சமந்தா ஏன் இப்படி ஆயிட்டே...!

வணக்கம் நண்பர்களே...

கொஞ்ச நாளைக்கு முன்னே எனக்கு கிடைத்த அதிர்ச்சி இது...இது ஒரு பெண்ணின் வாழ்கை என்பதாலும்...உங்களுடன் பகிர்வதால் பல விஷயங்கள் இன்னும் அதிகமாக புரியவரும் என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்...

 அவளின் பெயர் சமந்தா...சமி என்று யாவரும் அன்பாய் அழைப்போம்(!)...அழகிய பெண் அவள்...தந்தை அரசுப்பணி என்பதாலும் அதுவும் கல்வித்துறை என்பதாலும்...அவளின் படிப்பை மிக கவனமாக வழி நடத்தி சென்றார்...அவளும் படிப்பில் மிகவும் சுட்டி...Msc Micro biology படிப்பில் பட்டம் பெற்றாள்...

அழகாக சென்று கொண்டு இருந்த அவளின் வாழ்வில் திருமணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது....வரன் கேட்டு வந்தவர்களோ தூரத்து(!) சொந்தம்...இவள் குடும்பமோ நடுத்தர குடும்பம்...அவர்களோ காடு கழனி மட்டும் இல்லாமல் பெரிய அளவுக்கு ஊரில் பெரிய குடும்பம்...இந்த வரனை பார்த்து அவளின் சுற்றத்தார் அதிர்ந்தனர்...ஏனெனில், பணக்கார குடும்பத்தில் வாழ போவதை நினைத்து மருங்கினர்(!)...பெற்றோர்களும் மணமகன் குடும்பத்தை, பண பொருளை பார்த்து விக்கித்து நின்றனர்...


அதுவும் மணமகன் Bsc படித்தவர் என்பதும்...கிட்ட தட்ட 38 வயது நிரம்பியவர் என்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாக(!) நினைக்கவில்லை...தன் பெண்ணுக்கும் மண மகனுக்கும் கிட்ட தட்ட 15 வருட இடைவெளி இருப்பதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை...திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவன் அவளின் தம்பி மட்டுமே...வேண்டாம் அவங்க பெரிய குடும்பம் அதிலும் அவர்கள் குடும்பத்தில் என்ன உள் பிரச்சனையோ...இந்த வயது வரை அவருக்கு திருமணம் ஆகவில்லை...அக்காவின் வாழ்வை நாசப்படுத்தாதீர்கள் என்று எவ்வளவோ எடுத்துரைத்தான்...

ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு வெறும் பணம் அந்தஸ்து இரண்டு மட்டுமே கண்ணுக்கு தெரிந்ததால் திருமணம் முடித்து விட்டார்கள்...
திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் தேனிலவு எனும் விஷயம் முக்கியம் எனக்கருதி செல்வர்...ஏனெனில், அப்போது தான் பல நடைமுறை விஷயங்களில் இருவரின் புரிந்துணர்வு அதிகமாக வெளிப்படும்...ஆனால், அதை செயத்தவறினார் மணமகன்...தன் வியாபார காரணமாக தள்ளிப்போட்டார்... திருமணம் முடித்த அடுத்த மாதமே அவள் கருவுற்றாள்...


நேற்றுவரை அவளுக்கு பிடித்த ஆடைகளுடன் எல்லோர் கண்ணையும் உறுத்திய அந்த அழகு தேவதை...கணவனுக்கு பிடித்த படி மட்டுமே உடை அணிய வற்புறுத்தப்பட்டாள்...கொஞ்சம் கொஞ்சமாக அவளின் சுதந்திரம் பறி போய்க்கொண்டு இருந்தது....வீட்டுக்கு வந்த மருமக பெண்ணை தன் பெண் போல(!) பாவிக்க வேண்டிய மாமியார்...அவளை காரணம் இல்லாமல் வெறுக்கலானாள்....தன் அந்தஸ்துக்கு தகுதியான ஆள் இல்லை இவள் என்று பொதுவில் பேசலானாள்...

கொஞ்ச கொஞ்சமாக கணவனின் கைய்யாலாகாத்தனமும் வெளிப்பட ஆரம்பித்தது(!)...வீட்டில் பட்டு வேட்டி கட்டிய அம்மாஞ்சி அவர் என்பதும் வெளி வந்தது....சமி தைரியமானவள் என்பதால் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தாள்...விளைவு கணவனின் தம்பியால் அவமானப்படுத்தப்படலானாள்(!)...தன் மனதின் வலியை பெற்றோரிடம் சொல்லி அழுதாள்....தந்தை சமரசம் செய்ய சென்றார்....அந்த ஊரின் ஏகாதிபதியாய் இருக்கும் அவர்கள் இவரை சிறிதும் மதிக்கவில்லை...வேறு வழி இல்லாமல் தனிக்குடுத்தனம் வைத்து விட்டு வந்தார்...


அதிக மன அழுத்தம் காரணமாக தூக்கு கயிற்றை மாட்டியவளை...பக்கத்து வீட்டு புண்ணியவான்கள் சரியான நேரத்தில் கவனித்ததால் காப்பாற்றினர்... இன்று தனி குடுத்தனத்திலும் நிம்மதி இல்லாமல்...கணவரோடு நித்தம் சண்டையிட்டுக்கொண்டு...தான் எதிர் பார்த்த வாழ்வு கிடைக்காமல் நொந்து வாழ்ந்து வருகிறாள்...

கொசுறு: பெற்றோர்களே...திருமணம் வெறும் பணம் அந்தஸ்தை தாண்டி அன்பால் இணைய வேண்டிய பந்தம்...அதிலும் இரு மனங்களின் கூடல் முக்கியம்...உங்களின் வறட்டு பிடிவாதங்களால் நீங்கள் பெற்ற குழந்தைகளின்  வாழ்வை இருளாக்கிவிடாதீர்கள்...நன்றி...!  

உபயம்: மனைவியின் கருத்துக்களில் இருந்து...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 2. பணம் அந்தஸ்த்துக்கு ஆசைப்படும் பெற்றோர், பெண்ணின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க தவறுகின்றனர்!!!!

  ReplyDelete
 3. தக்காளி நல்ல மூடுல இருக்காண்டோய்...!!!

  ReplyDelete
 4. தைரியம் இருக்குறவன் இப்போ தக்காளிக்கு சாட்டிங்க்லையோ, போன்லையோ பேசிப்பாரு பார்ப்போம் ஹி ஹி....

  ReplyDelete
 5. ம்ம் பணத்துக்காக வாழ்க்கையை அடகு வைப்பதா (((

  ReplyDelete
 6. எல்லா பெற்றோரும் அப்படி இல்லையே...

  உதாரணத்துக்கு நீங்களும் நானும்...எப்படி....? -:)

  ReplyDelete
 7. அருமையான பதிவு
  இதுபோல பாதிக்கப் பட்டவர்கள் வெகு சிலர்தான் என்றாலும்
  அது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும்படியாக
  இப்படி பதிவிடுவது இதுபோன்று இனியேனும்
  வேறு யாருக்கேனும் நேராது
  இருப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்
  நல்ல படிப்பினையூட்டும் பதிவு
  உங்கள் துணைவியாருக்கு எங்கள் நன்றியைச் சொல்லுங்கள்
  த.ம 5

  ReplyDelete
 8. நல்ல பதிவு.ஏழாவது ஓட்டு.

  ReplyDelete
 9. படிப்பினைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. பகிர்வுக்கு வாழ்த்துக்களும், தலைப்பிற்கு கண்டனங்களும்... நம்ம சமந்தா பத்தி சமத்தா எதாச்சு சொல்லியிருப்பீங்கன்னு வந்தா நீங்க..

  ReplyDelete
 11. நல்ல பதிவு விக்கி..

  இனிமே இதே மாதிரி வீட்ல அக்காகிட்ட கேட்டு, தொடர்ந்து இப்படி நல்ல பதிவாப் போடணும், சரியா?

  ReplyDelete
 12. அப்படிபோடு.

  சரியாகச் சொன்னீர்கள் நண்பா

  ReplyDelete
 13. சிலரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதுதான்
  வாழ்க்கை. நீங்கள் கூறியதை உதாரணமாக கொண்டு
  இனிவரும் நாட்களில் வேறு ஒருவருக்கு இப்படி நடக்காது
  இருக்கவ்ண்டும்.
  நல்ல பதிவு மாம்ஸ்...

  ReplyDelete
 14. அந்தஸ்து, வேலை இவற்றை பார்த்து கல்யாணம் பன்னி வைக்காமல் பெண்ணுக்கு எல்லா விதத்திலும் உகந்தவனா என பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இந்த மாதிரியான விசயங்களில் சில பெற்றோர்கள் சறுக்கி விடுகிறார்கள்.

  ReplyDelete
 15. திருமண தேர்வில் தவறு செய்பவர்களை பார்க்கும்போது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை... பெற்றோர் பார்க்கும் மணப்பெண்ணையோ மனமகனையோ தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்ற கலாச்சாரம் இருக்கும்வரை நம்நாடு உருப்புடாது...

  ReplyDelete
 16. திருமணம் வெறும் பணம் அந்தஸ்தை தாண்டி அன்பால் இணைய வேண்டிய பந்தம்...அதிலும் இரு மனங்களின் கூடல் முக்கியம்...//

  உண்மை தான் மாம்ஸ்

  ReplyDelete
 17. Philosophy Prabhakaran said...
  திருமண தேர்வில் தவறு செய்பவர்களை பார்க்கும்போது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை... பெற்றோர் பார்க்கும் மணப்பெண்ணையோ மனமகனையோ தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்ற கலாச்சாரம் இருக்கும்வரை நம்நாடு உருப்புடாது...//

  சூப்பரா சொல்லிட்டாரு...

  ReplyDelete
 18. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைதான் என்றில்லை, லவ் மேரேஜிலும் இதே போல் கூத்துக்கள் நடக்கின்றன,.

  ReplyDelete
 19. வழக்கத்துக்கு மாறா பதிவு புரியுதே, தெளிவா இருக்கேன்னு யோசிச்சா டிஸ்கில அண்ணிதான் உதவின்னு தெரிஞ்சுது.. ஹய்யோ =ஹய்யா!!

  ReplyDelete
 20. தொடர்க உமது நற்பணி!

  ReplyDelete
 21. பாவம்

  யாரோ செய்த தவறுக்கு தண்டனை சமந்தாவுக்கு!!

  ReplyDelete
 22. நல்லதோர் பதிவு அண்ணா,

  ஒரு பெண்ணின் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதற்கு ஏதுவான நிகழ்வுகளைச் சுட்டி எழுதியிருக்கிறீங்க.

  அனைவரும் அறிந்து குறிப்பாகப் பெற்றோர் நிலையில் உள்ளோர் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல்களை மேற்கொள்ளும் போதும், கணவன் மனைவியினை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வதற்கும் ஏற்ற பதிவு!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி