இவனுங்களை திருத்தவே முடியாதா!(VN)

வணக்கம் நண்பர்களே...
நம்ம ஊர்ல அம்மனுக்கு கூழ் ஊத்துறோம், ஆயாவுக்கு(ஆயா மன்னிக்கவும்!) நேர்த்தி கடன் செய்யிறோம்னு ஒரு பிரிண்ட் அடிச்ச நன்கொடை சீட்ட எடுத்துகிட்டு வருவானுங்க பல அள்ளக்கைங்க....இதுவும் அப்படிப்பட்டவர்களின் ஒரு செயலின் பதிவே....

வெளி நாடு வாழ் இந்தியர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி...இந்த தீபாவளிப்பண்டிகையின் சிறப்பு என்னவெனில் மதம் இனம் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் இந்தியர்கள் என்ற சந்தோஷத்துடன் கொண்டாடும் பண்டிகை இது.....பல நாடுகளில் இதனை ஏற்பாடு செய்வது அந்த அந்த நாடுகளில் இருக்கும் இந்திய அமைப்புகளே...


இங்கு இதே போல ஒரு அமைப்பு இயங்கி வருகிறது....அது ஹோசிமிங் நகரத்தில் தனியாகவும்(!)...இங்கு ஹனோயில் தனியாகவும் இயங்கி வருகிறது...இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் இங்கு வேலை நிமித்தமாக வாழும் இந்தியர்களே...அதுவும் பெரிய கம்பெனிகளில் அதிகாரிகளாக வேலையில் இருப்பவர்கள்....ஹோசிமிங் நகரத்து இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள் தனியாக நிகழ்சிகளை நடத்திக்கொள்கிறார்கள்(!)...

இங்கிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு...அமைப்பில் தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக பத்து இருக்கும்(உறுப்பினர்கள் 100 இருக்கும் அது தனிக்கதை!) இவர்களே தலைவர்கள்(!), இவர்களே செயலர்கள் என பதவிகளை உருவாக்கி கொண்டு உள்ளனர்(!)...இதில் செய்தி என்ன வென்றால்...இந்த அமைப்பு அதிகமாக தன் உணர்வை காட்ட நினைப்பது இந்த தீபாவளி விழா மூலமே..

நானும் இதில் ஒரு உறுப்பினர் என்றாலும்(!)...எனக்கு வாய் கொழுப்பு(!) அதிகம் என்பதால் நான் அதிகமாக கூட்டத்தில் பங்கெடுப்பதில்லை(ஹிஹி!)...ஒரு வாரத்துக்கு முன் மெயிலா அனுப்பி கொன்னாங்க...வாங்க வந்து தீபாவளி நடத்துறத பற்றிய உங்க கருத்துக்கள் தேவைன்னு கூப்பிட்டாங்கய்யா....சரி நானும் நம்பி போனேன்...

உள்ளே நுழையும் போதே ஒரு நண்பர்(!) வாங்க விக்கி எவ்ளோ தரப்போறீங்க ஒரு $1000(ரூபாய் - 50,000) போட்டுகட்டுமா என்றார்...நானும் இருங்க பழகலாம்(!) அப்படின்னு சொன்னேன்...வந்த 5 பேரும் தீபாவளி விஷயத்த பத்தி பேசுனாங்க பேசுனாங்க பேசிகிட்டே இருந்தாங்க....நானும் கவனிசிகிட்டே இருந்தேன்...அதுல ஒரு நெடுநாளைய அங்கத்தினர்(20 வருடம்!) நம்ம நண்பர் ஒருவருக்கு அங்கிருந்தே போன் போட்டார்(கீழ போடல தொலைபேசியில் அழைத்தார்!)....
இந்தப்பக்கம் கவி அந்தப்பக்கம் பாலாவா........

ஆமாங்க சொல்லுங்க.....

சரி எப்ப பணம் தறீங்க $2000......

எதுக்கு....

தீபாவளி Sponsor...

நான் இப்போ மீட்டிங்ல இருக்கேன்...கம்பனில கேட்டு சொல்றேன்..
ம் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..(இணைப்பை துண்டித்தார்!)
மறுபடியும் என் பக்கம் அவர் கவனம் திரும்பியது....

அப்புறம் நீங்க எப்போ....

நான் பேச ஆரம்பித்தேன்...

சில விஷயங்களை இங்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...நானும் இந்த அமைப்பில் 4 வருடமாக இருக்கிறேன் மற்றும் சந்தா தொகை கட்டி வரும் உறுப்பினர் என்ற முறையில் கூற விழைகிறேன்...என்றேன்...

சொல்லுங்க சொல்லுங்க என்றார்...

முதலில் உறுப்பினர்களிடம் பேசும் தொனியை கற்று கொள்ளுங்கள்...அதுவும் நீங்கள் கேட்பது நன்கொடை...என்னமோ கடன் கொடுத்தவரிடம் திருப்பி கேற்ப்பது போல் உள்ளது உங்க தொனி....
தம்பி நான் இங்க 20 வருசமா இருக்கேன்...

அண்ணே அது உங்க பிரச்சன அதுக்காக என்ன பண்ணனும்...

இல்ல சொன்னே....

இல்ல நானும் கேட்டேன்..

இப்போ என்ன தான் சொல்லவர்றீங்க...

இங்கு இருக்கும் இந்தியர்களுக்கு இந்த அமைப்பினால் என்ன பயன்...இங்கிருக்கும் இந்திய பெண்களுக்கு எந்த வகையில் இந்த அமைப்பு உதவுகிறது...ஒரு இந்தியருக்கு பிரச்னை ஏற்ப்பட்டு அவர் காயத்துடன் மருத்துவமனையில் போராடிய போது உங்களின் செயல்பாடு எனக்கு வருத்தத்தை அளித்தது...

அது தூதரகம் சார்ந்த பிரச்னை...

அண்ணே மனிதநேயம் உள்ள யாவரும் உதவ முன்வரவேண்டும்...அதை விடுத்து தட்டி கழிக்க காரணம் தேடுகிறீர்கள்....

நீங்க டாபிக் மாறி பேசுறீங்க...

நான் நினைக்கரத இங்க பதிவு பண்றேன் அவ்வளவே...இந்த அமைப்பு இந்தியர்களுக்கு உதவும் ஒரு சேவை அமைப்பா இருக்கணும்னு நெனைக்கிறேன்...கொண்டாட்டங்களுக்கு கும்மி அடிக்கும் அமைப்பா மட்டும் இருக்கப்படாது..அதுவும் அரசியல்வாதிகள் போல உறுப்பினர்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது...நன்கொடை என்பது தன்மையுடன் நீங்கள் கேட்டு கம்பனிகள் கொடுப்பதே தவிர..இங்கு உங்க சரக்குக்கு நாங்க ஊறுகா அல்ல...

இதுக்கு தான் இந்தால கூப்பிட வேணான்னு சொன்னே...

உங்க அழைப்புக்கு நன்றி...இது தொடர்ந்தால் உங்களுக்கு தான் இழுக்கு...

எதிர்காலத்தில் பார்ப்போம்...சரி விஷயத்துக்கு வாங்க..எவ்வளவு தரப்போறீங்க...

உங்க கடமை உணர்வுக்கு நன்றி...பணம் தர்றதா இல்ல அப்புறம்...


அப்படியா விடுங்க...வேற விஷயம்...
ஒரு டிக்கட் $5 போட்டு இருக்கீங்க..இது உள் நுழையறதுக்கு...உள்ளே கிடைக்கும் உணவுகளின் விலை அதிகப்படியாக அமைந்து இருக்கு...இந்த நிகழ்ச்சியே அனைவரும் சமம் என நடத்தப்படுவது..இங்கு இருக்கும் தொழிலாளிகளும் பங்கு பெறவே இந்த நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்...

pass...

ஓ அப்படியா ரொம்ப நன்றி..

 
உப செய்தி: எந்த வித மாறுதலும் இல்லாமல் அவர்களின் வழியே நடக்க இருக்கிறது இந்த நிகழ்ச்சி!

கொசுறு: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...வருந்தாத இதயங்கள் வாழ்ந்தென்ன லாபம்..இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...எனக்கு பிடித்த பாடலுடன் விடை பெறுகிறேன்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. எங்கே போனாலும் நம்மாளுங்க அவங்க முத்திரையைப் பதிச்சிருவாங்கன்னு புரியுது!

  ReplyDelete
 2. தமிழண்டா ....(யாரு???)

  ReplyDelete
 3. டொனேஷன் ,,,எதுத்து கேட்டது?
  ரெண்டு பேருக்கும் பொருந்தும்
  தமிழன்--மதம் கடந்து இளிக்கிறது

  ReplyDelete
 4. இனிய காலை வணக்கம் அண்ணா,
  நலமா?
  எம்மவர்கள் எங்கு சென்றாலும் பதவி ஆசையினையும், பண ஆசையினையும் கை விட மாட்டார்கள் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது பதிவு.

  ReplyDelete
 5. பங்களாவில் இருந்து கொண்டு பாலிடிக்ஸ் பேசக்கூடாது என்பார் எம்.ஆர்.ராதா பலே பாண்டியா படத்தில்.

  ஆதிக்க சக்திகளிடம் மார்க்ஸ் தத்துவம் பேசினால், என்ன நடக்குமோ... அதுதான் உங்களுக்கு நடந்தது நண்பரே!

  ReplyDelete
 6. >>திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...வருந்தாத இதயங்கள் வாழ்ந்தென்ன லாபம்..இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...எனக்கு பிடித்த பாடலுடன் விடை பெறுகிறேன்...


  விடை பெறுகிறாயா? ஹி ஹி ஹி ஓக்கே ஓக்கே ஐ ஜாலி

  ReplyDelete
 7. //நான் இப்போ மீட்டிங்ல இருக்கேன்
  //

  spelling mistake athu Dating

  ReplyDelete
 8. //இதுக்கு தான் இந்தால கூப்பிட வேணான்னு சொன்னே...//

  அங்கேயுமா?????

  ReplyDelete
 9. நம்ம கலாசாரத்தை மாற்ற முடியுமா?!

  ReplyDelete
 10. ////இதுக்கு தான் இந்தால கூப்பிட வேணான்னு சொன்னே...//

  அங்கேயுமா?????//


  ஏன் மாம்ஸ் இப்புடி......

  ReplyDelete
 11. வணக்கம்!ம்,அப்புறம் அப்போ இந்த வருஷம் தீவாளி ஒங்களுக்கு வீட்டோட தான்னு சொல்லுறீங்க?தூர விலகிடுங்க!உங்களால முடிஞ்சத மத்தவங்களுக்கு செய்யுங்க!

  ReplyDelete
 12. //பாவம்...... சங்கத்து ஆளுக...///

  hi hi hi...

  ReplyDelete
 13. இங்கே பஹ்ரைன்'லையும் தமிழ்சங்கம் இருக்காம், ஆரம்பத்துல நான் உறுப்பினரா இருந்தேன் அதில் நாலுபேர் செர்ந்துட்டு அவிங்க பண்ணுன அலப்பறை சொல்லி மாளாது, அவர்களை கொண்டு தமிழர்'களுக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது...!!! நானே விலகிட்டேன்...

  ReplyDelete
 14. அண்ணாச்சி உங்களப் போல ஆட்களால எங்கட இனப் பெருமையை காப்பாற்ற முடியல...

  தயவு செய்து எங்கள் இனப் பெருமையை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை சொச்சைப்படத்தாதிர்கள்..

  (ஹ..ஹ..ஹ.. எதிர்க் கருத்திடுவோர் ஆற அமர வாசித்து விட்டுஅடியுங்கள்)

  ReplyDelete
 15. இந்த பதிவுக்கும் தமிழ் மணத்துக்கும் சம்பந்தம் இல்லையே? சும்மா கேட்டேன்..

  ReplyDelete
 16. சத்தியமா திருந்த மாட்டாங்க.....

  ReplyDelete
 17. சங்கமே அபராதத்துலதானே ஓடிக்கிட்டிருக்கு- கைப்பபுள்ளை

  மாப்ள காமெடியா இருந்தாலும், மேலே இருக்கும் வரிகள் எவ்வளவு உண்மை.

  ReplyDelete
 18. நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ் திருந்த மாட்டாங்க..........தீபாவளிக்கு அவ்வளவு பணமா கொடுக்கனும் எங்கள் ஊரில் அந்த தொகை பணம் இருந்தால் பலகுடும்பங்கள் பலநாட்கள் பசியாரும்.......

  ReplyDelete
 19. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...வருந்தாத இதயங்கள் வாழ்ந்தென்ன லாபம்..பினிஷிங் டச் அருமை ...

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் Says:
  October 22, 2011 11:07 AM
  >>திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...வருந்தாத இதயங்கள் வாழ்ந்தென்ன லாபம்..இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...எனக்கு பிடித்த பாடலுடன் விடை பெறுகிறேன்...


  விடை பெறுகிறாயா? ஹி ஹி ஹி ஓக்கே ஓக்கே ஐ ஜாலி///

  சி பிக்கு எம்புட்டு சந்தோசம் பாருங்க..

  ReplyDelete
 21. அட கொடுமையே

  ReplyDelete
 22. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...வருந்தாத இதயங்கள் வாழ்ந்தென்ன லாபம்..பினிஷிங் டச் அருமை ...

  ReplyDelete
 23. சம்பவத்தைக் கெடக்கச் சங்கடமாய் உள்ளது .காசுதான் எல்லா இடத்திலும் பெரிசாய்ப் போனது .உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோ ...........நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 24. மன்றங்கள் என்றாலே அலர்ஜி! குஷ்டமப்பா !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி