இன்டர்போலும் தக்காளியும் கூட பாகிஸ்தானியும்!

வணக்கம் நண்பர்களே...


சில தினங்களுக்கு முன் இந்திய நிர்வாக அதிகாரி ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது...

ஹனாய் விமான நிலையம் சிறிதானாலும் அழகாய் இருந்தது...விமானங்கள் இறங்குவது மற்றும் கிளம்புவது போன்றவைகளை ஏறக்குறைய காணலாம்....அதை கண்டு கொண்டே நின்று கொண்டு இருந்தேன்...ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்தார்...நானும் ஹாய் என்றேன்...அவர் பேச ஆரம்பித்தார்...நீங்க இந்தியரா...

ஆமாமுங்க...நீங்க...

நானும் தான்...மெட்ராஸ்...

ஓ...அப்படியா...

ரொம்ப காலத்துக்கு முன் பிரான்ஸ்ல செட்டில் ஆயாச்சி...

அப்படிங்களா...இங்க என்ன வேலையா வந்து இருக்கீங்க...

நான் ஒரு இன்டர்போல் அதிகாரி...இங்கு என்னோட சக ஆட்கள் நார்வேல இருந்து வராங்க....அவங்கள கூட்டிப்போக வந்து இருக்கேன்....

அப்படியா....

(இதற்கிடையில் பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்...ஒருவரை நெருங்கிய நான் குறிப்பிட்ட பெயரை சொல்லி அழைத்தேன்...அவர்...)

என் பேர் அது இல்லை...

சாரி....

நீங்க....

இந்தியன்...

ஓ நான் பாகிஸ்தானியன்...நமஸ்தே பாய் சாப்...

அட...நமஸ்தே பாய்....

அப்புறம் இங்க எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன்...நல்ல அமைதியான தேசமில்லையா...

ஆமாம்...பை...

பை....

(மீண்டும் இன்டர்போல் அதிகாரி அழைத்தார்....சென்றேன்)

உள்நாட்டு விஷயங்களில் இருந்து உலக விஷயங்கள் வரை அளவளாவினோம்...ஹிஹி...

இங்க யாரையாவது பிடிக்க வந்து இருக்கீங்களா...

இல்ல..இங்க இன்டர்போல் மீட்டிங் நடக்குது...


ஆங்...நானும் கேள்விபட்டேன்...ரெண்டு நாள் முன்னாடி நிர்வாகத்துல சொன்னாங்க....ஆனா, பேப்பர்ல வரல...

அதே தான்...பல நாட்டுல தேடப்படும் குற்றவாளிங்க இப்படி அமைதியான நாடுகளுக்கு வந்து ஒளிஞ்சிக்கறது வாடிக்கையா போயிட்டு இருக்கு...

அப்படிங்களா...

ஆமாம் அவங்கள புடிக்கறதுக்கு தான் இந்த மீட்டிங்...

நடத்துங்க...அப்படியே நம்ம பக்கத்துக்கு நாட்டுகாராரு ஒருத்தரும் ரொம்ப நாலா லிஸ்ட்ல இருக்காரு போல...

ஓ அவரா....அவரு சர்வதேச நீதி மன்றத்துல ஒத்துக்கிட்டே ஆகணும்....இல்லைன்னா கடாபிக்கு ஏற்பட்ட நிலை ஏற்ப்படும்...

அப்படியா....அப்படி போடுங்க...

என்ன கொஞ்சம் லேட்டாகும்...ஆனா கண்டிப்பா அவருக்கு தண்டனை உண்டு...

கேக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்குங்க...பல லட்சம் மக்களை கொன்னு இருக்காரே...யார் மன்னிச்சாலும் காலம் மன்னிக்காதுங்க...


ரைட்டு வரட்டுங்களா..

ரைட்டு பை...

கொசுறு: மொக்க போட்டு ரொம்ப நாளாச்சி ஹிஹி அதேன்! இங்கு சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி உண்மயாய் நடந்தது எதுவும் கற்பனை அல்ல!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .
  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

  ReplyDelete
 2. ஆமா மாப்ள ரெண்டுநாளா எங்க ஆளைக் காணோம்?

  ReplyDelete
 3. நாட்டு நடப்பை அளித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. கொசுறு: மொக்க போட்டு ரொம்ப நாளாச்சி ஹிஹி அதேன்!///

  நானும் இத தான் நெனச்சிட்டு இருந்தேன். ரொம்ப நாளா மாம்ஸ் அனுபவம் எழுதலியேன்னு?


  அமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!

  ReplyDelete
 5. இன்டர்போல் ஆபீசர், உன்கிட்டே வந்து இன்டர்போல் அதிகாரின்னு சொன்னானா...??? ம்ம்ம்ம் லாஜிக் இடிக்குதே ராசா.....!!!!

  இன்டர்போல்'காரன் தன்னை வெளிக்காட்டிக்க மாட்டானே ம்ம்ம்ம் சரி...!!!

  ReplyDelete
 6. ஓ அவரா....அவரு சர்வதேச நீதி மன்றத்துல ஒத்துக்கிட்டே ஆகணும்....இல்லைன்னா கடாபிக்கு ஏற்பட்ட நிலை ஏற்ப்படும்...//

  இது மட்டும் நடந்துச்சுன்னா கிடாவெட்டி கும்பிடுவேன் நான்...

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. இன்டர்போல்காரனிடமே மொக்கை போட்டிருக்கீங்க மாப்ள

  ReplyDelete
 9. கனெக்சன் எல்லாம் பலமா இருக்கு நடத்துங்க நடத்துங்க

  ReplyDelete
 10. என்னவோ சொல்றீங்க!நம்புறோம்.

  ReplyDelete
 11. மாம்ஸ் இண்டர்போல் ஆபிசர்கிட்ட உங்க ஃப்ளாக் அட்ரஸ கொடுத்திட்டுங்களா?

  பாக்கிஸ்தான் ஆளுக சேட்டிங்கல வந்தா ஹிந்தி நடிகையை பற்றியே கேட்குறாங்க ஏன்னு? கேட்டு சொல்லுங்க....மாம்ஸ்

  ReplyDelete
 12. ஹையோ... மாம்சு.. மாம்..சு...
  என்ன இதெல்லாம்......

  ReplyDelete
 13. பக்கத்து நாட்டு காரன் சிக்கிடுவானா ....

  ReplyDelete
 14. ஹா.ஹா.ஹா.ஹா..மொக்கையா நானும் ஆரம்பத்தில் உண்மை என்று படித்தேன் அப்பறம் முன்னபின்ன அறிமுகம் இல்லாத ஓருவரிடம் இண்டப்போல் அதிகாரி சர்வசாதாரணமாக தன்னை அறிமுகப்படுத்துவாரா என்று சோசித்தேன்..
  ஓரு வேளை உங்களைப்பற்றி அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விட்டேன்

  அப்பறம் கீழே மொக்கை என்றதும் தான் எனக்கு தெளிவானது....ஹி.ஹி.ஹி.ஹி.......

  ReplyDelete
 15. மாம்சு இது மொக்கையா?உண்மையில் நடந்ததா?

  ஒரே கண்பியூசன்!

  ReplyDelete
 16. மாப்ள நீ சொன்னது எப்ப நடக்கும் சீக்கிரம் பண்ண சொல்லுய்யா... காத்து கிடக்கிறோம்

  ReplyDelete
 17. எங்க சார் இருந்து இந்தக் காணொளிகளைப் போறுக்குறீங்க?...
  மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

  ReplyDelete
 18. //இராஜராஜேஸ்வரி said...

  யார் மன்னிச்சாலும் காலம் மன்னிக்காதுங்க...///

  மாம்ஸ்.... உம்மை யாரோ திட்டுறாங்க...

  ReplyDelete
 19. நன்றி... மாம்ஸ்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி