விமர்சனங்களை தாங்கும் ரசிகர்களே...!(HB!)

வணக்கம் நண்பர்களே...


சில விஷயங்களை என்னுடைய பார்வையில் எடுத்துரைப்பதற்கு முன் நானும் இப்படி இருந்திருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் எந்த வித தயக்கமும் இல்லை என்பதை இங்கு முதலில் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்(கொல்கிறேன் புரிஞ்சிதா ஹிஹி!)

விமர்சனங்கள்...


எல்லோருமே பிறந்து, தவழ்ந்து வளர்ந்தவர்களே....இதில் யாரும் நேரடியாக பெரியவராக பிறந்ததில்லை...அதை போலவே இதுவும்....கொஞ்ச காலம் முன் வரை சில பத்திரிக்கைகளில் திரைப்படம் வரும் போது விமர்சனம் வரும்...அது காசு கொடுத்து எழுதப்பட்டதா என்பதை யாரும் அப்போது கவனித்திருக்க மாட்டார்கள்..இணையம் எனும் கடல் பெருக பெருக இலவசமாக(காசு கொடுத்து பார்க்கும் தியாகிகளினால்!) இப்போதைய கால கட்டத்தில் பட விமர்சனங்கள் வந்து விடுகின்றன...


இவை ஒரு பெயர் பெற்ற நடிகரின் படத்துக்கு என்று வரும் போது அதனை முதலில் கவனிப்பது அந்த நடிகரின்(!) ரசிகர்களே...அன்று முதல் இன்று வரை இது தொடர்கிறது...இதில் விவகாரம் என்னவென்றால்...சம்பந்தப்பட்ட நடிகர் காசு வாங்கி கொண்டு படம் முடிந்த உடன் அதை ஒரு வேலை முடிந்தது என்று எண்ணி ஹாயாக சென்று விடுவார்...அந்த படத்துக்கு தன் உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொடுக்கும் ரசிகன் எனும் அப்பாவி வெள்ளித்திரையை பார்த்து தனக்கென்று ஒரு முகமூடிதிரையை அணிந்து கொள்கிறான்...

அன்று அடுத்தவர் காசில்(பெற்றவர்கள்!) இன்று சொந்த காசில்!...விஷயம் படம் பார்ப்பதல்ல...அதனை வைத்து சண்டையிடுவதை பற்றியதே...

கொஞ்ச காலத்துக்கு முன் சக்தி மான் எனும் தொடரினால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்....இது பல பெரிய நடிகர்களின் படத்திலும் தொடர்கிறது...இந்த கால கட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரு சில நடிகர்களை தங்கள் வீட்டு(!) பிள்ளையாகவே நினைக்கின்றனர்(வீட்ல இருக்க பசங்களும் இப்படித்தானே!)...அப்படி இருக்கும் போது நடக்காத விஷயங்களை தங்கள் படங்கள் மூலம் செய்து காட்டி அதனை காணும் குழந்தைகளை வெறியூட்டும் விதமாக செய்வது என்ன வழி வியாபாரமோ...!


ஒரு நடிகன் அழகாக நடனமாடினால்(!)...நம் வீட்டு குழந்தைகளும் அதை போலவே செய்து காட்டுகிறார்கள்...அதே அவன் பறந்து போய் ட்ரைன் பிடிப்பது போல செய்தால்...நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது...இதை ஒரு ரசிகனாக பார்த்தால் சரியாக புரியாது...ஒரு தந்தையாக பார்க்கும் போது தான் புரியும்...ஏனெனில்,

ஒரு குழந்தையை சரியான பாதைக்கு அழைத்து போக வேண்டுமானால்...அதற்க்கு தன்னை சரியானவனாக முதலில் உருவாக்கி  கொள்ளும் தந்தையினால் மட்டுமே முடியும்...


இப்போது மீண்டும் இந்த விமர்சன பிரச்சனைக்கு வருகிறேன்...மற்றவர்கள் எப்படியோ...எனக்கு எந்த தமிழ் படம் வெளி வந்தாலும் ஒரு நாளில் இணையத்தில் பார்க்க முடிகிறது...இலவசமாக பார்த்த ஒரு படத்தை பற்றி விமர்சிக்க எனக்கு இது வரை தோன்ற வில்லை...இதன் காரணமாகவே நான் திரைப்பட விமர்சனங்களை எழுதுவதில்லை(எழுதிட்டாலும்!)..

அன்று...பலருக்கு அருமையான தொடர் வசன மழை பொழிந்த ராஜேந்தர் இன்று காமடிகளின் தலைவராக விளங்குகிறார்(!)....இதற்க்கு காரணம் மிகப்பெரிய அறிவாளியின்(!) மமதை என்றே கொள்ள வேண்டும்...

இதே வழி இப்போதைய பல நடிகர்களுக்கு பொருந்தும்....இன்று அவர்களுக்கு காசுக்கு குறைச்சலில்லை....தன் ரசிக வட்டத்துக்காக படம் எடுக்காமல்...கொஞ்சம் நிதர்சனத்துக்கும் இறங்கி வந்தால் நாட்டுக்கும் நல்லது துட்டு கொடுத்து பார்க்கும் மக்களுக்கும் நல்லது...


உழைக்கிறோம் பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்லும் நடிகர்களுக்கு சொல்லிகொள்வது என்ன வேனில்...எங்கள் மக்கள் உங்களுக்கு கொடுக்கும் ஆதரவுக்கு கிடைக்கும் பணமே அது...தங்கள் உழைப்புக்கு கொஞ்சம் தான் கிடைக்கும் எனும் உண்மையை உணர்த்து கொள்ள வேண்டுகிறேன்...

ரசிக கண்மணிகளுக்கு சொல்லிக்கொள்ள ஏதுமில்லை..ஒரு சிறிய நிகழ்ச்சியை தவிர...

ஆசிரியர்: தம்பி சிகரட் பழக்கம் வேணாம்பா நிறுத்திடு...

மாணவன்: நீங்க புடிச்சிட்டு இருந்தீங்களே சார்....

ஆசிரியர்: கொஞ்ச நாளைக்கு முன்னாடி விட்டுட்டேன்..எனக்கு ஏற்பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்னு தான் சொல்றேன்..

மாணவன்: ஹிஹி...சார் அத நான் அனுபவிச்சி தெரிஞ்சிக்கிறேன்...நீங்க உங்க வேலைய பாருங்க...

ஆசி: !!!!!!!!!!!

கொசுறு: வீட்டில் இருக்கும் வாண்டின் தொல்லயினாலும், ரசிகமணிகளின் சண்டையை இணையத்தில் கண்டதாலும் எழுதப்பட்டது...(HB - Heart Beat!)
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

31 comments :

 1. Uli tharum valiyai thanginaldhan adhu sirpamaga marum. Ilaiyenil adhu verum kalagave irukum. Adhu poldhan vimarsanathai rasipavane sirandha nadikanaga mudiyum. Idhu satharana manitharukum porundhum.

  ReplyDelete
 2. சினிமாக்காரர்களை சொல்லி தப்பில்லை! குறைந்த காலத்தில் பெட்டியை நிரப்பியாக வேண்டும்! செலிபிரிட்டிகளை கொண்டாடுவோர் தான் திருந்த வேண்டும்!

  ReplyDelete
 3. மாப்ள படம் எல்லாம் மிக அருமை. அப்புறம் அந்த நடிகர் யாருன்னு எனக்கு தெரியும். சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
 4. சண்டையா?
  எங்க மாம்ஸ்?
  சண்டை போட்டு வெகுநாள் ஆச்சு...

  லிங்க் பிளீஸ்...

  ReplyDelete
 5. @ராஜி

  சகோ இங்க நடிகர்கள் ஏனோ அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை(துட்டு போயிருமே!)...அவர்தம் ரசிக பட்டாளமே அப்படி எடுத்துக்கொள்கிறது(கொல்கிறது!)..வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 6. @ரமேஷ் வெங்கடபதி

  என்ன மாப்ள இப்படி சொல்லி புட்டீங்க...நாளைய சமுதாயத்த வழி நடத்தப்போறவங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேணாமா...நம்ம பசங்க எப்போ நம்ம பேச்சை கேட்டு இருக்காங்க..நாம கேட்டோமா ஹிஹி!

  ReplyDelete
 7. @பாலா

  மாப்ள அவர் ஒருத்தரு மட்டுமில்ல....இப்போ இருக்க சுண்டு சுல்லால்லாம் இதே போல கிளம்பிடுதுங்க ஹிஹி!

  ReplyDelete
 8. @வெளங்காதவன்

  மாப்ள ஏன்யா ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!

  ReplyDelete
 9. நல்ல கேள்விகள்தான் மாப்ள, ஆனா அந்த சினிமா காரனகளுக்கு புரியனுமே?

  ReplyDelete
 10. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  புரிஞ்சிட்டாலும் விளங்கிடும் ஹிஹி!

  ReplyDelete
 11. சண்டையா? எங்க எங்க? :-)
  நல்ல பதிவு மாம்ஸ்!

  ReplyDelete
 12. ///எனக்கு எந்த தமிழ் படம் வெளி வந்தாலும் ஒரு நாளில் இணையத்தில் பார்க்க முடிகிறது...///

  அட ...போங்க மாம்ஸ் ரிலிஸ்க்கு முன்னாடியே நிறைய படம் வருது ஹிஹி ...

  ReplyDelete
 13. //@வெளங்காதவன்

  மாப்ள ஏன்யா ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!////

  இல்ல மாம்சு.... ரெண்டு மூணு நாளாவே எனக்குக் கொஞ்சம் கை அரிக்குது... அதேன்...

  ReplyDelete
 14. Een mams ....intha kantravikku
  pesaama padame parkkamal
  irunthal enna...????
  :D

  ReplyDelete
 15. @ vilangathavan....
  Nalla karuvattu kuzhmpu
  sappidavum......

  ReplyDelete
 16. நல்லா சொன்னீங்க போங்க

  ReplyDelete
 17. //
  கொசுறு: வீட்டில் இருக்கும் வாண்டின் தொல்லயினாலும், ரசிகமணிகளின் சண்டையை இணையத்தில் கண்டதாலும் எழுதப்பட்டது...


  //
  சரிங்க நம்பிடோம்

  ReplyDelete
 18. தல அந்த போட்டோல இருப்பது நீங்களா ?

  ReplyDelete
 19. //Blogger NAAI-NAKKS said...

  @ vilangathavan....
  Nalla karuvattu kuzhmpu
  sappidavum.....////

  ஐயய்யோ.... முடியலியே...

  எங்காவது சண்டை போடணும் போல இருக்குதே....

  ReplyDelete
 20. //கொஞ்சம் நிதர்சனத்துக்கும் இறங்கி வந்தால் நாட்டுக்கும் நல்லது துட்டு கொடுத்து பார்க்கும் மக்களுக்கும் நல்லது...//
  a distant dream!

  ReplyDelete
 21. தன் ரசிக வட்டத்துக்காக படம் எடுக்காமல்...கொஞ்சம் நிதர்சனத்துக்கும் இறங்கி வந்தால் நாட்டுக்கும் நல்லது துட்டு கொடுத்து பார்க்கும் மக்களுக்கும் நல்லது...


  படங்கள் அருமை..

  ReplyDelete
 22. அப்போ சண்டை போடுறதுக்குதான் சினிமா விமர்சனம் எழுதுறாங்களோ சொல்லவே இல்லை...???

  ReplyDelete
 23. உன் உண்மையான அக்கறை புருயுதுய்யா...!!!

  ReplyDelete
 24. பய புள்ள நல்ல பதிவுதான் போட்டிருக்கான்

  ReplyDelete
 25. கெளம்பிட்டான்யா தக்காளி, இன்னிக்கு எத்தன தல உருள போவுதோ தெரியலியே.....?

  ReplyDelete
 26. அடிச்ச கைப்புள்ளைக்கே இப்டினா!!! அடிவாங்கினவன் உயிரோடு இருக்கானோ?? என்னவோ??

  ReplyDelete
 27. படங்கள் சூப்பர்... மாம்ஸ்.....

  ReplyDelete
 28. மாம்ஸு,செம.
  கலக்கிட்டிங்க போங்க!
  கடைசில சொன்னது செம பன்ச்!

  ReplyDelete
 29. சூப்பர் தலைவரே...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி