இப்படி குடிச்சிருக்கீங்களா...(drink!)

வணக்கம் நண்பர்களே..


இந்தப்பதிவு ஒரு குடிகாரப்பதிவு...அதனால விருப்பம் இல்லாதவங்க பதிவுக்குள் தொடர வேண்டாமுங்கோ...

அது ஒரு கனாக்காலம்....


அப்போ காலேஜ் (கால்+ஏஜ்!) போயிட்டு இருந்தேன்...எனக்கு ஒரு உறவுக்கார நண்பர்(!) இருந்தாரு...அவரு ஒரு ஆட்டோ ஓட்டுனர்(இப்போ அரசு அலுவலர்!)...அவருக்கு பிடிச்சதே தண்ணி அடிக்கறது மட்டும்தான்...அதுவும் கொஞ்ச நஞ்சமா குடிக்க மாட்டாரு...அப்பேர்ப்பட்ட நல்லவரு!

ஒரு நாலு கல்லூரி வாசலுக்கு வந்துட்டாரு...என்னடா எப்ப வருவே வெளிய போகணும்னு சொன்னாரு...

எண்ணனே எங்கன்னு நான் கேக்க...

அதெல்லாம் சொல்லனுமா...வர முடியுமா முடியாதா....

சரிண்ணே...இன்னும் அரைமணில வந்துடறேன்...

வெளிய வந்து அவரோட ஆட்டோவ எடுத்துகிட்டு படு வேகமா கெளம்பினோம்(!)...வழியில் "லஸ்" எனும் இடத்தில் இன்னொரு நண்பர் காத்துகிட்டு இருந்தாரு அவரையும் pick up பண்ணிக்கிட்டு கெளம்பினோம்.....

சரியா திருவான்மியூர் தாண்டி சில கீமீ தூரத்துல மெயின் ரோட்ல இருந்து கடலை நோக்கி ஆட்டோ திரும்புச்சி....

அண்ணே இங்க எங்க போறீங்க...

டேய் சும்மா இரு..இடம் வந்துருச்சி...


கொஞ்ச தூரத்தில் சில குடிசைகள் தென்பட்டன... அங்கே மணலில் உக்கார சொன்னார்...

நானும் கூட வந்த அவரின் இன்னொரு நண்பரும் உக்காந்தோம்...

எண்ணனே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க...

டேய் மண்டையா...இதோ வருது பாரு இந்த தண்ணிய குடி...எப்படி இருக்குன்னு சொல்லு....

என்ன தண்ணின்னே...

குடிச்சிபாரு....

இந்த கப்பு அடிக்குது...

அடி இன்னும் ஒரு சொம்பு அடி....

இந்தா பூச்சின்னு...சொல்லி எதோ வண்டை பொறிச்சி வச்சிருந்த தட்ட எடுத்து கொடுத்தார்..

அண்ணே என்னனே இது எதோ வண்டு போல இருக்கு....

ஆமாம்டா இது உடம்புக்கு ஸ்ட்ரோங்டா...

ஏம்பா அந்த டப்பாவ துறந்து எடு கறிய சாப்பிடுவோம்னாறு...

எனக்கு இந்த தண்ணி வேணாம்னே ஒரு டம்பளர் குடிச்சதுக்கே என்னமோ பண்ணுது...

இதுக்கு பேருதாண்டா சுண்ட கஞ்சிங்கறது...

இது என்ன கறின்னே....

டேய் தம்பி இதான் உடும்பு கறி...சீக்கிரத்துல கெடைக்காது....சாப்பிடு உடம்புக்கு நல்லது...

சரிண்ணே....டேஸ்டா இருக்குன்னே...

ம்ம்...
(இந்த சுண்ட கஞ்சி எப்படி செய்யிறாங்க...செயல் முறை விளக்கம் வேணும்னா இந்த லிங்க்ல போய் பார்க்கவும் சுண்டக் கஞ்சியும் தித்திப்புச் சோறும்!!! )

கொஞ்ச நேரத்தில் அங்கே குடித்து முடித்து விட்டு கிளம்பி விட்டார்கள்...சரி வீட்டுக்குத்தான் கெளம்பராங்கன்னு நம்பி(!) ஏறி உக்காந்தேன் ஆட்டோவில்...


இன்னும் கொஞ்சம் தள்ளி ஒரு ஊரில் நிறுத்தி ஒரு பாட்டில் வாங்கி கொண்டார்கள்....கொஞ்ச தூரம் சென்று ஒரு சோலை போல் இருந்தது....வெறும் ஊறுகாயை தொட்டுக்கொண்டு அந்த அரை பாட்டில் சரக்கை அடித்து முடித்தனர் இருவரும்...எனக்கு பழக்கம் இல்லை(அப்போ!) என்பதால் அவர்களையே பாத்து கொண்டு இருந்தேன்...அடுத்து நடந்தது தான் கொடுமை...

என் சொந்தக்காரர் சரக்கு ஓவராய் ஏறி விட்டதால் மட்டையாகி விட்டார்...கூட வந்த நண்பரோ பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார்....சரி கொஞ்ச நேரம் விட்டு பாப்போம் என்று பொறுத்து இருந்தேன்...நேரம் 6 மணியை நெருங்கி விட்டதால்...பக்கத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்கு சென்று அந்த பெண்மணியிடம் ஒரு எலுமிச்சை வாங்கி வந்து அவருடைய வாயில் விட்டுப்பார்த்தேன்...


திரும்பவும் அந்த பெண்மணி கொஞ்சம் மோர் கொடுத்தார்...அதையும் கொடுத்து பார்த்தேன்...ஒன்னும் நடக்கவில்லை...ஆட்டோ ஓட்ட தெரியாத நான் பைக் ஓட்டிய அனுபவத்தை வைத்து ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து 8 மணிக்கு கிளம்பி அயனாவரம் வரை வண்டி ஓட்டி வந்தேன்...இரு இடத்தில் ஆட்டோ சிறிய இடியுடன் (ஹிஹி!) அவரை அவர் வீட்டில் விட்டு விட்டு என் வீட்டுக்கு வந்து சேரும்போது இரவு 1 மணி...இடையில் அடையாரிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடி விட்டார் அந்த இன்னொரு நண்பர்(நான் ஆட்டோ ஓட்டிய விதத்தை பார்த்து ஹிஹி!)

கொசுறு: இதிலிருந்து சொல்ல வரும் விஷயம் என்னன்னா....அண்ணே குடிக்க போறவங்க அடுத்தவங்க உசுரையும் கூட்டிட்டு போய் குத்தகைக்கு விட்ராதீங்க ஹிஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. திரட்டிகளில் கனெக்ஷன் குடுய்யா...

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா அதான் நானும் எல்லார்கிட்டேயும் சொல்றது குடிக்கப்போறவன் ஒத்தைக்கு போயி குடிங்கன்னு, காசும் மிச்சம், அடுத்தவன் உயிரும் மிச்சம்....

  ReplyDelete
 3. ஆகா!கில்லாடிதான் போல! சுண்டக்கஞ்சி எல்லாம் குடிச்சிருக்கீங்க?

  ReplyDelete
 4. ஹஹா ரொம்ப நொந்து போயிட்டிங்க போல )))

  ReplyDelete
 5. இப்படித்தான் இருக்கனும்... சபாஷ்...

  ReplyDelete
 6. வந்தேன்....

  வந்தேன்....
  வந்தேன்....
  வந்தேன்....

  ReplyDelete
 7. நல்ல ‘அனுபவம்’.


  அப்புறம்,


  அமெரிக்காவுக்கு எதிராக புரட்சி செய்து வென்ற அண்ணன் விக்கி வாழ்க.

  ReplyDelete
 8. தம்பி... பிளாக் தொலைஞ்சு போனதும் எல்லார்ட்டயும் சொன்னியே. கிடைச்சதும் சொன்னியா?

  ReplyDelete
 9. நீங்களே சொல்லிட்டதால தொடரிலீங்கோ

  ReplyDelete
 10. மாம்ஸ், மப்புல எதுவும் தெரியாது....

  ReplyDelete
 11. விக்கியண்ணே! நான் குடிப்பதில்லை! ஆனாலும் இந்தப் பதிவு எனக்கு பிடிச்சிருக்கு! கொசுறில் நீங்க சொன்ன மேட்டருக்கு ஒரு சலியூட்!

  ReplyDelete
 12. இனிமேலாவது பார்த்து வாங்க பாஸ்

  ReplyDelete
 13. குடி குடியை கெடுத்து நான் பார்த்ததே இல்லை...-:) எல்லாரும் அடுத்த ரௌண்டுக்கு எப்பவும் ரெடி தானே..
  அனாலும் கொசுறு சூபறு...

  ReplyDelete
 14. ஆட்டோ ஓட்ட தெரியாத நான் பைக் ஓட்டிய அனுபவத்தை வைத்து.....
  ஆனாலும் ரொம்ப துணிச்சல் காரர் தான் நீங்க

  ReplyDelete
 15. சரியான ரவுஸ்தான்பா!

  ReplyDelete
 16. // இதிலிருந்து சொல்ல வரும் விஷயம் என்னன்னா... //

  நீங்க தண்ணியடிச்சாலும் ஸ்டெடியா இருப்பீங்க அதானே...

  ReplyDelete
 17. குடிச்சாலும் கொசுறு சொன்னீங்க பாத்தீங்கள்ள அங்க ஸ்டடியா நிக்குறீங்க மாம்ஸ்

  ReplyDelete
 18. குடிக்கிறவங்க கூடப் போயிப் பல்பு வாங்கியிருக்கிறீங்களே..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி