புத்சா வரும் பதிவர்களே..!


வணக்கம் நண்பர்களே.........


இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது(ஹிஹி!)......

நண்பர்களே........இந்த பதிவுலகம் ஒரு காட்டாறு(மோட்டாரு அல்ல!) மாதிரி...அதனால நீங்கள் வந்த உடனே சேந்துக்கலாம்(அடிமை சிக்கிட்டான் ஹிஹி!)......ஆனா உங்க கருத்துக்கள திணி திணின்னு திணிக்கனும்.....அத தான் உண்மையில கருத்து திணிப்புன்னு சொல்லுவாங்க.........(அப்பாடி கருத்து சொல்லிட்டேன்!)


நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்(என்னைய போல!)..

அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க......என்னதான் உங்க கருத்த சொல்ல வர இடமா இருந்தாலும்....புதுசா பாத்த பிகருக்கிட்ட ஒப்பிக்கிறா மாதிரி ஒப்பிக்க கூடாது...அத வச்சே உங்களுக்கு சூனியம் வெப்பாங்க....(எனக்கு ஆச்சி இப்படி!)


இப்போ என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வருது...பாருங்க.....உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா...ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ....அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)....அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.....ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல....please note this points!......நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......


அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா யாராவது பிரபல பதிவர தாக்கி பதிவு போடுங்க(!)....அவர ஒரே கிழி......கிழிச்சி பதிவு போடுங்க....அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்...ஏன்னா நானும் உங்கள போல ஜூனியர்........!

அப்புறம் இந்த கதை, கவிதை போடுங்க, நெறைய மொக்கை போடுங்க....தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போடணும்.....கடைசில ஏமாந்திங்கலான்னு சொல்லிக்கணும்(!)....அப்பிடியே காப்பி அடிச்சி பதிவு போட்டீங்கன்னா.....உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க....அப்போ தான் எல்லாருக்கும்.....நீங்க இருக்கறது தெரியும்........


சில பேரு சில விதம்....பல பேரு பல விதம்...அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க....இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்....அப்பத்தான்...பல பதிவுகள் தேத்த முடியும்.......

நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....

கொசுறு: இந்தப்பதிவு பதிவுலக நிதர்சனமே....யார் மனதையும் புண்படுத்த அல்ல...நன்றி!...இந்த பதிவுக்கு காரணம் எனக்கு சீனியர் நல்ல நேரம் அவர்களின் முன்கால பதிவுகளே...பல விஷயங்களை எனக்கு யதார்த்தமாக புரிய வைத்தவர் இவரே...அவருக்கு நன்றி..Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. மச்சி தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 2. என்ன மாம்ஸ் இப்படி ஒரு மார்க்கமா கிளம்பிட்டிங்க?

  ReplyDelete
 3. //அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......//

  ஆமாண்ணே, நானும் பராக் ஒபாமா சொன்னதுதான் சரின்னு நினைக்கிறேன், அதுதான் இந்திய பொருளாதாரத்துக்கும் சரிப்பட்டுவரும்ங்குறது என்னோட கருத்து..

  ReplyDelete
 4. நானும் புது பதிவர் தானுங்க

  //சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.//

  நான் இது வரை எந்த சம்பந்தத்தையும் அருகில் வைத்து கொண்டு கமெண்ட் போடுவதில்லை

  ReplyDelete
 5. ///நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்///

  ஆமா ஆமா இப்ப மங்காத்த ஸ்டைலில் நெகடிவுக்குத் தானே மதிப்பு அண்ணாச்சி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

  ReplyDelete
 6. உண்மை ....உண்மை ....உண்மை ....உண்மை ....

  ReplyDelete
 7. என்ன குருவே. தொழில் ரகசியத்தை ஒடச்சிபுட்டீங்க.

  ReplyDelete
 8. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 9. என் போன்ற புதிய பதிவர்களுக்கு நல்லா வழி சொல்றீங்க. நன்றி.

  ReplyDelete
 10. நல்லாத்தான் சொல்லீக்கிறே வாத்தியாரே!

  ReplyDelete
 11. நான் கூட என்னமோ "பெரிசா" கஷ்டப்படனுமோன்னு நினைச்சேன்!இம்புட்டுத் தானா?ஆரம்பிச்சுட வேண்டியது தான்!எனக்கும் ஒரு "அடிமை"சிக்காமலா போயிடுவான்?ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 12. என்னாச்சு மாம்ஸ்

  ReplyDelete
 13. ஹி ஹி அண்ணே நானும் கூட சூனியறு ஸாரி ஜூனியர்தான்...

  ReplyDelete
 14. உனக்கு சூனியம் வச்சதின் விளைவு, ம்ம்ம்ம் சொம்பு பலமா நசுங்கி நெளிஞ்சிருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 15. திரிஷா'வின் அம்மா பெயர் என்ன...??

  ஹி ஹி நீதனேய்யா சொன்னே சம்மந்தம் இல்லாமல் கமெண்ட்ஸ் போட....

  ReplyDelete
 16. உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன்
  ...//

  இப்பதான் உண்மை தெரிஞ்சது...நானும் எதோ பால குமாரன் ...அப்துல் ரகுமான் ரேஞ்சுக்கு எழுதுறனால தான் நீங்க விடாம விரட்டி விரட்டி Follow பண்ணீங்கன்னு நினைச்சேன்...-:)

  ReplyDelete
 17. //@ அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்(என்னைய போல!)../ / /

  இத இத இததான் நான் எதிர்பார்த்தேன் .
  i like your நேர்மை . .

  எப்படி மாப்ளே உன்னால மட்டும் முடியுது ?

  ReplyDelete
 18. புதியவர்களுக்கு நல்ல அறிவுரை மாம்ஸ்

  ReplyDelete
 19. நீங்க சொல்ற மாதிரி தமன்னா இடத்தை அமலா பால் புடிசிட்டாங்கன்னு சொல்ல முடியாது... அமலா பாலுக்குன்னு ஒரு ரசிகர் கூடம் இருக்கு....

  ReplyDelete
 20. என்னாச்சு என் கமேண்ட்ஸ ஏன் தூக்கிட்டீங்க...மாம்ஸ்

  ReplyDelete
 21. அருமையான வாக்குமூலம்!

  ReplyDelete
 22. நல்ல அறிவுரை எல்லாம் சொல்றிங்க...

  ReplyDelete
 23. என்ன பதிவோ..பிளாக்கோ...ஒன்னுமே புரியல....மொறையா கத்துகிட்டா வரும்ன்னாங்க...வந்துதா வல்லியா...எத்தனையோ பேரு மொறையா.....வந்துதா வல்லியா.......?????

  ReplyDelete
 24. நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)...நாங்களும் அப்படி தான் நண்பா எப்புடி..........

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி