நவராத்திரி...தக்காளி வாங்கிய பல்பு(!?)

வணக்கம் நண்பர்களே....


உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள்...

இன்றைய நிகழ்ச்சி இது.....

இன்னைக்கு காலைல இருந்து பல மிரட்டல் SMS கள்...வர முடியுமா முடியாதா என்று என் மனைவிக்கு இங்கு இருக்கும் அவர் நண்பி ஒருவர் SMS அனுப்பிய வண்ணம் இருந்தார்...என்னவென்று பார்த்தால்...இன்று நவராத்திரி கொலு வைத்து இருக்கிறார்களாம்...அதற்க்கு வந்த அழைப்புகள் இவை...

என்ன இன்னைக்கு வெளிய போற வேலை ஏதாவது இருக்கிறதான்னு மிரட்டும் பாணியில்(!) என்னை கேட்ட போது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன் நான்...

இல்லைங்கோ...என்ன விஷயமுங்கோ என்று கேட்டதற்கு இன்று மாலை கொலு வைத்திருக்கிறாங்க...நாம கண்டிப்பா போகணும்னு சொல்லிட்டாங்க(!)...


சரி வீட்டு சாப்பாடுதான் தினமும் சாப்பிடுறோமே(ஐயோ அம்மா!) இன்னைக்காவது அய்யர் வீட்டு உணவுன்னு...சந்தோசத்துடன் கிளம்பினேன்...வீட்டுக்காரம்மாவும்(house owner அல்ல!) என் பையனும் நானும் சும்மா ஜிவ்வுன்னு அடிக்கிற குளுர பற்றி கவலைப்படாமல் கிளம்பினோம்...
அந்த இடம் நாங்க இருக்கும் இடத்திலிருந்து 8 கீமீ என்பதால் சற்று அரக்க பறக்க போய் சேர்ந்தோம்....

சரியா 6.25 மணி...ஐந்து நிமிடத்துக்கு முன்னாலேயே போய் சேர்ந்து விட்ட பெருமிதம் எனக்கு....எப்படியோ இன்னைக்கு இட்லி வடை கிடைக்கும்...அதுவும் இங்க கிடைக்காத உணவு(!)...என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வீட்டு வாசலில் காலெடுத்து வச்சேன்...

முதல் வார்த்தை...

மன்னிக்கனும்ங்க இது பெண்கள் நிகழ்ச்சின்னு சொல்லி(எப்போ கிளம்பறீங்க!) என்னை முறைச்சி பாத்தாங்க....

சமீபத்தில் நான் வாங்கிய மிகப்பெரிய பல்ப்பா இந்த நிகழ்ச்சிய உணர்ந்தேன்(ஹிஹி!)....என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்...என் மனைவி...சரிங்க என்ன பண்ணலாம்னு கேட்டாள்....ரொம்ப நல்லவனாகிய(ஹிஹி!) நானும்...நீ இருந்து முடிச்சிட்டு வா...கிளம்பும்போது கூப்பிடு வந்து pick up பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்....
இது அடுத்த பாகம்...


வீட்டுக்கு வந்து நுழையும்போதே...வாசலில் பீர்கடை சொர்ணாக்கா(!)...

எங்கய்யா போறேன்னு கேட்டாங்க....வீட்டுக்குதான்னு சொன்னேன்...

 எங்க மனைவியும் குழந்தையும்னு கேட்டாங்க...நானும் நண்பி வீட்டுக்கு போயி இருக்காங்கன்னு சொன்னேன்...

அந்த வியட்நாமிய பெண்ணும் நண்பர்களும் சேர்ந்து...உக்கார வச்சிட்டாங்க...
யோவ் நான் குடிக்கறத விட்டுட்டேன்ய்யான்னு சொன்னா எவன் நம்பறான்....

யோவ் இது வெறும் பீர் தான் குடின்னு சொல்லி அடிக்க வச்சிட்டாங்க...

என்ன கொடும இது...ஒரு பச்சை புள்ளைய இப்படி அமுக்கி மிரட்ட்னா என்ன பண்றதுங்க....நவராத்திரிக்கு சுண்டல் திங்க போன ஒரு புள்ளைய திருப்பி அனுப்பிச்சது யாரு யாரு யாரு(இதான் கடவுளின் விருப்பமா ஹிஹி!)

கொசுறு: கடைசி இரண்டு போட்டோவில் இருப்பவர்கள் முதல் பெண்..சொர்ணாக்கா...ரெண்டாவது அங்கு பணிபுரியும் பெண்(lady server!)...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. தக்காளி வடை எனக்குதான்....

  ReplyDelete
 2. நம்பிட்டோம்

  ReplyDelete
 3. தம்பி ரொம்ப நல்லவன் போல

  ReplyDelete
 4. இனிய இரவு வணக்கம், & நவராத்திரி நல் வாழ்த்துக்கள் பாஸ்.,.

  பதிவினைப் படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 5. ஹும், கொடுத்து வச்ச மவராசன்!
  நான் ஒரே ஒருவாட்டி மும்பையிலே லேடீஸ் பாருக்குப் போயிருக்கேன். இப்போ அதையும் தடை பண்ணிட்டாங்களாம்! :-(

  ReplyDelete
 6. தண்ணிப் போத்தல் மூலமா நவராத்திரி கொண்டாட வைச்சிட்டாங்களே.

  செம காமெடி பாஸ்..
  ஹா...ஹா...  ரசித்தேன்.

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா ஹா இட்லி வடையா திங்கப்போனே ராஸ்கல் சரியா பல்பு வாங்கி இருக்கான்..

  ReplyDelete
 8. எத்தனை பீருன்னே குடிச்சே, தக்காளி உனக்கு ஒரு ஃபுல்லே பத்தாது, பீரு சும்மா எறும்பு கடிச்சா மாதிரில்லே இருக்கும், பீப்பாய் வேணுமே...??

  ReplyDelete
 9. சேட்டைக்காரன் said...
  ஹும், கொடுத்து வச்ச மவராசன்!
  நான் ஒரே ஒருவாட்டி மும்பையிலே லேடீஸ் பாருக்குப் போயிருக்கேன். இப்போ அதையும் தடை பண்ணிட்டாங்களாம்! :-(//

  சீக்ரேட்டா போலீஸ் பாதுகாப்போட நடக்குற லேடீஸ் பார் இருக்கு, மும்பை வந்தா சொல்லும் நான் கூட்டிட்டு போறேன்.

  ReplyDelete
 10. தக்காளி கொடுத்து வெச்சவன்யா.....

  ReplyDelete
 11. /////கிளம்பினேன்...வீட்டுக்காரம்மாவும்(house owner அல்ல!) ///////

  பார்ரா................

  ReplyDelete
 12. //////வீட்டுக்கு வந்து நுழையும்போதே...வாசலில் பீர்கடை சொர்ணாக்கா(!)...//////

  இதெல்லாம் உனக்குன்னு அமையுமே........

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணாச்சி, இனியெங்கே? எங்க ஹெட் ஆபீஸே விசாகப்பட்டணத்துக்குக் குடிபெயர்ந்திருச்சு! :-(

  ReplyDelete
 14. இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
  அதுக்காக பல்பா வாங்கிறது..
  ஹா ஹா ..

  எனது பக்கம்...
  இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...

  ReplyDelete
 15. கடைசி படத்துல இருக்குற உங்க தங்கச்சி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.

  ReplyDelete
 16. இட்லி வடைக்கு பதிலாய் அல்வா..:)

  உங்க வலை சற்றே ஆடிக்கொண்டிருக்கிறது (Sideways)...வேறு யாராவது சொன்னார்களா?

  ReplyDelete
 17. அடக்கடவுளே வடை சாப்பிட போன ஆள பீர் சாப்பிட வச்சிட்டாங்களே

  ReplyDelete
 18. என்ன இன்னைக்கு வெளிய போற வேலை ஏதாவது இருக்கிறதான்னு மிரட்டும் பாணியில்(!) என்னை கேட்ட போது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன் நான்/

  பல்ப்போடு அதிர வைக்கும் பகிர்வு!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
 20. வணக்கம்....

  நிறைய வாங்கி வையுங்க.. அதைஅப்படியே பதிவா தேத்திபுடுலாம்...

  ReplyDelete
 21. ///விக்கியிடம் எதிர்பார்ப்பவை..!///மாப்ள என்னோட ஓட்டு வரலாற்று பதிவுகளுக்கே...

  ReplyDelete
 22. மாம்ஸ் கொலுவுக்கு போனாலும் கோட்டோர் தான் போல ஹா ஹா

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி