, வடக்கிடம் சரணடைந்தது. இதன் பிறகு வியத்னாம் முழு நாடாக உருப்பெற்றது.

இந்த தொடர் போர்(1954 - 1975) மற்றும் மிகப்பெரிய வல்லரசு என சொல்லிக்கொள்ளும் நாடு எப்படி பின் வாங்கியது, இவர்களின் போர் முறை எப்படிப்பட்டது, அப்பாவி மக்கள் எப்படி ஆயுதம் எடுத்து போராடினர், பெண்களின் மிகப்பெரிய பங்கு என்ன போன்ற.......பல கேள்விகள் எழும் என்று நினைக்கிறேன்........அதைப்பற்றிய தொடர்தான் இது...........

இது ஆரம்பம் மட்டுமே இனி பல விஷயங்கள நீங்க தெரிஞ்சிக்கப்போறீங்க.....காத்திருங்கள்.....


தொடரும்.....

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

20 comments :

  1. வைகறையில் வைகைக்கரையில்>>>>>>>>>>>>>>>>.

    ReplyDelete
  2. தம்பி அலைன்மெண்ட் சரி பண்ணு.. பதிவு ஃபுல்லா டைப் பண்ணி முடிச்சுட்டு அப்புற,மா பொருத்தமான படம் போட்டா சரி ஆகிடும்!!!!!!!!!

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு போட்டிருக்கீங்க நண்பா! ஆனா வியட்னாமில் உள்ள கட்டுப்பாடுகள் தான், யோசிக்க வைக்குது!

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

    வியட்னாமிய மீள் கட்டுமானத்திற்கு அரும்பாடு பட்ட, வியட்னாமிய எழுச்சிக்கு பாடுபட்ட ஹோஷிம் பற்றி அறிந்து கொள்ள வைக்கும் நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete
  5. அந்த சந்தொஷமானவங்க பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்ன்னு தெரியுமா...?

    ReplyDelete
  6. அறியாத விசயங்கள் அறிந்து கொண்டேன் மாம்ஸ் தங்களது பதிவால் .

    பகிர்வுக்கு நன்றி

    t.m 6

    ReplyDelete
  7. ஆவலுடன் காத்திருக்கிறோம் !!!

    ReplyDelete
  8. வியட்நாம் பற்றி பல புதிய தகவல்களை தந்துள்ளிர்கள். அருமையான பதிவு

    ReplyDelete
  9. வியட்நாம் குறித்து வரலாற்று புத்தகங்களில் இடம்பெற்றது குறைவே, என்பதாலும்... ஹாலிவுட் படங்களில் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாலும் இந்த அறியாமை... அதான் விக்கி கிளம்பிட்டீங்க இல்ல, கலக்குங்க....

    ReplyDelete
  10. வரலாறு வழங்கியவிதம் அருமை விக்கி..

    ReplyDelete
  11. சூப்பர் விக்கி...முந்தின பதிவுகளைப் படிக்கலை..படிச்சுட்டு அப்புறமா வர்றேன்.

    ReplyDelete
  12. மாப்ள ரொம்ப சுவாரஸ்யமாக இருக்குது. அமெரிக்காவுக்கு ஆப்படிச்ச கதைய சீக்கிரம் எழுது ஆவலா இருக்கு

    ReplyDelete
  13. நீ சொல்லு அண்ணே நாங்க கேக்குறோம் ஃபுல்லா.....

    ReplyDelete
  14. நன்றாக உழைக்கும் மக்கள் இருக்கும் நாடுதான் முன்னேறும், அதில் வியன்னா'வுக்கு ஒரு ராயல் சல்யூட்....!!! [[ஆனால் விக்கி அங்கே இருப்பதால் உருப்படுமா சந்தேகமே]]

    ReplyDelete
  15. மாப்ள அருமை. வியட்நாம் என்றாலே அமெரிக்காவுக்கு ஆப்பு அடித்ததுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். நன்றி

    ReplyDelete
  16. //உலகில் உள்ள சந்தோசமான மக்கள் வாழும் வரிசையில் - 5 வது இடம்//


    அது மிக மிக உண்மை .இங்கே ஒரு தோழி இருக்காங்க அவங்களுக்கு பிரச்சினையே தான் வாழ்க்கை ஆனாலும் எல்லாருக்கும் உதவி செய்வாங்க
    எந்த நேரமும் சிரித்த முகமாய் இருப்பாங்க .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  17. நல்ல முயற்சி..தொடருங்கள்..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி