அரசியல்வாதியா மாறுவது அவ்வளவு கஷ்டமா!

வணக்கம் நண்பர்களே...

அய்யா சாமி...நான் உங்கள உசுப்பேத்துரத்துக்காக இந்த தலைப்ப வைக்கலைங்க..எதோ மண்டைக்கு தோணிச்சி அதான் வச்சிட்டேனுங்க...அந்த அரசியல் வாதியாக(வியாதி அல்ல!) நினைக்கும் பதிவர் நான் தானுங்க...இன்று நடந்த ஒரு தொலைபேசி பேச்சு உங்களுக்காக....


ஹாய் மாப்ள...

ஹாய்....

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நன்றி நண்பா...

டேய் இன்னும் எத்தன வருசத்துக்கு இப்படியே இருக்கறதா ப்ளான்..

எப்படியே...

அதான் ஓடிப்போய் எங்கயோ நம்மூரு அரிசி, பருப்பு கெடைக்காத தேசத்துல உக்காந்து இருக்கியே அத சொல்றேன்..

என்னடா பண்றது...கடமைன்னு வந்துட்டா....

வேணாம் நிறுத்து நான் அழுதுடுவேன்...

சரி வேற என்ன விஷயம்...

பாத்தில்ல தனியா நிக்குறோம்...அதுவும் நம்ம பசங்க 8 பேருக்கு இந்த முறை சீட் கெடச்சிருக்கு........

உனக்கு எட்டு பசங்களா சொல்லவே இல்ல...

அடேய்...நான் சொன்னது நண்பர்ங்க...

சரி நடக்கட்டும்...

நிர்வாகம் ஏற்கனவே நம்ம கைல...இனி பாரு எதிர் ஆளுங்க யாரும் இருக்க மாட்டாங்க...நீ தான் தொட நடுங்கித்தனமா எங்கள விட்டுட்டு போயிட்டே..இதுல பெரிய பில்டப்பு வேற...

டேய் உன்ன பொறுத்த வரைக்கும் அப்படியே இருக்கட்டும்...என்ன பொறுத்த வரைக்கும் வேற வழி இருக்கு....கொஞ்ச நாள் ஆகும்..எனக்கு இந்த மாதிரி பொழப்பு தேவையில்ல...

டேய் எவனும் இங்க உத்தமன் இல்ல...பணம் போட்டு பணம் எடுக்கரானுங்க...என்னமோ சாதாரணமா சீட்டு கெடைக்கறாப்போல சொல்ற...பணம்டா பணம்..அது இல்லன்னா பொணம்!

யப்பா சாமி இன்னைக்கு உன்கூட சண்ட போட நான் தயாரில்லா...

சண்டையில்ல நிசத்த சொல்றேன்...இப்பவாவது நான் சொல்றத கேளு...இப்போதைக்கு வந்து செட்டில் ஆகு(!)..நேரம் வரும்போது உனக்கு சீட் கெடைக்கும்...


ஹாஹா..நான் என்ன துட்டுக்கு ஆசைப்பட்டு அரசியல் விஷயத்துல இறங்க நெனைக்கிறேனா...இல்லவே இல்ல...ஒரு சமுதாயப்பணில என்னை இணைசிப்பேன்...அதுக்காக தவறான வழில போனாத்தான் அது நடக்கும்னா...எனக்கு வேணாம்டா சாமி..நான் உங்கள பொறுத்தவரைக்கும் தொடை நடுங்கியாவே இந்த விஷயத்துல இருந்துட்டு போறேன்..

உன்கிட்ட பேசி புண்ணியமில்ல..வேணா பாரு நீயும் இதே மாதிரி தான் இறங்கியாகனும் அரசியல்ல......

உன்னோட ஆசிக்கு நன்றி...

இணைப்பு துண்டிக்கப்பட்டது...

மக்களே...நேரிடையான அரசியல் வாதியா(வியாதியா அல்ல!) வர முடியாதா...ஒன்லி பணம் மட்டும்தான் குறிக்கோளா?....முதல் போட்டு அறுவடை பண்ண இது என்ன தொழிலா...இதை மாற்ற முடியாதா...இல்ல நாம மாற்ற முயற்சிப்பதில்லையா....பணமும், வெறும் வாய் சவடாலும் மற்றும் ரவுடித்தனமும் மட்டுமே அரசியலுக்கு அடிப்படை தேவையா.....

கொசுறு: அரசியல் என்பது சாக்கடையல்ல அது மணக்கும் பூக்கடையாக மாறும்...அந்த நாள் (கனவல்ல நிஜம்!) விரைவில் வரும் என்ற எதிர் பார்ப்புடன்..நன்றி!

ஜெய் ஹிந்த்!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

36 comments :

  1. அரசியல்வாதி ஆவதுக்கு "அது" அவசியமா...??? ஐ மீன் பணம் அவசியமான்னு கேட்டேன்...

    ReplyDelete
  2. //அந்த அரசியல் வாதியாக(வியாதி அல்ல!) நினைக்கும் பதிவர் நான் தானுங்க//

    ஏனப்பா இந்த கொலை வெறி

    ReplyDelete
  3. சொன்னாலும் சொல்லாட்டியும் இப்ப அது தொழில் முதலீடும் அதிகம் லாபமும் அதிகம் ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. ஜெய் ஹிந்த்!ஜெய் ஹிந்த்!

    ReplyDelete
  5. //ஒன்லி பணம் மட்டும்தான் குறிக்கோளா?....முதல் போட்டு அறுவடை பண்ண இது என்ன தொழிலா...இதை மாற்ற முடியாதா...//

    பச்ச மண்ணா இருக்கீயலே?

    ReplyDelete
  6. இப்ப அப்பிடித்தான் இருக்கு மாம்ஸ்

    ReplyDelete
  7. தமிழ் மணம் ஏழாவது ஓட்டு

    ReplyDelete
  8. ?????? ?????? ??????? ???? ?????? ??????. ?????? ????? ?????? ?????? ??????? ???????????

    ReplyDelete
  9. உங்கள் நண்பர் சொல்வது தானே இன்றைய நிலைமை. உங்களை போலவே நானும் என்னமோ சொல்றிங்க பார்க்கலாம்

    ReplyDelete
  10. இப்பவும் பிராப்ளம்....

    ஓவர்.....

    ReplyDelete
  11. கமண்ட்ஸ் அன் ஸ்பேம் பண்ணவும்...

    ஓவர்...

    ReplyDelete
  12. இராஜி சொன்னதுதான் ஜெய்ஹிந்த்..:)

    ReplyDelete
  13. >>தனியா நிக்குறோம்...அதுவும் நம்ம பசங்க 8 பேருக்கு இந்த முறை சீட் கெடச்சிருக்கு........

    உனக்கு எட்டு பசங்களா சொல்லவே இல்ல...

    அடேய்...நான் சொன்னது நண்பர்ங்க...


    hi hi hi ஹி ஹி ஹி

    ReplyDelete
  14. தலைவரே... ஒரு காலத்தில் நான் பொது உடமை கட்சியில் இருந்தேன்... எங்கப்பா பக்கத்து வீட்டு காரர் கிட்ட பெருமையா சொன்னார்.. பையன் கட்சியில செர்ந்துட்டானாம்... எந்த கட்சிப்பான்னு கேட்டார் தந்தையின் நண்பர்... cpi [m ] என்றேன் நான்... உடனே அவர் கேட்டது, அந்த கட்சியில் சேர்ந்தா சம்பாதிக்க முடியாதே அப்புறம் ஏன் சேர்ந்தே? உங்கள் கனவு மெய் படும், அதற்காக தான் பல்லாயிரம் கோடி மக்கள் காத்திருக்கின்றனர்.. தேவை ஒரு கள ஆய்வும் செயல்பாடும்...

    ReplyDelete
  15. முதல் எதுக்கு சகோ!
    கட்சிக் கரைவேட்டி கையிலே கொ(த)டி
    இருந்தா போதும்!
    முதலில்லாத வியாபாரம் அரசியல்
    ஒன்னு மட்டுந் தான்


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. மாறும் மாறனும் மாற வைப்போம்
    த.ம 11

    ReplyDelete
  17. உங்கள் எண்ணம் உயர்வாணது பாஸ்

    ReplyDelete
  18. அந்த நாள் வருமா?

    ReplyDelete
  19. எதிர்பப்பார்ப்புடன் காத்திருப்போம்....

    ReplyDelete
  20. அரசியல் என்பது சாக்கடையல்ல அது மணக்கும் பூக்கடையாக மாறும்...அந்த நாள் (கனவல்ல நிஜம்!) விரைவில் வரும்////

    NO CHANCE ???

    ReplyDelete
  21. //முதல் போட்டு அறுவடை பண்ண இது என்ன தொழிலா...இதை மாற்ற முடியாதா...//

    மாற்றம் வந்தே தீரும்.இன்று இல்லாவிட்டால் நாளை.

    ReplyDelete
  22. கண்டிப்பாக மாறும் என்பதே என் நம்பிக்கை...

    ReplyDelete
  23. தலைவர்களின் தன்மை மக்களின் மனதைப் பொறுத்து !

    ReplyDelete
  24. நிஜமாவே நாட்டு அரசியலப்பற்றிய பதிவுதானா இது?? நான் என்னவோ நம்ம பதிவுலக அரசியலோன்னு நினைச்சுட்டேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற கதையால்ல எனக்கு இருக்கு!! அடக்கடவுளே!!

    ReplyDelete
  25. அரசியல் என்பது சாக்கடையல்ல அது மணக்கும் பூக்கடையாக மாறும்...அந்த நாள் (கனவல்ல நிஜம்!) விரைவில் வரும் என்ற எதிர் பார்ப்புடன்..நன்றி///


    உனக்கு ரொம்ப குசும்புயா... மூஞ்சிய கழுவிட்டு இந்தியாவுக்கு போயா தக்காளி :))

    ReplyDelete
  26. உன் மெயில் ஐடி என்னய்யா?

    ReplyDelete
  27. //.பணமும், வெறும் வாய் சவடாலும் மற்றும் ரவுடித்தனமும் மட்டுமே அரசியலுக்கு அடிப்படை தேவையா....//

    யோசிக்க வேண்டியது தான்

    ReplyDelete
  28. ஸலாம் சகோ.விக்கி...
    உங்களை மாதிரி ஆட்கள்தான் தேர்தலில் நிற்கவேண்டும். வருக.. வருக.. நல்லாட்சி தருக..!

    போடுங்கம்மா ஓட்டே...
    தக்காளி சின்னத்த பார்த்தே...

    போட்ட பணத்தை எடுக்க,
    பிணத்துக்கு ஆபரேஷன் பண்ணும் மருத்துவர்கள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    மணலில் சிமெண்ட் தூவி பாலம் கட்டும் பொறியாளர்கள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    கெட்டவனுக்காக வாதாடும் வக்கீல்கள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    நிரபராதி மேலே எப் ஐ ஆர் போடும் காவலர்கள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    ஸ்கூலில் ஒப்பேத்திட்டு கட்டண கட்டாய டியுஷன் எடுக்கும் வாத்தியார்கள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள்...

    போட்ட பணத்தை எடுக்க,
    தேர்தலில் நிற்கும் அரசியல்வியாதிகள்...

    இவங்க எல்லாரையும் ஒழிக்க நல்லெண்ணம் கொண்டிருக்கும்...

    தலைவர் சகோ.விக்கிக்கு என் ஓட்டுக்கள்... எல்லா திரட்டிகளிலும்.

    ReplyDelete
  29. அற்புதமான விஷ(ய)த்தை நளினமாக சொன்ன உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் உங்கள் தொண்டன் , கமான்டர் ( கேப்டன் ஏற்கனவே இருக்கிறார் ) அண்ணன் விக்கியுலகம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் முன்மொழிகிறேன்

    ReplyDelete
  30. நம்ம காலத்துல மாறுவதற்கு சான்ஸ் இல்ல!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி