மாண்பு மிகு. பீம கேது, தூம கேது...முடியல முடியல!

வணக்கம் நண்பர்களே..
முதல்லையே சொல்லி புடுறேன் இது கதை மட்டுமே காதை(உண்மையாம்!) அல்ல!..


எல்லோரும் ராசாக்களேன்னு(அவரு இல்லீங்க!) சொல்ற நாட்டுல ஒரு திருதராஷ்ட்ர மவராசன் ஆண்டு வந்தாரு...அவரு கண்ணு எப்பவும் மேலே இருக்கும்...அதாவது அவருக்கு கீழ குனிஞ்சி மக்களை பாக்குற சக்திய அவரோட அம்மா கொடுக்காம  போய்ட்டாங்க(!)...அதனால அவருக்கு மேல நிக்குற பணக்கார வர்க்கம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்...சரி விடுங்க மெயின் கதைக்கு வரேன்(ராஸ்கல் அப்போ இதுவரைக்கும்!)...

அவருக்கு ரெண்டு வளர்ப்பு புள்ளைங்க...ஒன்னு தென் தேசத்துல இருந்து தத்து எடுத்தது...இன்னொன்னு வடக்கு பட்டில(ராமசாமி அல்ல!) இருந்து தத்து எடுத்தது...இங்க என்ன பிரச்னைன்னா இந்த வடக்கும் தெற்கும் எப்ப பாரு மோதிட்டே இருக்கும்...கொஞ்சம் கூட நாம தத்து எடுக்கப்பட்டவங்களஆச்சே கொஞ்சமாவது அது நமக்கு ஞாபகம் இருக்க வேணாமான்னு தோண வேணாம்...!

திடு திப்புன்னு ராசா வெளியூரு போயி இருக்கும் போது...ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்ட போட்டு கிட்டாங்க...உடனே ராசாவுக்கு சேதி போச்சி...எப்பவும் போல(!) அவரும்...இந்த நாதாரிங்க திருந்தவே மாட்டாங்களான்னு உள்ளுக்குள்ள பொசுங்கி கிட்டே...பசங்களா நான் சீக்கிரம் வந்துடறேன்...வந்து பஞ்சாயத்த வச்சிக்கலாம்னு சொல்லி புட்டாரு!...பாவம் அவரே ஒரு தத்து புள்ளயாச்சா....வெளி ஊருல போயி அவரோட தத்து தாயோட சொத்த சரியா சேப்டி பண்ணிட்டு இருக்கும் போது தான் இந்த பிரச்சன வந்துருச்சி...

ராசா திரும்ப வந்தாரா(கொய்யால கொட்டாவி விட்டீங்க பிச்சி புடுவேன்!)....

வந்ததும்...புள்ளைங்களே உங்களுக்கு என்னப்பா பிரச்சனன்னு கேட்டாரு...!

தென் புள்ள: நைனா என்னைய பத்தி இவன் தாறு மாறா பேசிபுட்டான் என்னானு கேளு...

வட புள்ள: இல்ல பப்பா(பாப்பா அல்ல!) எனக்கு தெரியாம இந்த பய நெறைய துன்னு புட்டான்..கேட்டா இல்லைங்கறான்....

ராசா: யாரு துன்னா என்னப்பா மொத்ததுல வரிப்பணத்துல வாங்கினது தானே..என்னமோ உங்கப்பன் வீட்டு சொத்த தின்னாபோல கத்துறியே...

வட புள்ள: யோவ் இது வரைக்கும் மரியாத கொடுத்து பேசிட்டு இருக்கேன்...அப்போ எதுக்குய்யா என்னைய தத்து எடுத்த...

தென் புள்ள: நச்சுன்னு பதில் சொல்லுப்பா...அவனும் அவன் இங்கிலீசும்..!

ராசா: விட்ரா விட்ரா...சண்ட போடாதீங்க....

தென் புள்ள: இப்போ நீ பதில் சொல்லல....நம்ம தென் தேச இடத்துல கோவணம் உருவுராப்போல உருவிடுவேன்..

ராசா: அடேய் பாவிப்பயலே...வேணாம்டா நான் ஒரு வாயில்லாப்பூச்சி...

வட புள்ள: நீ வாயில்லா பூச்சியா...இல்ல உன் வயித்துக்குள்ள பூச்சியான்னு இப்ப யாரும் கேக்கல...இப்போ பஞ்சாயத்துக்கு ஒரு முடிவ சொல்லு...

ராசா: சர்ரா...இனி நான் ஊர்ல இல்லாத போது தென் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள தென் புள்ள பாத்துக்கட்டும்...வடக்க நீ பாத்துக்க...

வட புள்ள: சர்தான்பா...சரி அவன அப்போ தென் தேசத்துக்கு அனுப்பு இங்க என்ன பண்றான்....எப்ப பாரு கணக்கு புள்ள வேலையே பாத்துட்டு இருக்கானே...அவனுக்கு நீ கொடுத்தது காவக்கார பொழப்பு தானே...

தென் புள்ள: அதுல எப்படி துட்டடிக்கரதுன்னு தான் பாத்திட்டு இருக்கேன்..உனக்கு கண்ணு பொறுக்காதே...!

ராசா: சரி சரி...எதோ இப்போதைக்கு இந்த பிரச்சன முடிவுக்கு வந்துதே அதுவே போதும் சாமி...அம்மா மாரியாத்தா இந்த ரெண்டுக்கும் நல்ல புத்திய கொடு...இருக்குற பிரச்சனைல இதுங்க வேற பாடா படுத்துதுங்க...எத்தன நாளைக்கு தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது...!

வெளி நாட்டு ஆத்தா வருகை...

ராசா: வாங்க மம்மி வாங்க...பாருங்க மம்மி இதுங்க தொல்ல தாங்கல எப்ப பாரு சண்ட போட்டுக்கிட்டு மானத்த வாங்குதுங்க....

foreign மம்மி: அத விட்ரா...அதுங்க அப்படித்தான்...அது சரி இன்னும் அந்த உலை மேட்டரு முடிவுக்கு வரல போல...என்னாச்சி யார் செய்த தாமதம்..
ராசா: என்ன பண்றது மம்மி மக்கள் முன்னைய போல இல்ல...இப்பல்லாம் அடிக்கடி முழிச்சிக்கறாங்க....பாருங்க இப்போ லேட்டஸ்ட்டா நடந்த உள்ளூரு போட்டில கூட...நம்ம பய புள்ளைங்க கோவணத்த உருவி அனுப்பிச்சிருக்காங்க...பயமா இருக்கு மம்மி...
Foreign மம்மி: நீ ஏன் கவலைப்படுறே...நீ என்ன அவங்க தேர்ந்தெடுத்த ராசாவா நான் கண்டெடுத்த ரோசா...கவலைப்படாத...என்ன பாரு நான் கவலப்படுறேனா...ஏற்கனவே ஒரு தறுதலைய பெத்து இருக்கேன்...அது எந்த ஊர்ல இப்போ மேஞ்சிகிட்டு இருக்குன்னு தெரியல...இதுல அதுக்கு வேற சீக்கிரத்துல பட்டாபிஷேகம் ஒரு கேடு...தென்னைய பெத்தா இளநீரு....புள்ளைய பெத்தா கண்ணீரு கணக்கா இருக்கேன்...


ராசா: ஓகே மம்மி நான் மட்டும்தான் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கேன்னு நெனச்சேன்...உங்களுக்கும் அதே நிலமைதானா ஹிஹி...சந்தோசம் மகிழ்ச்சி....பை மம்மி...!

கொசுறு: கதை புரியலன்னு சொன்னீங்க அப்புறம் என்னால தாங்க முடியாது ஹிஹி!...வீட்ல இருக்க ஆம்பளைங்க இன்னைக்கு பொய் சொல்லி புட்டு வெளிய எஸ்கேப் ஆகாம...பலகாரம் செய்ய உதவி செய்யிங்க(எப்பவும் போல!) உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. Thakkali..nee vidiya karthala
  post pottalum...nanga
  varuvom-la.....

  ReplyDelete
 2. Enna thalaippuyaa athu ????
  Deebavali mood poche ???

  ReplyDelete
 3. தீபாவளி வெளியீடு வாழ்த்துக்கள் .........

  ReplyDelete
 4. எல்லோருக்கும் புரியவேண்டிய விஷயம்
  நல்லாவே புரியுது
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இப்பவே கண்ணை கட்டுது.......  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
  மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்துக்கள் மாம்ஸ்....

  ReplyDelete
 7. தீபாவளி வாழ்த்துக்கள் மாம்ஸ்....

  ReplyDelete
 8. உங்க பதிவு யாருக்கும் புரியாதுன்னு நீங்க மட்டும் தான் சொல்லி கிட்டு திரிவீங்க போலிருக்கு... இத கூட புரிஞ்சுக்க முடியலேன்னா அவன் lkg arrear வச்சிருப்பான் தல

  ReplyDelete
 9. மாம்ஸ் தீபாவளி வெடி வச்சுட்டிங்க
  SUPER********

  ReplyDelete
 10. தம்பி, கோபிச்சுட்டுப்போனியேன்னு ஒரு சமாதானப்புறாவை அனுப்பினேன், அதையும் அடிச்சு சாப்பிட்டுட்டா இன்னா அர்த்தம்? ஹி ஹி

  ReplyDelete
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அண்ணே நீ இன்னிக்கு வீட்டுல பலகாரம் பண்ணினாயா...???

  ReplyDelete
 13. என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
  உறவினர்களிற்கும் !......
  வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
  மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

  ReplyDelete
 14. சூப்பர் மாம்ஸ்!
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. இது வெளிக்குத்தாவுல இருக்கு.......?

  ReplyDelete
 16. //// சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி, கோபிச்சுட்டுப்போனியேன்னு ஒரு சமாதானப்புறாவை அனுப்பினேன், அதையும் அடிச்சு சாப்பிட்டுட்டா இன்னா அர்த்தம்? ஹி ஹி//////

  இன்னொண்ணு அனுப்பனும்னு அர்த்தம்......!

  ReplyDelete
 17. ////MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே நீ இன்னிக்கு வீட்டுல பலகாரம் பண்ணினாயா...???//////

  ஒருவாரமா அதுதான் பண்ணிட்டு இருக்கறதா நேத்து பதிவுல சொல்லி இருந்தாரே....?

  ReplyDelete
 18. வணக்கம் மாப்பிள 
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
  தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 19. கொல கொலயா முந்திரிக்கா, நரியே நரியே சுத்தி வா

  ReplyDelete
 20. எதோ இப்போதைக்கு இந்த பிரச்சன முடிவுக்கு வந்துதே அதுவே போதும் சாமி...அம்மா மாரியாத்தா இந்த ரெண்டுக்கும் நல்ல புத்திய கொடு...

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி