தக்காளியும் நாட்டு நடப்பும்!

வணக்கம் நண்பர்களே....


பதினைந்து வருடத்துக்கு முன் படிப்பை முடித்தவர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருந்த விஷயம் இது...இப்போது இருக்கும் மக்கள் மாறி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்....

டி.என்.பி.எஸ்.சி௦ - அரசு வேலைக்கான தேர்வு மையம்...இதனை அறியாதவர் இருக்க முடியாது....ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளையை அரசு வேலை வாய்ப்பு மையத்தில் பதிய சொல்லி வற்ப்புறுத்திய காலம் உண்டு...இது இன்றும் தொடருகிறது...இது ஒரு புறம் இருக்க...இந்த மையம் தான் பல மக்களின் கனவு வேலையை தருவதாக உள்ளது....


அரசு வேலை கிடைத்து விட்டால் வேறு பயமே இல்லை என்ற நிலைமை இன்றும் தொடருகிறது(!)....இதில் அரசு வேலையை பார்த்து பொறாமை படாதவர்கள் மிக குறைச்சலே...அவர்கள் அரசு வேலையை கிண்டல் செய்வதும் என்னை பொறுத்தவரை ஆற்றாமையே!....ஏனெனில், பல வேலைகள் வெறும் ஏட்டலவே என்பதால் ஹிஹி!.. 

இது இப்படி இருக்க இந்த மையத்தின் முதுகெலும்புகள் சோடை போய் நெடு நாளாகின்றன...சரியான இடத்தில் பணம் அளிக்கப்பட்டால் மட்டுமே வேலை கிடைக்கும் எனும் கையெழுத்திடாத சட்டம் அமுலில் இருக்கிறது....குறைந்த மக்களே நேரிடையான வேலையை திறமையால் பெறுகிறார்கள்...ஒவ்வொரு அதிகார மையமும் தனி தனியாக செயல் பட்டு வருவது இப்போது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது....இதை ஆளும் ஆட்சியாலினி கவனித்து தட்ட வேண்டிய இடத்தில் தட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன்............!

இப்போதைக்கு....

அங்காடி தெரு கடை உரிமையாளர்களுக்கு ஆப்பு நெடு நாள் கழித்து கிடைத்து இருக்கிறது...இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரு முதலாளிகள் என்பதை விட அதில் வேலை செய்து கொண்டு இருக்கும் தொழிலாளிகளே என்பது வருந்தத்தக்க விஷயம்....

அப்பா டக்கர் முதலாளிகள் நெடு நாளைக்கு பிறகு அரசின் கவனத்துக்கு வந்து இருப்பது மகிழ்ச்சியே....நல்ல வேலை எதுவும் பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன்(!) பல வருடங்களாக எதிர் பார்ப்பில் இருந்த விஷயம் இப்போது தான் முடிவுக்கு(!) வந்து இருக்கிறது...இதில் அண்ணாச்சி கடையில் மட்டும் 150 கோடி கரன்சி பணம் மற்றும் பெரும் அளவிலான நகைகள் கணக்கில் வராமல் இருந்திருக்கின்றன....ஏழைகளின் ரத்தம் இறைவனின் கண்ணீர்...பார்ப்போம் இது எந்த திசை நோக்கி செல்கிறது என்பதை...

நேருவுக்கு நோ சொன்ன திருச்சி மக்கள்...

திருச்சி தேர்தல் வித்தியாசமாக நடந்து முடிந்திருக்கிறது...ஸ்டாலின் கொக்கரித்த இடம்...பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் நேரு என்று சொல்லி இருந்தார்....அவர் சொன்ன வாக்கு வித்தியாசமே ஓட்டாகிபபோன பரிதாபம்...கை காலை கட்டி வைத்து தேர்தல் என்றார் முக...உண்மை தான் போல இனி நில வகையாறாக்களில் ஒன்னும் செய்ய முடியாது என்பதை சொல்லி இருக்கிறார்...மக்கள் இம்முறையும் இந்த ஆள் வேண்டாம் என்று ஒதுக்கு தள்ளி இருக்கிறார்கள் ஜெயிலில் இருந்து போட்டியிட்ட நேருவை..என்னே ஒரு நிதர்சனம்...

சரக்குக்கு அரசின் கவனம் தேவை...


தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் பெரிய அளவில் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றன...அதாவது சில்லறை திரும்ப கொடாததே அது...இதில் கணிப்பொறி மூலம் இதனை செயல் படுத்தலாம்....இதை ரேஷன் கடையில் வெளியில் சரக்கு கையிருப்பு என்பது போல எழுதி வைத்து விடுவதும்...சரியான சில்லறை அளிக்கவும் என்று போர்டு வைத்தால் சரக்கு பிரியர்களின் ஆதரவு பெருகும் அரசுக்கு...ஹிஹி! 

கொசுறு: இவை யாவும் நாளிதழ்களின் மூலம் கிடைத்த உங்கள் பார்வைக்கான நிகழ்சிகளே...நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. இது ஒரு நல்ல ஆரம்பம்! 2 மாடிகளுக்கு மேல் அங்கு கட்டக்கூடாது!எந்த நடவடிக்கைகளிலும் சிலர் பாதிக்கதன செய்வர்!

  ReplyDelete
 2. நாட்டு நடப்பை சரியாக விமர்சித்து உள்ளீர்கள்.
  அங்காடித்தெரு நடவடிக்கை.... கடைசியில் கல்லா கட்டுவதில் முடியும்.

  ReplyDelete
 3. Cocktail padhiva anne. Ellame nalla irukku.

  ReplyDelete
 4. செய்திக் கதம்பம் அருமை
  வாரம் ஒருமுறை இதுபோல் தங்கள்
  விமர்சனப் பார்வையோடு அலசலாம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. //அங்காடி தெரு கடை உரிமையாளர்களுக்கு ஆப்பு நெடு நாள் கழித்து கிடைத்து இருக்கிறது...இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரு முதலாளிகள் என்பதை விட அதில் வேலை செய்து கொண்டு இருக்கும் தொழிலாளிகளே என்பது வருந்தத்தக்க விஷயம்....//

  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிலைதான் வருத்தமளிக்கிறது மாம்ஸ்

  ReplyDelete
 6. கலக்கலா இருக்கே.

  ReplyDelete
 7. //இவை யாவும் நாளிதழ்களின் மூலம் கிடைத்த உங்கள் பார்வைக்கான நிகழ்சிகளே...நன்றி!//

  இதில் சில மட்டும் உங்கள் அனுபவம் என்று சொல்லமாட்டேன்.

  ReplyDelete
 8. ?>>>கொசுறு: இவை யாவும் நாளிதழ்களின் மூலம் கிடைத்த உங்கள் பார்வைக்கான நிகழ்சிகளே...நன்றி!

  hi hi hi ஹி ஹி ஹி

  ReplyDelete
 9. மசாலா டீ திருப்தி

  ReplyDelete
 10. செய்திகள் அருமை மாப்ள.
  அந்த கடைசி படம் ரொம்ப அருமை.

  ReplyDelete
 11. செய்திகள் அருமை பாஸ்

  ReplyDelete
 12. இந்த ஒரு மாசம் கஷ்டப் பட்டு வேலை செய்த தொழிலாளிகள் இந்த மாசம் சம்பளத்துக்கு என்ன செய்ய போறாங்களோ... வேற என்ன கந்து வட்டி கடன் தான்

  ReplyDelete
 13. ரொம்பநாள் கழிச்சி இப்பத்தான் பேப்பர் படிச்சிருக்காரு போல....

  ReplyDelete
 14. Pazhiyz paper ...padikkirathu than
  oru silathu nalla
  suvarasiyama irukkum....

  ReplyDelete
 15. நெரிசலான நேரங்களில் உயிருக்கு உத்தரவாதமில்லாதிருந்த ரங்கநாதன் தெரு இனியாவது சரியாகுமா என்று பார்ப்போம் ...

  ReplyDelete
 16. மாப்ள பதிவு எப்பவுமே டாப் தான் ...

  ReplyDelete
 17. வணக்கம் மாப்பிள
  அண்ணாச்சி கடையி வேலை செய்தவர்களை நினைத்துப்பார்கிறேன்.. அரசு நடவடிக்கையை ஆதரிக்கும் அதேவேளை அங்கு வேலை செய்தோர்க்கு ஏதாவது மாற்று செய்ய வேண்டும் அவர்கள் ஒவ்வொருவரையும் நம்பி எத்தனை பேரோ?? 

  ReplyDelete
 18. அந்த டிஎன்பிசி மேட்டர் ரொம்ப கொடுமை மாப்ள..

  ReplyDelete
 19. //
  அங்காடி தெரு கடை உரிமையாளர்களுக்கு ஆப்பு நெடு நாள் கழித்து கிடைத்து இருக்கிறது...இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரு முதலாளிகள் என்பதை விட அதில் வேலை செய்து கொண்டு இருக்கும் தொழிலாளிகளே என்பது வருந்தத்தக்க விஷயம்....

  ///
  உண்மைதான் நண்பா

  ReplyDelete
 20. ஆஜர்... மாம்ஸ்.....

  ReplyDelete
 21. திருச்சி மக்கள் லேசுபட்டவர்கள் அல்ல, செமையா கவனிச்சிருக்காங்க...!!!!

  ReplyDelete
 22. அரசு வேலைக்கு இப்பவும் நாயாபேயா ஒடுராங்களே எசமான்...!!!

  ReplyDelete
 23. உலவு'ல நீ இனைச்சியா அல்லது வேற யாரும் இனைச்சாங்களா???

  ReplyDelete
 24. டாஸ்மாக் பத்திக் கடைசியிலே சொல்லி இது காக்டெயில்தான்னு சொல்லிட்டீங்க!

  ReplyDelete
 25. அசத்தல் பதிவு!...வாழ்த்துக்கள் சகோ .ஒரு சின்ன வேண்டுகோள்
  தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
  காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
  என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
  கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி