மொக்கை பதிவரின் புதிய முடிவு....!

வணக்கம் நண்பர்களே...இதுவரை உள்குத்து பதிவு போட்டு யாருக்கும் புரியாத மாதிரியே பதிவுலக விஷயங்களை இட்டு வந்த நான்(!)...இந்தப்பதிவில் சில விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்....

தமிழ்மணம் - இது தான் இப்போது ஹாட் டாபிக்...இதன் மூலமா பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...என்னையும் ஒரு பதிவனாக(!) உலகுக்கு வெளிக்காட்டிய திரட்டி இந்த தமிழ்மணம்...அதற்க்கு மூல காரணமாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் யார்!...என்னையும் மதித்து எனக்கு ஓட்டும், கருத்துரைகளும் அள்ளித்தரும் உடன்பிறவா அன்பு நண்பர்களே இதற்க்கு மூல காரணம்...


கடந்த பல மாதங்களாக இந்த தமிழ்மணத்தில் என்னுடைய பதிவை...பதிவுலக நண்பர்களே இணைத்து வருகிறார்கள்...நான் இணைத்து நெடுங்காலமாகிறது(Technical problem)

அதே நேரத்தில் பல அரிய நண்பர்களை அளித்து வந்த பதிவுலகம்...இன்று கொஞ்ச கொஞ்சமாக சுருங்கி வருவது வேதனை அளிக்கிறது...

அக்தாவது...நேற்று வரை தோழமையுடன் பழகி வந்த பதிவர்கள்...இன்று முட்டி மோதிக்கொள்ளும் நிலைமை...அதுவும் ஒருவருக்கொருவர் பிரச்சினையே இல்லாமல் மோதிக்கொள்ளும் நிலை ஏன்...

இந்த வரிசையில் நானும் ஒரு மாக்கான் என்பதை தெளிவு படுத்துகிறேன்...ஏனெனில், என் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பொது இடத்தில் நாசூக்காக(!) வெளிப்படுத்துவதை தவிர்க்க பழகிக்கொள்ளாத காரணத்தால்(!)...நானும் இந்த முட்டாள் தனமான மோதலில் பங்கெடுத்தவனாகிறேன்..

எதற்கு இந்த மோதல் போக்கு...காரணங்கள்...

பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லும் தவறான அணுகுமுறை(!)

யதார்தத்துக்கும், கனவுக்கும் வித்தியாசம் பார்க்கும் என்னுடைய மூடத்தனம்(!)..

எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக...பிடித்தால் ஆதரித்தல்(!) ...இல்லையேல் எதிர்த்தல் எனும் மனப்போக்கு.....

இந்த காரணங்களே பல வித மன சங்கடங்களை எனக்கும்...என்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறேன்...இனி..


முடிந்தவரை என்னை நான் மாற்றிக்கொள்ளும் வரை(!)...என்னுடன் மோதல் போக்கை கொண்ட பதிவர்களின் தளங்களுக்கு செல்ல இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...அவர்களும் இந்த பதிவை ஒரு சிறியேனின் அறியாமை என்று எண்ணி தவிர்த்து விட்டு அவரவர் பாதையில் முன்னேறி செல்லுவார்கள் என்ற நம்பிக்கை கலந்த வாழ்த்துக்களுடன்...நன்றி...

கொசுறு: யார் அவர்கள் என்று சொல்லி அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை...நன்றி..

ஜெய்ஹிந்த்
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. இனிய மாலை வணக்கம் அண்ணே,
  படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 2. விக்கி திருந்திட்டாறு

  ReplyDelete
 3. இதுவரை உள்குத்து பதிவு போட்டு யாருக்கும் புரியாத மாதிரியே பதிவுலக விஷயங்களை இட்டு வந்த நான்(!)...இந்தப்பதிவில் சில விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன்...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  அண்ணே நீங்களுமா...

  முடியலையே...

  ReplyDelete
 4. தமிழ்மணம் - இது தான் இப்போது ஹாட் டாபிக்...இதன் மூலமா பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...என்னையும் ஒரு பதிவனாக(!) உலகுக்கு வெளிக்காட்டிய திரட்டி இந்த தமிழ்மணம்...அதற்க்கு மூல காரணமாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் யார்!...என்னையும் மதித்து எனக்கு ஓட்டும், கருத்துரைகளும் அள்ளித்தரும் உடன்பிறவா அன்பு நண்பர்களே இதற்க்கு மூல காரணம்...//

  ஆமாண்ணே பல பதிவர்களின் வளர்ச்சியில் தமிழ்மணத்திற்கு காத்திரமான பண்பு உண்டு!

  ReplyDelete
 5. நண்பர்களை தேடித்தரும் இடமான பதிவுலகில் ஏன் இப்படி?

  ReplyDelete
 6. முடிந்தவரை என்னை நான் மாற்றிக்கொள்ளும் வரை(!)...என்னுடன் மோதல் போக்கை கொண்ட பதிவர்களின் தளங்களுக்கு செல்ல இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...அவர்களும் இந்த பதிவை ஒரு சிறியேனின் அறியாமை என்று எண்ணி தவிர்த்து விட்டு அவரவர் பாதையில் முன்னேறி செல்லுவார்கள் என்ற நம்பிக்கை கலந்த வாழ்த்துக்களுடன்...நன்றி...//


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  ஹே...ஹே...


  என்ன அண்ணே! உங்க கூட யாருண்ணே காணித் தகராறு பண்றாங்க?

  சொல்லுங்க! நாஞ்சில் அண்ணாச்சிக்கிட்டச் சொல்லி அருவா எடுத்திட்டுப் போயிச் சீவிடுவோம்.

  ReplyDelete
 7. நீங்கள் தவிர்க்க நினைக்கும் லிஸ்டில் நானும் இருக்கேனா? ஏன்னா, எனக்கு வாய்ப்பக்கம் சரியில்லை! எதையும் நேரடியாக கேட்டுடுவேன்!

  நானும் இந்தப் பழக்கத்தை மற்றிக் கொள்ளப் போகிறேன்! அண்ணே உங்களோட சேர்ந்து நானும் மாறப்போறேன்!

  அந்நியனாக இருந்த நான் இனி அம்பியாக மாறப் போறேன்!

  என்னோட ப்ளாக் பக்கம் வராம விட்டுடாதீங்க சார்!

  ReplyDelete
 8. இங்கே என்ன ஆட்டம் நடக்குதுன்னே எனக்கு புரியல மாம்ஸ்!
  புரியாம இருக்கறதே பரவால்லன்னு நினைக்குறேன்!

  ஆனா நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிங்க போல!

  என்னவோ நடந்துட்டுப்போகுது!
  ஆளாளுக்கு என்ன தோணுதோ எழுதுவோம்.எது பிடிக்குதோ போய் படிப்போம்!என்ன மாம்ஸ் ஓகேவா?

  ஜெய்ஹிந்த்!

  ReplyDelete
 9. என்னலேய் ஆச்சு சண்டைங்கிறீங்க, அன்புங்கிறீங்க ஒரு மண்ணும் புரியலை....!!

  ReplyDelete
 10. என்னாச்சி அமெரிக்கா'காரன் ஆப்பு வச்சிட்டானா...??

  ReplyDelete
 11. ஹி ஹி புலி பம்முதே, பாயிறதுக்கா...???

  ReplyDelete
 12. அண்ணே, இதையெல்லாம் லூஸில விடுங்க.

  ReplyDelete
 13. என்ன மோதல்? எங்கே நடக்குது? அப்பப்ப பேசிக்கிறாங்க எனக்கு ஒண்ணுமே புரியல மாம்ஸ்!
  நேற்று என்னோட பதிவுக்கு நீங்க வரல....அவ்வ்வ்வ்!

  தமிழ்மணம் 8

  ReplyDelete
 14. ஆமா என்ன பிரச்சினை? எப்பிடி? எதுக்காக? எங்கே நடக்குது? இதுபற்றி யாராவது விரிவா பதிவு போடுங்கப்பா புண்ணியமா போகும்!

  ReplyDelete
 15. என்னய்யா பம்முறிங்க

  ReplyDelete
 16. ஆமா! ஜெய்ஹிந்த்

  ReplyDelete
 17. நானும் அதைத்தான் செய்து கொண்டு உள்ளேன்
  .பதிவுகளில் ரொம்ப வெளிப்படையாகவும்
  கோஷ்டி சேராமலும் இருத்தல்தான் நல்ம போலும்
  த.ம 10

  ReplyDelete
 18. தம்பி, எனக்கு என்ன ஆச்சரியம்னா உனக்கு இன்னும் ஒரு மைனஸ் ஓட்டு கூட விழலையே?ன்னுதான் ஹி ஹி

  ReplyDelete
 19. நானு வேறே மாதிரி முடிவு பண்ணிருக்கேன். இனிமேல் அரசியல் பத்தி சீரியஸ் பதிவெல்லாம் கிடையாது; ஒன்லி நக்கல்ஸ்! :-)

  ReplyDelete
 20. இவன் இனி திருந்தமாட்டான்யா....

  ReplyDelete
 21. அட கஷ்டகாலமே, இப்படி ஆளாளுக்கு மாறினால் ஒங்க பழைய டிரேட்மார்க் பதிவுகளை இனி நாங்க எப்போ பார்க்கிறது!!!???

  ReplyDelete
 22. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது. வேறெங்கோ இடிஇடிக்க இங்கே நிறையபேர் பதிவில் மழைபெய்கிறதென்பது நிதர்சனம்....

  ReplyDelete
 23. //அக்தாவது...நேற்று வரை தோழமையுடன் பழகி வந்த பதிவர்கள்...இன்று முட்டி மோதிக்கொள்ளும் நிலைமை...அதுவும் ஒருவருக்கொருவர் பிரச்சினையே இல்லாமல் மோதிக்கொள்ளும் நிலை ஏன்..//

  எப்படியோ...எல்லோரும் இனியாவது ஒற்றுமையோடு கைகுலுக்கிக் கொண்டீர்களானால்நான் மிகுந்த சந்தோசப்படுவேன்.

  ReplyDelete
 24. அதனாலதான் என் பதிவுக்கு வரமாட்டேங்கிறயா மிஸ்டர்....

  ஒண்டிக்கு ஒண்டி சண்டை வச்சிக்கிலாமா

  (அப்பா என்கூட சண்டைக்கு யாராவது வாங்கப்பா....)

  ReplyDelete
 25. விடு விக்கி இதையெல்லாம் நினைச்சி பீல் பண்ணாதீங்க...

  காலம் மாறுகையில் எல்லாம் மாறும் தங்களுடைய சுபாவத்தையும் சேர்த்து...

  தன்னம்பிக்கையோடு ஒன்று படுவோம்
  இந்த உலகை மாற்றும் சக்திகளில் நாம் கடைசி இடத்திலாவது இருப்போம்...

  ReplyDelete
 26. உங்க லிஸ்ட் -ல கண்டிப்பா நான் இருக்கமாட்டேனே !!!!

  ReplyDelete
 27. இதுக்கு தான் ஓட்டு பட்டை என் வலை பூவில் இனைய மாட்டேங்குதோ... இனிமேலும் இணைக்க போவதில்லை என்று உறுதி கொள்கிறேன்... என் வலை பூவுக்கு வாங்க பிடிச்சா படிங்க, பிடிக்கலேன்னா பின்னூட்டம் இடுங்க, ஓட்டு வேண்டாம் சாமி

  ReplyDelete
 28. ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்

  ReplyDelete
 29. நான் இப்போ தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன் ,இப்பவே கண்ணைக் கட்டுதே

  ReplyDelete
 30. தவறுகளை சுட்டிக்காட்டுவதும், நல்ல ஆலோசனைகளைச் சொல்வதும் ஆரோக்கியமான அனுகுமுறைதானே! தொடருங்கள் உங்கள் பணியை viyapathy

  ReplyDelete
 31. இங்கு அனைவரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே பழகுகின்றனர்! மாற்றுக் கருத்தாளிகளுக்கு இடமில்லை!

  ReplyDelete
 32. இதுக்கு தான் நான் எனக்கு மட்டுமே எழுதறேன்...எப்படியோ அடுத்தவங்க கண்ல பட்டுறுது -:)

  ReplyDelete
 33. ஒன்னும் புரியல :-(

  இருந்தாலும் லூஸ்ல விடுங்க

  தூசு மாதிரி தட்டுங்க

  சீ போன்னு வெரட்டி விடுங்க

  எந்த கஷ்ட்டமும் கஷ்ட்டமா தெரியாது

  ReplyDelete
 34. மாப்ள என்ன இப்படி சொல்லாம கொள்ளாம திருந்திட்டாய் ?
  எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு மாப்ள . என்ன கூட மோதுரத்துக்கு முன்னாடி இப்படி அநியாயமா திருந்திடியே . . . .
  :(

  ReplyDelete
 35. நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 36. அண்ணாச்சி என்ன நடக்குதுண்ணு ஒண்ணுமே புரியல ஏதோ ஒரு பனிப் போர் நடக்குது என்று மட்டும் தெரியுது..

  ReplyDelete
 37. என்ன பிரச்னை?

  ReplyDelete
 38. மாப்ள உன் கூட மட்டும் யாருய்யா அடிக்கடி சண்டை போடறது...

  ReplyDelete
 39. //யார் அவர்கள் என்று சொல்லி அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை...நன்றி..//
  கொல்லாமல் கொல்லும் வித்தை தெரிந்தவர் நீங்கள்!

  ReplyDelete
 40. எனக்கும் ஒன்னும் புரியல விக்கியண்ணா நானும் புதிய பதிவாளன் எனக்கும் வாசிப்பைக் கற்றுத்தந்தது தமிழ்மணம் .!
  முடிந்தால் எனக்கும் விளக்குங்கோ இந்த பனிப்போரைப் பற்றி! 
  நாஞ்சில் வாளை கையோடு எடுத்துவாரன் ஒரு முடிவு கான நண்பர்கள்தான் தேவை நமக்கு!

  ReplyDelete
 41. என்னுடன் மோதல் போக்கை கொண்ட பதிவர்களின் தளங்களுக்கு செல்ல இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...///


  மாம்ஸ், தூற்றுபவனை விட்டுத்தள்ளுங்கள். சரியான முடிவு தான்.

  ReplyDelete
 42. கொஞ்ச நாள் எதையும் கண்டுக்காம இருந்தாலே பிரச்சனை பாதி முடிஞ்ச மாதிரி தான்.... அதனால உங்க வழியில் உங்கள் பயணம் பாதுகாப்பே...

  ReplyDelete
 43. ஒன்னுமே புரியல மாப்பிள நீங்க எத சொல்லுறீங்கன்னு..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி