ஆதிவாசி அடக்கிவாசி!

வணக்கம் நண்பர்களே,


காதல்..காதல்..காதல்..இது இல்லையேல்...?

எங்கு போனாலும் நமக்கு கரிசனம் காட்டும் ஆணோ பெண்ணோ சக வயது கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் சடாரென்று வந்து நிற்கிறது இந்த காதல்(!) எனும் விஷயம்...அதைப்பற்றிய பதிவே இது...


மனோஜ் வயது - 30

படிப்பு - BE, MBA

தொழில் - Infrastructure Development

வருவாய் - பல லட்சங்கள்(இந்திய மதிப்பில்)

மிகப்பெரிய கம்பனியின் முக்கிய பதவியில் இருக்கும் நபர் இவர்..அதுவும் மிகத்துடிப்பான எப்போதும் கம்பனியின் ஆசிய தர வரிசையில் முதலில் இருப்பவர்...அதே நேரத்தில் பழக மிகவும் இனிமையானவர்...முக்கியமாக வட இந்தியர்கள் தமிழர்களை சற்று மரியாதை குறைவாக நினைக்கும் வட்டத்தில் இருந்து கொண்டு நல்ல நட்பு பாராட்டுபவர்..இத்தனை புகழுக்கும் நல்ல மனதுக்கும் சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த நிகழ்வு...


நண்பன் மனோஜ் ரெண்டு வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்(!)...நானும் பல இடங்களில் ஜோடியாக இவர்களை காணும் பொழுது சரியான ஜோடி என்று சொல்லி இருக்கிறேன்...இந்தியா பற்றி எப்போதும் புகழ்ந்து பேசும் அந்த நங்கை...திருமணம் செய்தால் இந்தியரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறாள்..இவர்கள் இருவருக்கும் திருமணம் ஹோசிமிங் நகரத்தில் 3 மாதங்களுக்கு முன் நடந்தது...


அப்போது கடின வேலை(!) காரணமாக செல்ல இயலவில்லை...நேற்று இந்திய ரெஸ்டாரென்ட் ஒன்றில் தற்செயலாக மனோஜை காண முடிந்தது...

என்னய்யா எப்படி இருக்க...

எதோ இருக்கேன்...

டேய் நீ தண்ணி அடிக்க மாட்டியே..ஏன்டா இப்படி குடிச்சிட்டு இருக்க அதுவும் ராவா...

விடு குமார்...மனசு சரி இல்ல...அதான்..

என்ன தான் ஆச்சி...

ஹுயன் என்னைய விட்டு போயிட்டா...அவளுக்கு எங்கிட்ட இருந்து விவாகரத்து வேணுமாம்..

அடப்பாவமே...ஏன் என்ன தான் பிரச்சன.....


நான் அவளுக்கு ஆதி வாசி போல தெரியிறனாம்(!)...பேச்சளவுல தான் எங்கிட்ட சமத்துவம் இருக்காம்..பெண்ணுக்கு மரியாதை கொடுக்க தெரியலையாம்...சரி நிகர் சமானமா மதிக்க தெரியலையாம்...வீட்டுக்கு அழகு பொம்மையா இருக்க வைக்க பாக்குறனாம்...வெறும் அழகை மட்டுமே விரும்புற ஆளாம் நானு...பண்பாடுங்கர விஷயத்த வச்சிக்கிட்டு ஒரு வளையத்துக்குள்ள வாழுற முட்டாப்பயலாம்...இப்படி தாறு மாறாக அடுக்கிகொண்டே போனான்...

டேய் நான் வேணா பேசிப்பாக்கவா...

ஏன்டா...வேணாம் அவ கிட்ட மரியாத எதிர் பார்க்க முடியாது....உடைஞ்சது உடைஞ்சது தான்...

அவன் சொல்வதை கேட்டு நம்ப முடியாதவனாக அவளுக்கு போனடித்தேன்...

Anh(அண்ணே!) Don't call me...என்று டொக் என்று போன் லைனை கட் செய்தாள்(அவமானப்படுறதுக்கன்னே இருக்கனோ!)...

அவனுக்கு பல விதமாக மனசை தேற்றும்படி சொல்ல நினைத்து தோற்றேன்..

கடைசியில் எனக்கு உரைத்தது இது..."ஆதிவாசி அடக்கிவாசி" 

ஆனால், இது தவறா இல்லை சரியா...முடிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே...

 கொசுறு: இது நகைச்சுவைக்கான பதிவல்ல எனக்கு நெருடல் கொடுத்த சம்பவம்...அதுவும் இன்னும் நாம் ஒரு வட்டத்துக்குள்ளே இருக்கிறோமோ என்ற நெருடல்..! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

27 comments :

 1. பெண்ணின் மன ஆழம் கண்டு பிடித்தல் என்பது மிகச்சிரமமே!

  ReplyDelete
 2. காதிலிக்கும்போது இருக்கும் ஈர்ப்பு, மணம் முடித்த பின் எதிர்பார்த்தல் கஷ்டமே.

  ReplyDelete
 3. மீண்டும் ஒருமுறை அந்த சகோதரிக்கு கவுன்சிலிங்க் கொடுக்க முயற்சியுங்கள். அவமானங்கள் நமக்கு புதிதில்லையே!

  ReplyDelete
 4. உண்மை சம்பவம் ..?

  ReplyDelete
 5. இருவரிடமும் பேசிப்பாருங்கள்...

  ReplyDelete
 6. மற்றொரு முறை கவுன்சிலிங் செய்து பார்க்க சொல்லவும் .

  முடிய வில்லை எனில் தவரான பாதையில் செல்லாமல் மற்றொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சொல்லவும் .

  ReplyDelete
 7. " FOOD said...
  மீண்டும் ஒருமுறை அந்த சகோதரிக்கு கவுன்சிலிங்க் கொடுக்க முயற்சியுங்கள். அவமானங்கள் நமக்கு புதிதில்லையே!"

  >>>>>>

  அண்ணே வருகைக்கு நன்றி....நம்ம கிட்ட ஒரு விஷயம் வந்தா அதை சாதாரணமா விட்ருவமா...அதுவும் வாழ்கை பிரச்னை அல்லவா...என் மனைவியை வைத்து பேசிப்பார்த்தேன்...பாப்போம்னே..
  நாளைக்கு ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சி இருக்கேன்...நல்லது நடக்கணும்!

  ReplyDelete
 8. @ரெவெரி

  " ரெவெரி said...
  உண்மை சம்பவம் ..?"

  >>>>>>>>>

  ஆமாம் மாப்ள உண்மை சம்பவம்தான்!

  ReplyDelete
 9. @கலாநேசன்

  "கலாநேசன் said...
  இருவரிடமும் பேசிப்பாருங்கள்..."

  >>>>>>>>>>>

  நண்பா நாளைய முயற்சி வெற்றி பெறுதான்னு பாப்போம்!

  ReplyDelete
 10. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  டைட்டில்ல பின்றியே?"

  >>>>>>>>>>

  அண்ணே உங்க கிட்ட கத்துக்கிட்டது தான்!

  ReplyDelete
 11. @நண்டு @நொரண்டு -ஈரோடு

  "நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அடக்கிவாசிங்க"

  >>>>>>>>

  முயற்சிக்கிறேன் மாப்ள!

  ReplyDelete
 12. //அண்ணே வருகைக்கு நன்றி....நம்ம கிட்ட ஒரு விஷயம் வந்தா அதை சாதாரணமா விட்ருவமா...அதுவும் வாழ்கை பிரச்னை அல்லவா...என் மனைவியை வைத்து பேசிப்பார்த்தேன்...பாப்போம்னே..
  நாளைக்கு ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சி இருக்கேன்...நல்லது நடக்கணும்!
  //

  நாட்டாமை.......நல்ல தீர்ப்பா சொல்லும்யா.

  ReplyDelete
 13. Nalai-ya nigazhchi-i
  avaciyam kuravum....

  ReplyDelete
 14. இவையெல்லாம் காதல்ல!சகோ!
  வெறும் கவர்ச்சி அவ்வளவே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. கஷ்டம தான் மாம்ஸ்.

  ReplyDelete
 16. தப்பிச்சுட்டே என்று உங்கள் நண்பனை தேற்றுங்கள்... கணவன் மனைவி பிரிவது தப்பில்ல, தந்தையும் தாயும் தான் பிரிய கூடாது என்பது என் கருத்து... உங்கள் நண்பன் இன்னும் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால்... ஜாலியா வாழ்க்கையை வாழ சொல்லுங்கள்... கல்யாணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று உணர சொல்லுங்கள்...

  ReplyDelete
 17. இருவருக்கும் சில விட்டுக்கொடுப்புக்கள் பற்றி எடுத்துரையுங்கள் மீளவும் சேர்த்துவைக்கப்பாருங்கள் விக்கியாரே !

  ReplyDelete
 18. என்னத்த சொல்லுறது..
  சரியா தவறா என்று அவர்களுக்கே வெளிச்சம்

  ReplyDelete
 19. இனிய மதிய வணக்கம் பாஸ்,.

  நீங்கள் அப்படிச் சொல்லியது தவறில்லை.
  காரணம் அப்போது தான் உங்கள் நண்பனை உயிருக்கு உயிராக காதலித்தவள் பற்றிய நினைப்பினைத் தூக்கியெறிந்து விட்டு, அவர் தன் வாழ்க்கை பற்றி நினைப்பார் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 20. கஷ்டமாதான் இருக்கு

  இருவரிடமும் பேசிப்பாருங்கள்.. மாப்ள

  ReplyDelete
 21. தவறு இல்லையேல் ஆதிவாசி கொஞ்சம் தன்னை மாற்றிக் கொள்ளலாம் .அதற்கிடையில் இருவர் மனதையும்
  நீங்கள் புரிந்து இணைத்து வைக்க அந்தக் கணவன் மனைவியை ஓரிடத்தில் சந்திக்க வைத்துப் பேசுவதே மிக உத்தமம் ஆனது .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றியளிக்க .

  ReplyDelete
 22. வணக்கம் மாப்பிள..
  இப்ப நீங்க அவர்களை கூப்பிட்டிருகீங்க மீண்டும் அவர்களுக்கு ஆலோசனை செய்யுங்க சூடு சுரணையெல்லாம் பார்காதீங்க(நமக்கு அதெல்லாம் இருக்கா என்ன..??ஹி ஹி) உங்க ஆலோசனைய அவங்க கேட்டாங்கன்னும் நல்ல செய்தியை அடுத்த பதிவில போடுங்க மாப்பிள..!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி