நான் காந்தியவாதி அல்ல(பின்ன!)

வணக்கம் நண்பர்களே....நேற்று ஒரு பெரிய விஷயத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் திரு. தாக்கரே(தாக்குவாரோ!)....அக்தாவது தான் ஒரு காந்தியவாதி அல்ல...ஜாக்கிரதை!...

அக்தாவது...திரு. அண்ணா ஹசாரேக்கு பல தொழில் முதலைகள் பின்புலமாக உள்ளனர் எனவும்(!)..அந்த கருப்பு பணத்தின் மீது நின்று ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது...இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பது நடக்காது...ஏனெனில், இங்கு இருப்பவை பெரிய திமிங்கலங்கள்(!) ஹசாரேவின் வலை கிழிந்து விடும் என்று கூறி இருக்கிறார்...


இதில் ஹசாரே பற்றிய பல விமர்சனங்கள் இருந்தாலும்...இதை தாண்டி திரு. தாக்கரே அவர்கள் கூறியது தான் ஹைடெக்....அது, எங்களை பகைத்து கொள்வது நல்லதல்ல....நான் காந்தியவாதி அல்ல என்று கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது...

இந்த விஷயத்தை கொஞ்சம் உள் சென்று பார்த்தால் அய்யா எவ்வளவு நல்லவர் என்பது புலனாகும்...பல வருடங்களுக்கு முன் மும்பையில் தமிழர்களுக்கெதிரான பல வன்முறைகளுக்கு இவர் தான் மூலக்கரு...கொஞ்ச நாட்களுக்கு முன்னே கூட மராட்டியர்களை தவிர இங்கு யாரும் தேர்வேழுதக்கூடாது என்று பல மாநிலத்தவர்கள விரட்டி அடித்த புண்ணியவான்...


இன்றைய காலகட்டத்தில் காந்திய வாதியாக இருப்பது சாத்தியக்குறைவு(!) என்ற போதிலும்...நான் இப்படித்தான்...என்னால் என்ன வேணா செய்ய முடியும் என்று பொது மேடைகளில் கர்ஜிக்க இவர்களால் எப்படி முடிகிறது...மதம் இவர்கள் வெறி பிடிக்க வைத்திருக்கிறது என்பதே கசப்பான உண்மை(!)....அதிலும் பல அப்பாவிகளின் வாழ்கையை இந்த மத அமைப்புகளே நசுக்கி வருவது கண்டனத்துக்குரியது...

இப்படி தன்னை கூறிக்கொள்ளும் ஒருவரை என்னவென்று சொல்வது...

கொசுறு: மதம் உருவானது மனிதர்களை அழிக்கவா...!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. வேடம் கலைந்தது என்பதை
  நன்கு வெளிப்படுத்தி விட்டீர்
  நன்றி
  த.ம இணைக்க வில்லையா...

  ஓட்டளிக்க இயலவில்லை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 2. இவனுக பேச்சையெல்லாம் இப்போது மும்பை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது என்பதே உண்மை...!!!

  ReplyDelete
 3. தாக்கரே விஷம் பிடுங்கப்பட்ட பாம்பு...

  ReplyDelete
 4. தாக்கரே ,வட்டாள் நாகராஜ் ஆகியோர் மதத்திற்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட ரவுடிகள்!

  ReplyDelete
 5. அது காற்று போன பலூன் நண்பரே...

  ReplyDelete
 6. ஹிஹி! இதே பால் தாக்கரே, அண்ணா உண்ணாவிரதம் இருந்தபோது நிறுத்துங்கன்னு சொன்னதோட இல்லாம, மவனை தில்லிக்கே அனுப்புனாரே!

  இதே அண்ணா ஹஜாரே பால் தாக்கரே ஒருத்தராலே தான் ஊழலை ஒழிக்க முடியுமுன்னு 1996-லே பேட்டியே கொடுத்திருக்காரே! அரசியல்லே இதெல்லாம் சாதாரணம்! :-)))

  ReplyDelete
 7. மதம் உருவானது மனிதர்களை அழிக்கவா...!//


  இல்லை மாம்ஸ்

  ReplyDelete
 8. நல்ல தகவல்

  நியாயமான கேள்வி

  ReplyDelete
 9. ஸலாம் சகோ.விக்கிமாப்ஸ்,

  பதிவு அருமை சகோ.விக்கி.

  இதில் ஒரு பாம்பே பாம்பின் காலை இன்னொரு பாம்பே பாம்பறிகிறது..!

  //மதம் உருவானது மனிதர்களை அழிக்கவா...!//

  டிஸ்கி:-
  இல்லை சகோ..! மனிதர்களை அழிவிலிருந்து காக்க..! கெட்டவர்கள் கையில் கத்தி இருந்தால் அதை நல்லவர்கள் மேல்தான் உபயோகிப்பார்கள். கெட்டவர்களும் நல்லவர்களும் எம்மதத்திலும் இருப்பர்.

  ReplyDelete
 10. என்னை கட்டிகிறன்னு சொல்லி கையவிட்ட பவுடர் http://ideamani615.blogspot.com/2011/10/blog-post_599.html

  ஏன் அத்தான் நான் உண்மையை மத்தவங்க முன்னாடி சொல்ல விடறீங்க இல்லே? பின்னே என்னங்க ஐடியா மணி என்கிற நிரூபன் கட்டிக்கிறேன்னு வாக்கு தந்து ஏமாத்திட்டாரே. பன்னிக்குட்டி என்கிர நிருபனுக்கும் இது தெரியுமே. அதுதான் வையரேன். நிங்க எதுக்கு எடையில வர்றீங்க தெரியாதத எதுக்குங்க தெரிஞ்ச கோசரம் ஐடியா மண்னி சொல்றாரு? தமிழ்மனத்து முன்ண்ட்டி வலைப்பூ தெரட்டி இருந்திச்சி. தமிழ்மனத்துக்கு கொஞ்சம் டிலேயா தேன்கூடு வந்திச்சி. தமிழ்வெலி பிரகு. சங்கமம்கூட இருந்துச்சுங்க. தமிழிஷ் எப்பைய்யா வந்திச்சி? தமிழின் முதல் திரட்டி என்கிற சின்னப்பையனுக்கு கைய தட்டும் கும்மிவாலாக்கலே எங்கையா ஒங்க மூளை?

  அத்தான் இதயும் இங்கே அனுமதிக்கல்லனா, அத்தனை பிரீ காமெண்ட் பாக்ஸுகளிலயும் இத போட்டுட்டு நா தற்கொலை பண்ணிடுவேன். ப்ளீஸ் மத்தவங்க என் சோககதைய கேட்க விட்ருங்க

  ReplyDelete
 11. மக்களின் அறியாமை, வேறு என்ன சொல்ல... அறியாமை நீங்காமல் பார்த்து கொள்வது தான் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து செய்வது... பாப்போம் எத்தினி நாளைக்கு நு

  ReplyDelete
 12. மக்களின் அறியாமை, மாம்ஸ்

  ReplyDelete
 13. உங்க கொசுறு யோசிக்க வைக்குது மாம்ஸ்

  ReplyDelete
 14. கடைசீல கொசுறு, ஆமா நானும் கேட்கணும்னு நினைத்தேன்.

  ReplyDelete
 15. வித்யாசமா வெளாசிட்டீங்க!

  ReplyDelete
 16. //மதம் உருவானது மனிதர்களை அழிக்கவா...!//

  மதம் உருவானது மனிதகுலம் செழிக்கவே. மதவெறியர்களால்தான் பிரச்சனையே.

  ReplyDelete
 17. இவருதான் கடவுள் மாதிரின்னு யாரோ சொன்னாங்களாம்...யாருன்னு கேட்டல் சின்ன கொலந்தையும் சொல்லும்

  ReplyDelete
 18. தம்பி, நான் நாஞ்சில் மனோ நண்பன் என் பெயர் அணில்.......

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி