காதலிக்க தெரியல தம்பி....!

வணக்கம் நண்பர்களே...


சமீபத்தில் ஒரு நண்பியின் தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தேன்...அவர் தன் மனவருத்தத்தை கொட்டிக்கொண்டு இருந்தார்....அதில் சில....

நான்: என்னங்க எப்படி இருக்கீங்க...

அய்யா: நல்ல இருக்கேன்யா...நீ எப்படி இருக்க...எப்படி போகுது தம்பி உங்க தொழில்லாம்...

நான்: நல்லா போகுதுங்க....ரொம்ப நாளாச்சே அதான் கூப்டேன்...

அய்யா: ம்ம்...தெரியும் தம்பி இன்னைக்கு நீங்க கூப்பிடுவீங்கன்னு.....

நான்: அம்மா எப்படி இருக்காங்க.....

அய்யா: நல்லா இருக்கா....

நான்: நம்ம செல்விக்கு எப்போ திருமணம்....

(அவர் குரல் மாறியது...!)

அய்யா: என்ன தம்பி பண்றது....இது ஆனா பொறந்து இருந்தாவது...பரவாயில்ல....இல்ல இதுக்கு வேற ஏதாவது வழியில கல்யாணம் பண்ணிக்கவும் தெரியல(!)....

நான்: என்னங்கய்யா இப்படி சொல்றீங்க....

அய்யா: பின்ன என்னத்த பண்றதுங்க....வர்றவன்லாம் 50 பவுன்  கேக்குறானுங்க(!)....இவளோ அதெல்லாம் வேணாம் எனக்கு வரதட்சணை வாங்காத மாபிள்ள தான் வேணும்னு ஒத்தக்கால்ல நிக்குறா...நான் எப்படியாவது இவ கல்யாணத்தையாவது சீக்கிரம் பாத்துப்புடனும்னு நெனைக்கிறேன்...

நான்: சரிங்கய்யா....நல்ல பையனா வருவாரு கவலைப்படாதீங்க....


அய்யா: என்ன தம்பி சொல்றீங்க...வெளியில வீரா வேஷம்(!) பேசுற பய புள்ளைங்க கல்யாணம்னு வந்துட்டா மட்டும் இத கொடு, அத கொடுன்னு கேக்குதுங்க...சரி நம்மால முடிஞ்சது 20 பவுன் போடாலாம்னு நெனச்சிருந்தேன்....இப்போ இவனுங்க கேக்குறத பாத்தா நாண்டுக்கிட்டு தான் சாகனும் போல....அதுவும் இல்லாம இப்போ தங்கம் விலை என்னமோ ராக்கெட்டு(!) வேகத்துல போயிட்டு இருக்கு......

நான்: கண்டிப்பா நல்ல வரன் கெடைக்கும் கவலைப்படாதீங்க....

அய்யா: தம்பி இப்பவே இவளுக்கு 27 வயசாயிருசிங்க நான் என்ன பண்றதுன்னு தெரியலீங்க.....இதுக்கும் சொல்ல சொல்ல கேக்காம MBA வரைக்கும் படிச்சிட்டு இப்போ நெறைய சம்பாதிக்குராளா....அது வேற பிரச்சனைங்க....

நான்: அய்யா இந்த அளவுக்கு கஷ்டத்துல படிச்சி பொண்ணுங்க சம்பாதிக்கறது நல்லதுக்கு தானுங்களே....


அய்யா: அட நீவேரய்யா...வர்றவன் ஐயோ இம்புட்டு படிச்சிருக்கா நமக்கு அடங்காதேன்னு நெனைக்கிரானுங்க(!)...அதுவும் இல்லாம இந்தப்பொண்ணு போடுற கண்டிஷன பாத்து இன்னும் பிரச்சனயாத்தான் போயிட்டு இருக்கு...

நான்: அது என்னங்கய்யா கண்டிசனு....

அய்யா: கல்யாணத்துக்கப்புறம் என் அப்பா அம்மாவுக்கு பாதி சம்பளப்பணத்த கொடுத்துடுவேன்னு சொல்லி வர்றவங்களே ஓட வைக்குது....

நான்:  அவங்க உங்கள சந்தோஷமா காப்பத்தனும்னு நெனைக்கிறாங்க...தப்பு இல்லே...

அய்யா: தம்பி...இந்தக்காலத்துல எந்தப்பயலும் இந்த விஷயத்துக்கு ஒத்து வர மாட்டேங்குறாங்க.....சரி எவனையாவது லவ்வாவது பண்ணி தொலைச்சாலான்னு(!) கேட்டா அதுவும் இல்ல...(!!!)

நான்:  என்னய்யா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க....

அய்யா: என்னப்பா பண்றது பெத்த வவுறு எரியிது.....முதப்பொண்ணு நெனச்சி இன்னமும் கண்ணு கலங்கிட்டு தான்யா இருக்குது....

நான்: விடுங்கய்யா....கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்....

இந்த ஏழை அப்பனால முதல் பொண்ணையும் காப்பாத்திக்க தெரியல...ரெண்டாவது பொண்ணுக்கும் நல்ல வாழ்கைய அமைச்சி கொடுக்க முடியல....

நான்: நல்லதே நடக்கும் மனச போட்டு குழப்பிக்காதீங்க....


அந்த தகப்பனின் பார்வை அங்கு சுவற்றில் மாலையுடன் தொங்கிக்கொண்டு இருந்த மூத்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து மீண்டும் அழத்தொடங்கியது...

கொசுறு: காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அந்த முதல் பெண் என் கல்லூரிக்கால தோழி...அவளுக்கு அன்று நினைவு நாள்!...இந்த சம்பாழனயிலிருந்து தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. அவங்க காதல் திருமணம் பண்ணிக்கிறது தான் சரி... காரணம், இவங்க போடுற கண்டிஷன் எல்லாம் Arranged Marriage ல எவனும் ஒத்துக்க மாட்டான்... அப்படியே ஒத்துக்கிட்டாலும் பின்னாளில் பிரச்சனை ஆகும்... இதுவே, காதல் திருமணமா இருந்தா இவங்க மனசுக்கு பிடிச்ச பையனாகவும் இருப்பார், கண்டிஷன்களுக்கும் ஒத்துப் போவார்...

  ReplyDelete
 2. இன்னொரு ஆப்ஷனும் இருக்கிறது... சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை வாங்காமல், தாலி கட்டாமல் சுயமரியாதை திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஆண்கள் இருக்கிறார்கள்... அதற்கான Matrimony Service கூட இருக்கிறது... அவர்களை அணுகவும்...

  ReplyDelete
 3. @Philosophy Prabhakaran

  வருகைக்கு நன்றி மாப்ள...கருத்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 4. காதலிக்கறத ஏத்துக்கற பெற்றோர் மிக குறைவு தான்... என்ன கேட்டா நான் பிரபாவின் பின்னூடத்துக்கு செவி சாய்ப்பேன்... "லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்...."

  ReplyDelete
 5. பாவம் அந்த தோழி அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

  ReplyDelete
 6. //
  சசிகுமார்
  September 7, 2011 10:34 AM

  பாவம் அந்த தோழி அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

  //
  ஆமாம்

  ReplyDelete
 7. பாவம்யா...கஷ்டமாத்தான் இருக்கு.

  ReplyDelete
 8. பெத்தவங்க மனசை பொண்ணுக புரிஞ்சுக்கர்த்தே இல்லை... ஆயிரம் கண்டிஷன்ஸ் போட்டுக்கிட்டு?

  ReplyDelete
 9. காற்றைப்போல இதயத்தை இலகுவாக்கும்
  காதல் இனிது
  மனம் நெகிழச் செய்யும் பதிவு மாம்ஸ்.

  ReplyDelete
 10. கல்யாணம் பண்ணாமல் இருந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை கல்யாணம் பண்ணி தான் தெரிந்து கொள்ள முடிகிறது..

  ReplyDelete
 11. வருத்தமான விஷயம் தான் மாம்ஸ்

  தமிழ் மணம் ஒன்பது

  ReplyDelete
 12. பெண்ண பெத்தவங்க பலபேரின் நிலை.. இதுதான் மாம்ஸ்...

  அதுக்காக பெண் குழந்தைகளே வேண்டாம்னு..சொல்லல மாம்ஸ்...

  ஜஸ்ட் மென்ஷன்...அவ்ளோதான்....

  கடைசில மனம் கனக்கவச்சிட்டிங்க...

  ReplyDelete
 13. இந்த வரதட்சணையை ஒழிக்க விரைவில் கடுமையான சட்டம் தேவை ....தங்கம் போகிற போக்கை பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது

  ReplyDelete
 14. நல்லதே நடக்கும் நம்புவோம்...

  ReplyDelete
 15. ஓ காதல் உன்னை காதலிக்கவில்லை....

  ReplyDelete
 16. அந்த அப்பா பாவம் மாம்ஸ்!
  யாரையாவது லவ் பண்ணினா அந்தப்பையன் கண்டிஷனுக்கு ஒத்துவருவான்!

  ReplyDelete
 17. அவசரப்படாமல் நல்ல வரன் வரும்வரை காத்திருக்கலாம்!குறிப்பிட்ட தொகையை பெற்றோர் பெயரில் வங்கி டெபாசிட் போடலாம்!

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. பாஸ், பெற்றோரின் மன உணர்வினைப் புரிந்து பெண் பிள்ளை விட்டுக் கொடுத்துப் போனாலும், பெற்றோரால் செய்து வைக்கப்படும் அரேஞ்ச் மாரேஜ் சில வேளை அந்தப் பிள்ளையினைத் திருப்திகரமாக மாற்றாது மனதளவில் பாதிப்படையச் செய்யலாம், ஆகவே பிள்ளைகளின் விருப்பத்தினை உணர்ந்து பெற்றோர்
  கண்டிப்புடன் கூடிய விட்டுக் கொடுப்போடு நடப்பது தான் சிறந்தது என்பது என் கருத்து.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி