வியட்நாம் பொழுதுகள் (VN) - 11

வணக்கம் நண்பர்களே........



வியத்னாமிய அம்மா பத்தி தெரிஞ்சிக்க உங்களை அழைக்கிறேன்.....அம்மான்னா சும்மா இல்லைங்கறது எந்த அளவுக்கு உண்மைன்னு இங்க இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வந்தா தெரியும்.......

சைகோன்(ஹோசிமின் நகரம்!) வியத்நாமின் வர்த்தக நகரம். இதன் மைய்யப்பகுதியில் டிஸ்ட்ரிக் 1பகுதியில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில்...19 வது நூற்றாண்டை சேர்ந்தது இந்த கோயில்...இந்தக்கோயிலை நிர்மானிச்சவங்க தமிழ் நாட்டை சேர்ந்த நாட்டு கோட்டை செட்டியார் சமூகத்தவர்கள்...அந்தக்காலத்தில் பிரெஞ்சு காலனியாக இருந்த பொழுது பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஊர்களில் இருந்து வியாபாரத்திற்க்காக வந்தவர்கள்...வழிபாட்டு தலம் வேண்டி கட்டிய கோயில்களில் ஒன்று இது...

வியட்நாமிய போர் முடிவுக்கு வந்தது 1975 ல்...அப்போது ஒரு பக்கம் தொழிட்சாலைக்காகவும் மறுபக்கம் கோயிலாகவும் விட்டு வைக்கப்பட்டது(!)..தமிழ் கலாசாரக்கோயில்.....இந்தக்கோயிலின் இப்போதைய நடத்துனர் ஒரு பெண்.......அதாவது இந்த கோயிலின் பாதுகாப்பாளராக இருந்த தமிழரின் மனைவி இந்த அம்மா(!).....

மாலை பூஜை ஆரம்பிக்கும்.......இங்கு வரும் அதிகமான கூட்டத்தினை கட்டுப்படுத்த பலர் பணியில் உள்ளார்கள்....அதில் ஒரு பெண்ணும் உண்டு....அந்த பெண்ணின் கணவர் தமிழரின் வாரிசு.....அந்தப்பெண்ணும் தமிழ் பேசுவார்களாம்........


அம்மா - ரவுண்டு முகம்......ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு பொட்டு  வச்சிக்கிட்டு....நம்ம ஊரு காளியாத்தா கணக்கா நடந்து வர்றத பாத்தாலே நமக்கு நம்மூரு கோயில் ஞாபகம் வந்திடும்......அந்த அளவுக்கு அலப்பரயோட வருவாங்க.....யாரு கிட்டயும் பேச மாட்டாங்க.....பூஜை செய்யுறது மட்டும் அவங்க வேலை(!).....அப்புறம் கெளம்பிடுவாங்க...........

இந்தம்மாவுக்கு 4 பசங்க........ஒவ்வொரு மாசம் ஒருதருக்குன்னு அந்தக்கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் தட்டுல விழற பணம் சுற்றல்ல வரும்(செம துட்டு வரும்!)...அதனால ஒரு மகன் ஒரு மாசத்துக்கு அந்த வேலைகள பாத்துப்பாராம்....இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)....அதனால அம்மா இந்த மாதிரி முறை வச்சி வர்ற துட்ட எடுத்துக்க சொல்லி சமாதானப்படுத்தி இருக்காங்களாம்..........


இங்க வர்ற வியட்நாமியர்கள் ரொம்ப பக்தியோட அம்மனை வணங்குறாங்க......கடவுள் நம்பிக்கையால் பல ஆயிரம் பணம் செலுத்திட்டு போறாங்க.....அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)

கொசுறு: கோயில் எப்படி எல்லாம் உதவுது இந்த (அம்மாவுடைய!) மக்களுக்கு! அம்மாவோட போட்டோ அனுமதியில்லயாம்பா(அங்கேயுமா!)..

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

2 comments :

  1. விக்கி தக்காளியிடம் 2 மாற்றங்கள்

    1. பதிவை படிக்கிறான்

    2. புரியற மதிரி பதிவு போடறான்

    தம்பி, இதெல்லாம் நல்லதுக்கில்ல.. ஹி ஹி

    ReplyDelete
  2. ..இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)....

    ரொம்பதான் கொலை வெறி!!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி