ஆப்பிரிக்க கதவுகள் - இதோட ஓவர் (18++)

வணக்கம் நண்பர்களே...ஒரு சின்ன விஷயம் கெடச்சா அத வச்சி பல நாட்கள் ஓட்டும்(!) பதிவர்கள் மத்தியில் இந்த தக்காளியும் இடம்பெற்று விட்டான் என்று இந்த உலகம்(!) தூற்றக்கூடும் என்பதால் இந்த பகுதியுடன் முடித்து கொள்கிறேன்(கொல்கிறேன்!)

கொஞ்ச நாளா எந்த பதிவுலயும் இந்த 18++ காணோம் அதான் ஒரு விளம்பரத்துக்காக போட்டேன் ஹிஹி...

ஆப்பிரிக்க கதவுகள்..1

ஆப்பிரிக்க கதவுகள் - 2

நண்பருக்கு தொடையில் கடித்து உள்ளே நுழைய முயன்ற அந்த கருப்பனை(வண்டு ஹிஹி!) ஒரு துணி கொண்டு பிடுங்கி எறிந்தேன்...அதற்குள் அரை இன்ச் சதை காணாமல் போயிருந்தது!...கொஞ்சம் அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு டிஞ்சர் தடவி(ஊற்றி!) விட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வந்திருந்த பொறியாளர்கள் தடிமனான உடைகளை அணிந்து கொண்டு சுருண்டு படுத்து விட்டனர்(!)...நானும் அந்த உள்நாட்டு வழிகாட்டியும் பேசிக்கொண்டு இருந்தோம்...அந்த ஆள் சட்டென்று எதோ ஞாபகம் வந்து விட்டதாக கூறி எழுந்தார்..என்ன விஷயம் என்று கேட்டதற்கு..

தூக்கம் வரவில்லை என்றால் என் கூட வாரும் என்றும்...பயமா இருந்தால் வரவேண்டாம்(!) என்றும் கூறினார்...இப்படி சொன்னதுகப்புறம் போகலைன்னா நம்மள பத்தி கேவலமா நெனைக்க வாய்ப்பிருந்ததால்(!)...வாங்க போவோம்னு நானும் கெளம்பினேன்...

போறாரு போறாரு...போயிட்டே இருக்காரு...கிட்ட தட்ட முக்கால் மணிநேரம் கழிச்சி ஒரு இடத்துல நின்னோம்...பாத்தா பல குடில்கள் இருந்தது...அங்கே நான் கண்ட காட்சி...கொய்யால ஆங்கில படத்துல கூட பாத்து இருக்க முடியாது...அப்படி ஒரு டான்ஸ்...

ஜும்பாரே ஜும்பாரே ஜும்பர ஜும்பா...ஆண்களும் பெண்களும் நிர்வாண டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க...!

யே சாம் என்னாது இது...(எனக்கு நம்ம பன்னி குட்டி பூ மிதிக்கறது ஞாபகம் வந்துச்சி ஹிஹி!)

இங்கே இது அடிக்கடி நடக்கும்ன்னாரு(!)...


ஒரு பச்சை புள்ளைய கூட்டியாந்து இப்படி ஆட்டம் பாக்க விட்டுட்டயேய்யான்னு கொஞ்சம் புலம்பினேன்...ஒரு குடுவைய கையில கொடுத்து குடிங்க(!)...சூப்பரா இருக்கும்னு கொடுத்தாரு...கொஞ்சம் குடிச்சி பாத்தேன் நல்லாத்தான் இருந்துது(!)...கட கடன்னு குடிச்சிட்டேன்..

யோவ் இவ்வளவு குடிக்கூடாது...

போய்யா...எவ்ளோ தூரம் நடந்து வந்து இருக்கேன்..(கொஞ்ச நேரத்துல சுர்ருன்னு ஏறிப்போச்சி...முடியல முடியல...)

சரி கெளம்புவோம்னு சொல்லி கிளம்பினோம்...எவ்ளோ நேரம் நடந்தொம்னு ஞாபகம் வரல ஹிஹி...விடிஞ்சி ரொம்ப நேரம் கழிச்சி எழுந்து பாத்தேன்...

யோவ் டைம் என்ன...

மணி பத்து...(!)..என்னத்த சொல்றது...

இந்த டான்ச கொஞ்சம் பாருங்க ஹிஹி...


இப்படியாக போனது முதல் நாள் இரவு...இரண்டாவது நாள் வெளியில் எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தோம்..,.பய புள்ளைங்க சுத்தமான குடிநீருன்னு கேன்ல கொண்டு வந்த தண்ணியத்தான் குடிசிதுங்க...நாம யாரு(!) அப்படியே நடந்து போய் அந்த ஆத்து தண்ணிய கொண்டாந்து வச்சிக்கிட்டு குடிச்சோம்ல!...என்னமா இனிச்சிது அந்த ஆத்து தண்ணி...அப்படியொரு அழகிய இயற்க்கை காட்சிகள்...மனம் அப்படியே பறந்தது...

கொசுறு: நாம போகணும்னு இருந்தா யாரும் தடுக்க முடியாது...நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை உலகத்தின் வாசல்களுக்கு கொண்டு செல்கிறது...அந்த சக்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. ////நாம போகணும்னு இருந்தா யாரும் தடுக்க முடியாது...நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை உலகத்தின் வாசல்களுக்கு கொண்டு செல்கிறது.///

  சரியாச் சொன்னீங்க மாம்ஸ்...

  இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அழகாத்தான் சொல்லியிருக்கீங்க மாம்ஸ்

  எப்பிடியோ ரூம்ல வந்து படுத்தீங்களே

  அங்கேயே பிளாட் ஆகியிருந்தா !

  ReplyDelete
 3. தமிழ் 10 ல இணைச்சுட்டேன் மாம்ஸ்

  ReplyDelete
 4. கிளிப்புல இருக்குற இந்த டான்சுக்கும் நீ சொன்ன டான்சுக்கும் சம்பந்தமில்லையே....!!!

  ReplyDelete
 5. ஒரு சின்ன விஷயம் கெடச்சா அத வச்சி பல நாட்கள் ஓட்டும்(!) பதிவர்கள் மத்தியில் இந்த தக்காளியும் இடம்பெற்று விட்டான் என்று இந்த உலகம்(!) தூற்றக்கூடும் என்பதால் இந்த பகுதியுடன் முடித்து கொள்கிறேன்(கொல்கிறேன்!)//

  என்கிட்டே இதுக்கு மேலே சரக்கு இல்லைன்னு எப்பிடி சிம்பாலிக்கா சொல்லிட்டு ஓடுது பாரு டேய் டேய் நில்ரா நில்ரா....

  ReplyDelete
 6. ஒரு பச்சை புள்ளைய கூட்டியாந்து இப்படி ஆட்டம் பாக்க விட்டுட்டயேய்யான்னு கொஞ்சம் புலம்பினேன்...ஒரு குடுவைய கையில கொடுத்து குடிங்க(!)...சூப்பரா இருக்கும்னு கொடுத்தாரு...கொஞ்சம் குடிச்சி பாத்தேன் நல்லாத்தான் இருந்துது(!)...கட கடன்னு குடிச்சிட்டேன்..//

  அது என்ன பானம் நம்ம ஊர் கள்ளு மாதிரி இருந்துச்சோ...??

  ReplyDelete
 7. மாம்ஸ் எங்களைக்கூட ஒரு ரவுண்டு ஆப்ரிக்காவுக்கு கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துட்டீங்க... பயணக்கட்டுரை அருமை அதுலையும் அந்த கொசுறு டாப்..

  ReplyDelete
 8. ஒரு பச்சை புள்ளைய // எது நீரு பச்சபுள்ள?

  ReplyDelete
 9. //.இரண்டாவது நாள் வெளியில் எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தோம்..,// ஏன் என்ன ஆச்சு?

  ReplyDelete
 10. ஆனாலும் ஆப்பிக்கா போனதை சுவாரஸ்யமான ஒரு பதிவா தான் குடுத்து இருக்கீங்க..

  பகிர்வுக்கு நன்றி மாப்ள..

  ReplyDelete
 11. உங்கள் ஆபிரிக்க பயணத்தை சுவாரஸ்யமான பதிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாஸ்....

  நீங்கள் சொன்ன டான்ஸ் பகிர்ந்திருக்கும் வீடியோவில் காணாம்...ஹி.ஹி.ஹி.ஹி.....

  ReplyDelete
 12. அப்படியே நடந்து போய் அந்த ஆத்து தண்ணிய கொண்டாந்து வச்சிக்கிட்டு குடிச்சோம்ல!...என்னமா இனிச்சிது அந்த ஆத்து தண்ணி...அப்படியொரு அழகிய இயற்க்கை காட்சிகள்...மனம் அப்படியே பறந்தது.../

  அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. நாம போகணும்னு இருந்தா யாரும் தடுக்க முடியாது...நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை உலகத்தின் வாசல்களுக்கு கொண்டு செல்கிறது...அந்த சக்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

  .இனிய குழந்தைகள்
  தின நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. எப்படியோ விஷயம் கிடைச்சிடுத்து (பதிவு எழுத)

  ReplyDelete
 15. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லிருக்கலாம்!

  ReplyDelete
 16. //////

  !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஒரு பச்சை புள்ளைய // எது நீரு பச்சபுள்ள?

  ///////////


  Eai.. enga mama Block Pulla....

  ReplyDelete
 17. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்... மாம்ஸ்...

  ReplyDelete
 18. கொசுறு: நாம போகணும்னு இருந்தா யாரும் தடுக்க முடியாது...நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை உலகத்தின் வாசல்களுக்கு கொண்டு செல்கிறது...அந்த சக்திக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
  >>
  புதிய தத்துவம் எண் 16879

  ReplyDelete
 19. மாம்ஸ் பச்சபுள்ளை யாரு? மாம்ஸ் கடந்த இரண்டு பதிவுல அவரை பற்றி போடவே இல்லை.....

  ReplyDelete
 20. மாம்ஸ், எந்த ஊருக்கு போனாலும் நல்லா டான்ஸ் பாக்கறிங்க...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி