முக Vs உடல் அழகு பெண்களே ஜாக்கிரதை!

வணக்கம் நண்பர்களே...



கொஞ்ச காலம் முன்பு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் ஒரு பெண்...அவர் பெரிய பதவியில் இருப்பவர்(!)...என் மனைவியின் நண்பி...அழகு விஷயத்துக்காக(Eye brow!) செய்து கொள்வதற்காக வந்து இருந்தார்கள்...

நான் அவர்களை கொஞ்ச மாதங்கள் முன்பு ஒரு அரசு விழாவில்(!) பார்த்தேன்...அப்போது முகப்பொலிவுடனும், புஷ்டியாகவும் இருந்ததாக ஞாபகம்...!


சரி கேட்டு விடுவோமே என்று கேட்டேன்...

என்னங்க இப்படி இளைசிட்டீங்க...

அது வந்து எனக்கு marriage ஆகப்போகுது அதான் diet ல இருக்கேன்னு சொன்னாங்க....

ஆனா அவங்க முகம் எல்லாம் சுருங்கி இருந்தது....உடலும் மிகவும் எடை குறைந்து இருந்தது...சரி பெண்களிடம் அதிகமாக இப்படி கேட்டு தொலைத்து பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாததால்(!) நிறுத்திக்கொண்டேன்...


ஆனால், என் மனைவி நான் கேட்க்க நினைத்ததை கேட்டே விட்டாள்...

ஏங்க இப்படி முகமெல்லாம் சுருங்கி போயிட்டீங்க...அப்படி என்ன diet வேண்டி கெடக்குது....

இல்ல உணவு கட்டுப்பாடு தான்...எந்த வித Fat food எடுத்துக்கறதில்ல...இப்போ நான் இருவது கிலோ குறைஞ்சி இருக்கேன்..எல்லோரும் என்னை எப்படி இப்பிடி குறசீங்க எடையய்ன்னு கேக்குறது மனசுக்கு சந்தோசமா இருக்கு...

(அடப்பாவமே..அதுக்குன்னு இப்படியா முகமெல்லாம் வயசான பாட்டிக்கு ஒட்டி போயிருக்குமே அது போல!) 

மனசு இப்போ சந்தோசமா இருக்கு அது போதும்...இப்படி சொல்லிட்டு போயிட்டாங்க...

இங்க இருக்க பலர் இந்த வியட்நாமிய பெண்களை பார்த்து பொறாமைப்பட்டு அதே போல உடல் வாகு வேண்டி அநியாயத்துக்கு diet அப்படிங்கற பேர்ல உடலை உருக்குலச்சிட்டு இருக்காங்க...

இங்கே இருக்கும் மக்களின் உணவு பழக்கம் வேறு...நமது உணவு பழக்கம் வேறு என்பதை மறந்து...பின் அதிக அளவில் மருத்துவ செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள்...ஒரு வியட்நாமிய பெண்ணின் சராசரி எடை 40 இலிருந்து 50 க்குள்...இதை பார்த்து இங்கிருக்கும் பெண்மணிகள் என்னென்னமோ செய்யிறாங்க....ஆங் மறந்திட்டேன் பாருங்க...


ஒரு வாரம் முன்பு அதே நங்கை மீண்டும் வீட்டுக்கு மனைவியை பாக்க வந்து இருந்தாங்க...என்ன விஷயம்னா அவங்க திருமணம் நின்னுடுச்சாம்...இவங்க புஷ்டியா அழகா இருக்கறதா பாத்து தான் அந்த மாப்ள ஓகே சொன்னாராம்...இந்தியா போனதுக்கப்புறம் நேரில் இவங்களை சந்திச்சி பார்த்த அவர் இவங்களுடன் திருமணம் வேணாம்னு சொல்லிட்டாராம்...


இந்த கொடுமைய பாருங்க.....சைஸ் ஜீரோ அழகிகள்! திரு. ரம்மி அவர்கள் சொல்றத கேளுங்க

கொசுறு: பெரிய இடம்னா எப்படி சட்டுன்னு மாத்திக்கறாங்க...(அய்யயோ நான் ஒன்னும் சொல்லல!)...படங்கள் இங்கு பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்க காணவே...ஆங் இது ஜொள்ளு பதிவு அல்ல! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

38 comments :

  1. ஸ்லிம் ஆகிறேன் பேர்வழின்னு சில பேர் இதுபோல
    செய்யத்தான் செய்கிறார்கள்..
    நீங்க சொன்னதுபோல நமது உணவுப்பழக்கம் வேறு
    தட்பவெப்பம் வேறு....

    அதுமட்டுமல்ல
    கொஞ்சம் வளைஞ்சி குனிஞ்சி வேலையும் செய்யணும்...
    சாப்ட்டு சாப்ட்டு தூங்கக்கூடாது...

    பதிவு நல்லா இருக்கு மாம்ஸ்..

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைச்சாச்சு

    ReplyDelete
  3. பதிவிற்கான கமென்ட் மாலையில்....

    ReplyDelete
  4. கலக்கீட்டிங்க பாஸ்உண்மையில் சில பொண்ணுங்க அழகு குறிப்பு என்று செய்யும் அட்காசங்கள் தாங்க முடியாது...அதன் பிரதிபலிப்பாக உங்கள் பதிவு இருக்கு(கோத்துவிட்டாச்சி)

    ReplyDelete
  5. போடுறதை போட்டுட்டு, விளக்கம் வேறா!

    ReplyDelete
  6. புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். புரிபவர்களுக்கு புரிய வேண்டுமே!

    ReplyDelete
  7. ஆகா இப்படிக்கூட நிகழ்கிறதா .....!!!
    மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .........

    ReplyDelete
  8. பெண்களின் அழகு நிலையங்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் நாடுமுழுதும் ஆண்கள் அழகுநிலையம்தான் இருக்கிறது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் சகோ.

    பேசியலிலிருந்து பிளிச்சிங்வரை ஆண்கள்தான் அதிகம் செய்துகொள்வதாக (உறுதியில்லாத) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது!!

    ReplyDelete
  9. எப்படி மெலிந்ஜாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க....-:)

    ReplyDelete
  10. பருத்தவன் இளைத்தால் பார்வைக்கு ஆகாது.
    உ.ம் எஸ்.பி.பி.சரண்
    பெண்ணுக்கும் இது பொருந்தும்.

    ReplyDelete
  11. எச்சரிக்கைதரும் விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. )...படங்கள் இங்கு பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்க காணவே...ஆங் இது ஜொள்ளு பதிவு அல்ல!

    இதை ஆரம்பத்துலையே போட்டிருக்கக்கூடாதா?ஹிஹி

    ReplyDelete
  13. ஸ்லிம் ஆக இருக்க இப்படில்லாம் கஷ்ட்டப்பட்டு முக அழகையே கெடுத்துக்கராங்களே? ஆரோக்கியத்தைப்பத்தி கவனத்தில் கொள்வதே இல்லியே.

    ReplyDelete
  14. படங்க சுப்பர் மாப்ள.

    ReplyDelete
  15. ஹி ஹி ஹி நான் கூட diet ல இருக்க்கலாமானு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் என் கண்ணை தொறந்துடீங்க மாம்ஸ்

    ReplyDelete
  16. ஹ ஹா, விக்கி,,, இது நியாயமா...

    ReplyDelete
  17. குழம்பித் திரியும் குண்டான பெண்களுக்கு
    தெளிவைத் தரும் பதிவு த.ம 13

    ReplyDelete
  18. //
    படங்கள் இங்கு பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்க காணவே...ஆங் இது ஜொள்ளு பதிவு அல்ல!


    //
    நம்பிடோம்

    ReplyDelete
  19. பெண்களுக்கு யோகா மாதிரி எதுவும் பயனளிக்காதுங்கோ! அதுனாலே உடம்பு, மனசு ரெண்டும் ஆரோக்கியமா இருக்கும். (அப்புறம் ஜீரோ சைஸ் பெண்கள் வரிசையில் திரு.ரம்மி ஸ்ரேயாவைக் குறிப்பிடாமல் இருப்பது வருத்தமாயிருக்குது. அதுனாலென்ன, நான் இடுகை போட்டு ஒப்பேத்துறேன்) :-)

    ReplyDelete
  20. மாமு! தாங்க்ஸ் மா ! இந்தா வாங்கிக்கோ பூங்க்கொத்து!

    ReplyDelete
  21. ஓவரா டயட் இருந்தாலும் ஆபத்துதான்...

    ReplyDelete
  22. ஹி ஹி கல்யாணம் போச்சே....

    ReplyDelete
  23. விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  24. இன்று என் வலையில்
    ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா?
    http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post_13.html

    ReplyDelete
  25. //இது ஜொள்ளு பதிவு அல்ல! //
    நிச்சயமா!!

    ReplyDelete
  26. தலைப்பு உள் குத்தா ????

    ReplyDelete
  27. பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  28. அந்த மணமகன் ஒல்லியாய் பார்த்து ஏமாந்திட்டார்...

    ReplyDelete
  29. ரைட்டு... மாம்ஸ்........

    ReplyDelete
  30. தக்காளி, பிரச்சனையான பதிவு போட்டும் எந்த பிரச்சனையும் வர்லையே அது ஏன்? ஹி ஹி

    ReplyDelete
  31. //இவங்க புஷ்டியா அழகா இருக்கறதா பாத்து தான் அந்த மாப்ள ஓகே சொன்னாராம்...இந்தியா போனதுக்கப்புறம் நேரில் இவங்களை சந்திச்சி பார்த்த அவர் இவங்களுடன் திருமணம் வேணாம்னு சொல்லிட்டாராம்..//

    ரொம்ப பாவமுங்க அந்த பொண்ணு..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி