வியட்நாமில(VN) தீபாவளி...!

வணக்கம் நண்பர்களே...
கடந்த வாரத்தோட முடிவில் ஒரு நாள் என்னையும் குடுமபத்து அங்கத்தினர்களையும் (தூது!)அகத்துல தீவாளி கொண்டாடுறோம் வாங்கன்னு மெயில் போட்டு கூப்பிட்டு இருந்தாங்க...தொலைபேசில வேற வர சொல்லி சொன்னாங்க...அதைப்பற்றிய பதிவே இது...

அந்த மயிலு கூடவே ச்சே மெயிலு கூடவே ஒரு துணை அட்டாச் பண்ணி இருந்தாங்க அதுல...ஒவ்வொருத்தரும் ஒரு டிஷ்(உணவு வகை!) செய்து கொண்டு வரும்படி சொல்லி இருந்தாங்க...என்னைய கேக்காமலேயே "Dum Aloo" அப்படின்னு போட்டு இருந்தாங்க...அதுவும் 15 பேருக்கு செய்து கொண்டு வரும்படி இருந்தது...

வீட்டுக்காரம்மா(House owner அல்ல!) எனக்கு தெரியும் செஞ்சி கொண்டு போலாம்னு சொல்லிட்டாங்க....சரின்னு நல்ல புள்ளையாட்டமா தூங்கிட்டேன்(!)...அவங்க பாவம் வேல முடிச்சிட்டு...கெளம்பி ரெடியானாங்க...நேரத்துக்கு சரியா போகணுங்கறது நம்ம பழக்கம்ங்கரதால அறிவிச்ச நேரத்துக்கு சரியா அங்க போய் நின்னோம்...

ஸ் ஸ் அபா என்னே கடமை உணர்ச்சி...யாரையும் காணோம் ரெண்டு வேலை ஆட்கள் மட்டும் இருந்தாங்க...கேட்டதுக்கு இப்போ வந்துருவாங்கன்னு சொன்னாங்க...

"லேட்டா வந்தா தான் தலைவன்...சீக்கிரமா வந்தா தொண்டன் " - பழ மொழி ஞாபகத்துக்கு வந்து தொலைச்சது தனி கதை...மனைவி வேற...ஏங்க யாராவது வந்து இருக்காங்களா...எதுக்கு இப்படி நேரத்த கட்டி கிட்டு அழுவுரீங்களோன்னு சொன்ன போது எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்ஞ்சது மனசு(!)...கொஞ்ச நேரத்துல ஒவ்வொருவரா வர ஆரம்பிச்சாங்க....மாலை 6 மணிக்குன்னு ஆரம்பம்னு சொல்லி புட்டு 7.45 க்கு ஆரம்பிச்சாங்க...

ஆளாளுக்கு கையில கண்ணாடி கிளாசோட நின்னத பாக்கும்போது...அட அட அட நரகாசூரன் கொடுத்தான் பாருய்யா சரக்கடிக்க ஒரு காரணம்னு எனக்கு நெனப்புல வந்து போச்சி(!)...மொத்ததுல 25 குடும்பங்களை அழைச்சி இருந்தாங்க...அதுல பாருங்க ஒவ்வொரு குழுவும்(!) தனி தனியா இருந்தது...ஹிந்தி குழு, ஹிந்தி குழுவிலும் தனித்து ஒரு தனிக்குழு(பெரிய அப்பாடக்கருங்க!), தென் நாட்டுகுழு இப்படி இந்தியா ஒரு ஜனநாயக நாடுங்கரதுல வித்தியாசமில்லாம தெரிஞ்சது எனக்கு!

ஒவ்வொருத்தரும் செய்து கொண்டு வந்தா டிஷ்ஷ அந்த இடத்துல வச்சிட்டாங்க...அப்புறம் அங்க தனி தனியா வச்சி சூடு பண்ணது தனிக்கதை...லைன்ல வந்து பூரி, பிரைட் ரைஸ் அப்புறம் தொடர்ந்தது டிஷ்கள்....

இந்த நாட்டுல பட்டாசு வெடிக்க தடை இருந்தததால(!)...ஒரு நாளைக்கு மட்டும் மத்தாப்புகள் கொளுத்த ஒரு மணிநேரம் அனுமதி வாங்கி இருந்தாங்க...அவைகள் குழந்தைகள் கைகளில் கொடுக்கப்பட்டு கொளுத்தப்பட்டன...


தீபாவளிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே கொண்டாடப்பட்டு விட்டது...என்ன இருந்தாலும்...பட்டாச வாங்கிகிட்டு ரோட்டுல வச்சி வெடிச்சி ஊருக்கு நாம யாருன்னு(!) காட்ற விஷயம் காணாம போயிருச்சே(!) மற்றும் ஒரு டிரஸ் எடுக்க ஒரு நாள் முழுக்க சண்ட(!) போட்டு கொண்டாடும் சொந்த ஊர் தீபாவளியை நினைக்கும் போது கொஞ்சம் மனசு கனக்கத்தான் செய்தது...

கொசுறு: எங்கிருந்தாலும் சொந்த ஊரு ஞாபகம் இருக்கும் சராசரி மனிதனின் பதிவு இது ஹிஹி!...நாளைக்கு வீட்ல தீபாவளிங்கோ...முன்னமே சொல்லிக்கறேன் தீபாவளி வாழ்த்துக்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஐ நான் உங்களை இன்ட்லியில் பின்தொடரும் 100வது நபருங்கோ.ஹே.. ஹே..

  ReplyDelete
 3. \\\இந்த நாட்டுல பட்டாசு வெடிக்க தடை\\\ அளவுக்கதிகமா அலர்ட்டா இருக்காங்களோ ?

  ReplyDelete
 4. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வணக்கம் அண்ணே,
  நலமா?
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

  ReplyDelete
 6. வெளிநாட்டிலும் எம்மவர்கள் கலாச்சாரப் பெரு விழாக்களை தம்மால் இயன்றவரை கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதனை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
 7. விக்கி தக்காளிக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!

  ReplyDelete
 8. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. /////எங்கிருந்தாலும் சொந்த ஊரு ஞாபகம் இருக்கும் சராசரி மனிதனின் பதிவு இது ஹிஹி!...நாளைக்கு வீட்ல தீபாவளிங்கோ...முன்னமே சொல்லிக்கறேன் தீபாவளி வாழ்த்துக்கள்!/////

  ஆமா பாஸ் சரியாச்சொன்னீங்க சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுரதை போல வருமா

  ReplyDelete
 10. தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

  ReplyDelete
 11. சொர்கமே என்றாலும்
  அது நம் ஊரைப் போல வருமா?
  அட என் நாடு என்றாலும்
  அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?

  சொந்த மண்ணில் தீபாவளியே தனி தான். ஹிம்....இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  ReplyDelete
 13. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  ReplyDelete
 14. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. "லேட்டா வந்தா தான் தலைவன்...சீக்கிரமா வந்தா தொண்டன் "

  உங்க அரசியல் கட்சியின் முதல் கொள்கையா இது?

  ReplyDelete
 16. //"Dum Aloo" அப்படின்னு போட்டு இருந்தாங்க.//

  ஆஹா, காஷ்மீர் டிஷ் ஆச்சே? :-)

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. >>வீட்டுக்காரம்மா(House owner அல்ல!) எனக்கு தெரியும் செஞ்சி கொண்டு போலாம்னு சொல்லிட்டாங்க....சரின்னு நல்ல புள்ளையாட்டமா தூங்கிட்டேன்(!)...அவங்க பாவம் வேல முடிச்சிட்டு...கெளம்பி ரெடியானாங்க.

  தம்பி, வாய் கூசாம பொய் சொல்லாதே, அவங்க தூங்கி இருப்பாங்க, நீ சமைச்சிருப்பே..

  ReplyDelete
 18. >>ஆளாளுக்கு கையில கண்ணாடி கிளாசோட நின்னத பாக்கும்போது.


  தம்பி.. நீ மப்புல என்ன அழிச்சியாட்டியம் பண்ணூனே என்பதை தனி மெயிலில் பகிரவும்./ ஹி ஹி

  ReplyDelete
 19. விக்கி எப்படி இருக்கீங்க?
  தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

  வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் சந்திக்கும்
  நினைவலைகள்

  ReplyDelete
 20. :-(

  வாத்துக்கள் மாம்ஸ்!

  ReplyDelete
 21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாப்ள.

  ReplyDelete
 22. மாப்ள தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. அன்புநிறை நண்பரே
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  மகிழ்ச்சி பொங்கட்டும்.

  ReplyDelete
 24. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாப்ள..

  ReplyDelete
 25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 26. அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
  நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

  உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 28. நல்ல அனுபவம் விக்கி

  தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. இனிய தீபாவளி வாழ்த்துகள் மாப்ள ...

  ReplyDelete
 30. ////////
  தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  ////////

  ரீபீட்டு...

  ReplyDelete
 31. வியட்நாம் தீபாவளி சூப்பர்

  ReplyDelete
 32. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 33. தக்காளிக்கு தண்ணில கண்டம்....... அப்புறம் என்னய்யா பண்ணே?

  ReplyDelete
 34. அப்பாட்டக்கர்களோடு தண்ணியடித்து தீபாவளி கொண்டாடிய அப்பாட்டக்கர் தக்காளி வாழ்க.......

  ReplyDelete
 35. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

  ReplyDelete
 36. தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. லேட்டா வந்தா தான் தலைவன்...சீக்கிரமா வந்தா தொண்டன் " - பழ மொழி ஞாபகத்துக்கு வந்து தொலைச்சது தனி கதை//

  ஆஹா இப்பிடியும் ஒரு சூத்திரம் இருக்கா...!!!!!

  ReplyDelete
 38. சி.பி.செந்தில்குமார் said...
  >>வீட்டுக்காரம்மா(House owner அல்ல!) எனக்கு தெரியும் செஞ்சி கொண்டு போலாம்னு சொல்லிட்டாங்க....சரின்னு நல்ல புள்ளையாட்டமா தூங்கிட்டேன்(!)...அவங்க பாவம் வேல முடிச்சிட்டு...கெளம்பி ரெடியானாங்க.

  தம்பி, வாய் கூசாம பொய் சொல்லாதே, அவங்க தூங்கி இருப்பாங்க, நீ சமைச்சிருப்பே..//

  ஹா ஹா ஹா ஹா ஆமா ஆமா இவன்தான் சமைச்சிருப்பான் மப்படிச்சிகிட்டு....

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said...
  >>ஆளாளுக்கு கையில கண்ணாடி கிளாசோட நின்னத பாக்கும்போது.


  தம்பி.. நீ மப்புல என்ன அழிச்சியாட்டியம் பண்ணூனே என்பதை தனி மெயிலில் பகிரவும்./ ஹி ஹி//

  இவன் மப்படிச்சிகிட்டு போன்'ல கொல்லுறது போதாதாக்கும்...???

  ReplyDelete
 40. உனக்கும் உன் குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 41. தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... மாம்ஸ்...

  ReplyDelete
 42. ஹாப்பி தீபாவளி மாம்ஸ்!! சன்ல வேட்டைக்காரன் பாருங்க.

  ReplyDelete
 43. மாம்ஸ்! உமக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி