Foreign சுத்தம் பேசுவது சரியா!

வணக்கம் நண்பர்களே...


ஒரு காலத்தில் வெளி நாடு போய் வேலை செய்வது என்பது கனவு(!)...பின்னே இந்தியர்களின் அதீத உழைப்பு பல நாடுகளுக்கு தேவைப்பட்டது!...ஏனெனில், எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஆளுங்க இல்லையா(!)...சரி விஷயம் அதுவல்ல...வெளி நாடு போய் வேலை செய்து விட்டு பல வருடங்கள் கழித்து திரும்பி வரும் மக்களின் பேச்சுக்கள்....எப்படி இருக்கும்...

எப்படித்தான் இந்த pollution ல இருக்கீங்களோ....


I hate this place...

polluted city...

clean இல்லாத ஊர்...

இதெல்லாம் கேட்டு இருப்பீங்களே...இதுக்கு பின்னாடி இருக்கும் நிஜங்கள் என்ன...

நானும் சொல்லி இருக்கிறேன்...இவரு பெரிய லாடு லபக்கு வெளிநாட்டுல இருந்து வாராராம் கொய்யால...


உண்மையில் பல நாடுகளின் சுற்றுப்புற தூய்மை எனும் விஷயம் மக்களை ஆட்டுவிக்கிறது...உதாரணத்துக்கு வியட்நாம்...இது பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக இருந்தாலும்(!), சுற்றுப்புற தூய்மை எனும் விஷயத்தில அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது...சில இடங்களில் மனம் அருவருக்க வைத்தாலும்(!)...மக்கள் சுத்தத்தை பேணுவதில் ரொம்ப அக்கறை காட்டுகின்றனர்...


தினமும் அதி காலை 5.30 மணிக்கு பெரிய சாலைகள் நீர் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன...ரோட்டில் குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது...இரண்டு சக்கர ஓட்டுனர்கள் முகமூடி(மாஸ்க்!) அணியாமல் பெரும்பாலும் வண்டி ஓட்டுவதில்லை...வெயில் காலங்களில்(40*) மெல்லிய காட்டன் உடைகளை உடல் முழுதும் அணித்து கொள்வதால் வெப்பத்தால் நிறம் மாறுவதை தடுத்து விடுகிறார்கள்......


இதை போன்ற விஷயங்களை பார்த்து விட்டு சென்னை சென்ற என் மகன் அனைவரிடமும் இப்படி ரோட்டில் குப்பைகளை கொட்டுகிறீர்களே உங்களை போலீஸ் பிடிப்பதில்லையா என்று கேட்டு வைத்தானாம்...


விதி முறைகள் மக்களை ஆரோக்கியமாக வைப்பதற்கே...அடக்கி வைப்பதற்கு அல்ல என்பது நம் நாட்டில் எப்போது நடக்கும்...


என்று நமது தேசமும் இப்படி குப்பையில்லா சுற்றுப்புற சுகாதாரத்துடன் விளங்கும் என்ற ஏக்கத்துடன்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. பதிவிற்கான கமென்ட் மாலையில்...

  ReplyDelete
 2. ஒவ்வொருவத்தரும் மனசு வைக்கணும்...

  ReplyDelete
 3. //என்று நமது தேசமும் இப்படி குப்பையில்லா சுற்றுப்புற சுகாதாரத்துடன் விளங்கும் என்ற ஏக்கத்துடன்...//

  நானும்.

  ReplyDelete
 4. ஹூஊஊஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வதுதான் சரி .......


  விக்கி அண்ணே ...

  ReplyDelete
 6. //விதி முறைகள் மக்களை ஆரோக்கியமாக வைப்பதற்கே...அடக்கி வைப்பதற்கு அல்ல என்பது நம் நாட்டில் எப்போது நடக்கும்..//


  நடக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்

  நன்றி
  சம்பத்குமார்

  ReplyDelete
 7. அடிப்படை கல்வியறிவில் சுற்றுப்புற தூய்மை முக்கிய பாடமாக வைக்கப்பட வேண்டும்.
  சுற்றுப்புறச்சூழல் தூய்மையாக அமைய அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எங்கும் நீக்கமற அமைக்கப்படவேண்டும்.
  அதன் பின் சுற்றுப்புற தூய்மை பாதுகாப்புக்காக சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்.

  சரியான கழிப்பிடம் வசதி செய்து கொடுக்காமல் ரோட்டில் ஒண்ணுக்கு போகும் மனிதனை தண்டிப்பது பாவம்.

  ReplyDelete
 8. நல்ல பதிவு பாஸ் ஆனால் உங்கள் ஏக்கம் நிறைவேறுமா என்பது டவுட்டு

  ReplyDelete
 9. கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற இடத்தில் ஒரு கோயில் உள்ளது.
  துங்கா நதி ஒடுகிறது.
  ஆற்றங்கரையை ஒட்டியும்,கோயிலை சுற்றியும் திரும்பிய பக்கமெல்லாம் கழிப்பிட வசதி செய்துள்ளார்கள்.
  கழிப்பிடத்தில் இலை போட்டு சாப்பிடும் தூய்மை உள்ளது.
  திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுப்புற தூய்மையை கெடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையுடன் போர்டுகள் உள்ளது.
  தூய்மைக்கு மறு பெயராக தர்மஸ்தலா விளங்குகிறது.
  இக்கோயில் மன்னர் வழி பரம்பரையால் நிர்வகிக்கப்படுகிறது.
  கோயிலில் கூட்டமும் திருப்பதி போல் நிரம்பி வழிகிறது.

  ReplyDelete
 10. உண்மையில் வெளிநாட்டில் இருப்பவர்கள், சென்னை போன்ற நகரங்களின் அசுத்தம் குறித்துப் பேசுவது சரியென்றே படுகிறது. குறைந்தபட்சம், சுகாதாரமான சூழலாவது வரட்டுமே என்ற எதிர்பார்ப்பு அல்லவா? யார் எவ்வளவு சொன்னாலும் உறைக்காமல் இருக்கிறதே? :-(

  ReplyDelete
 11. தக்காளி சார்(சாஸ் அல்ல)!

  என்னோட கமெண்டு டிஸ்பிளே ஆவுது...

  இதுக்கு முந்தைய கமெண்டு எல்லாம் ஸ்பேம்ல இருக்கும். அன் ஸ்பேம் பண்ணிடுங்கோ!

  ReplyDelete
 12. இதற்கு ஒவ்வொரு குடிமகனும் மனது வைத்து ஒற்றுமையுடன் செயற்பட்டால்த்தான் மார்க்கம் உண்டு

  ReplyDelete
 13. சலாம் சகோ.விக்கி,
  //விதி முறைகள் மக்களை ஆரோக்கியமாக வைப்பதற்கே...அடக்கி வைப்பதற்கு அல்ல என்பது நம் நாட்டில் எப்போது நடக்கும்...//--மிகவும் நல்ல வரிகள்... நன்றி சகோ.

  அதுசரி,
  விதிமுறைகள் எங்கே..? விதிமுறைகள் எங்கே..? விதிமுறைகள் எங்கே..?

  ReplyDelete
 14. சுத்தமான வியட்நாமுக்கு ஒரு சல்யூட் !

  ReplyDelete
 15. பைத்தியக்காரன் என்னும் பட்டம் வாங்கி வாங்கி பழகி போச்சு, என்னத்த சொல்ல?

  ReplyDelete
 16. தங்கள் ஆதங்கம் புரிகிறது மாம்ஸ்

  ReplyDelete
 17. மற்ற மாநிலங்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள், தமிழக அரசு நல்ல விஷயங்களை எப்பவும் தாமதமாகதான செய்யும்... அதுதானே அதன் பெருமை... மாம்ஸ்...

  (மக்களுக்கு இடையூறாக உள்ளதை மட்டும் போர்கால அடிப்படையில் முடிக்க நினைக்கும்)

  ReplyDelete
 18. நிறைய விஷயங்களில் ஏக்கத்துடன் வாழப் பழகிவிட்டதைப்போல
  இந்த விஷயத்திலும் வாழப் பழகி விட்டோம்
  சிந்திக்கச் செய்யும் பதிவு
  த.ம 13

  ReplyDelete
 19. சுத்தம் சோறு போதும்னு படிப்பதோடு சரி, நம்மாளுங்க திருந்த மாட்டாங்க...!!!

  ReplyDelete
 20. உன் பையன் சரியாதாம்யா கேட்டுருக்கான்!!!

  ReplyDelete
 21. நம்ம ஊரில் அரசாங்க அலுவலகங்களிலேயே சுத்தம் கிலோ என்னா விலைன்னு கேக்குறாங்க...!!!

  ReplyDelete
 22. ஓட்டைப் பற்றிக் கவலைப்படாத கண்டிப்பான தலைமை வந்தால் மட்டுமே இது சாத்தியம்.

  ReplyDelete
 23. மாப்ள நியாயமான ஆதங்கம்தான்.

  ReplyDelete
 24. சுத்தமான நகரம்.. சாத்தியமா?

  ReplyDelete
 25. //நம் நாட்டில் எப்போது நடக்கும்//

  சுத்தம்..

  ReplyDelete
 26. ஏக்கமாதான் இருக்கு..

  ReplyDelete
 27. 1 நாள் நான் ஆன் லைன் வர்லை, தக்காளி 3 பதிவு போட்டுட்டானே..!!

  ReplyDelete
 28. படித்தேன் பிடித்து இருந்தது.

  ReplyDelete
 29. உங்களுக்கு ஏன் இந்த நப்பாசை??? நடக்கிற காரியமா நம்ம நாடு சுத்தம் ஆகுறது???

  ReplyDelete
 30. மாம்ஸ்... ஹா ஹா வடிவேல் காணொளியுடன் பதிவை சொன்னமைக்கு நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 31. நானும் இந்தியா போகும் போது இப்படித்தான் கொஞ்சம் சீன் போடுவான் ஹி ஹி....

  ReplyDelete
 32. எல்லோரும் மனசு வச்சா நம்ம நாட்லயும் நடக்கும்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி