வியட்நாம் பொழுதுகள் - 5

வணக்கம் நண்பர்களே......

வியட்நாமின் பொழுதுகளில் ஹோசிமிங் எனும் வீரரின் வரலாற்றை பார்த்து கொண்டு வருகிறோம்...........

முந்தய பொழுதுகளுக்கு வியட்நாம் (9) இங்கு செல்லவும் - 


30 வயதில் அவருக்கு திருமணத்திற்க்காக பல பெண்கள் பார்க்கப்பட்டனர்.......ஆனால், தனக்கு என்று ஒரு குடும்பம் தேவையில்லை என்று அவர் முடிவு செய்து இருந்தார்........அதனால் தொடர்ந்து வந்த பல பெண்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.......அவரு நம்ம ஊரு ஆட்சியாளர்களின் பிள்ளைகள் போல் இருந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும்.........

ஹோசிமின் தன்நாட்டு விடுதலை அறவழியிலா, ஆயுத வழியிலா என்ற நீண்ட யோசனைக்குப்பின்......ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார்....மக்களின் உரிமையை மீட்டுத்தர கெரில்லா போர் முறையை உருவாக்கினார்......மிகப்பெரிய பேரரசை எதிர்க்க தன் மக்களுக்கு வலிமையான வழி வேண்டும் என்பதால் இதனை தேர்ந்தெடுத்தார்.........


மறைந்து இருந்து தாக்கும் இப்போர் முறையால் எதிரிகள் குலை நடுங்கிப்போயினர்.....முதல் முறையாக பிரான்ஸ் படை வியத்னாமியர்களால் தாக்கப்பட்டு பெரும் சேததிற்க்கு உள்ளாகியது...ஆனால், இந்த அடியை பிரான்சால் ஜீரணிக்க முடியவில்லை....தங்களுக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய அவமானமாக கருதியது...அதே சமயம் இந்த நிகழ்ச்சி வியத்நாமிய மக்களிடம் மிகப்பெரிய ஒற்றுமையையும், எழுச்சியையும் ஏற்ப்படுத்தியது.......

இந்த தாக்குதலுக்கு பிறகு ஹோசிமின் வியட்நாமை தனி நாடாக அறிவித்தார்......விடுமா பிரான்ஸ்...பொங்கி எழுந்தது பெரும் படையோடு...அடிபட்ட பேரரசு உண்மை நிலையை எடை போட மறந்தது.....அது என்ன வெனில்....வியத்னாமியர்களை அப்பாவி மக்கள் என்று தப்பு கணக்கு போட்டதுதான்.......


1946 பிரான்ஸ்க்கும் ஹோசிமின் படைக்கும் போர் நிகழ்ந்தது....இப்போரின் பெயர் இந்தோ - சீனா போர்....ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஹோசிமிங்.....விவசாயமும், மீன்பிடி தொழில் மட்டுமே தெரிந்த...நாகரிகத்தில் பின்தங்கிய எளிமையான மக்களை கெரில்லாக்களாக மாற்றிய மூளை அவர்......


1949 வரை மிதமான கெரில்லா தாக்குதல்கள் மட்டுமே நிகழ்ந்தவன்னமிருந்தன....அந்த நேரத்தில் கம்யூனிச துருப்புகள் இம்மக்களுடன் இணைய ஆரம்பித்ததால்.....பலமான போராக இது ஆனது.....மிங்குக்குக்கு பின் புலமாக கம்மியுனிச அண்ணனும் உதவினார்...அதே நேரத்தில் உலக பெரியண்ணன்(!) எதிர் தரப்புக்கு உதவியது...இப்போரின் தாக்கம் 1954 ல் ஜெனீவா ஒப்பந்தம் மூலமாக முடிவுக்கு வந்தது....அதில் இரு சிறிய நாடுகளாக பிரிந்தது வியட்நாம்.....

தொடரும்........

கொசுறு: வரலாற்றில் இம்மாதிரி எளிமையான மனிதரை என் நாட்டில் காண்பேனோ என் வாழ்நாளில்....நீங்கள் பார்க்கும் படங்கள் 1. அவர் வாழ்ந்த வீடு இப்போது நினைவாலயமாக....3. இந்த மரவீட்டில் வாழ்ந்த அந்த மனிதரின் இதயம் வைரத்தைப்போன்றது.....
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

27 comments :

  1. முதல் வணக்கம்

    ReplyDelete
  2. முதல் ஓட்டு-த.ம் & த-10. படித்து விட்டு மீண்டும் கமெண்டுகிறேன்.

    ReplyDelete
  3. //வரலாற்றில் இம்மாதிரி எளிமையான மனிதரை என் நாட்டில் காண்பேனோ என் வாழ்நாளில்..//
    உண்மை சுடும்.

    ReplyDelete
  4. அவர் வாழ்ந்த வீடு எளிமையா இருந்தாலும் கலைநயத்தோட இருக்குய்யா...

    ReplyDelete
  5. ஹோசிமிங் very inspiring...சிறு வயதில் இது போல் ஏனோ படிக்கவே இல்லை...

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் பாஸ்,

    வியட்னாமிய வரலாற்றினை மீட்டிப் பார்க்கும் நல்லதோர் பதிவு.

    கொரில்லாப் போர் முறை மூலம் மகக்ள் சக்தியினை முன் நிறுத்தி வெற்றியீட்டிய ஹோசிம் பற்றிய அருமையான பதிவு.

    ReplyDelete
  7. வியட்நாம் பற்றிய அசத்தலான வரலாற்று பதிவு

    ReplyDelete
  8. ஹோசிமிங்கைப்பற்றி தேடத்தொடங்கிவிடேன்.

    ReplyDelete
  9. மாம்ஸ் ,இன்னைக்குத்தாங்க பாக்குறேன் உங்க blog roll-ல எனக்கும் இடம் கொடுத்து இருக்கீங்க! thanks.

    ReplyDelete
  10. விடாது படித்து வருகிறேன்
    சுவையாகச் செல்கிறது
    த.ம ஓ.8

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கரெக்ட் ரூட்ல மப்ளயும் தொடரும் போறாங்க..

    ReplyDelete
  12. என்னய்யா இதுக்கு போயி யாரோ மைனஸ் ஓட்டு போட்டுருக்காயிங்க அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  13. ஹோசிமின் ஒரு வரலாறு...!!! இல்லன்னா நீ அங்கே குப்பை கொட்ட முடியுமா என்ன?

    ReplyDelete
  14. மைனஸ் ஓட்டு போடுறவங்க முதல்ல என்ன எழுதியிருக்காரென்னு வாசிப்பதில்லையா...!!?? அருமையா கொண்டுபோறீங்க மாப்பிள வாழ்த்துக்கள்..தம ஓட்டும் போட்டாச்சு..!!!

    ReplyDelete
  15. ///அவரு நம்ம ஊரு ஆட்சியாளர்களின் பிள்ளைகள் போல் இருந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும்.........

    // ஹிஹி ..))

    ReplyDelete
  16. இதயம் மட்டுமா வைரம்?

    ReplyDelete
  17. அட.. யாருங்க இந்த பதிவுக்கு தமிழ்மணம் மைனஸ் போட்டது?

    ReplyDelete
  18. வியட்நாமிய வரலாற்றில் ஒரு பகுதியை நாங்கள் அறிய பதிவிடும் விக்கியின் சேவை பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  19. உண்மையில் ஹோம்சின் போன்றோர் தங்கள் நாட்டில் கான்பேனா என்பதன் அர்த்தம் சரியான கனிப்புதான் விக்கியண்ணா!
    நல்ல தொடரைத் தாருகின்றீர்கள் பிரென்ச் அரசின் செயல்கள் அறிய இது உதவும் தொடர்!

    ReplyDelete
  20. //அவரு நம்ம ஊரு ஆட்சியாளர்களின் பிள்ளைகள் போல் இருந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும்.//

    தம்பி கலக்கு...

    ReplyDelete
  21. யாரோ கைதவறி மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்க போல?

    ReplyDelete
  22. எளிமையான மனிதர்..... பலருக்கு முன்மாதிரி......!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி