பெண் என்றால் அவ்வளவு கேவலமா?


வணக்கம் உறவுகளே,


எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் பல்லாயிரம் விஷயங்கள் வந்து சென்று கொண்டு இருக்கின்றன. அப்படி என் நண்பியின் வாழ்கையில் ஏற்ப்பட்ட நிகழ்ச்சியே இந்த பதிவு.


அவள் பெயர் புனிதா அழகு மற்றும் அறிவு ஒரு சேர அருளினான் ஆண்டவன். அதனை விட அவளிடம் இருந்த அடக்கம் அவளை மற்றவர் முன் நிலை நிறுத்தியது. படித்தது பட்ட மேற்ப்படிப்பு என்றாலும் அவளுடைய பேச்சுக்கள் பாமர மக்களை போல வெகுளித்தனமாக இருந்து வந்தது.

இதனிடையில் வரன் வந்ததால் பேசி முடித்தனர். வீட்டுக்கு ஒரே பெண் என்ற காரணத்தால் எல்லா விதமான விஷயங்களையும்(வர தட்சணை!) செய்ய அவளுடைய தந்தை முயன்றார். 

மாப்பிளை மின்சார வாரியத்தில் அதிகாரியாக இருக்கிறார் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அரசு அலுவல், பிரச்னை இல்லாத வாழ்கை ஒரே மகன் வீட்டுக்கு என்பதால் எல்லோருக்கும் மிகவும் பிடித்து போயிற்று. புனிதாவுக்கும் மாப்பிள்ளையை பிடித்து போயிற்று. திருமணம் செவ்வனே நடந்தேறியது. 


கணவராக வந்தவரின் பாச மழையில் திளைத்தால் புனிதா. இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்று சுற்றத்தாரிடமும், நட்புகளிடமும் ஆனந்தப்பட்டாள்.

ஒரு வருடம் கழித்து ஆண் குழந்தையை ஈன்றாள். அழகு குழந்தை ஆசை கணவன் என்று சந்தோஷத்துடன் போய் கொண்டு இருந்த வாழ்கையில் புயல் வீச ஆரம்பித்தது.

கணவர் வேலை செய்யும் இடத்தில் புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தாள். அவளின் பேச்சும், அழகும் புனிதாவின் கணவரை மெல்ல மெல்ல அவள் பக்கமாக மனசு அலை பாய ஆரம்பித்தது. அந்தப்பெண்ணும் இவரை விரும்புவதாக சொல்லி சென்றாள்.

புனிதாவின் கணவனின் பேச்சுக்கள் திசை மாறின. அன்பை மட்டுமே பொழிந்து வந்த அவன் கொஞ்ச கொஞ்சமாக வார்த்தைகளில் விஷ அம்புகளை செலுத்த ஆரம்பித்தான். காரணமே இல்லாமல் அவளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். காரணம் புரியாத புனிதா பல நாட்களாக அதனை பொறுத்து வந்தாள்.


ஒரு நாள் சமையலறை சென்றவள் காஸின் நெடி துளைத்ததை கண்டு பதறினாள். உடனே அந்த அறையை விட்டு வெளியேற நினைத்து திரும்பியவளுக்கு இன்னொரு அதிர்ச்சி, அவள் உள் சென்றவுடன் வெளிப்பக்கமாக் மூடப்பட்டது. பதற்றத்தில் ஜன்னல் கதவுகளை திறக்க கூட அவளுக்கு தோன்ற வில்லை.

கதவை பெரிய அளவில் தட்டிப்பார்த்தாள், முடியவில்லை..அந்த நேரம் வீட்டுக்கு வந்த சொந்தக்கார பய்யன் கதவின் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்தான். கதவை திறந்து விட்டான். கதவின் தாழிடும் இடத்து பக்கத்தில் சில தீக்குச்சிகள் கிடந்தன. அவைகளுக்கு எரிய மனமில்லை போலும்.

உடனே விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பையன்(வயது 19) அவளை குழந்தையுடன் அழைத்துக்கொண்டு வந்து அவளின் பெற்றோரிடம் சேர்த்தான்.
அந்த நிகழ்ச்சி நடக்கும் போது அந்த வீட்டில் யாரும் இல்லை. திட்ட மிட்ட செயலோ என்று பதறிய பெரியவர்கள்..அந்த மிருகத்திடம் சமரசம் பேசி என்ன தான் தீர்வு என்று கேட்கலாயினர்.

அதற்க்கு அந்த கணவரின் பதில் என்ன தெரியுமா..

எனக்கு இவளை பிடிக்க வில்லை எனவே எனக்கு தேவை விவாகரத்து. நீங்கள் அதனை மறுக்கும் பட்சத்தில் இவள் ஒரு நடத்தை கெட்டவள் என்று பிரகடனப்படுத்துவேன். என்னை எல்லோரும் நம்புவார்கள் என்று உரக்க சிரித்தாராம். 


இதற்க்கு பின் என்ன செய்வது என்று எண்ணிய அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் தான் வாங்கிய வரதட்சணை மற்றும் திருமணத்துக்கு அவர்களுக்கு ஆன செலவு போன்றவைகளை(பணமாக!) அளித்து விட்டாராம். அதனை ஏற்க்க மறுத்து நீதி மன்றம் செல்லுவதாக இருந்தால் அது அந்த குடும்பத்துக்கு தான் பிரச்னை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டானாம்(அவனுக்கு என்ன மரியாதை!).

ஆடிப்போன அந்த பெண் விவகாரத்தில் கையெழுத்து இட்டு கொடுத்து விட்டு இன்று தனி மரமாக 30 வயதில்(குழந்தையுடன்) குடும்பத்துடன் வாழாவெட்டி என்ற அவசொல்லுடன் வாழ்ந்து வருகிறாள்.

இதில் நான் கேட்க்க விரும்பும் கேள்விகள்:

வெறும் உடலுக்காகத்தான் வாழ்கையா

அந்த மனிதனின்(!) காம உணர்வு திருமணத்துக்கு பின் இன்னொரு பெண்ணின் அழகு வசீகரிக்கும் போது தான் மீண்டும் எழுந்ததா?

பெண்களை எள்ளி நகையாடும் பலர் வெறும் கவர்சிக்க்காகத்தான் பின் அலைகிறார்களா

பெண் தவறு செய்தால் அதை அதிகப்படியாக விமர்சிக்கும் ஆண்களை என் செய்வது


இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிப்பதாக சொல்லும் ஆண்(!) அவளுக்கு கன்னித்தன்மையை மீண்டும் அளிக்க முடியுமா!

மிச்சம்: இவை ஆறா வடுக்களாக என் மனதில் இருந்தவைகள்...பொறுமையுடன் படித்ததுக்கு நன்றிகள். இந்த கருத்துக்கள் எல்லா ஆண்களையும் குறிப்பதல்ல நன்றி.

வித்யா குமார் 

கொசுறு: இது விக்கியின் பதிவல்ல இந்த அளவுக்கு தெளிவா எனக்கு எழுத வராது மக்களே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. திருப்பி c & p -ஆ

  ReplyDelete
 2. கேள்விகள் பெண்கேள்விகளாக இருப்பதாக நினைத்தேன். சரியாக போனது.
  மூன்றாவது கேள்வி உண்மையானது தான்
  பெண்ணுக்கு தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதும்
  எள்ளி நகையாடுவது ரெண்டுமே தேவை இல்லாதது

  ReplyDelete
 3. ஓ அப்போ அண்ணியார் எழுதின இடுகையா...

  ReplyDelete
 4. சொம்ப அருதிரனும்....
  அவனுக்கு பண்ண மாதிரி ..

  ReplyDelete
 5. அருமையான அலசல். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. விக்கி கோப்பி பேஸ்ட் பதிவு போட்டிருக்காருப்பா...

  தலைவரே, அவனை மனிதன் என்ற அடையாளத்தில் நிறுத்தாதீர்கள்... வெளியில் வந்த விஷயங்கள் குறைவு என்று நினைக்கிறேன்... ஆகையால் இதற்க்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை... ஆமா இது நயன் பிரபுதேவா மேட்டர் இல்லையே

  ReplyDelete
 7. நல்ல குடும்பநல விழிப்புணர்வு பதிவு !

  ReplyDelete
 8. ஆமாங்க, இந்த மாதிரி மிருகங்களும் இருக்கத் தான் செய்றாங்க..எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியலை..

  ReplyDelete
 9. அவனைப்போன்ற பல ஜென்மங்கள் இந்த சமூதாயத்தில் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன

  மிகவும் துயரமான கதை..அந்த அக்காவின்..வாழ்க்கை எதிர்காலத்தில் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்

  ReplyDelete
 10. //NAAI-NAKKS Says:
  October 19, 2011 9:21 AM
  திருப்பி c & p -ஆ//

  இல்லையே, நேராத்தானே கப்பி பேஸ்ட் பண்ணியிருக்கார்.

  ReplyDelete
 11. //எனக்கு இவளை பிடிக்க வில்லை எனவே எனக்கு தேவை விவாகரத்து. நீங்கள் அதனை மறுக்கும் பட்சத்தில் இவள் ஒரு நடத்தை கெட்டவள் என்று பிரகடனப்படுத்துவேன். என்னை எல்லோரும் நம்புவார்கள் என்று உரக்க சிரித்தாராம்.//

  இவனுகளயெல்லாம்........
  பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்,

  ReplyDelete
 12. இப்ப தான் அங்கே கமெண்ட் போட்டு வந்தேன்

  வியட்நாம் ப்ளைட் அனுபவமும் படிச்சேன்

  நல்லா எழுதுறாங்க

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வருத்தமான விசயம் மாம்ஸ்

  ReplyDelete
 14. >>கொசுறு: இது விக்கியின் பதிவல்ல இந்த அளவுக்கு தெளிவா எனக்கு எழுத வராது மக்களே!

  தக்காளி ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னேப்பா!!!!!!!!!

  ReplyDelete
 15. >>இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிப்பதாக சொல்லும் ஆண்(!) அவளுக்கு கன்னித்தன்மையை மீண்டும் அளிக்க முடியுமா!

  painfull question

  ReplyDelete
 16. //கொசுறு: இது விக்கியின் பதிவல்ல இந்த அளவுக்கு தெளிவா எனக்கு எழுத வராது மக்களே!//

  முதல் ரெண்டு லைன் படித்த போதே தெரிந்து கொண்டேன் ஹீ ஹீ

  ReplyDelete
 17. இந்த தவறு ஆண்,பெண் என இருவருக்கும் சம பங்கு உண்டு... அடுத்த வீட்டு கணவன் மீதும் ஆசைப்படுவதும் தவறு தானே? ஆக ஒரு பெண் துன்பபடுகிறாள் என்றால் அதில் முக்கிய காரணமாக இன்னொரு பெண் தான் இருப்பாள்....

  ReplyDelete
 18. மாப்ளே காப்பி , பேஸ்டா ? ஹி ஹி
  நீ கலக்கு மாப்ளே . .

  ReplyDelete
 19. காப்பி , பேஸ்ட் மாதிரி என் டீ , பூஸ்ட் பதிவு போட கூடாது ? குப்புற படுத்து யோசிச்சு பாரு மாப்ளே . .
  ஏதோ என்னால முடிஞ்சது உனக்கு ஹெல்ப் பண்ணினேன் . .

  ReplyDelete
 20. //பெண் தவறு செய்தால் அதை அதிகப்படியாக விமர்சிக்கும் ஆண்களை என் செய்வது//

  அதே! :-(

  ReplyDelete
 21. விழிப்புணர்வு பதிவு....


  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 22. தவறு செய்வதிலே ஆண் என்ன
  பெண் என்ன யாரும் கண்டிக்கப்
  படவேண்டியவர்களே!  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. இப்படியும் சில ஆண்கள்!

  ReplyDelete
 24. வேதனை தரும் பகிர்வு .ஆனால் வியப்பான விடயம் எதுவும் இல்லை .
  காரணம் இப்போது பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கையே இதுதான் .
  வெளிநாடுகளில் சொல்லி வேலை இல்லை .இதில் ஆண்களை மட்டும்
  குறைகூற முடியாது சகோ .இதுக்கு உடந்தையாக சில பெண்களும்தான்
  இருக்கின்றார்கள் .இவர்கள் ஒன்றில் களியாணம் ஆன தம்பதியினரைப்
  பிரித்துத் தான் வாழ நினைப்பார்கள் அல்லது விட்டுப் பிரிந்த பெண்களைத்
  தப்பாகப் பேசித் திரிவார்கள் அதனால் ஒரே ஒரு கேள்வி .காமம்தான் பெரிது
  என்றால் களியாணம் எதுக்கு ?..பெண்ணோ ஆணோ புரிந்துணர்வு அற்றவர்கள் என்றால் இல்லற பந்தத்தில் இணைவதே தவறு .இதனால் கெட்டுப் போன
  ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டுப் பிரிந்த பெண்கள் அவமானத்தால் படும்
  துயர் இதையாவது கொஞ்சம் எம் சமூகம் புரிந்துணர வேண்டும்.ஆகக் குறைந்தது உண்மை எதுவெனப் புரிந்துகொள்ளாமல் ஊரோடு ஒத்து ஊதுவதை நிறுத்த வேண்டும் .பாதிக்கப்பட்ட பெண்களை படுகுழியில் தள்ளி ரசிக்கும் பாளாய்ப்போன உலகம் தன் அறியாமையை உணரவேண்டும் .நானும் ஒரு பெண் என்பதால் என் உணர்வுகளை வெளிக்காட்டி உள்ளேன் .மன்னிக்க வேண்டும் உறவுகளே .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 25. அண்ணி பதிவெழுதி இருக்காங்களே....!!!

  சமூகத்தில் சில ஓநாய்கள் இப்படிதான் இருக்கிறார்கள்...!!!

  ReplyDelete
 26. காலமும் மாறிவிட்டது மனிதனும் மிருகமாய் மாறி வருகிறான்...

  ReplyDelete
 27. சகோ சசிகுமார் கருத்தை ஆமோதிக்கிறேன். நிறைய இடங்களில் பெண்களின் துன்பத்திற்கு மற்றொரு பெண்களே மாமியார் ருபமாகவோ, மருமகள் ருபமாகவோ இல்லை சக தோழிபோன்றோ Etc. காரணமாக இருக்கிறாள்.

  ReplyDelete
 28. அவன் திருமணமாகியது அறிந்தும் விரும்புவதாக சொன்னவளையும் சேர்த்து கண்டிக்க வேண்டும். அதே போல் மீண்டும் ஒருத்தியை பார்த்து தன்னை கைவிடமாட்டான் என்பதை கூட அறிய மாட்டாத முட்டாளா அவள்?

  ReplyDelete
 29. ஆண்களில் ராமன் இல்லை...இதில் நானும் உங்க விக்கியும் அடக்கம்...

  அதனால் வழக்கமாக விக்கி போடும் DISCLAIMER
  "இந்த கருத்துக்கள் எல்லா ஆண்களையும் குறிப்பதல்ல நன்றி."

  தேவை இல்லை...

  ReplyDelete
 30. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இந்த மிருகம் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது...எத்தனை சதவீதம் என்பது தான் கேள்வி...
  நல்லதொரு பதிவு...

  பேசாமல் விக்கிக்கு ஒய்வு கொடுத்து நீங்களே எழுதுங்கள்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி