செளம்யாவின் காதல்!

வணக்கம் நண்பர்களே...


கதை(காதை)க்குள் செல்வோமா.....

சரியாக 18 வருடங்களுக்கு முன்...ஒரு பேருந்து நிறுத்தம்...

டேய் மாப்ள...அவளை பாருடா என்னமா இருக்கா....

அடேய் அது எங்க பக்கத்துக்கு வீட்டு பொண்ணு...

வசதியாப்போச்சி...

எது....

இல்லடா...பேச வசதியாப்போச்சின்னு சொல்லவந்தேன்...

அவ ஒரு மாதிரி...

ஏன் லூசா...

அடப்பாவி...அப்படியில்ல ரொம்ப கோவக்காரி...


அப்போ நீ சரியா வாங்கி இருக்கன்னு சொல்லு....நான் ரொம்ப நாளா இவள பாத்துட்டு தான் இருக்கேன்...ரெண்டு நாள் போய் பேச ட்ரை பண்ணேன்...ஆனா, முறைச்சி பாத்துட்டு போயிட்டா.....

ஏன்?

அதாண்டா தெரியல...அதுவும் லேடிஸ் ஸ்பெஷல் வண்டி வந்த உடன ஏறி போயிடறா...மத்த டொக்கு பிகருங்கள பாரு ஏதாவது அந்த வண்டில போகுதுங்களா...வண்டி காலியாப்போகுது...

இப்ப என்ன உன் பிரச்சன...அவ கிட்ட பேசணுமா...

ஆமாம்...முடியுமா...!

இன்னைக்கு அவ பிரெண்டு யாரும் வரல...அதோ பாரு பின்னாடியே PP வண்டி வரான்...அத புடிசோம்னா முன்னாடியே போயிடலாம்...SIET stopping ல இருந்து நடந்து போகும்போது பேசிடு...

அதான் சரி...

ஸ்டாப்பிங்கில் நின்று இருந்தார்கள்...விக்கியும், ராஜும்...அவள் வருவதை பார்த்து சிறிது பாதையை மறித்த படியே பேச முனைந்தான் ராஜூ...

ஹாய்...என் பேரு ராஜு

அதுக்கு என்ன இப்ப...

நான் உங்க கிட்ட தனியா பேசணும்...

இப்போ தனியாத்தானே நிக்க வச்சி பேசிட்டு இருக்க சொல்லு(என்னா மரியாதை!)..எனக்கு டைம் ஆச்சி நான் போகணும்...


I love you...

(பளார்!)

அடங்கொன்னியா...என்றா இப்படி அஞ்சி விரலும் பதிஞ்சி போச்சி...ஏய் நில்லு...

என்னடா உனக்கு ஏதாவது வேணுமா...

இந்தாம்மா...அவன் செய்ஞ்சது தப்பாவே(!) இருக்கலாம்..அதுக்காக அறைவியா அதுவும் இப்படி பொது இடத்துல வச்சி...

டேய்....வேணாம்டா நான்தான் நாகரிகம் இல்லாம நடந்துகிட்டேன்...

நீ பொண்ணே இல்லன்னு எனக்கு தெரியும் இந்த தீவட்டிக்கு தெரியாது பாரு...இதுக்கு தாண்டா முதல்லையே சொன்னேன்..

(அவள் எரித்து விடுவது போல் பார்த்துவிட்டு சென்று விட்டாள்)

கொஞ்ச நாள் கழித்து....அதே இடத்தில்...மீண்டும் அதே போல அறை வாங்கினான் நண்பன்...

ஏன்டா நீ திருந்தவே மாட்டியா...

இல்லடா நான் உண்மையா அவளை லவ் பண்றேன்...

எப்படியோ நாசமா போ...

காலேஜ் முடிந்து பல காலம் கழித்து அவனை சந்தித்தேன்...

எப்படி இருக்க...

அப்படியேத்தான் இருக்கேன்...

என்னடா இப்போ SPIC ல வேல செய்யற போல....

ஆமாம்...பரவாயில்ல நல்லா போகுது...

ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல...

புடிக்கல...


(மறுபடியும் அவனை பார்த்தது 2 வருடம் கழித்து...ஒரு நண்பியின் திருமணத்தில்!)

 என்னடா ராஜூ...எப்படி இருக்கே...

நல்லா இருக்கேன்டா...ஏன்டா அது செளம்யா தானே...

ஆமாம்...இரு மகாவ விட்டு கூப்பிட சொல்றேன்...

மகா அவ கிட்ட பேசணுமாம் இவனுக்கு....

டேய் உனக்கு விஷயம் தெரியாதா...அவளுக்கு marriage ஆகி ரெண்டு வருசத்துல டைவர்ஸ் ஆகிடுச்சி...இப்போ தனியாத்தான் இருக்க...கர்ப்பப்பை பிரச்னையால குழந்த பெரும் தகுதி இல்லைன்னு சொல்லி புருஷன் வெட்டி விட்டுட்டான்...

அடப்பாவமே...

(திரும்பி பார்த்தால் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான் நண்பன் ராஜூ!)


இப்பவும் சொல்றேன்...நீ என்னைய தப்பா நெனசிக்கிட்டாலும் பரவாயில்ல நான் உன்ன marriage பண்ணிக்க விரும்பறேன்...ப்ளீஸ் என் லவ்வ புரிஞ்சிக்க முயற்சி பண்ணு...

சாரி ராஜூ என்னை மன்னிச்சிடு எனக்கு விருப்பம் இல்ல...

(கொஞ்ச நேரத்தில் அவள் மகாவிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை நான் கேட்க்க நேர்ந்தது!)


இல்லடி அவனை எத்தனையோ முறை நான் அவமானப்படுத்தி இருக்கேன்...இன்னைக்கும் அவன் அதே லவ்வோட இருக்கான்...ஆனா என்னால அவனுக்கு என்கூட திருமணம்கர தண்டணைய கொடுக்க மனசு வரல...ப்ளீஸ் அவனை எப்படியாவது தேத்தி வேற பொண்ண பாத்து திருமணம் பண்ணி வைங்க....ப்ளீஸ்...

கொசுறு: இன்றும் தொடர்கிறது ராஜூவின் காதல்...கன்னித்தீவு போல...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. கதை போல் இல்லாமல் நிஜம் போல் இருக்கு
  சொல்லிச் செல்லும் விதம் அருமை
  த.ம 2

  ReplyDelete
 2. சூப்பர் மாம்ஸ்!

  விறுவிறுப்பா...உண்மைக்கதையா? விக்கி எல்லாம் இருக்காரு? :-)

  ReplyDelete
 3. கிரேட் லவ்.......... உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது......!

  ReplyDelete
 4. நண்பாஉண்மை காதலை தொகுத்த விதம் அருமை

  ReplyDelete
 5. ச்சே சூப்பர் காதல்ய்யா....அவளுக்கும் ராஜூ மீது காதல் இருந்துருக்கு இல்லையா...???

  ReplyDelete
 6. நல்ல உணர்வு மாம்ஸ்

  ReplyDelete
 7. இது இந்த நூற்றாண்டு காதல்தானா??? இப்படி ஆண்கள் எல்லாம் கதையில்மட்டுமே சாத்தியம்...கதை நல்லாயிருக்கு!!!!

  ReplyDelete
 8. ராஜூவின் காதல் நிஜமோ...?

  ReplyDelete
 9. இனிய இரவு வணக்கம் பாஸ்,,

  இனிய உள்ளம் கொண்ட ஒரு பெண்ணின் உணர்வுகளைத் தாங்கிய கதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  சௌம்யா தன்னைத் திருமணம் செய்து ராஜாவின் வாழ்கையில் துன்பம் நிகழக் கூடாது என்பதனை உணர்ந்து விலகிச் செல்லும் நிலையினை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

  ReplyDelete
 10. இதுதாண்டா காதல்!

  ReplyDelete
 11. கொசுறு: இன்றும் தொடர்கிறது ராஜூவின் காதல்...கன்னித்தீவு போல...!/

  உருப்படும் எண்ணம்,இல்லையா?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி