வியட்நாம் பொழுதுகள் - 8

வணக்கம் நண்பர்களே....மீண்டும் போர் நினைவுகளுக்கு உங்களை இட்டு செல்கிறேன்...


முதலாளித்துவம் (capitalism), கம்யூனிசம்(communism), ஜனநாயகம்(democracy), இந்த வரிசையில் முதல் இடத்தை எப்போதுமே தக்க வைத்துக்கொள்ள விரும்பும் நாடு தான் பெரியண்ணன் என்று அறியப்படுவது....


ஆசிய பிராந்தியத்தில் கம்யூனிசம் வளருவது தங்களுக்கு பெரிய நெருக்கடியாக கருதியது தான் முதல் காரணம்...ஏற்கனவே சீனாவின் வளர்ச்சி பெரிய நெருக்கடியை அளித்து வந்த நேரத்தில் இந்த குட்டி நாடும் நெருக்கடியை கொடுத்து விடக்கூடும் என்று முடிவு செய்தனர் பெரியண்ணா ஆட்சியாளர்கள்...

அதுவும் மீன்பிடி தொழிலும், விவசாயம் மட்டுமே சார்ந்து இருந்த மக்களை சாதாரணமானவர்களாக எடை போட்டு விட்டனர்...


"ஏழைக்கு என்றுமே வீரம் அதிகம்"...ஏனெனில் அவனிடம் இழக்க உயிரைத்தவிர ஏதுமில்லை....இந்த சித்தாந்தம் சரியாக பயன்படுத்தப்பட்ட இடம் இது...தங்களை வேறொருவர் ஆள்வதை எதிர்த்து வந்த வரலாற்றை கொண்ட மக்கள்...மீண்டும் காலனியாவதை எதிர்க்க தயாராகினர்...


வியட்கோங் என்ற பெயர்கொண்ட கெரில்லா படை தயாரானது...இப்படை முழுதும் விவசாயிகள் மற்றும் மீன்பிடி மக்களை கொண்டு தயாரானதாகும்...அதுவும் எதிரி மிகவும் பலம் பொருந்தியவன் என்பதால்...மிகவும் மெலிதான உடலமைப்பை கொண்டவர்கள் மூலம் சுரங்கங்கள் வழியாக போர் நடத்த தயாராகினர்...எங்கிருந்து வருகிறார்கள் எப்படி தாக்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் சிரமம்...


ஏனெனில் வெறும் இரண்டடி மட்டுமே இருக்கும் அச்சுரங்கங்களின் முகப்பு...பெரியண்ணனின் ஆட்களோ மிகவும் உயரம் மற்றும் திட காத்திரமானவர்கள்...எனவே உள்ளே நுழைய முடியாது....வெறும் மரவல்லிக்கிழங்குகளை மட்டுமே உண்டும்....புகை வராத அளவுக்கு சமைத்தும் உண்டு இருக்கிறார்கள்...


இதற்கிடையில் புத்த மத துறவி ஒருவர் இந்த போரை எதிர்த்து தன்னையே எரித்துக்கொண்டது உலக மக்களிடையே..குறிப்பாக பெரியண்ணனின் மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தியது...இதன் காரணமாக எதிர்ப்பு அதிகமாக சொந்த நாட்டிலேயே உருவானதால் பெரிய அழுத்தத்திற்கு உள்ளானார் பெரியண்ணன்....


இந்த கடினப்போரில் 4 வித பருவ காலங்களை கொண்ட நாட்டில் வீரர்கள் செய்வதறியாது நின்றனர்....இதன் காரணமாகவே அதிகப்படியான அழுத்தம் ஏற்ப்பட்டது எனலாம்....1975 போர் முடிவுக்கு வந்தது....

தலைவர் - ஹோசிமிங்,

இயற்பெயர் - ங்குயன் சிங் குவாங்

பிறப்பு - செப்டம்பர் 2, 1945.. இறப்பு - செப்டம்பர் 2, 1969

கவனியுங்கள்...இவரின் இறப்பு 1969 இதன் பிறகும் போர் தொடர்ந்தது...முடிவுற்றது 1975...அவரின் நினைவாக வெற்றி பெற்றதும் சைகோன் என்ற நகரத்தின் பெயரை ஹோசிமிங் என்று மாற்றி அமைத்தனர் மக்கள்....

தொடரும்....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

30 comments :

 1. சக்கம்மா போர் போர் வீரவேல் வெற்றிவேல்.....

  ReplyDelete
 2. எட்டப்பன்கள் இல்லை என்பது வியக்க வைக்கும் விஷயம் இல்லையா...? அதனால்தான் வெற்றி சாத்தியமாகிர்று...!!!

  ReplyDelete
 3. உறங்கவிடாம காலையிலேயே என்னை தொல்லைப்படுத்தும் விக்கி ஒழிக்க ஸாரி ஒழிக....

  ReplyDelete
 4. இன்று என் வலையில்
  நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

  ReplyDelete
 5. நெஞ்சை உருக்கும செய்தி மிகவும் அருமை தல

  ReplyDelete
 6. நெஞ்சை உருக்கும செய்தி மிகவும் அருமை தல

  ReplyDelete
 7. மிகவும் அரிதாகவே நான் தொடர் பதிவுகளை படிப்பேன்... அதில் முதல் இடத்தில் இந்த பதிவு... ஒவ்வொரு பதிவும் அரிதான தகவல்களை தாங்கி வருகிறது...

  ReplyDelete
 8. இனிய மாலை வணக்கம் பாஸ்,
  வியட்னாமிய வரலாற்றோடு, வியட்னாம் போர் பற்றிய நினைவுகளையும் சுமந்து செல்கிறது பதிவு.

  ReplyDelete
 9. முதலாளித்துவம் (capitalism), கம்யூனிசம்(communism), ஜனநாயகம்(democracy), இந்த வரிசையில் முதல் இடத்தை எப்போதுமே தக்க வைத்துக்கொள்ள விரும்பும் நாடு தான் பெரியண்ணன் என்று அறியப்படுவது..../////////

  விக்கியுலகம் விக்கி அண்ணே!ஹோசிம் ஒரு சுத்த வீரர்! அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை!

  ஆனால் அமெரிக்கா பற்றிய உங்கள் புரிதல் தவறென்று நினைக்கிறேன்!

  என்னால் இவற்றைச் சுட்டிக்காட்டி, விளக்கமான, விரிவான கமெண்டுகள் போட முடியும்!

  அப்புறம் நீங்க என் மேல கோவிட்ச்சுக்கிட்டு, ஓட்டும் கமெண்டும் போடாம விட்டுடுவீங்க!

  பொதுநலத்தை விட சுயநலத்திலேயே தமிழன் கவனமாக இருப்பான் அப்டீங்கற கோட்பாட்டின் படி, அமெரிக்கா பத்தி நான் எதுவுமே சொல்லாம விட்டுடுறேன்!

  ஓகே வா?

  ReplyDelete
 10. வணக்கம் மாப்பிள தொடரை தொடர்ந்து வாசித்து வருகிறேன் சில நேரங்களில் பின்னூட்டமிட கால அவகாசம் போதாது.. அருமையாக தொடரை கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. மனதை தொடும் பதிவு பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 12. மனதை நெகிழச் செய்த பதிவு..

  ReplyDelete
 13. தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்......

  ReplyDelete
 14. //////Powder Star - Dr. ஐடியாமணி said...
  முதலாளித்துவம் (capitalism), கம்யூனிசம்(communism), ஜனநாயகம்(democracy), இந்த வரிசையில் முதல் இடத்தை எப்போதுமே தக்க வைத்துக்கொள்ள விரும்பும் நாடு தான் பெரியண்ணன் என்று அறியப்படுவது..../////////

  விக்கியுலகம் விக்கி அண்ணே!ஹோசிம் ஒரு சுத்த வீரர்! அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை!

  ஆனால் அமெரிக்கா பற்றிய உங்கள் புரிதல் தவறென்று நினைக்கிறேன்!///////

  யோவ் மணி அது என்னன்னு கொஞ்சம் சொல்லலாம்ல? சரி தனி பதிவா வேணா போடுய்யா.....

  ReplyDelete
 15. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 16. நண்பரே!
  தொடர்ந்து படித்து வருகிறேன்
  தொடர் நன்றாகச் செல்கிறது
  படங்களும் அருமை!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. அந்த மூன்றாவது போட்டோ உலக பிரசித்தி பெற்றது ஆச்சே!!!! அதில் ஓடிவரும் குழந்தையும் இப்போது உயிரோடுதான் இருக்கிறார், அவரது பேட்டி பத்திரிக்கையில் வந்து இருக்கிறது இப்போதைய போட்டோவும்.

  ReplyDelete
 18. சுருக்கமாகவும் அதே சமயம் மிகச் சரியாக
  மனதில் பதியும் வண்ணமும் இருக்கிறது பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 12

  ReplyDelete
 19. படங்களுடன் நல்ல பதிவு.

  ReplyDelete
 20. ஹோசிமிங் பெயர்க்காரணம் தெரியும்..இவ்வளவு நாள் கழித்து என்பது..ஆச்சர்யம்...

  ReplyDelete
 21. அருமையான வரலாற்றுப் பதிவு!

  ReplyDelete
 22. தெரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 23. கொஞ்சம் கவனமாவும் இருங்க, யாரோ ஒரு புண்ணியவான் மைனஸ் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 24. தொடரட்டும்! அருமை !

  ReplyDelete
 25. கலக்கல் தொடர் தொடர்கிறேன்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி