நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு வருஷம் தூங்க மாட்ட!

வணக்கம் நண்பர்களே...


"நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு வருஷம் தூங்க மாட்ட!"...இது பாட்டு அல்ல இப்போ நடந்து வரும் நிதர்சன அரசியல் விஷயம்....

(பட உபயம்...திரு செங்கோவி அவர்கள்(அவரு எங்கே இருந்து எடுத்தாருன்னு எனக்கு தெரியாதுபா!)

இதுவரைக்கும் தமிழக அரசியலில் சாணி ச்சே சாணக்கியர் என்று அழைக்கப்பட்ட திரு.மு.க அவர்களையும் மிஞ்சிவிட்டார் மம்மு சாரிபா மம்மி...வெடிவேலு சொல்வது போல ப்ளான் பண்ணாம எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது எம்புட்டு உண்மையாகிப்போச்சி அண்ணன் டாஸ்மாக் மன்னன் திரு. காப்டன்(எந்த டீம் நொந்த டீமா!) அவர்களுக்கு...


சட்ட மன்ற தேர்தலுக்கு முன் வரை மம்மி ஜிம்மியை நாடியது உலகறிந்த உண்மை...அப்பவே ஜிம்மி உசாரா இருந்து இருக்க வேணாமா...சரி அதுக்கப்புறமாவது எதிரி கட்சி...ச்சே எதிர் கட்சியா உக்கார வச்சிட்டாங்களே...நாம ஏதாவது உதாராவது விடுவோம்னாவது அண்ணனுக்கு  தோனிச்சா தெரியல...சந்தோசம் வந்தாலும் சரக்கடிப்போம்...துக்கம் வந்தாலும் பொறுக்க அடிப்போம்ங்கர கணக்கா இருந்திட்டாரு போல...

இதுல இவர நம்பி ஏற்கனவே முதல்ல சண்ட போடு முடிஞ்சா துண்ட போடுன்னு பின்னாடி போனவங்க நிலைமை தான் இப்போ கேள்விக்குறியா இருக்கு...இப்போ முன்னையும் போக முடியாம திரிசங்கு நிலமையில இருக்காங்க....

மம்மிய பத்தி சொல்லியே ஆகனும்...இம்புட்டு கரண்ட் கட் பண்ண போதும் பெருவாரிய ஜெயிச்சத பாத்தா....இந்தம்மா ரொம்ப நல்லவங்கன்னு சனங்க முடிவு பண்ணிட்டாங்களோ(!)...ஏன்னா தேர்தல் சமயத்துல சொத்து குவிப்புன்னு சொல்லி டவாலி வேற கூபிட்டாரு பொங்களூருக்கு(!)....இனியாவது மாற்றம் வருமா இல்ல தக்காளி ஓட்டு போட்டாச்சில்ல அடுத்த வேலயப்பருங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்களா...காலம் தான் பதில் சொல்லும்...


என்ன நடந்தாலும்...சாமியே இல்லன்னு சொன்னாலும்(!) இந்த தீவாளிக்கு பொண்ண ஊட்டுக்கு கொண்டுவந்து சேக்கரன்னு சொல்லிட்டு சரக்கு ச்சே ஜர்க்கு விட்டுட்டு தானே தோத்த தானை தலைவன் செங்கோட்டைய நோக்கி போயி இருக்காரு...வெளிநாட்டு ஆத்தா என்ன யோசிக்கிறாங்களோ...இந்த நேரமா பாத்து உள் தேர்தல்ல வேற நொந்துபோய் இருக்கு கதர் சட்டைங்க....இருக்குற காண்டுல ...தாத்தா நீங்க கெளம்புங்க அப்புறமா லெட்டர் போடுறேன்னு சொல்லி புடுவாங்களோ..இப்போல்லாம் முதலமைச்சர் போட்ட லெட்டரே சேரவேண்டிய இடத்துல சேர மாட்டேங்குது...முன்னால் (!) அமைச்சருக்கு லெட்டர் சேருமா டவுட்டுதான்...

last but not least....


சம்மந்தப்பட்ட திரு. மருந்து கொடுக்காத அய்யாவை பற்றி சொல்ல விருப்பம் இல்லாமல் வெளியேறுகிறேன்... 

கொசுறு: தேர்தலில் இந்த முறை ஓட்டு போடாமல் அரசியல் நிகழ்சிகளை பதிவாக்கியதற்கு மக்களே மன்னிப்பீர்களாக...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

28 comments :

  1. (பட உபயம்...திரு செங்கோவி அவர்கள்(அவரு எங்கே இருந்து எடுத்தாருன்னு எனக்கு தெரியாதுபா!)///

    அட ரொம்ப எச்சரிக்கையா இருக்கிங்களே

    ReplyDelete
  2. கேப்டன் சட்டசபையில் ஜெயிச்சதுக்கு காரணம் அம்மா நாமம் காரணம்.

    இப்போ உள்ளாட்சியில தோத்ததுக்கு அம்மா பட்டைநாமம் காரணம்...

    ReplyDelete
  3. மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க போலிருக்குது

    ReplyDelete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. செம்ம கலக்கல் மாம்ஸ்! :-)

    ReplyDelete
  6. //என்ன நடந்தாலும்...சாமியே இல்லன்னு சொன்னாலும்(!) இந்த தீவாளிக்கு பொண்ண ஊட்டுக்கு கொண்டுவந்து சேக்கரன்னு சொல்லிட்டு சரக்கு ச்சே ஜர்க்கு விட்டுட்டு தானே தோத்த தானை தலைவன் செங்கோட்டைய நோக்கி போயி இருக்காரு...//

    தாத்தா இதுலயாவது ஜெயிக்கனும் பார்க்கிறார் முடியுமா ?

    அப்புறம் மம்மி தெளிவாத்தான் யோசிச்சிருக்காங்க..

    கலக்கல் மாம்ஸ்

    ReplyDelete
  7. ஹி ஹி ஹி...

    என்னைப் போல் ஒருவன்....

    ReplyDelete
  8. உங்கள் பதிவுக்கான பின்னூட்டத்தையும் செங்கோவி அண்ணன் பதிவுலையே விட்டுட்டு வந்துட்டேன்...

    ReplyDelete
  9. >>(பட உபயம்...திரு செங்கோவி அவர்கள்(அவரு எங்கே இருந்து எடுத்தாருன்னு எனக்கு தெரியாதுபா!)

    vikkiyin விக்கியின் வில்லத்தனம்

    ReplyDelete
  10. >>suryajeeva said...

    உங்கள் பதிவுக்கான பின்னூட்டத்தையும் செங்கோவி அண்ணன் பதிவுலையே விட்டுட்டு வந்துட்டேன்...

    இந்த கமெண்ட்டுக்ககவே விக்கி இன்னைக்கு சாப்பிட மாட்டான் ஹா ஹா

    ReplyDelete
  11. //
    சம்மந்தப்பட்ட திரு. மருந்து கொடுக்காத அய்யாவை பற்றி சொல்ல விருப்பம் இல்லாமல் வெளியேறுகிறேன்...


    //

    haa.haa.haa.haa.

    ReplyDelete
  12. மம்மி ஆட்டம் இனிதான் ஆரம்பம்

    ReplyDelete
  13. //பட உபயம்...திரு செங்கோவி அவர்கள்(அவரு எங்கே இருந்து எடுத்தாருன்னு எனக்கு தெரியாதுபா!)//

    யோவ், எலக்சன் கமிசன் வெப்சைட் போய், லிஸ்ட் எடுத்து நானே கஷ்டப்பட்டு தயாரிச்ச அட்டவணை அது..தெளிவா இல்லாம மங்கலா இருக்கே, அதுலயே தெரியவேணாம்?

    அதனால, இது ஒரு காப்பி பேஸ்ட் பதிவுன்னு ஒத்துக்கோங்க.

    ReplyDelete
  14. யாரு எப்பிடி இருந்தா என்ன, நமக்கு காடு விளைஞ்சா'தான் கஞ்சி...

    ReplyDelete
  15. விஜயகாந்த் மேல அப்பிடி என்னய்யா கடுப்பா இருக்குற...???

    ReplyDelete
  16. சி.பி.செந்தில்குமார் said...
    >>suryajeeva said...

    உங்கள் பதிவுக்கான பின்னூட்டத்தையும் செங்கோவி அண்ணன் பதிவுலையே விட்டுட்டு வந்துட்டேன்...

    இந்த கமெண்ட்டுக்ககவே விக்கி இன்னைக்கு சாப்பிட மாட்டான் ஹா ஹா//

    ஒரு புல்லும் காலியாகும் ஹி ஹி...

    ReplyDelete
  17. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  18. நல்லாதான் சொல்லியிருக்கீங்க மாம்ஸ்

    ReplyDelete
  19. சுட்டது மட்டுமில்லாம,"அவரு" எங்கேருந்து சுட்டாருன்னு தெரியாதுன்னு சொல்றீங்களே,மாட்டி விட்டு வேடிக்க பாக்குறதுன்னா இதானோ?

    ReplyDelete
  20. வெட்டி பேச்சு சித்ராவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. தலைப்பை பார்த்துவிட்டு டாகுத்தரை கலாச்சியிருக்கீங்க என்று வந்தேன்...ஆனால் அரசியல்..ஹி.ஹி.ஹி.ஹி...அம்மா நான் சும்மாவா?

    ReplyDelete
  22. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. நெத்தியடி


    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. //சட்ட மன்ற தேர்தலுக்கு முன் வரை மம்மி ஜிம்மியை நாடியது உலகறிந்த உண்மை...அப்பவே ஜிம்மி உசாரா இருந்து இருக்க வேணாமா...சரி அதுக்கப்புறமாவது எதிரி கட்சி...ச்சே எதிர் கட்சியா உக்கார வச்சிட்டாங்களே...நாம ஏதாவது உதாராவது விடுவோம்னாவது அண்ணனுக்கு தோனிச்சா தெரியல...சந்தோசம் வந்தாலும் சரக்கடிப்போம்...துக்கம் வந்தாலும் பொறுக்க அடிப்போம்ங்கர கணக்கா இருந்திட்டாரு போல...//
    வருங்கால முதல்வரை இப்படி வாரிட்டீங்களே!

    ReplyDelete
  25. இது தெளிவான தீர்ப்பா?
    தெளிய வெச்ச தீர்ப்பா?

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி