காப்பி பேஸ்ட் வீடியோக்கள் - நண்பருக்கு என் பதில்!

வணக்கம் நண்பர்களே...காப்பி பேஸ்ட் அப்படின்னாலே எல்லோரும் பொதுவா நெனசிக்கிறாங்கப்பா!....அதை பற்றி ஒரு நண்பர்...என் பதிவில் தொடர்ந்து கருத்திட்டு வருகிறார்..அவருக்கான பதில் இது...

இங்கு நான் பதியும் வீடியோக்கள் you tube தளத்தில் இருந்தே பெறப்படுகின்றன என்பது யாவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...இதற்க்கு நான் எதுவும் சன்மானம் கொடுப்பதில்லை(ஆங்!) என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில்(ஹிஹி!)...நானும் இந்த தளம் மூலமாக வருமானம் ஏதாவது வருமான்னு விளம்பரம் போட்டு காத்து இருப்பவனல்ல என்பதையும் தெளிவு படுத்துகிறேன்..!

பல புகழ் பெற்ற(!) தமிழ் இதழ்கள் போடும் கட்டுரைகளை பிரசுரிக்க கூடாது என்று காப்பி ரைட் வைத்திருக்கும் போதே பலர் அதனை காப்பி செய்து வருகின்றனர்...வியாபார பத்திரிக்கைகள் வெளியிடுபவை இவை!..உண்மையில் இதில் பல வெளிநாட்டு பதிவர்கள்(நான் உற்பட!) படித்து வந்ததும் உண்மை...!

ஆனால், யான் பதிவு செய்யும் கிச்சிளிக்காஸ் எனும் வீடியோ பதிவுகள் பற்றி சொல்ல வேண்டுமானால்...வீடியோ பதிவு செய்யும் பல நண்பர்கள் Youtube தளத்தில் பலர் பார்க்க வேண்டும் என்பதால் தான் பதிவு செய்கிறார்கள்...அதுவும் பொதுவாக பலருக்கு நேரம் இருப்பதில்லை..இருந்தாலும் படிப்பதற்கு கிடைப்பதென்னவோ அரசியலும் மொக்கைகளும் தான்(!)...

இந்த நிலைமையில்...சிரிக்க மற்றும் அதனூடே சிந்திக்க வீடியோ எனும் விஷயம் தேவைப்படுகிறது..அதாவது காணொளி மூலம் தன்னை மறந்து சிரிப்பவர்களுக்காகவே இந்த கிச்சிளிக்காஸ் தொடர் காணொளி பதிவு செய்து வருகிறேன்...


நான் செய்வது தவறு எனில் கருத்து இடுபவர்கள் தாராளமாக சுட்டி காட்டலாம்...என் பதிவில் இருக்கும் கருத்து பெட்டியை பூட்டி வைத்து எனக்கு பழக்கமில்லை..நண்பர்களே..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

நன்றி...

கொசுறு: பதிவில் டிஸ்கி போட்டு விட்டு அவரு சொன்னாரு இவரு வருத்தப்பாட்டாருன்னு சொல்லி போட்ட கருத்துக்களை எடுத்துவிடுவதையும் இந்தப்பதிவன் கண்டிக்கிறான் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

38 comments :

 1. முதல் யூடியூப் [[டியூப் லைட் அல்ல]]

  ReplyDelete
 2. நான் செய்வது தவறு எனில் கருத்து இடுபவர்கள் தாராளமாக சுட்டி காட்டலாம்...//

  தாராளமா சண்டைக்கு வாங்கன்னு சிம்பாலிக்கா சொல்றானாம் ராஸ்கல்...

  ReplyDelete
 3. அட.... தன்னினலை விளக்கம்? என்னாச்சு மாம்ஸ்க்கு.

  ReplyDelete
 4. காமெடி வீடியோ கிளிப்புகள் பார்க்கும் போது வேலையில் இருக்கும் [[!]] என்னைப்போன்றவர்களுக்கு மனசு லேசாகிறது, குறிப்பாக டி ஆர் ராஜேந்தரின் கிளிப்புகள்...!!!

  ReplyDelete
 5. யூட்யூப் வீடியோக்களை பகிர்வதில் தவறு எதுவும் இல்லை. அதனை பகிர்வதற்காக தான் Share என்னும் வசதியை வைத்துள்ளார்கள். அதனால் நீங்கள் தாராளமாக பகிரலாம்.

  ReplyDelete
 6. @தமிழ்வாசி - Prakash

  வாங்க மாப்ள...ஒரு ஜிஞ்சினுக்கான் ஜினுக்குக்காக போட்டேன் ஹிஹி!

  ReplyDelete
 7. @Abdul Basith

  வாங்க மாப்ள...அதை இன்னும் சிலர் சரியா புரிஞ்சிக்கலையே என்னங்க பண்றது ஹிஹி!

  ReplyDelete
 8. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணன் மனோ எங்கிருந்தாலும் வரவும்..மரியாதையா கொசுறுக்கு பதில் சொல்லிட்டு போகவும் ஹிஹி!

  ReplyDelete
 9. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 10. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 11. மாப்ள வழக்கம் போல பதிவுல பாதி புரியல ஆனால் வீடியோ பதிவு போடுவது Copy right பிரச்சினை கிடையாது....

  ReplyDelete
 12. //நான் செய்வது தவறு எனில் கருத்து இடுபவர்கள் தாராளமாக சுட்டி காட்டலாம்...என் பதிவில் இருக்கும் கருத்து பெட்டியை பூட்டி வைத்து எனக்கு பழக்கமில்லை..நண்பர்களே..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...//

  தாராளமாய் தொடருங்கள்...

  தொடர்ந்து வருகிறோம்..

  ReplyDelete
 13. ஆமாம் என்ன ஆச்சு மாம்ஸ்

  அங்கே கவிதைவீதி அண்ணாரும் தன்னிலை விளக்கம் இங்கே நீங்களும் ஏன் இப்படி....?

  ஒன்னுமே புரியல..

  ReplyDelete
 14. என்ன மாப்ள ஆச்சு. இது குற்றம் சொல்லும் மற்றும் தன்னிலை விளக்கம் கூறும் வாரமா? எல்லோரும் இப்படியே எழுதுறீங்க?

  ReplyDelete
 15. விக்கியுலகம் Says:
  November 17, 2011 4:28 PM
  @MANO நாஞ்சில் மனோ

  அண்ணன் மனோ எங்கிருந்தாலும் வரவும்..மரியாதையா கொசுறுக்கு பதில் சொல்லிட்டு போகவும் ஹிஹி!//

  போடாங் என் வென்று.......ஹி ஹி.....

  ReplyDelete
 16. உண்மையில் தங்கள் பதிவின் மூலம்தான்
  நான் நல்ல பார்க்கவேண்டிய காணொளிகளைக்
  காணுகிறேன் தங்கள் பதிவின் மூலம் அன்றி
  தேடிப் பார்க்க எனக்கு பார்க்க போதிய அவகாசம்
  இருக்காது.தயவு செய்து தொடர்ந்து தரவும்
  உங்கள்: கிச்சிளிகாஸின் பரம ரசிகன்
  முதல் ரசிகன் நான்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. அட என்னா பாஸ் எல்லா இடமும் ஒரே பிரச்சனையாக இருக்கு....

  உங்கள் வீடியோ பதிவுகள் ரசிக்கும் படி உள்ளது அதிலும் கடைசியாக ஒரு வீடியோ இணைபீங்க பாருங்க....அந்த வீடியோவை பார்க்கவே நான் உங்கள் வீடியோப்பதிவுக்கு வருவதுண்டு(அப்ப மற்றதெல்லாம் பாக்கிறது இல்லையா என்று கேட்காதீங்க)...

  நீங்கள் தொடருங்கள் பாஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வலையுலகத்திலே
  என்னமோ நடக்குது
  புரியலை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. தன் குழந்தைகள் விரல் கடித்து விளையாடுவதை வெளியிட்ட தந்தையின் வீடியோவை பார்த்தவர்கள்
  38கோடிபேர்,அவருக்கு கூகுல் கொடுத்த தொகை
  80 லட்சம் இந்திய மதிப்புள்ள பணம், பணத்தை பெறும் போது அவர் தன் வீடியோவை share பன்னியவர்களுக்கு நன்றி என்று கூறினார்.
  வலைபதிவுல காப்பி செய்வது அழைக்காத திருமணத்தில திருட்டுத்தனமா சாப்பிடற மாதிரி!
  youtubeல இருந்து போடுவது வெத்திலை பாக்கு வெச்சு அழைச்ச நண்பன் திருமணதிற்கு போகிற மாதிரி மாமா நீங்க பீல் பண்ணாதீங்க....

  Charlie bit my finger - again !

  ReplyDelete
 20. உங்க கிச்சிளிக்காசின் தீவிர ரசிகை நான். அது காப்பி பேஸ்ட் வகையிலேயே வராது.யு continue

  ReplyDelete
 21. தக்காளி சார், எவனோ ஒரு லூஸ் கிச்சிளிக்காஸ் காப்பி அப்படின்னு சொன்னா, அதுக்கு பதிவு வேற போடுவீங்களா? அதான் தெளிவா இருக்கே யு ட்யூப் அப்படின்னு... அப்புறம் இன்னும் என்ன புடலங்காய்க்கு விளக்கம் எல்லாம்.. கண்டுக்காம போவீங்களா.. அவன் அவன் பதிவு மொத்தத்தையும் அப்படியே காப்பி அடிக்கிறானுங்க...

  ReplyDelete
 22. ரசிக்கும் அருமையான யூட்யூப் பகிர்வுகள்..

  ReplyDelete
 23. போங்க மாம்ஸ் எவனோ எதோ சொன்னான்னு நீங்க நிப்பாட்டிறாதீங்க நாங்க எல்லாம் யூடியூப்ல தேடிக்கிட்டு இருக்க முடியாது !!?

  ReplyDelete
 24. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...
  ok ok மாம்ஸ்... Relax

  ReplyDelete
 25. மாப்ள வீடியோ தானே ? இதிலென்ன இருக்கு?

  எனக்கு போர் அடிக்கும் போதெல்லாம் கிச்சிளிகாஸ்ல டிஆர் வீடியோ பார்ப்பேன்..

  ReplyDelete
 26. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதிவும் தப்பில்ல ...

  ReplyDelete
 27. மாம்சு இது என்ன பொங்கலு?

  ஆனா யூடியூப்ள தேடினாலும்(நாங்க)
  நீங்க போடுற மாதிரி கிசிளிக்காஸ் கிடைக்காது

  ReplyDelete
 28. புரிந்துக்கொள்ளாதவர்களுக்காக (சகோ சூர்யஜீவா சொன்னது போல் லூசுகளுக்காக) போடபோட்ட இந்த விளக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

  அங்கே போய் என்னால நேரம் ஒதுக்கி தேட முடியாத விடியோ க்ளிப்கள் உங்களின் மூலமாக தான் கிடைக்கப்பெறுகிறேன். இந்த சேரிங்கை காப்பி பேஸ்ட்டில் சேர்த்த மடையர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

  ReplyDelete
 29. விளக்கம் சொல்லியே வம்பாப் போயிடுவோம் போல!

  ReplyDelete
 30. டென்சன் நிறைந்த பல நேரங்களில், கிச்சிளிக்காஸ் மனதை லேசாக்கியுள்ளது என்பதே என் கருத்து. தொடருங்கள்.

  ReplyDelete
 31. >>சசிகுமார் Says:
  November 17, 2011 5:06 PM

  மாப்ள வழக்கம் போல பதிவுல பாதி புரியல

  haa haa haa ஹா ஹா ஹா செம

  ReplyDelete
 32. என் அறிவுக்கண்ணை திறந்ததற்கு நன்றி.. இத்தனை நாட்களாக நான் தவறாக நினைத்திருந்தேன்.. பிரிண்ட்டிங்க் மூலமாக அடுத்தவர் படைப்பை எடுத்து போட்டால் அது காப்பி பேஸ்ட்... அது உலக மகா தப்பு.. ஆனா யாரோ எடுத்த வீடியோவை நாம எடுத்துப்போட்டா அது பொது ஜன சேவை .. சபாஷ்.. சூப்பர்.. இந்த மேட்டர் இத்தனை நாளா எனக்கு தெரியா,ம போச்செ..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி