ஆப்பிரிக்க கதவுகள்..1

வணக்கம் நண்பர்களே...கொஞ்ச நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக ஆப்பிரிக்க நாடான காங்கோ செல்ல வேண்டி இருந்தது...

அங்கு ஏற்ப்பட்ட அனுபவங்களின் கோர்வைகள் உங்களின் பார்வைக்கு....

ஆப்பிரிக்க கண்டத்தில் மத்தியில் அமைந்திருக்கும் பெரிய நாடு...நிலநடுக்கோடு மத்தியில் செல்வதால் வெப்பம் தகிக்கும் நாடு என்றும் கொள்ளலாம்...


நிர்வாக மொழி பிரெஞ்சு...தவிர எனக்கு சரியாக வாயில் நுழைய வாய்ப்பில்லாத மூன்று தேசிய மொழிகளும் உண்டு..(Lingala, Kikango மற்றும் Munukutuba தக்காளி சரியா வாசிக்க வரல ஹிஹி!)

பல நாடுகள் தங்கள் காலடியை பதிக்க ஆரம்பித்திருக்கிறது இந்த தேசத்தில்...குறிப்பாக பிரான்ஸ், பெல்ஜியம், தைவான் மற்றும் சீன ஆதிக்கம் வலுத்து வருகிறது. நாங்கள் சென்ற போது தலைநகரத்தில்(பிரேசாவில்லீ!)      இருந்து..கிட்ட தட்ட 1800 கீமீ தூரத்தில் இருந்தது அந்த குறிப்பிட்ட அணை(Dam) கட்டும் இடம்...


பல முக்கிய பொருள்கள் கிடைக்கும் நாடு இது...ஆனாலும், அதனை சரியான முறையில் சந்தைப்படுத்தவோ...தனி பிராண்டாக உருவாக்கவோ இவர்களிடம் வசதி இல்லை...இதை சரியாக சப்பை மூக்குகாரார்கள் பயன் படுத்தி வருகின்றனர்...குறிப்பாக வைரங்கள்(!)...


தலை நகரைத்தான்டினால் மின்சாரம் கிடையாது...அதுவும் நாம் பயணித்த விமானம் 10 பேர் அளவுக்கு இட்டு செல்லக்கூடியது(!)...தவிர மாலை ஆறு மணிக்குள் தரை இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடவேண்டும்...இல்லையேல் அவ்ளவுதான் ஓஹோஹோ!..(நமக்குதான் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரியாச்சே ஹிஹி!)


மக்கள் என்னை விட கொஞ்சம் நிறம் கம்மியாக இருந்தார்கள்(!)...எனவே வாங்க பழகலாம்னு அன்புடன் பழகினர்(!)...வெகு சிலரே அந்த இடத்தில் பார்க்க முடிந்தது...அடிக்கடி விலங்குகள் நடமாடும் இடமாதலால் துப்பாக்கி ஏந்திய இருவர் பாதுகாப்புக்கு வந்து இருந்தனர்..(நாங்கல்லாம் யாரு!..ஆமாம் யாரு!)

கொசுறு: நேரம் குறைவு காரணமாக சிறிது சிறிதாக பதிவிடுகிறேன் நண்பர்களே...நன்றி..!

தொடரும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. படிக்க ஆரம்பித்தவுடன் முடிஞ்சௌ போச்சே!தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 2. நல்லா தொடங்கியிருக்கீங்க மாம்ஸ்,

  சுட்டிப்பசங்க டான்ஸ் சூப்பரு.

  அங்கேயும் பவர்கட்டா?

  நிறைய ரஸ்க் சாப்பிடறீங்க.கிரேட்

  அயன் படத்துல சூர்யா இந்த நாட்டுக்கு தான வைரம் கடத்த போவாரு?

  ReplyDelete
 3. அருமையான் அறிமுகம்
  தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்
  கூடுமானவரையில் படங்களுடன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. suuppar சூப்பர் ஓப்பனிங்க் தம்பி.. கலக்கு.. மணீயனின் பயணக்கட்டுரை போல் ஹிட் ஆக வாழ்த்துகள்

  ReplyDelete
 5. நல்லாத்தொடங்கியிருக்கீங்க பாஸ் தொடர்ந்து சுவாவஸ்யமாக வரும் என்று எதிர்பார்கின்றேன்

  ReplyDelete
 6. இனிய மதிய வணக்கம் பாஸ்,

  கொங்கோ எல்லாம் போயிருக்கிறீங்களா?

  ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்ட அனுபவத்தை பொறுத்த கட்டத்தில் நிறுத்திட்டீங்க

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. நிறைய விஷயம் இருக்கும் போல தெரியுதே தக்காளி ஹி ஹி...!!

  ReplyDelete
 8. அடிக்கடி விலங்குகள் நடமாடும் இடமாதலால் துப்பாக்கி ஏந்திய இருவர் பாதுகாப்புக்கு வந்து இருந்தனர்..(நாங்கல்லாம் யாரு!..ஆமாம் யாரு!)//

  நாமளே ஒரு படுமோசமான விலங்காச்சே பயப்பட ஒன்னுமில்லை...

  ReplyDelete
 9. என்னமோ சொல்ல வர்றே சொல்லு தொடர்ந்து...

  ReplyDelete
 10. விமானத்துல ஏற இறங்குநீங்க அவ்ளோ தான் சொல்லி இருக்க மாப்பு அதுக்குள்ள பதிவு முடிஞ்சுருச்சா....ஹீ ஹீ ஹீ

  ReplyDelete
 11. பயணக்கட்டுரை...

  அசத்துக்க தல...

  ReplyDelete
 12. ரொம்ப குட்டியோன்டு பதிவா இருக்கே... மாம்ஸ்......

  ReplyDelete
 13. வியட்நாம் தொடர் அந்தரத்தி தொங்குது தல, அடுத்து காங்கோ தொடரா? ரெண்டையும் நல்லா ஓட்டுங்க

  ReplyDelete
 14. நல்லா தொடருங்க... ஆனா நீங்க இந்த மாதிரி உலகம் பூரா சுத்துறத படிக்கும்போது பொறாமையா இருக்கு...

  ReplyDelete
 15. வணக்கம் மாப்பிள..
  தொடக்கம் நன்றாக இருக்கின்றது இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னுடனும் ஒரு காங்கோ நாட்டுக்காரர் வேலை செய்தவர் செலவு செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் அவர்களை கேட்டுதான் கையில் காசு இருந்தால் அதை செலவளித்து முடிக்காமல் வீடு திரும்பமாட்டார்கள்.. தொடருங்கள் 

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி