வணக்கம் நண்பர்களே...


"நான் அவளை காதலிக்கிறேன்" - இந்த ஒன் லைன சொல்லாத ஆளே இல்ல என்று நினைக்கிறேன்...இந்த வார்த்தைக்கு பல வித வண்ணங்கள் பூசி அவரவர் தொனியில் நினைக்கிறோம்...

அப்படிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையே ஒரு வித ஈர்ப்பு தானே...அதனின் ஒரு துளி இங்கே...

என்னடா எப்படி இருக்க.....ஆள பாத்து ரொம்ப நாளாச்சி....

இல்லடா exam வருதில்ல அதான்....

பிச்சிடுவேன்...நேத்து கூட உன்னைய கேட் பக்கமா பாத்ததா சொன்னாங்க...

அது வந்து மச்சி...ஹிஹி..

டேய் எதோ விஷயம் இருக்கு...ஏன் மழுப்புற...

இல்ல மச்சி ஒரு பொண்ணை தினமும் பாக்குறேன்...அவளோட பேசனம்னு நினைக்கிறேன்...ஆனா பேச தைரியம் வரல...

அடங்கொன்னியா...அது யார்ரா அது...அதுவும் நீ ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறியா...பார்ரா...

நெசமாத்தாண்டா சொல்றேன்...வேணும்னா இன்னைக்கு சாயந்தரமா வாயேன் அவளை காட்டுறேன்...

மாலை....

அதோ அவள் தான்டா....


அடங்கோ....என்னடா பொண்ண காட்ரேன்னு சொல்லிட்டு ஒரு டின்ன காட்ற...

மச்சி அப்படி சொல்லாதடா...அவள் தான் என் லவ்வர்.......

டேய் அந்த பொண்ணு ஒரு அறை விட்டுது நீ திருப்பதில போயி விழுவ...பாத்துக்க...எனக்கென்னமோ நீ அவளை கிண்டல் பண்றன்னு பின்னிடப்போரான்னு தோணுது....

எப்படிடா பேசுறது...அதோ பாரு இன்னொரு பொண்ணு அவ கூட வர்றா..

ஏன்டா அந்த இன்னொரு பொண்ணு டக்கரா இருக்கே...

டேய் நாதாரி..எனக்கு அந்த பொண்ணு (குண்டு பெண்!) கிட்ட தான் பேசணும்...எப்படி பேசுறது...

அங்க பாரு ரெண்டு பேரும் ஐஸ் கிரீம் பார்லர்ல உக்காந்துட்டாங்க..வா பாப்போம்...

ஹாய்...

ஹாய்...

ஹாய்..(மவனே இப்படியே சொல்லிட்டு இரு!)

அலோ என்ன வேணும் உங்களுக்கு...(பார்ரா மரியாதைய!)

நீங்கதான்...

ஹேய் என்ன கிண்டலா...

இல்லங்க...இவன் என்னோட பிரண்டு...உங்கள தினமும் இந்த வழியா பாத்துட்டு இருக்கான்...

ம்...

உங்க கிட்ட ரெண்டு நிமிஷம் பேசணுமாம்...

(பக்கத்தில் இருந்த ஒல்லி பெண் சற்று அதட்டலாக!) அலோ இது எங்க அக்கா தான்.....சொல்லுங்க என்ன பேசணும்



அய்யய்யோ...ஆள விட்ரா சாமி...நான் வரேன்...(நண்பன்!)

இர்ரா...அது வந்துங்க நான் இவங்கள லவ் பண்றேன்...

ஹேய் என்ன கிண்டல் பண்றியா...

அலோ இல்லைங்க...இவன் உங்க அக்காவ லவ் பண்றான்...உண்மையாவே...

(இடை மறித்த அந்த குண்டு பெண்...!)

என்ன சொல்லணும் சொல்லுங்க....

அது வந்துங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு...நான் உங்கள விரும்புறேன்..நீங்க என்ன சொல்றீங்க..

ம்...எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல...ஆனா நான் யோசிச்சி சொல்றேன்...

என்னக்கா சொல்ற...

வா போவோம்...

அந்த பெண்கள் அவர்களுக்குள் பேசிச்சென்றது...

...அவர் என் பின்னாடி கடந்த 2 மாசமா வர்றத நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்டி...ஏன் நான் லவ் பண்ணக்கூடாதா!..

அவர்கள் வீட்டில் சில வருடங்கள் கழித்து....


இங்க பாருங்க நாங்க ரொம்பா ஆச்சாரமானவங்க...நீங்க வேற ஜாதி...தயவு செய்ஞ்சி எங்கள தொந்தரவு செய்யாதீங்கோ...ப்ளீஸ்!

என்னடா இப்படி சொல்றாங்க....

இரு நான் பேசறேன்...சார் இதை உங்க பொண்ண சொல்ல சொல்லுங்க நாங்க போயிடறோம்..இனி உங்க பொண்ண என் பிரண்டு தொந்தரவு செய்ய மாட்டான்....

இல்லப்பா நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..(பெண் வாய்ஸ்!)

சீ...இனி என் முகத்தில் முழிக்காதே...குடும்பத்துக்கே களங்கம் நீ...வீட்ட விட்டு வெளிய போ...

நாங்க வரோம் சார்...(பெண்ணுடன் வெளியேறினான் அவன்!)


கட்டிய சுடிதாருடன்(!) வந்த அந்தப்பெண் இன்று ஒரு குடும்ப தலைவி...நண்பர் ஒரு அரசாங்க பள்ளியில் ஆசிரியர்....இரண்டு குழந்தைகளுடன் ஆனந்த வாழ்வு + பெண்ணின் தந்தையாருக்கு பணிவிடையுடன்(!)...வாழ்கை போய்கொண்டு இருக்கிறது....

கொசுறு: என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி! 

கொசுறு: இது ஒரு உண்மை நிகழ்வு 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

34 comments :

  1. ரைட்டு! ஆட்டோகிராப் டிரெயிலர் மாதிரியிருக்கு! :-)

    ReplyDelete
  2. கொசுறு: என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி!

    கொசுறு: இது ஒரு உண்மை நிகழ்வு

    இது வாழ்க்கை!

    ReplyDelete
  3. "நான் அவளை காதலிக்கிறேன்" - இந்த ஒன் லைன சொல்லாத ஆளே இல்ல என்று நினைக்கிறேன்..//

    கரெக்டா சொன்னீங்க மாம்ஸ்... நான் கூட சொல்லியிருக்கிறேன்...

    ReplyDelete
  4. இல்ல மச்சி ஒரு பொண்ணை தினமும் பாக்குறேன்...அவளோட பேசனம்னு நினைக்கிறேன்...ஆனா பேச தைரியம் வரல...//

    மாம்ஸ் என்ன பத்தியா சொல்றீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. மாம்ஸ்... சூப்பர் வெற்றி களிப்பில் பயபுள்ள குண்டாயிட்டான் போலருக்கு... லவ் சக்ஸஸ் ஆனது நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு மாம்ஸ் ரெண்டு பேரும் நீடுடி சந்தோசமா வாழ வாழ்த்துவோம் மாம்ஸ்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அவர் குண்டாயிட்டதால பொண்ணு ஒல்லியான மாதிரி தெரியுதோ? -டவுட் கோவாலு

    ReplyDelete
  7. >>அடங்கோ....என்னடா பொண்ண காட்ரேன்னு சொல்லிட்டு ஒரு டின்ன காட்ற...

    டின்னை காட்னாரா? தம்பி! டபுள் மீனிங்க்ல எழுத மாட்டேன்னு சபதம் செஞ்சியே?

    ReplyDelete
  8. >>என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி!

    விக்கி தக்காளீ பொண்ணை அவ இவன்னு மரியாதை இல்லாம பேசிட்டாரு.. இனி எத்தனை மைனஸ் ஓட்டு விழப்போகிதோ? நாராயணா!!!

    ReplyDelete
  9. இல்ல மச்சி ஒரு பொண்ணை தினமும் பாக்குறேன்...அவளோட பேசனம்னு நினைக்கிறேன்...ஆனா பேச தைரியம் வரல...///

    ஆரம்பத்துல அப்பிடி தடுமாற்றம் இருக்கும்.. போக போக ஓகே தான்

    ReplyDelete
  10. அடங்கோ....என்னடா பொண்ண காட்ரேன்னு சொல்லிட்டு ஒரு டின்ன காட்ற...//

    ஹா..ஹ... பயபுள்ளைக்கு பியூஸ் போயிருக்குமே...

    ReplyDelete
  11. இங்க பாருங்க நாங்க ரொம்பா ஆச்சாரமானவங்க...நீங்க வேற ஜாதி...தயவு செய்ஞ்சி எங்கள தொந்தரவு செய்யாதீங்கோ...ப்ளீஸ்!//

    பாவம் பெத்தவங்க.... இப்பிடி பொலம்ப வேண்டியது தான்

    ReplyDelete
  12. நாங்க வரோம் சார்...(பெண்ணுடன் வெளியேறினான் அவன்!)///

    உண்மையில் அந்த பொண்ணு ஸ்ட்ராங் தான்.. வார்த்தைக்கு

    ReplyDelete
  13. கொசுறு:
    தமிழ்மணம் ஏழு நான்தான்

    ReplyDelete
  14. நெகிழ்ச்சியான நிகழ்வு விக்கி

    நண்பர் சந்தோசமா!!?? வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. செமையா இருக்குங்க!
    நண்பருக்கு மாமூல் ஓவரோ?

    ReplyDelete
  16. சினிமா பார்க்குற மாதிரி இருக்கு
    காட்சி காட்சியா கதை சொல்லிப் போகும் அழகு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 10

    ReplyDelete
  17. ///இல்ல மச்சி ஒரு பொண்ணை தினமும் பாக்குறேன்...அவளோட பேசனம்னு நினைக்கிறேன்...ஆனா பேச தைரியம் வரல...///

    எந்த காலத்துக்கும் பொருந்தும் வசனம்..
    நீங்க சொன்னவிதம் இன்னும் அழகு..

    ReplyDelete
  18. /இது ஒரு உண்மை நிகழ்வு ///
    யார் life ல

    ReplyDelete
  19. //நண்பர் ஒரு அரசாங்க பள்ளியில் ஆசிரியர்..
    //

    கருன்னா ?

    ReplyDelete
  20. கொசுறு: என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி! //

    ஹா ஹா ஹா ஹா இது எப்டி இருக்கு...!!!

    ReplyDelete
  21. கதை சொன்னவிதம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  22. கொசுறு: என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி!

    ஆகா அப்படியா விசயம் ஹா ஹா ஹா .....அழகிய சிறுகதை நேரில் காண்பதுபோல் எழுத்துநடை உள்ளது .வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு .
    மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் .ஒரு பக்திப் பாடல்வரியும்
    இருக்கு ........

    ReplyDelete
  23. கதை சொன்ன விதம் அருமை. நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. //என்ன கொடுமைன்னா...இப்போ அந்த பொண்ணு ஒல்லியாயிட்டா பய குண்டாயிட்டான் ஹிஹி! //

    ஊருல உலகத்துல நடக்குறதுதானுங்க.

    ReplyDelete
  25. தக்காளி பெரிய கட்டப்பஞ்சாயத்து பார்ட்டியா இருந்திருப்பாரு போல?

    ReplyDelete
  26. ////சி.பி.செந்தில்குமார் said...
    >>அடங்கோ....என்னடா பொண்ண காட்ரேன்னு சொல்லிட்டு ஒரு டின்ன காட்ற...

    டின்னை காட்னாரா? தம்பி! டபுள் மீனிங்க்ல எழுத மாட்டேன்னு சபதம் செஞ்சியே?///////

    அண்ணே நல்ல பாருங்கண்ணே, தக்காளி சிங்கிள் மீனிங்லதான் எழுதி இருக்காப்ல.....

    ReplyDelete
  27. சூப்பர், அருமை பாஸ்,,,

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி