வணக்கம் நண்பர்களே...இது ஒரு சுனாமி நினைவு..

இந்தியாவில் அதாவது 2004.......அன்று கிறிஸ்மஸ் நாள்.....அப்போது வேளாங்கண்ணிக்கு கிட்டத்தில் இருந்தேன்......அப்போது என் மனைவி வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.....கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த நாள் விடியற் காலை செல்லலாம் என்று முடிவு செய்தோம்..........


காலையில் அந்த கடற்க்கரை மிக அழகாக இருக்கும்.......மற்றும் நாகூரில் இருந்த பூங்காவும் அழகா இருக்கும்......இந்த கடற்க்கரை எழில் என்னையும் என் மனைவியையும் அடிக்கடி அழைத்தவாறு இருந்ததால்.......நாங்கள் அந்த இடங்களுக்கு சென்று வருவது தொடர்ந்தது.......

26 காலை செல்வதாக முடிவு செய்து இருந்தோம்....நான் இருந்த இடத்தில் இருந்து சரியாக 37 கிமீ தூரமே...அதனால் எனதருமை Bullet வாகனம் இருந்ததால் கவலை இல்லை.....என் நேரம்....அன்று காலை வெகு நேரம் தூங்கி விட்ட படியால்......

காலை 7 மணிக்கு தொலைக்காட்சியை பார்த்த பொழுது தான் விஷயமே தெரியும்....அப்போதும் என் மனைவியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு அந்த இடத்துக்கு சென்றேன்.....பெரிய அளவிலான படகுகள் சுழட்டி அடிக்கப்பட்டு கட்டிடங்கள் மேல் போய் உற்காந்து இருந்தன......எங்கு பார்த்தாலும் ஓலம்.......


நான் அடிக்கடி சந்திக்கும் நண்பன் என்னிடம் அவனின் நண்பனுக்கு ஏற்ப்பட்ட நிகழ்வை கூறினான்.....அந்த மீனவ நண்பன் தன் இரு குழந்தைகளையும் இழந்ததை கூறினான்.......அலை வரும் போது ஒரு குழந்தை இழுத்துச்செல்லப்பட்டதாகவும்.....ஒரு குழந்தைய கரையை நோக்கி அவன் வீசிய பொழுது மற்றொரு அலை அவன் கண்ணெதிரே அந்த குழந்தையய்யும் தூக்கி சென்றதாகவும் சொல்லும் போது என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை................


அந்த இடங்களுக்கு சென்று பார்க்கும் பொழுது கீச்சாங்குப்பம் மற்றும் ஒரு கிராமம் முற்றிலும் காணாமல் போயிருந்தது.......எவ்வளவு உயிர்கள் என்று சரியாக கணக்கிடப்பட்டதா தெரியவில்லை......பல இடங்களில் பல நாட்களுக்கு துர் வாடை வீசியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.......

மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்ப்படுத்திய நிகழ்வு அது...........நான் எப்பொழுதும் எழும் நேரம் கடந்து போனதால் மிஸ்ஸாகிப்போனேன்.....இன்றும் என் மனைவி அதனை குறிப்பிடும் போது ஒரு வித கலக்கம் ஏற்ப்படும்.......

கொசுறு: கடவுள் என்னைப்பார்த்து கேட்க்கிறார்....உனக்கு எத்தன தடவ உயிர் கொடுக்கறது......நீ அவ்வளவு பாவம் செய்து இருக்கிறாயா ஒரு வேளை நீ அசுரனோ!

மிச்சம்: இது ஒரு மீள் பதிவு...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. பதறவைக்கிறது பகிர்வு!

  ReplyDelete
 2. கேட்கும் போதே உடலும் பதறுகிறது

  ReplyDelete
 3. உள்ளம் நெகிழ வைக்கும் ஓர் நிகழ்வை கண் முன் நிறுத்திய பதிவு.

  ReplyDelete
 4. அது ஒரு வேதனையான காலம்..

  ReplyDelete
 5. இதுல ஒரு விஷயம் என்னன்னா, கோடானு கோடி மக்கள் இங்க அவதிப் பட்டு கொண்டிருந்த பொழுது நடு இரவில் இந்திய காப்புரிமை சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது நடுவண் அரசு..

  ReplyDelete
 6. அது ஒரு கவலை காலம்

  ReplyDelete
 7. வருந்ததக்க விசயம் மாம்ஸ்

  ReplyDelete
 8. அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!

  ReplyDelete
 9. அதிர்ச்சி அளித்த நிகழ்வுகள்

  ReplyDelete
 10. கிறிஸ்மஸ்த்துக்கு மறுநாள் இது நடந்தது..

  கிறிஸ்மஸ் அன்று நானும் மெரினாவில் இருந்தேன்...

  ReplyDelete
 11. வேதனையான விஷயம்..

  ReplyDelete
 12. மச்சி இதுல இருந்து என்ன தெரியுதுனா எப்பவுமே கரெக்ட் டைம்க்கு எழும்பக்கூடாது ....... சரியா

  ReplyDelete
 13. மனதை நெகிழச் செய்யும் பதிவு..

  ReplyDelete
 14. திரும்பநினைத்துப் பார்க்கவே
  மனம் பயப்படுகிறது
  த.ம 10

  ReplyDelete
 15. இன்று நினைத்தாலும் தூக்கம் கெடும் நினைவுகள் அந்த நிகழ்வு.

  ReplyDelete
 16. கன்னியாகுமரி'யிலும் இதே வேதனைதான்....

  ReplyDelete
 17. நினைக்கும்போதே நெஞ்சு பதறுகின்றது இன்னமும் மாறாத அதே உணர்வுடன் .ஆழிப் பேரலை தந்த மீளத் துயர் ......

  ReplyDelete
 18. இனிய மாலை வணக்கம் பாஸ்,,

  நினைவுகளை மீட்டி ஓர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  மீள் பதிவென்றாலும், எனக்கு இது புதிய பதிவாகத் தான் இருக்கின்றது.

  விதி வலியது என்பது நீங்கள் வேளாங்கன்னிக்குப் போகாத அன்றைய தின நிகழ்வின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

  ReplyDelete
 19. மீள் பதிவை இருந்தாலும் நிகழ்ந்தவைகள் மனதில் இருந்து மீளுவதில்லை விக்கி

  ReplyDelete
 20. எல்லாம் வல்ல இறையைப் போற்றுக!

  ReplyDelete
 21. வேதனை அளித்த விஷயம் நண்பா

  ReplyDelete
 22. நெஞ்சிலிருந்து மீளாத கனத்த நினைவுகள்!

  ReplyDelete
 23. அந்த நாளை அதுவும் அதற்கு அடுத்த நான் நான் கடல்கரைக்கு போக பயந்ததை இன்னும் மறக்கமுடியாது...
  இப்போதும் பிறந்து வளர்ந்த அந்த கடல்கரை எனக்கு எமனாய் தான் தெரிகிறது...

  ReplyDelete
 24. சுனாமி என்னும் ஆழிப்பேரலையை பார்க்கும் முன் எவ்வளவு ஆகர்ஷித்த கடல். இன்று கடல் நீரில் காலை வைக்கும் போதே ஒரு கூச்சம் உள்ளூடுருவுகிறது

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி