தாலி - இப்படி பண்ணலாமா! - VN (பெண்கள் மன்னிச்சூ!)

வணக்கம் நண்பர்களே...

தாலி - இது பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை...இந்திய சமுதாயத்தில் எந்த அளவுக்கு முக்கியமான விஷயம் இது என்பது அனைவருக்கும் தெரிந்ததே...அதைப்பற்றிய என் பார்வை பதிவு இது...

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள -

தாலி வந்த கதை

கொஞ்சம் விவாதமான பதிவுக்கு இங்கே - http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html 

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டுக்கு தீபாவளி பலகாரம் சாப்பிட(ஹிஹி!) போயிருந்தோம்...அவங்களும் செய்த பல காரங்களை அடுக்கி வைத்தார்கள்...என்னே ஆச்சர்யம் இட்லிக்கு தோதான அரிசி கிடைக்காத நாட்டில முறுக்கு, ஓட்ட வடை, அதிரசம், லட்டுன்னு அசத்தி இருந்தாங்க அந்த சகோதரி..


என்னனே பாக்குறீங்க சாப்பிடுங்க...

என்னம்மா இம்புட்டும் செஞ்சியா..எப்பிடி..

ஒரே நாள்ல இல்லன்னே...ரெண்டு நாளா கொஞ்ச கொஞ்சமா செஞ்சது...அதான் உங்கள போன் போட்டு வர சொன்னேன்(ஓசி பலகாரத்துக்கு 4 மைல் வர்றவன்னு தெரிஞ்சி போச்சா ஹிஹி!)...

அது சரி அக்கா எங்க உங்க தாலி சரட காணோம்...

(என் மனைவியை பார்த்து அந்த தங்கை கேட்டாள் இப்படி....)

அது வந்து...


நான் சொல்றேம்மா...இங்க யாரும் தங்கம் அணியறது இல்ல...அதுவும் நாம பைக்ல போறமா...அதனால எதுக்கு ரிஸ்க்குன்னு நான்தான் வீட்ல கழட்டி வைக்க சொன்னேன்...

அய்யயோ அண்ணே ஏன்னே இப்படி பண்ணீங்க...என்னனே புனிதமான விஷயத்த இப்படி அலட்சியப்படுத்திட்டீங்களே...

இல்லம்மா...புனிதம்ங்கறது மனசுல இருந்தா போதும்ங்கறது என்னோட எண்ணம்...அதுவும் இல்லாம இங்க ஏற்கனவே நிர்வாகம் அறிவிச்சிருக்கு...அதாவது தங்கம் போன்ற உயரிய அணிகலன்களை அணிந்து வெளியில் செல்லும் போது ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு நிர்வாகம் பொறுப் ஏற்க்காதுன்னு....

நான் கேள்விப்படலையே...

அது வெளிப்படையா இல்ல...அதான் உங்களுக்கு தெரியல...

ஓ அதுக்காக..இப்படியா...

நாம இங்க வெளி நாட்டுக்காரங்க...நாம தான் நம்ம பாதுகப்ப உறுதி பண்ணிக்கோனும்...இதுல போய் நம்ம பழகக்க வழக்கங்கள இங்க தொடர்ந்தோம்னா..ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு அதுக்கு பிறகு வருந்தரதுல என்ன இருக்கு...

இருந்தாலும்..எனக்கு என்னமோ நீங்க சொல்றதுல மன சஞ்சலம் தீரலன்னே..


நான் பய முறுத்துரேன்னு நினைக்காதீங்க...இது ஒரு வரு முன் காப்பது அவ்வளவே...என்னதான் இந்த நாட்டுல குற்றம் கம்மியா இருந்தாலும் இங்க இருக்கவங்க யாரும் நகை குறிப்பா தங்க நகை அணிவதில்லை...நம்மவர்கள் தான் இதை அணிவது வாடிக்கை...அதுவே பெரிய வேடிக்கையாகி விடக்கூடாது இல்லையா...நீங்க ஆண்களை சார்ந்தே இருக்க கூடாது...நீங்க நாலு இடத்துக்கு போறீங்க பயத்துடன் போகக்கூடாது இல்லையா..

அப்புறம் உங்க இஷ்டம்னே...


இந்த உரையாடல்களில் சொல்ல வருவது..வெளி நாட்டில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுக்காப்பை முதலில் பேண வேண்டும் என்பதே...ஏனெனில் தனியே செல்லும் பெண்களுக்கு அவர்கள் கொண்டு செல்லும் விலை உயர்ந்த பொருட்களே எதிரிகள்...

கொசுறு: இது நம்மூருல சொல்லலீங்க...அப்புறம் பண்பாட்டுக்கு எதிரா சொல்லிபுட்டேன்னு நெனச்சிக்காதீங்க மக்களே...உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

51 comments :

 1. மாம்ஸ் என்ன இது? அந்த ஊர்ல எப்பிடி இருந்தாலும் நாம தமிழர்கள் அல்லவா?

  ReplyDelete
 2. தாலி-
  சரியாய் சொல்லியுள்ளிர்கள்.
  ஆன்னாலும்
  இது சரி இல்லை.
  வேறு ...எப்படி சொல்ல ???
  அது வந்து ......
  தாலி புருசன்க்கு வேலி.
  எப்போடியோ !!!!
  தாலி கட்டுன மனைவி காளி
  ஆகாம இருந்த சரி ..
  என்ன மாம்ஸ் நான் சொல்லறது !!!

  ReplyDelete
 3. தாலி-
  சரியாய் சொல்லியுள்ளிர்கள்.
  ஆன்னாலும்
  இது சரி இல்லை.
  வேறு ...எப்படி சொல்ல ???
  அது வந்து ......
  தாலி புருசன்க்கு வேலி.
  எப்போடியோ !!!!
  தாலி கட்டுன மனைவி காளி
  ஆகாம இருந்த சரி ..
  என்ன மாம்ஸ் நான் சொல்லறது !!!

  ReplyDelete
 4. தனியே செல்லும் பெண்களூக்கு நகைகளை விட விலை மதிப்பற்ற அணீகலன் இருக்கிறது....

  ReplyDelete
 5. இப்படி ஒரு நாட்டுல இருந்துக்கிட்டு எப்படி ஜாலியா இருக்கீங்க? மாம்ஸ் உண்மையிலே சாதனைதான்
  இங்க காய்கறி வாங்க போகும்போதுகூட நகை அணிந்துதான் போறாங்க

  ReplyDelete
 6. @யானைகுட்டி @ ஞானேந்திரன்

  வருகைக்கு நன்றி மாப்ள!

  என்னமோ சொல்ல வர்ரீரு ஹிஹி!

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash

  மாப்ள இது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று பார்க்கவும்!

  ReplyDelete
 8. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  தனியே செல்லும் பெண்களூக்கு நகைகளை விட விலை மதிப்பற்ற அணீகலன் இருக்கிறது...."

  >>>>>>>>>>

  அண்ணே...இங்கு இரவு 1 மணிக்கு தனியே நடந்து போனாலும் பெண்களுக்கு எந்த வித தொந்தரவும் கிடையாது...நீங்கள் குறிப்பிடுவதற்கான பதில் இது..

  ReplyDelete
 9. மாம்ஸ் தங்கத்தில தான் தாலி போடணுமா? மஞ்சள் கயித்துல போடக்கூடாதா?

  ReplyDelete
 10. படிச்சதே பெருசு.... கருத்து சொல்லணுமாம் கருத்து...

  #பெரியவங்க சொன்னா சரிதேன் மாம்ஸ்...

  ReplyDelete
 11. @veedu

  "veedu said...
  இப்படி ஒரு நாட்டுல இருந்துக்கிட்டு எப்படி ஜாலியா இருக்கீங்க? மாம்ஸ் உண்மையிலே சாதனைதான்
  இங்க காய்கறி வாங்க போகும்போதுகூட நகை அணிந்துதான் போறாங்க"

  >>>>>>>>>>>>

  மாப்ள சந்தோசம் என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு...இங்கு பெண்கள் தங்கம் அணிந்து செல்வதில்லை...என் பார்வையில் நாமே ஏன் மாட்ட வேண்டும் என்பதே..!

  ReplyDelete
 12. @ஜ.ரா.ரமேஷ் பாபு

  " ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  மாம்ஸ் தங்கத்தில தான் தாலி போடணுமா? மஞ்சள் கயித்துல போடக்கூடாதா?"

  >>>>>>>>>>>

  இது ஒரு நல்ல கேள்வி...அது மஞ்சள் பூசப்பட்ட கயிறா அல்லது தங்கமான்னு பாக்குறவனுக்கு டவுட்டு வந்துச்சின்னா...என்னய்யா பண்றது!

  ReplyDelete
 13. @வெளங்காதவன்

  "வெளங்காதவன் said...
  படிச்சதே பெருசு.... கருத்து சொல்லணுமாம் கருத்து...

  #பெரியவங்க சொன்னா சரிதேன் மாம்ஸ்..."

  >>>>>>>

  நீங்க சொன்னா சர்தான் மாப்ள!

  ReplyDelete
 14. இன்று இந்திய கலாச்சாரம் பண்பாடு மிகவும் விலை உயர்ந்ததாக மாறி வருகிறது...


  ஒரு ரூபாய் நூலில் ஒரு மஞ்சள் கிழங்கு கட்டி தாலி உருவானது...

  ஆனால் அது இன்று 5 சவரனில் போட்டால்தான் தாலி என்றாகி விட்டது..

  பாதுகாப்புக்கு என்று சில விஷயங்களை மாற்றி அமைக்கலாம் தான்...

  பகிர்வுக்கு நன்றி மாம்ஸ...

  ReplyDelete
 15. நல்ல எச்சரிக்கைப் பதிவு
  பெண்கள் மாறுவதுதான் கஷ்டமாக உள்ளது
  ஒரு முறை களவு கொடுக்கும்வரை இவர்கள்
  ஆண்கள் சொல்வதை அவ்வளவாக மதிப்பதில்லை
  களவுக்குப் பின்னால கதவை அடைப்பவர்களாகத்தான்
  பெண்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்
  பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. நம்ம ஊரு மாதிரி களவாணிப் பயலுக அங்கேயும் இருக்காங்களா ...

  ReplyDelete
 17. நம்ம சினிமால சொல்றாப்பலே ஒரு மஞ்சக்கயிறாவது இருக்கணும்!

  ReplyDelete
 18. பாதுகாப்புக்கு என்று சில விஷயங்களை மாற்றி அமைக்கலாம் தான்..

  ReplyDelete
 19. நல்ல பதிவு..///நீங்க நாலு இடத்துக்கு போறீங்க பயத்துடன் போகக்கூடாது இல்லையா..////

  மாமா அந்த நாலு இடம் எந்த இடம்?

  ReplyDelete
 20. மாப்ள எப்பிடி இதெல்லாம்...

  ReplyDelete
 21. வெளிநாட்டுலே மட்டுமில்லை; இந்தியாவிலேயும் கூட முதலில் பாதுகாப்புத்தான். அதான் நிறைய பேரு தங்கச்சங்கிலிக்குப் பதிலா கருகமணி போட ஆரம்பிச்சிருக்காங்க!

  ReplyDelete
 22. தாலி அணிவது அவரவர் விருப்பம் என்றாகிவிட்டது! கட்டாயமில்லை!மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஒன்றும் ஆபத்தில்லை! ஆனால் இன்று தாலி அணிய வெட்கப்படும் தயங்கும் சூழ்நிலை!திருமணமானவள் என்று வெளியே அறிவிக்க ஏனோ தயங்குகின்றனர் !

  ReplyDelete
 23. எந்த தேசமானால் என்ன ? மஞ்சள் கயிற்றில் தாலி சேர்த்து அணியலாமே!

  ReplyDelete
 24. என்ன இருந்தாலும் தாலி பெரிய செண்டிமெண்ட் தான்! அதையே தவிர்த்து விட்டால் அப்புறம் என்ன தான் இருக்கிறது?

  ReplyDelete
 25. அதென்ன நாய் லைசென்ஸா, நீங்க சரியா தான் செய்திருக்கிறீர்கள் தோழரே

  ReplyDelete
 26. வருமுன் காப்பது சிறந்ததே!மேலும்,ஊரில் இருக்கும்போது என் தாயார் சொல்வது நினைவில் வருகிறது;மனமது நல்லதானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை,என்பார் அவர்!தாலி அணிந்துதான் நிரூபிக்க வேண்டுமென்றில்லை.மனத்தால் கணவனை நினைத்திருப்பதே கற்புக்கு காவல்!

  ReplyDelete
 27. ரைட்டு... மாம்ஸ்...

  ReplyDelete
 28. Through all these
  treditional habits......

  ReplyDelete
 29. வியட்நாமியர்கள் திருமணவர்கள் என்பதற்க்கு அடையாளமாக எதை அணிகிறாற்கள்?
  அதைச்சொல்லுங்கள் நண்பரே!

  ReplyDelete
 30. சரி....
  சரிதான்....

  நடத்துங்க... மாம்ஸ்..

  ReplyDelete
 31. //இது நம்மூருல சொல்லலீங்க...அப்புறம் பண்பாட்டுக்கு எதிரா சொல்லிபுட்டேன்னு நெனச்சிக்காதீங்க மக்களே.


  //நாங்க அப்படிதான் நினைப்போம் .. நாளை கடைஅடைப்பு ,

  ReplyDelete
 32. மாப்ள நீங்க சொல்றதும் கரெக்ட் மாதிரிதான் தெரியுது. அது சரி அந்த பலகாரத்தை எல்லாம் சாப்ட்டீங்களா? அது பத்தி ஒண்ணும் சொல்லலியே?

  ReplyDelete
 33. ஓசி பலகாரம் திங்குரதெல்லாம் அங்கேயே நிப்பாட்டிடு, என்னா நீ இந்தியா வந்தால் எங்கள் எல்லார் செலவுக்கும் ஸ்பான்சர் நீதான்...

  ReplyDelete
 34. புனிதம் மனசுல இருந்தா போதும்யா அதுதான் என் கருத்தும்...

  ReplyDelete
 35. இது கருத்துப்பகிர்வா, உபதேசமா?

  ReplyDelete
 36. நூறு பவுணுல போட்டுட்டு போனா கீறுதான் விழும்.
  அதனால றொம்ப மதிக்குறவங்க மஞ்சள் நூலில
  அழகா மங்களகரமா தொங்கப் போட்டா அவங்க
  தாலிப் பாக்கியம் ஆம்பளையாள றொம்ப ஆரோக்கியமாவும்
  அடக்கமாகவும் வைத்திருக்கும் (கடன்பட்டு தாலி செய்யத் தேவை
  வராது ஹா ..ஹா ..ஹா ..)என்று ஐதீகம் (இதனால
  கழுத்துக்கும் கொஞ்சம் ஆரோக்கியம் மிச்சம்..)ஏன் வீண்
  வம்பு..............
  தந்த பலகாரம் அத நீங்கமட்டுமா சார் போட்டுத் தாக்கிநீங்க
  அதப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே ........!!!

  ReplyDelete
 37. எனக்கும் இந்த தாலி மெட்டி மேல் நம்பிக்கை இல்லை. கழுத்தை பார்த்துட்டு ஹார்ட் அட்டாக் ஆகுற அளவுக்கு ரியாக்‌ஷன் குடுக்குறவங்களுக்கு வெளக்கம் சொல்லியே எனக்கும் அட்டாக் வந்துடும்..... என்ன செய்ய?

  நம் பாதுகாப்பை விடவா மற்ற விஷயங்கள் முக்கியம்? :-)

  சரியா சொன்னீங்க

  நல்ல பகிர்வு

  ReplyDelete
 38. பெரியவங்க சமாச்சாரம் நான் அடுத்த பதிவுக்கு வாரன் பாஸ்..ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 39. ஆமா பலகாரம் சாப்பிட்டிங்களா?

  ReplyDelete
 40. ////சி.பி.செந்தில்குமார் Says:
  October 28, 2011 11:04 AM
  தனியே செல்லும் பெண்களூக்கு நகைகளை விட விலை மதிப்பற்ற அணீகலன் இருக்கிறது....
  /////

  அடேடே......

  ReplyDelete
 41. ஸலாம் சகோ.விக்கி,
  //நாம இங்க வெளி நாட்டுக்காரங்க... நாம தான் நம்ம பாதுகப்ப உறுதி பண்ணிக்கோனும்...//---பிரச்சினையே இதுதாங்க சகோ.விக்கி..! பொதுவாகவே இப்டித்தான் நிலைமை இருக்கிறது. பாதுகாப்பு என்றால், அது... ஒரு நாட்டில் உள்நாட்டினர் வெளிநாட்டினர் பாகுபாடின்றி சகலருக்கும் சமமாக இருத்தல் வேண்டும்.

  ReplyDelete
 42. தனியே செல்லும் பெண்களுக்கு அவர்கள் கொண்டு செல்லும் விலை உயர்ந்த பொருட்களே
  >>>
  இதில் மாற்றுக் கருத்தே இல்லை சகோ

  ReplyDelete
 43. தாலியை கழட்டி கொடுத்துட்டு போக சொல்லும் "அந்த ஏழு நாட்கள்" இன்று எடுத்தால் தமிழ் நாட்டில் ஓடுமா?

  ReplyDelete
 44. பகிர்வுக்கு நன்றி மாப்ளே
  பகுன்னாறு

  ReplyDelete
 45. வணக்கம் மாப்பிள..
  இங்கு திருடர்கள் அதிகம்ன்னு யாருமே தாலிகொடி போடுவதில்லை ஏதாவது விஷேசங்களில் போட்டால்கூட உடனேயே லொக்கருக்கு போய்விடும்.. 

  ReplyDelete
 46. பெண்கள் உணர வேண்டிய பதிவு

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள்,
  பாதுகாப்போ
  படோடபமோ
  கால கால வழக்கமோ
  கழற்றி வைத்ததற்கும்
  காரணம் ஏதுவாகிலும்
  ஏற்றதற்கும் வாழ்த்துக்கள்

  இந்த ஊரிலே
  வெறும் மாலையை மட்டும் மாற்றி நடந்த திருமணங்களை கண்டிருக்கிறேன். இராகுகாலத்தில் நடந்த திருமணங்களை கண்டிருக்கிறேன்.

  வாழ்வதற்கு இதெல்லாம் முக்கியமில்லை என உணர்த்தியவர்கள் அவர்கள் அந்த வரிசையில்

  மீண்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி