வியட்நாம் பொழுதுகள் - 4

வணக்கம் நண்பர்களே....

வியட்நாம் பற்றி சொல்ல ஆரம்பித்தால்...ஹோசிமிங் என்பவற்றின் உழைப்பில் இருந்து ஆரம்பிப்பதே சாலச்சிறந்தது....


ஹோசிமின் - இந்தப்பேர் ஓர் அற்ப்புதமான வீரனின் பேர்...........வெறும் போரில் மட்டும் வீரனாக இல்லாமல்.....நாட்டை வளப்படுத்துவதில், மக்களை சரியான பாதையில் கொண்டு சென்றதில் உண்மைலேயே ஜெயித்த வீரர்...............

ஆட்சியாளர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளுவதையே மார்க்கமாக கொள்ளும் உலகில்.......தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தன் தாய் நாட்டுக்காக கொடுத்து சிவந்த மனிதன் இவன்......கடைசி வரை திருமணம் புரிந்து கொள்ளாமல் வாரிசு அரசியல் எனும் உன்னத விஷயத்தை உலகுக்கு சொல்லாமல் சென்ற புண்ணியவான்..................


அது "பிரான்ஸ்" வியட்நாமை ஆண்டுவந்த காலம்...........அப்போது வியட்நாமிலிருந்து லாவோஸ் நாட்டுக்கு பாதை போட அரசாங்கம் முடிவு செய்தது......அந்த பாதையை போடும் பணியில் வலுக்கட்டாயமாக வியத்நாமியர்கள் பணிக்கப்பட்டனர்..........அப்போது காட்டு வழியில் அமைக்கப்பட்ட பாதையாதளால் உணவு மற்றும் இதர விஷயங்கள் இம்மக்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை...........

அப்போது கஷட்டப்பட்ட மக்களுக்காக தன் சொத்துகளை விற்று உணவு படைத்தவர் ஹோசிமின் அவர்களின் தந்தை சினகாக்......இவர் தான் அந்த ஊரிலேயே அதிகப்படித்தவராம்..அதனால் அரசு இவருக்கு தனி வீடு கட்டி கொடுத்து இருந்தது....அப்போது ஹோசிமிங் சிறுவர்...பெரிய அளவில் படித்து சிறக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது...சின்ன வயதில் இப்படி மக்கள் கஷ்டப்படுவதை கண்ட ஹோசிமின் மிகவும் வருந்தினார்.....கல்வி மறுக்கப்பட்ட வியத்னாமியர்களை கண்டு இதற்க்கு வழி என்ன என்று யோசித்தார்.................


1905 ரஷ்யப்புரட்சி வியட்நாமியர்களின் மனதிலும் சுதந்திர விஷயத்தை தூண்டியது...........நேரடியாக மோதிப்பார்க்க முடியாது ஏன்னெனில் பிரஞ்சு பேரரசை எதிர்ப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதால்.....கப்பலில் வேலைக்கு சேர்ந்தார்.....உலகை சுற்றி வரும் வாய்ப்பு கிடைத்தது.....அதன் மூலம் உலக விஷயங்களை எளிதில் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார்............


அவர் காலனிஆதிக்க வாதியிடம் தன் மக்களின் தேவைகளை எழுத்து மூலமாக தெரிவித்தார்.....ஆனால், பிரெஞ்சு அதிகாரிகள் இவரை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணி விட்டு விட்டனர்.......இதனிடையில் கடும் உழைப்பாளிகளான வியத்தனாமியர்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மது விஷயத்துக்கு அடிமையாக்கி வைத்திருந்தனர்.........அப்படிப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி ஹோசிமின்னுக்கு பெரிய சவாலாக இருந்தது...............


அப்போது அவருக்கு 30 வயது...........அவரை நோக்கி திருமண விஷயங்கள் வந்த வண்ணம் இருந்தன.................

தொடரும்..............

கொசுறு: உண்மையான மற்றும் நேர்மையான மனிதனைப்பற்றிய வெளிப்பாடு இது.......
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. தமிழகத்தில் இப்போது மூன்றாம் ஜாமம்... இந்த நேரத்திலா பதிவு போடுவது...

  ReplyDelete
 2. ஹோசுமின் பற்றி படித்தேன் வியந்தேன்...

  ReplyDelete
 3. மாப்பிள நல்லதொரு தொடரை கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள்.. ஹோசமின் பிரான்சில்தான் படிதவர்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.. இங்கு ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் பிரன்சுக்காரர்களுக்காக போரிட்ட வியட்னாமியர்களுக்கு மரியாதை செய்வதை பார்திருக்கிறேன்.. ஒருவருக்கு துரோகி மற்றவருக்கு தேச பக்தன்.. இது எல்லா சமூகங்களிளும் இருப்பதுதானோ..?? தொடரை விரிவாக எழுதுங்கோ.. தொடர்வேன் என...

  ReplyDelete
 4. ஹோசிமின் வரலாறு படித்து வியந்தேன் நண்பா!

  ReplyDelete
 5. மாப்ளா நல்ல விஷயத்துக்கு ஆதரவு கம்மியாக இருக்கும் தொடரை வீட்டு விடாதீர்கள் எதிர்பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
 6. //தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தன் தாய் நாட்டுக்காக கொடுத்து சிவந்த மனிதன் இவன்......கடைசி வரை திருமணம் புரிந்து கொள்ளாமல் வாரிசு அரசியல் எனும் உன்னத விஷயத்தை உலகுக்கு சொல்லாமல் சென்ற புண்ணியவான்.//
  வரல்லற்றுத்தகவல்கள்-வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இன்றைய என் பதிவில், உங்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை,சொல்லவில்லை,
  சொல்லவில்லை.

  ReplyDelete
 8. மாமா, என்னைப்போன்றவர்களுக்கு வியட்நாம் என்பது அவ்வளவு அறிமுகமில்லாத நாடு. இது போன்ற கட்டுரைகள் நாம் அதனையும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொள்ள உதவுகிறது, நன்றி

  ReplyDelete
 9. >>FOOD Says:
  September 27, 2011 7:04 AM

  இன்றைய என் பதிவில், உங்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை,சொல்லவில்லை,
  சொல்லவில்லை.

  அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு.. வந்துடறேன்

  ReplyDelete
 10. மாம்ஸ், உங்கள் நாட்டின் வரலாறு (இப்ப அங்கே தானே இருக்கீங்க)பற்றிய தகவல்கள் அள்ளி தந்திருக்கிங்க.... பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 11. கிச்சிளிக்காஸ் நடுவில் இப்படி பட்ட நல்ல பதிவுகளை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 12. நான் அறியா விசயம் அறிந்து கொண்டேன்

  ReplyDelete
 13. ஹோ சி மின் பற்றிய நல்ல தகவல்கள்!

  ReplyDelete
 14. ஹோசிம்மின் வரலாற்றினை நினைவுபடுத்தியவாறு தொடரினை நகர்த்துறீங்க
  அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

  ReplyDelete
 15. அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்

  http://spoofking.blogspot.com

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி