வியட்நாம் பொழுதுகள் - 6வணக்கம் நண்பர்களே...


இதுவரை தாங்கள் வரலாற்று சுவடுகளை கண்டு வந்தீர்கள் இனி போர் எப்படிப்பட்டது என்பதை காணப்போகிறீர்கள்...

1954 க்கு பிறகு பிரான்சு காலனி ஆதிக்கம் நீங்க தொடங்கியது....அதன் காரணமாக விடுபட்ட இடத்தை நிரப்ப உலக பெரியண்ணன் விரும்பினார்...ஏற்கனவே தெற்கு வடக்கு என இரு வேறாக பிரிந்த நேரமது...அதிலும் குறிப்பிடும்படியாக...வடக்கு ஹோசிமிங்கின் தலைமையில் கம்மியூனிச சிந்தனை நாடாகியது...தெற்கு ஜனநாயகம் என அறிவிக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு நாடாகியது...


ஏற்கனவே சீன பலத்தை அறிந்து வைத்திருந்த பெரியண்ணன் எப்படியாவது ஆசிய கண்டத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தன் ஆட்களை அனுப்பி வைத்தார்...அட்வைசர்கள் என்பதன் பேரில் 400 ஆபீசர்கள் வந்து இறங்கினர் 1961 ல்....இவர்கள் வடக்கு கம்யூனிச எதிர்ப்பை அப்படியே தொடர்ந்து வந்தனர்...நவம்பர் 1963 கென்னடி கொலை செய்யப்பட போது...தெற்கு வியட்நாமில் 16,000 மிலிடரி அட்வைசர்கள் இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...அனைவரும் வெளிநாட்டவர்...


இந்த நிகழ்வின் போது 100 வல்லரசுக்கார ஆட்கள் மடிந்தனர்...இதன் காரணமாக இவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரசின்(என்னா பேரு பாருங்க!)...ஆதரவை பெற்று போர் முடிவு அறிவிக்கப்பட்டது....மார்ச் 1965 மிகப்பெரிய யுத்த தளவாடங்கள் வந்திறங்கின....


கடினப்போரினால் இழந்தவைகள், 58,000 சொந்த நாட்டை விட்டு வந்து உயிர்துறந்தோர்....300,000 ஊனமுற்றோர் என கொடுமையான பதில் கிடைத்தது   தான் மிச்சம்...இந்த போரினால் கிட்ட தட்ட $140 பில்லியன் பணம் வீணடிக்கப்பட்டது...


அன்று அதாவது 16.3.1968 பின்னோக்கி போகிறேன்.....உலக பெரியண்ணன் என்று தன்னை கூறிக்கொள்ளும் நாடு.......தன் பரிவாரங்களுடன் இந்த சிறிய நாட்டில் இறங்கி போர் புரிந்து கொண்டு இருந்த சமயம்.......


சரியாக இதே நாளில் அதாவது 16 ம் தேதி 3 ம் மாதம் மயிலாய் கிராமத்தில் தரையிறங்கியது வல்லரசு நாட்டு படையின் ஒரு பிரிவு..................

இறங்கி சிறிது நேரத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கன்னி வெடி வெடிக்க தொடங்கியதால்....அந்த படைப்பிரிவை சேர்ந்த 5 படைவீரர்கள் பலியானார்கள்..........கோபம் கொண்ட அந்த படைப்பிரிவைசேர்ந்தவர்களால்.....மயிலாய் கிராமத்தைச்சேர்ந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உற்பட 504 பேர் படுகொலை செய்யப்பட்டனர்........

உலக பெரியண்ணனின் படைக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்திய நிகழ்ச்சிகளில் ஒன்று இது......


இதன் காரணமாகவே பல அப்பாவி பொது மக்கள் ஆயுதம் எடுக்க வைத்த சம்பவமாக மாறிப்போனது........

ஒரு பெரிய வல்லரசை எதிர்த்து போராடுவது என்றால் அது சுலபமா...நினைத்துப்பாருங்கள் அதுவும் உலகிலேயே பெரிய ராணுவ தளவாடங்களை கொண்ட பெரியண்ணனை எதிர்த்து வென்ற மக்களின் மனவுறுதி தான் பெரிது....


அப்படி என்ன தான் இருக்கு..இந்த சின்ன நாட்டில்...

தொடரும்...

கொசுறு: எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை....நண்பர்களே கமர்சியல் அல்லாத பதிவுக்கு தாங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

25 comments :

 1. அதானே அப்படி என்னதான் இருக்குது அந்த சின்ன நாட்டில்...

  ReplyDelete
 2. மாம்ஸ்... எங்க ஆதரவு உங்க எல்லா பதிவுக்கும் உண்டு...

  ReplyDelete
 3. பெரியண்ணனுக்கும் உங்களுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறுன்னு கேள்விப்பட்டேன்... உண்மையா....

  ReplyDelete
 4. நண்பா உங்களது வலைப்பு காணாமல் போன போது நான் வருத்தமடைந்தேன்! ஆனால் நிரூபனால் மீட்கப்பட்டது மகிழ்ச்சி!

  நீங்கள் தொடர்ந்தும் பல பதிவுகள் எழுதணும்!

  ReplyDelete
 5. மாம்ஸ்... எங்க ஆதரவு உங்க எல்லா பதிவுக்கும் உண்டு...

  ReplyDelete
 6. மீண்டும் விக்கி. வாழ்த்துக்கள்.நன்றி நிரூ.

  ReplyDelete
 7. அமெரிக்காவை வியட்நாம் கலக்கிய கதை கேட்க ஆவலாய் உள்ளேன்...தொடருங்கள்...

  ReplyDelete
 8. வரலாற்றை தொடர்ந்து அறிய ஆவலாய் உள்ளேன்.

  மீண்டும் வந்தது மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. அண்ணே வியட்னாமிய வரலாற்றினை மீட்டியவாறு பதிவு நகர்கிறது.

  தொடருங்கள்!

  ReplyDelete
 10. மாப்ள அது ஏன் அமெரிக்காவுக்கு ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்கவே மாட்டேங்குது...

  ReplyDelete
 11. மீண்டு மீண்டும் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்...

  தொடரட்டும் தங்கள் பணி...

  ReplyDelete
 12. நடத்துங்க...
  நாங்க இருக்கோம்...

  ReplyDelete
 13. வலைபூவை மீட்டதில் மகிழ்ச்சி மாம்ஸ்

  வரலாறு சுவாரசியம்

  ReplyDelete
 14. எப்பிடி மீட்டீங்கன்னு ஒரு பதிவு போட்ட எல்லோருக்கும் யூஸ்புல்லா இருக்குமே மாம்ஸ்!!

  ReplyDelete
 15. தில்'லா தொடரும் மாம்சுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 16. இனி எவன் சூனியம் வைக்கப்போரானோ......

  ReplyDelete
 17. மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

  ReplyDelete
 18. அமெரிக்கன் டாலரை வாங்கிட்டு, அவனுக்கு எதிராவே கொளுத்தி போடுறியா, ஆனானப்பட்ட சூனியா பூந்தியே பெரியண்ணன் கால்ல மண்டியிட்டு கிடக்குறாயிங்க சாக்குரதை...

  ReplyDelete
 19. விக்கி commercial அல்லாத பதிவுகள் எப்பொழுதும் ஆதரவு பெரும்...

  ReplyDelete
 20. பெரியண்ணாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை அறிய ஆவலாகஇருக்கின்றேன் தொடருங்கள் விக்கியண்ணா!

  ReplyDelete
 21. வியட்நாமின் சகதிச் சேற்றில் எழுதிய
  வரலாற்றை அருமையாக புனைகிறீர்கள்
  தொடருங்கள் மாம்ஸ்...
  எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு...

  ReplyDelete
 22. இன்னும் பல வெளிவராத தகவல்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்......

  ReplyDelete
 23. இதுவரை அறியாத செய்திகள்!
  இன்று அறிய முடிந்தது
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி