போஸ்ட் பாக்ஸ் தீபாவளி..


வணக்கம் நண்பர்களே...இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

தீபாவளி பற்றிய பதிவு இது...

டிவியின் தாக்கம் ஆரம்பித்த காலங்களில்...வீட்டில் டிவி இல்லாததால் யாரு வீட்ல பார்க்கலாம்னு ஏங்கிய காலங்கள் உண்டு...அதுவும் பக்கத்துக்கு அக்கத்து வீட்டுக்காரங்களும் வாடகைக்கு இருந்தார்கள்...அவர்களிடமும் அந்த வசதி இருந்ததில்லை...


இருப்பது ஒரு வழி அது தான் வீட்டுக்காரம்மா அதாவது House Owner வீடு மட்டுமே...அந்த ஜன்னல் திறந்தால் தான் பார்க்க முடியும்...எப்போது அந்த மாய ஜன்னல் திறக்கும் என்பது அதன் சொந்தக்கரர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்...இருந்தாலும் அது திறந்து விடாதா என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த காலங்கள் என் நினைவில் வந்து போகின்றன...

உடல் நிலை சரியில்லாத தாய்...அவளுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்ய வேண்டிய கடமை அப்போது அந்த சிறுவனுக்கு இருந்தது...முதல் மாடியில் இருந்து வீட்டு சாமான்களை ஒரு வாளியில் போட்டு வந்து கீழே இருக்கும் கிணற்றுக்கு பக்கத்தில் போட்டு சுத்தம் செய்து கொண்டு போக வேண்டும்...தன் அருமை தம்பி கைக்குழந்தையான அவனையும் அரவணைக்க வேண்டும்...


அன்றைய தினம் வேலைக்கு சென்றால் இரு நாள் கூலி உண்டு என்பதால் தந்தையின் கவனம் வேலைக்கு செல்வதில்...

டேய் அம்மாவையும், தம்பியையும் பாத்துக்க...நான் சாயந்திரம் 6 மணிக்கு வந்துடறேன்...அப்பா கிட்ட இப்போ காசு இல்ல செல்லம்...இன்னைக்கு வேலைக்கு போயிட்டு வரும்போது உனக்கும், எல்லாருக்கும் திண் பண்டங்கள் வாங்கி வரேன் சரியா...

அப்பா...

சொல்லுப்பா...

எல்லாரும் புது துணி போட்டு இருக்காங்க...எனக்குப்பா...


இல்லடா செல்லம்..அம்மாவுக்கு உடம்பு சரியில்ல இல்லையா...பணம் இப்போ இல்ல...சீக்கிரத்துல உனக்கு கண்டிப்பா வாங்கி தாரேன்...கவனமா பாத்துக்க...

அப்பா சொன்னதை நினைத்த வண்ணம்...அழுக்கு சாமான்களை கழுவிக்கொண்டு இருக்கிறான்..அந்த சிறுவன்...

(அந்த நேரம் அவனுக்கு பின்னே அவன் வயது ஒத்த சிறார்கள் தூக்கிப்போட்ட வெடி வெடிக்கிறது....பயந்து போய் எழுகிறான்...எல்லோரும் "ஹாஹா" என சிரிப்பதை கண்டு மனதுக்குள் அழுகிறான்!)

டேய் போஸ்ட் பாக்ஸ்...இன்னிக்கி கூட இந்த டவுசர் தானா ஹாஹா....

கைக்குழந்தையான தம்பி அழும் சத்தம் கேட்டு அவனை தூக்க ஓடுகிறான் அந்த போஸ்ட் பாக்ஸ் ஓட்டையுடன் கூடிய டவுசருடன் அந்த சிறுவன்...!

அன்று அன்பு தந்தை, தாய், தம்பி என்று பலர் இருந்தார்கள் பணம் இல்லை...


இன்று பணம் இருக்கிறது பிரிந்து போன சொந்தங்கள் எங்கே...ஒவ்வொன்றும் ஒரு திசையில் உயிருடன் பிரிந்து வாழ்கிறதே...!

தீப ஒளியை தேடுகிறான் அந்த சிறுவனாகிய விக்கி இன்று....

கொசுறு: எதோ தோன்றியது கிறுக்கி இருக்கிறேன்...உங்கள் கருத்துக்களை சொல்லிசெல்லுங்கள் நண்பர்களே...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. செம ஃபீலிங்... ஆனா விக்கி உங்க மகனோட பெயர் தானே... உங்களோட கதையா இருந்தா சிறுவன் வெங்கட்டுன்னு தானே போட்டிருக்கணும்...

  ReplyDelete
 2. >>: எதோ தோன்றியது கிறுக்கி இருக்கிறேன்...உங்கள் கருத்துக்களை சொல்லிசெல்லுங்கள் நண்பர்களே...

  தன்னடக்கத்தம்பி!!!!!!!!!!!

  ReplyDelete
 3. @Philosophy Prabhakaran

  எங்கள் குடும்பத்தில் "வி" எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் பிரசித்தம்..அதுவும் என்னை அப்படி கூப்பிட்டே பழகி விட்டார்கள்...ஹிஹி!

  ReplyDelete
 4. மாம்ஸ்! சிறுவயதில் வறுமை கொடிது! ஆனால் அதுவே உமக்கு ஒரு தூண்டுதலாகி, உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது!

  ReplyDelete
 5. செம டச்சிங்பா... மனசு வலிக்குது...

  ReplyDelete
 6. மாம்ஸ்,கலங்க வைச்சுட்டிங்க.

  ReplyDelete
 7. இதயம் கனக்கிறது ...

  ReplyDelete
 8. மனசை டச் பண்ணீட்டீங்க மாம்ஸ்!

  ReplyDelete
 9. கருத்து சொல்லிட்டேன் மாம்ஸ்...

  ReplyDelete
 10. நல்லா எழுதி இருக்க மாப்ள

  ReplyDelete
 11. //இன்று பணம் இருக்கிறது பிரிந்து போன சொந்தங்கள் எங்கே...ஒவ்வொன்றும் ஒரு திசையில் உயிருடன் பிரிந்து வாழ்கிறதே...!//
  இதுதான் இன்றைய நிதர்சனம்.ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெறும்.

  ReplyDelete
 12. மாமா, மிகவும் கடினமான காலங்கள் அவை...ஆனால் அவைகளை எப்போதும் மனதில் இருத்துவது பல விதங்களில் நல்லது....

  ReplyDelete
 13. மனதை நெருடும் பதிவு............

  /////இன்று பணம் இருக்கிறது பிரிந்து போன சொந்தங்கள் எங்கே...ஒவ்வொன்றும் ஒரு திசையில் உயிருடன் பிரிந்து வாழ்கிறதே...!/////

  இது யாதார்தம்......

  ReplyDelete
 14. விக்கி சார், .........

  ReplyDelete
 15. அண்ணே செம டச்சிங் .

  ReplyDelete
 16. மனதை தொட்டுவிட்டது

  ReplyDelete
 17. ஏதோ தோன்றியது கிறுக்கி இருக்கிறேன்.///வணக்கம், இது சாதா கிறுக்கல் இல்லை.ஏக்கம்.

  ReplyDelete
 18. பலரது வாழ்க்கை யதார்த்தம்.

  ReplyDelete
 19. மாம்ஸ் டச் பண்ணிட்டீங்க

  உண்மை உண்மை

  ReplyDelete
 20. இப்பிடி மனசுல வலி உண்டாக்கிட்டியே மக்கா, சரிதான் மக்கா அந்தகாலம், மிகவும் வேதனையானது...

  ReplyDelete
 21. இப்போ பணம் இருந்தும் சேர்ந்து வாழமுடியவில்லையே நொந்து போகுது மனசு...

  ReplyDelete
 22. இன்னும் பலரின் தீபாவளி இப்படித்தான் இருக்கு... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 23. கொஞ்சம் வருத்தமா இருக்கு :-(

  ReplyDelete
 24. மிகு துயர் தரும் பகிர்வு .இன்று இதன் உணர்வை நாம் அதிகம் அனுபவிக்கின்றோம் காரணம் வெளி நாடுதான் .உறவுகள் ஒன்றுகூடி வாழும் அந்த வாழ்க்கை என்றுதான்
  மலரும் .....!!! மிக்க நன்றி சகோ உங்கள் பகிர்வுக்கு ......

  ReplyDelete
 25. இன்று பணம் இருக்கிறது பிரிந்து போன சொந்தங்கள் எங்கே...ஒவ்வொன்றும் ஒரு திசையில் உயிருடன் பிரிந்து வாழ்கிறதே...!

  வெளியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வை பார்த்திருக்கிறேன்.நல்ல பதிவு.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி