கூடங்குளம்...இப்படியும் இருக்குமோ!!

வணக்கம் நண்பர்களே....


கூடங்குளம் பிரச்னை பற்றி இதுவரை நண்பர்கள் பல பதிவு போட்டு விட்டனர்...இந்த சிறியோனும் அணில் போல ஒரு பதிவை இட விரும்பியதால் வந்த பதிவு...

விஷயங்கள் தெளிவா புரியணும்னா...

http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

http://kuwaittamils.blogspot.com/2011/10/blog-post.html

உண்மையில் எனக்கு இந்த விஷயத்தை பற்றிய சரியான புரிதல் முதலில் இல்லை!...பின் பலரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டேன்..என் பார்வையில் சில துளிகள்...கூடங்குளம்

இருப்பது - தமிழ்நாட்டில்...சென்னையில் இருந்து....600 கீமீ தூரம்!

பழைய செய்தி - ரஷ்ய உதவி...

புதிய செய்தி - மக்கள் கவலை..

விளம்பரம் - அணு மின்சாரம்..

கிடைக்கப்போவது - யாருக்கும் சரியா தெரியாது..!


சமீபத்தில் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியால் தாக்கப்பட்ட அணு உலை...அதன் குளிரூட்டும் மூடிகள் செயல் இழந்ததால் மிகப்பெரிய தாக்கத்துக்கு உள்ளானது..இன்று வரை சரியான முடிவு தெரியவில்லை...இந்த விஷயத்துக்கு பிறகுதான் மக்களுக்கு பயம் அதிகரித்துள்ளது எனலாம்...உண்மையான விஷயங்கள் மக்களுக்கு புரிய சில நாட்கள்(வருடங்கள்!) ஆவது இயல்பே....இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து இங்கிருக்கும் மக்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்...


ஒருவேளை இதெல்லாம் தாண்டி இந்த காரணங்கள் இருக்கலாமோ - டவுட் வருவது இயல்பே....நாட்டை ஆளும் புத்திமான் கட்சியினர் சிந்திப்பு இப்படி இருக்குமோ...

காரணங்களில் சில உங்கள் பார்வைக்கு:

மத்திய கட்சி இங்கே ஆளவில்லை

அரை நூற்றாண்டா ஆட்சி பீடம் கிடைக்கவில்லை என்பதாலா...

ஒரு வேலை காந்தி(இப்போதைய அல்ல!..இவரு உண்மயான காந்தி!) சொன்னது போல...ஒரு நாடு நல்லா இருக்கணும்னா ஒரு ஊரை பலியிடலாம்னு இருக்கலாமோ....

இங்க பலருக்கு ஹிந்தி தெரியாது, ரஷ்ய மொழி தெரியாது...அதனால இது பஞ்சு மிட்டாய் செய்யிற இடம்னு நெனச்சி விட்ருவாங்கன்னு நெனச்சாங்களோ...(நெனச்சாலும் நெனைப்பாங்க!)

மக்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி கெடைக்க வாய்ப்பில்லாமல் பாத்துப்போம்னு நெனசிட்டாங்களா...

எப்படியும் மேடத்த அமைதிப்படுதிடலாம்னு நெனசிட்டாங்களோ......

ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்...இது அயல்நாட்டவர் சதி...இதில் எங்களுக்கு சம்பந்தமில்லைன்னு..பழைய டயலாக்க கண்டினியூ பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டாங்களோ...


மக்களுக்காகத்தான் அரசாங்கம் என்பது போய்...இப்போ ஆள்பவர்களின் விருப்பத்துக்குத்தான் மக்கள் என்பது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இந்த விஷயம்...

இதுக்கு மேலயும் நெறைய இருக்கு...எதுக்குங்க அப்புறம் நான் நாட்டு வளர்ச்சிக்கு எதிரின்னு சொல்லிட்டாங்கன்னா...


இதுக்கு மேல நீங்க சொல்லுங்க நண்பர்களே.....


கொசுறு: இது மன ஆதங்கத்தினால் எழுதப்பட்ட பதிவு...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. சரியாக சொன்னீர்கள்...

  ஆரம்பம் முதலே இழுபறி...ரஷ்ய வராகடன்...சாதி பேரில் குழப்பம்... கேரளாவின் தீபாவளி பரிசு...வேலைவாய்ப்பு காரட்...மின்சார தேர்தல் அறிக்கை...காங்கிரசின் தமிழக வெறுப்பு...உண்மையிலே மின்சார தட்டுப்பாடு...

  எல்லாவற்றுக்கும் மேலே தமிழனுக்கு உடன் பிறந்த
  ... கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை புத்தி...

  ReplyDelete
 2. அன்புநிறை மாம்ஸ் விக்கி,
  ஆதங்கத்தின் வெளிப்பாடு ஆணிவேராய் பாய்ந்திருக்கிறது.
  நீங்கள் கூறும் அத்தனையும் அவர்களின் மனநிலைதான்.

  இதில் காந்தி சொன்னதுதான் அவர்களின் தாரக மந்திரம்.

  ஜப்பானில் இன்னும் அணுவுலைகள் இயக்கப்படவில்லை.
  குளிரூட்டுவது என்ற Quenching முறையை இன்னும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
  மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
  மலேசிய மற்றும் புருனே நாடுகளைப் போல நடுக்கடலில் காற்றாலைகள் வைத்து
  மின்சாரம் தயாரிக்கும் எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

  செலவு செய்தாச்சு என்று இப்போது புலம்புகிறார்கள். தங்கத்திலே ஆணி செய்தாச்சு என்றால் முகத்திலே அடித்துக் கொள்ளவா முடியும்.

  ReplyDelete
 3. ஏலவே யூனியன் கார்பைட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு இன்று வரை "எதுவுமில்லை"அது வெறும் காபன் தாக்கம் தான்!இது?அணு ஐயா அணு!

  ReplyDelete
 4. ஏன் மாம்ஸ் கவலைப்படுரிங்க?
  நம்ம அரசு ஏதாவது விபத்து ஏற்பட்டா உடனே பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிடுவாங்க!(விபத்துக்கு காரனமானவங்கள)

  ReplyDelete
 5. இது தொடர்பான என் பதிவையும் படிச்சி பாருங்க நண்பரே!!!


  http://kuwaittamils.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 6. இதையும் காரணமா சொல்லுவாங்க... இதையும் தாண்டி ரூம் போட்டு யோசிச்சு அதையும் சொல்லுவாங்க... மாம்ஸ்

  ReplyDelete
 7. நிறைய அரசியல் இருக்குது மாம்ஸ்! இனி இந்தியாவில் எந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு பலமாகவே இருக்கும்! நெடுஞ்சாலை, அணை கட்டுரததுக்கே சத்தம் போடறாங்க !

  ReplyDelete
 8. \\\ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்...இது அயல்நாட்டவர் சதி...இதில் எங்களுக்கு சம்பந்தமில்லைன்னு..பழைய டயலாக்க கண்டினியூ பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டாங்களோ...\\\\ அதிலென்ன சந்தேகம் கண்டிப்பா சொல்வாங்க ...

  ReplyDelete
 9. இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழகத்தை விடவும் மோசமான மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக அறிகிறேன். அரிக்கேன் விளக்கில் மீண்டும் படிக்கிற காலம் வரலாம். வாழ்க ஜனநாயகம்!

  ReplyDelete
 10. சரியா சொன்னீங்க நண்பர்களே

  அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் சொன்ன மாதிரிசொல்வார்கள் இல்லை என்றால் அளுக்கு ஆயிரமோ பத்தாயிரமோ கொடுத்துவிட்டு அவர்கள் A/c Room-ல் தூங்க போய்விடுவார்கள்

  ReplyDelete
 11. கூடங்குளம் வலைபதிவுகளில் இணைந்த மேலும் ஒரு அருமையான வலைபதிவு
  இன்குலாப் ஜிந்தாபாத்

  ReplyDelete
 12. //நம்ம அரசு ஏதாவது விபத்து ஏற்பட்டா உடனே பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிடுவாங்க!(விபத்துக்கு காரனமானவங்கள)//

  ReplyDelete
 13. இந்த பிரச்சனை எப்ப தீருமோ பாவம் மக்கள்

  ReplyDelete
 14. இன்றைய தேதியில், இன்றிமையாத பிரச்சனை. நல்ல தீர்வு கிடைத்திட வேண்டும்.

  ReplyDelete
 15. கூடங்குளம் விவகாரம் ஆங்கிலத்தில் சொல்வது போல் "Catch22".

  நன்றாக யோசிக்கவேண்டிய விஷயம்.

  ReplyDelete
 16. இப்பதான்ய்யா நீ மேட்டருக்கே வந்துருக்கே, சரியான கேள்விகள்....

  ReplyDelete
 17. டெல்லி தர்பாரை கூடங்குளத்துக்கு மாத்த சொல்லுங்க பார்ப்போம் கொய்யால ஒரே நாள்ல அணுமின் நிலையத்தை மூடிருவாணுக பேமானிக...

  ReplyDelete
 18. இது என் சிற்றறிவுக்கு எட்டாத விஷயமா இருக்கு..

  ReplyDelete
 19. நல்ல பயனுள்ள பதிவு விக்கி

  ReplyDelete
 20. இந்த பதிவை படித்து பாருங்கள்

  http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html

  ReplyDelete
 21. சாதலின் இன்னாதில்லை!
  வள்ளுவன் வாக்கு!

  சா இராமாநுசம்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி