இவனுங்கள என்ன பண்ணலாம்!

வணக்கம் நண்பர்களே....


சென்னைல ஒரு அரசியல்வாதி கம் தாதா(ரெண்டும் ஒன்னு தானே!).. இருந்தார்(இப்போ தெரியல!)...அவருக்கு பல அலுவல்கள்...உதாரணமா வீட்டை காலிசெய்ய வைத்தல், அடுத்தவர் சொத்தை பிடுங்குதல், ரவுடியிசம் என கொடிகட்டி பறந்தார் அப்போது...!

அப்போ நம்ம சொந்தக்காரங்களோட இடம் ஒன்னு சென்னை அண்ணாநகர் பக்கத்தில் திருமங்கலத்திற்க்கும், கேப்டன்(!) கல்யாண மண்டபத்திற்கும் இடையே இருந்தது அவரின் கண்களை உறுத்தியது...


அதுவும் அந்த சொத்தின் உரிமையாளருக்கு வயது 65..அவரு ஒரு ரிட்டையர் ரயில்வே அதிகாரி...ரொம்ப வருசத்துக்கு முன்னே இந்த இடத்தை வாங்கி போட்டு இருந்தார்...பணம் முடையால் சிறிய அளவில் வீட்டையும் கட்டி வாழ்ந்து வந்தார்...அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்...

இதில் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்...தந்தையோ இரு மகள்களுக்கு திருமணம் முடித்த பின்னே தான் உனக்கு திருமணம் செய்து வைப்பேன்..இல்லையேல் உன் கலப்பு திருமணத்தால் இரு பெண்களின் வாழ்கை பாதிக்கப்படும் என்று தடுத்து விட்டார்...இதை எதிர்த்த மகன் வீட்டை விட்டு வெளியேறினார்...ஆனால், அவருக்கு சொந்த வேலை எதுவும் கிடையாது..


தந்தையும் தன் சொத்தில் பங்கு தரமாட்டேன் என்று மறுத்து விட்டார்...இந்த நேரத்தில் தாதாவின் பிடி இறுகியது...தாதா அந்த வயதானவரை மிரட்டி பார்த்தார்...அந்நேரம் மகனும் தாதாவின் கூட சேர்ந்து கொண்டதால்...யாரும் உதவி செய்ய முடியாமல் போனது...

ஒரு இரவில் வீட்டுக்கு வந்த அந்த தாத்தாவும், தாத்தாவின் மகனும் சேர்ந்து ஒரு பாண்டு பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மிரட்டினர்...மிரட்டலுக்கு பயப்படாத அந்த வயதானவரை அடித்து உதைத்து குற்றுயிராக போட்டு விட்டு அந்த இரு பெண்களையும் உதைத்து விட்டு சென்றனர்...அந்த வீடு பெரிய இடத்தின் மத்தியில் இருந்ததால் வெளியில் யாருக்குமே கேட்கவில்லை...


கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பெரிய பெண் தந்தயய்யும் அந்த தங்கயய்யும் கஷ்டப்பட்டு அழைத்துக்கொண்டு சென்றார் பக்கத்திலிருந்த காவல் நிலையத்திற்கு...ஆனால், அரசியல் தாதாவின் பெயரை கேட்ட அதிகாரி உதவ மறுத்து விட்டார்...இருந்தும் கஷ்டப்பட்டு அந்த பெண் இருவரையும் ஆட்டோ மூலம் பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்...

கோர்டில் கேஸ் போட்டார்கள்...அடி பலமாக இருந்ததால் சில நாட்களிலேயே அந்த பெரியவர் இறந்து விட்டார்...இரண்டாவது பெண்ணுக்கு மட்டும் திருமணம் முடித்து வைத்தாள் முதல் பெண்...இன்று வரை தனியாக வாழ்ந்து வருகிறாள்(!)...கோர்டில் கேஸ் இருக்கும் போதே திருட்டு டாக்குமென்ட் ரெடி செய்து இன்னொரு சேட்டுக்கு(!) விற்று விட்டாகள்...அந்த தாதாவும் அந்த உருப்படாத பிள்ளையும்...

இன்று வரை கேஸ் நடந்து கொண்டு இருக்கிறது...தாதா இருக்கிறாரா தெரியவில்லை..கொஞ்ச காலம் முன்பு பக்கவாதத்தால் வீட்டில் முடங்கியதாக கேள்விப்பட்டேன்..இன்று எப்படியோ...அந்த மகனின் மனைவி அவனை விட்டு வேறொருவருடன் சென்றுவிட்டதாக விஷயமறிந்தவர்கள் கூறினர்...


கடவுள் கூலி கொடுத்தான் என்கிறார்கள்...ஆனால், வாழ்கை போன அந்த குடும்பத்துக்கு என்ன பதில்...அந்த முதிர் கன்னியின் எதிர்காலத்துக்கு என்ன பதில்.. ஞாயத்துக்காக தர்மத்துக்காக என்று இன்று பேசிக்கொண்டு திரியும் அரசியல் ரெளடிகளை களையெடுப்பது எப்படி...

கொசுறு: முற்றிலும் உண்மை சம்பவம்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. முதல் வணக்கம்.

  ReplyDelete
 2. முதல் மூணு ஓட்டு.

  ReplyDelete
 3. நியாயமான கேள்விகள்.

  ReplyDelete
 4. கடவுள் எப்பவுமே லேட்ஆகத்தான் கூலி கொடுக்கிறார். நான் கூட நினைப்பேன் ,இந்த கூலிக்கு கொலை பண்றாங்களே ,அவங்கள்ள பின்னாடி எப்படி இருக்காங்கன்னு(யாராவது உயிரோட இருந்தா).நல்ல பதிவு மாப்ஸ்.

  ReplyDelete
 5. உண்மையில் அந்த அரக்கர்களுக்கு இந்த சமூகம் தண்டனை கொடுக்க மறுத்தாலும் ஆண்டவன் தண்டனை கொடுக்க மறக்கவில்லை... இருந்தாலும் அன்ர பெண்ணை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது... அந்த பெண்ணிற்காக பிரார்த்திப்போம்... பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்...

  ReplyDelete
 6. நல்லவர்கள் ஒற்றுமையுடன் இறைவனிடம் பிரார்த்திப்போம்.. அக்கிரமக்காரர்கள் அழிவதற்கு.... கூட்டு பிரார்த்தனை கண்டிப்பாக பலன் கொடுக்கும்.

  ReplyDelete
 7. சொல்லியிருக்கிற விஷயம் உண்மையில்
  அதிக சங்கடம் செய்கிறது
  பாட்டி காக்கா வடை கதையில்
  நரி குறித்தும் ஏமாந்த காக்கா குறித்தும்
  விளக்கமும் போதனைகளும் இருக்கும்
  வடை இழந்த பாட்டியை சௌகரியமாக
  மறந்துவிடுவார்கள்
  நீங்கள் முடிவாக எழுப்பியுள்ள கேள்வி
  மிகச் சரியானதே
  அருமையான பதிவு த.ம 4

  ReplyDelete
 8. இனிய காலை வணக்கம் பாஸ்,

  நலமா?
  உண்மையிலே இவனுங்களை நடு ரோட்டில நிற்க வைத்து..
  அப்படிச் செய்தாலும் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையானது மீளவும் கட்டியெழுப்பபடாது,

  ஆகவே எதிர்காலத்தில் ஏனைய உயர் பதவியில் உள்ளோரின் வாரிசுகள் இவ்வாறான குற்றங்கள் செய்யாத வண்ணம் சட்டங்கள் அனைவருக்கும் சமன் என்ற நோக்கில் தண்டிக்கப்படுவதற்கு ஏற்றாற் போல மாற்றம் வேண்டும்,

  ReplyDelete
 9. உங்கள் கேள்வி நியாயமானது தான்

  ReplyDelete
 10. //கொசுறு: முற்றிலும் உண்மை சம்பவம்...//

  சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நிகழ்ந்த அட்டூழியம் இது. அதனால்தான் இந்த ஆட்சியில் அடுத்தடுத்து பெரும்புள்ளிகள் கைதாவது பற்றி மக்கள் சற்றும் கவலைப்படவில்லை.

  ReplyDelete
 11. பத்தாயிரம் கோடி சம்பாதித்த பெரியவர் 9900 கோடி ரூபாய் ஒரே மகனுக்கு கொடுத்துவிட்டு தனக்கு நூறு கோடி மட்டும் வைத்துக்கொண்ட முதியவரை மகன்...
  “கிழவா...வயதான காலத்தில் உனக்கு எதற்க்கு நூறு கோடி” அதையும் கேட்டு துன்புறுத்தி வருகிறான்.
  அந்தப்பெரியவர் உருவாக்கிய நிறுவனம் ‘நரசுஸ் காபி’.

  ReplyDelete
 12. ஏதும் கருணாநிதி மேட்டரா?

  ReplyDelete
 13. வேதனை தரும் விஷயம் மாம்ஸ்

  ReplyDelete
 14. எந்த ஆட்சி ஆனாலும்
  குண்டர்கள் ஆட்சி மாறாது
  இது போன்ற நிகழ்சிகள் பல!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. என்ன பண்றது மாம்ஸ் பணத்தால் இளைச்சவங்க எல்லாருக்கும் நாட்டுல இதே நிலைமை தான்.
  எல்லாரும் பாதிக்கப்படல -ன்னு சொன்னா அது சும்மா.அவங்க மேல கழுகுக்கண் இன்னும் படலேங்கறதே உண்மை!

  ReplyDelete
 16. ////கோர்டில் கேஸ் இருக்கும் போதே திருட்டு டாக்குமென்ட் ரெடி செய்து இன்னொரு சேட்டுக்கு விற்று விட்டாகள்///

  அண்ணாச்சி சட்டம் ஒரு ஈருட்டறை என்பது தப்பு சட்டங்கள் ஒரு இருட்டறை என்று பன்மையில் அல்லவா சொல்லணும்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை

  ReplyDelete
 17. கடவுள் கூலி கொடுத்தான் என்று கூறுவது மனதை தேற்றிக் கொள்ளும் செயல்... அநீதிக்கு தண்டனை கிடைக்கும் என்று கூறினாலும் அது பாதிக்கப் பட்டவர்களின் இழப்புக்கு எந்த வகையிலும் ஈடு செய்யப் போவதில்லை... இருந்தும் தன்னை ஏமாற்றியவன் நொந்து போனால் அதில் திருப்தி காணுவதால் தர்மம் வெல்லும் என்று கூறி பழக்கப் பட்டு விட்டோம்..

  ReplyDelete
 18. சென்னையில் மட்டுமில்லீங்க..
  தமிழ்நாடு முழுவதும் இது மாதிரி கொடுமைங்க ஏகப்பட்டது நடக்குது...

  ReplyDelete
 19. இயற்கையோ, இறைவனோ ரொம்ப லேட் தீர்ப்புக்கு

  ReplyDelete
 20. சைதை கிட்டு மாதிரி தெரியுதே....!!!

  ReplyDelete
 21. அந்த முதிர் கன்னியின் நிலை பரிதாபம்...!

  ReplyDelete
 22. மும்பையில் தாதா'ன்னு சொன்னாலே சூட்டிங் ஆர்டர் பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள் போலீஸ்!!!

  ReplyDelete
 23. மிகவும் மன வருத்தத்துக்குறிய விடயம் பாஸ்...சொந்த பிள்ளையே இப்படி செய்வது கொடுமையிலும் கொடுமை

  ReplyDelete
 24. நீயே சொல்லு மாப்ள என்ன பண்ணலாம்...

  ReplyDelete
 25. தம்பி, காலைல ஒரு கமெண்ட் கஷ்டப்பட்டு போட்டேனே , என்னாச்சு?

  ReplyDelete
 26. அவர்களை நிக்கவச்சு .. சுடனும்

  ReplyDelete
 27. தாதாக்கள் அக்கிரமம் ரொம்ப அதிகமாயிருச்சு....

  ReplyDelete
 28. வருத்தம் தரும் செய்தி.என்று மறையும் இத்தகைய கொடுமைகள்!

  ReplyDelete
 29. தாதான்னு சொல்லி கொள்ளும் மாக்களை நடுரோட்டில் நிக்க வச்சி ...கட் பண்ணனும் ...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி