பதிவராக இருப்பதால் என்ன பயன்!

வணக்கம் நண்பர்களே...


பதிவுலகம் - இது ஒரு தனி உலகம்..இங்கு நான் எழுத(டைப்ப!) வரும்போது பல பெரிய தலைகளுக்கு நடுவே ஒரு மீசை முளைத்த குழந்தையாக(நெசமா!) நுழைந்தேன்....அதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்னில் இருந்தே பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தேன்..

பல பதிவர்களின் நெத்தி அடி பதிவையும் படித்திருக்கிறேன். பல் சுவை பதிவர்களின் எண்ணங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன்...அதுவரை நானும் ஒரு பதிவன் எனும் எண்ணத்தை நினைத்து கூட பார்க்க வில்லை..திடீரென்று என் மனைவி தொடங்கிய இந்த விஷயத்தை பார்த்து நகைத்திருக்கிறேன்...


ஏனெனில், என்னால் அந்த அளவுக்கு பொறுமையுடன் ஒரு விஷயத்தை பலருக்கு புரியும் படி சொல்ல தெரியாது என்பதால். இதற்க்கு ஒரு உண்மையான உதாரணம்: இயலாமையின் வெளிப்பாடே பொறாமை! இது சரியாக எனக்கு புரிந்தது...சிறிய கருத்து மோதலில்...நானும் ஒரு பதிவராகி சாதித்து காட்டுகிறேன் என்று குழந்தை தனமாக ஆரம்பித்ததே இது வரை சென்று கொண்டு இருக்கிறது...

இதில் எனக்கு கிடைத்த பயன்கள்...


நண்பர்கள் எனும் அன்பு நெஞ்சங்கள்...முகமறியாத என்னை தங்கள் நட்பு வட்டத்தில் ஒருவனாக நினைக்கிறார்கள் என்பதில் எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி...

எதையுமே பிளான் செய்ய தெரியாது(!)...இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்..


பல விஷயங்களை கண்டதும் எனக்கு கிடைத்த ஆனந்தத்தை பலருக்கு தெரிவிக்க என்னால் முடிகிறது (இலவசமாக!)...

கருத்து மோதல்களையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு வலுத்து வருகிறது..


அரசியலில் விருப்பம் உள்ள எனக்கு இங்கு தான் பல பால பாடங்கள் புரிந்து வருகிறது(இங்கு கற்று கொள்ளும் அரசியலை வைத்து என்ன வேணா ஆகலாம் ஹிஹி!)

உண்மை எது பொய் எது என்பதை பல வித பதிவுகள் மூலம் உணர்கிறேன்...

அறிவியல், கணிப்பொறி போன்ற விஷயங்கள் எனக்கு மிகுந்த தூரத்தில் இருந்தன..இன்று அவை எனக்கு மிக அருகில் இருப்பது போல உணர்வு!

என்னை விட பெரியோர் ஆகினும், சிறியோர் ஆகினோம் அவர்களுடைய பதிவுகளின் அலட்டல் இல்லாத முறை என்னை நெகிழ செய்து கொண்டு இருக்கிறது...

மதம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் சிறிதேனும் தெளிவு கிடைத்து வருவதாக நினைக்கிறேன்..

ஒரு மனிதனுக்கு பெரிய வலியே சொற்கள் மூலம் கிடைப்பது தான் என்பதை பதிவுகள் மூலம் உணர்ந்து வருகிறேன்...


இவ்வளவு பயன்கள் கொடுத்து வரும் பதிவுலகுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

கொசுறு: உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை அளியுங்கள் நண்பர்களே...நானும் நண்பர்களும் தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும்..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

40 comments :

 1. காத்தால வசமா மாட்டிக்கிட்டான் மாப்பிளை

  ReplyDelete
 2. என் மனைவி தொடங்கிய இந்த விஷயத்தை பார்த்து நகைத்திருக்கிறேன்...//

  note tis point யுவர் ஆனர்

  ReplyDelete
 3. குழந்தை தனமாக ஆரம்பித்ததே இது வரை சென்று கொண்டு இருக்கிறது...//

  குழந்தை தனமே இப்புடீன்னா???

  ReplyDelete
 4. எனக்கு தெரிந்த ஒரு பயன்
  நித்திரை முழித்து பழகலாம். இதன் மூலம் என்ன பயன் எண்டு கேட்பவர்களுக்கு. இரவில் எங்காவது களவுக்கு சென்றால் தூங்காது தப்பலாம்

  ReplyDelete
 5. மாம்ஸ்... பதிவுலக நட்பு நமது கவலைகளை மறக்க செய்கிறது..நன்றி மாம்ஸ்...

  ReplyDelete
 6. உண்மைதான் பாஸ் பதிவுலகம் ஓரு அற்புதமான வரப்பிரசாதம்...நிறைய நண்பர்களை சம்பாதித்திருக்கின்றோம்.

  ReplyDelete
 7. பதிவுலகில் நான் ஒரு வயதுக்குழந்தைதான்.
  அதற்க்குள் எனது நட்பு வட்டாரம் விரிவடைந்துள்ளது.
  வியட்நாமையும் கோவையையும் ஒரு நொடியில் இணைப்பது பதிவுலகமே!

  ReplyDelete
 8. தம்பி!! வியட்நாமில் இருக்கும் நீயும், ஈரோட்டில் இருக்கும் நானும் நண்பர்கள் ஆக பதிவுகள் தானே காரணம்?

  ReplyDelete
 9. பதிவுலகம்
  நட்புகளை பெருக்கி
  எழுத்தையும் சொல்லாற்றலையும் வளப்படுத்தும் களம்.
  பதிவுக்கு நன்றி மாம்ஸ்..

  ReplyDelete
 10. பதிவுலகில் 2வது வருட ஆரம்ப வாழ்த்துக்கள்!!! ( இனியாவது உள்குத்துப்பதிவு,அட்டாக் பதிவுகளை தவிர்த்து மக்களூக்கு உபயோகமான பதிவுகளை போடவும் ஹி ஹி )

  ReplyDelete
 11. மாம்ஸ் பதிவுலகம் நமக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்

  ReplyDelete
 12. பதிவுலகில் 2வது வருட ஆரம்ப வாழ்த்துக்கள்!!! "இயலாமையின் வெளிப்பாடு தான் பொறாமை " உண்மை

  ReplyDelete
 13. பதிவுகள் எழுதுவது வெறும் வடிகால்கள் தான் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் நமது வெளிப்பாடுகளுக்கு எதிர்பாராத ஆதரவும், இனிமையான நட்புகளும் பலனாய் கிடைக்கின்றன.

  ReplyDelete
 14. /பதிவுலகில் 2வது வருட ஆரம்ப வாழ்த்துக்கள்!!!///

  அப்படியா?
  வாத்துக்கள் மாம்ஸ்!

  ReplyDelete
 15. இதான் உங்க பதிவெழுதும் வரலாறா?

  ReplyDelete
 16. பல உறவுகள் கிடைத்ததே பெரிய பரிசாக நினைக்கிறேன்

  ReplyDelete
 17. நான் தான் உங்கள் பதிவில் ஏற்கனவே சொல்லியிருக்கேனே மாம்ஸ்,நண்பர்களை வேண்டி தொடங்கப் பட்டதே எனது பதிவு என்று ,நட்புக்காக மட்டுமே .நன்றி

  ReplyDelete
 18. பதிவுலகின் மிகப்பெரும் சொத்து நட்பே. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்.

  ReplyDelete
 19. வணக்கம்! புரிதல் வந்து விட்டாலே மனிதன் பூரணனாகிறான்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. முகம் தெரியாத எத்தனையோ நண்பர்கள் என்பது மிகப் பெரிய பயன்தானே!

  ReplyDelete
 21. முகம் தெரியாத பல நண்பர்களை கொடுத்தது இந்த பதிவுலகம் தான். தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 22. மாப்ள இது உங்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலானோருக்கு கிடைக்கும் அனுபவம். என்னையும் சேர்த்துதான். அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. அறிவியல், கணிப்பொறி போன்ற விஷயங்கள் எனக்கு மிகுந்த தூரத்தில் இருந்தன..இன்று அவை எனக்கு மிக அருகில் இருப்பது போல

  தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 24. பெரும்பாலான பதிவர்கள் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டு அவர்களுக்குள்ளே பழகிவருகின்றனர்! புதிய பதிவர்களுக்கு அந்த கோட்டைக்குள் நுழைவது அதீதப் பிரயத்னம்! இது மறுபக்கம்!

  ReplyDelete
 25. உண்மைதான். பதிவுலகம் எவ்வளவோ கற்றுக்கொடுக்கிறது. நல்ல நண்பர்களை ஏற்படுத்துகிறது. அதேசமயம் இதால் இழந்தது கூட அதிகம்தான்

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் மாம்ஸ்..

  ரொம்ப நாளு நல்ல இருக்கணும்
  இன்னும் 1000 நல்ல பதிவுகளை போட்டு ...

  ReplyDelete
 27. ~*~இயலாமையின் வெளிப்பாடே பொறாமை!~*~

  பொன்னான வார்த்தைகள்... மாம்ஸ்...

  (Golden Words)

  ReplyDelete
 28. தமிழ் மனம் பிரச்சினை ஒருத்தர எப்படி எல்லாம் ஆட்டி வைக்குதப்பா? சார், தமிழ் மணம் விஷயத்த மறந்துட்டு அந்த வியெட்னாம் பொழுதுகள் ஆரம்பியுங்களேன்... ரொம்ப நாளாச்சு

  ReplyDelete
 29. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நீரும் நானும் மாப்ள என்று விளித்துக்கொள்ளும் அருகாமை இந்தப் பதிவுலகம் கொடுத்தது.

  மாப்ள பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 30. பல் சுவை பதிவர்களின் எண்ணங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன்..//

  அண்ணே நீ என்னைத்தான் சொல்றேன்னு புரியுது ஹி ஹி....

  ReplyDelete
 31. என்னய்யா திடீர்னு சென்டிமென்ட்'ல இறங்கி குளிக்கிற...??? விட்டா அழுதுருவானோ...??

  ReplyDelete
 32. ராஸ்கல் நீ சிபி நாதாரிக்கு மட்டும் உன் போட்டோவை அனுப்பி குடுத்துருக்கே, அப்போ எனக்கு...?? நான் உன் நண்பன் இல்லையா...??? அதுக்குன்னு உன் பி ஏ பிகருங்க போட்டோ அனுப்பிராதே ஹி ஹி...

  ReplyDelete
 33. தக்காளி என்னமோ சொல்ல வர்ரான்.... புரியுது, ஆனா புரியல........

  ReplyDelete
 34. ////சி.பி.செந்தில்குமார் Says:
  October 21, 2011 9:11 AM
  பதிவுலகில் 2வது வருட ஆரம்ப வாழ்த்துக்கள்!!! ( இனியாவது உள்குத்துப்பதிவு,அட்டாக் பதிவுகளை தவிர்த்து மக்களூக்கு உபயோகமான பதிவுகளை போடவும் ஹி ஹி )

  //////

  மக்களுக்கு உபயோகமான பதிவுன்னா...? சாப்புட்டு கை எப்படி கழுவுறதுன்னு பதிவு போட சொல்லுவமா?

  ReplyDelete
 35. ////இயலாமையின் வெளிப்பாடே பொறாமை! ////

  அண்ணாச்சி பொறாமையில் கூட பல வகையுண்டு. வீரன் பொறாமைப்பட்டால் சகுனிகள் சாகடிக்கப்படுவார்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

  ReplyDelete
 36. ஸலாம் சகோ.விக்கி,
  சென்டிமென்டல் பகிர்வுக்கு நன்றி.
  //என்ன பயன்// என்றால்...
  முகம் தெரியாத நட்பு வட்டம் கடல்கடந்தும் பெரிதாகி இருக்கிறது. ஒத்த கருத்துக்கள் கொண்டோர், எதிர் கருத்து கொண்டோர், விவாதங்கள், பாராட்டுக்கள், திட்டுக்கள்... என நடக்கும் அனைத்துமே உன்னதமானவை.

  ReplyDelete
 37. ஒரு மனிதனுக்கு பெரிய வலியே சொற்கள் மூலம் கிடைப்பது தான் என்பதை பதிவுகள் மூலம் உணர்ந்து வருகிறேன்...//

  முதுகு கனத்ததை சொல்றீங்களோ...

  ReplyDelete
 38. உங்கள் நட்புக்கு மரியாதை.....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி