மக்களே பொழப்ப பாக்காதீங்க! - இப்படிக்கு விலையேற்றம்!

வணக்கம் நண்பர்களே..."வாளு போச்சி கத்தி வந்தது நம்மோட கணக்கு" - இப்போதைய லேட்டஸ்ட் தமிழக நிலை என்பது எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கிறது....

அம்மாவும்(!) இந்த விலையேற்றத்துக்கு தாத்தா(!) தான் காரணம் அப்படின்னு சொல்லிட்டாங்க...பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்துல இயங்குறதால தான் இந்த விலை ஏற்ற நிலை என்று கூறி தன் நிலையை(!) கூறிட்டாங்க....

ஏம்மா..நீங்க எம்புட்டு தைரியசாலி(!)...தாத்தாவும் அவரு குடும்பமும் அடிச்சி வச்சி, பினாமி பேருல இருக்க சொத்தை எல்லாம் கண்டு பிடிக்க தெரிஞ்ச உங்களுக்கு..அந்த பணத்தை பிடுங்கி அரசு கஜானாவுக்கு கொண்டு வரணும் என்பது ஏன் இன்னும் நினைவுக்கு வரலை...

ஏன்...ஒன்லி அரெஸ்ட் அண்ட் ஜெயில்ல போடுறதால பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பயன்(!?)...ஜெயிலுக்கு போறது என்னமோ மாமா வீட்டுக்கு போறாப்போல ஆளாளுக்கு உள்ள போய் உக்காந்து கிட்டு சுகமா இருக்காங்க(!)...இந்த அதி நவீன சுரண்டல் மூலமா நேரடியா பாதிக்கப்பட்ட பொது ஜனத்துக்கு மீண்டும் விலை ஏற்றம் என்ற கொடுமையான ஷாக் கொடுத்திருப்பது எந்த விதத்தில் ஞாயம்....


உங்களுக்கு உழைப்பேன்னுட்டு...மக்கள் பொழப்பை கெடுப்பேன் என்பதில் உறுதியாய் இருப்பேன்னு சொல்றீங்களா....திடு திப்புன்னு ஏத்திப்புடவேண்டியது...அப்புறம் 10% குறைசிக்கறேன் 20% ன்னு குறைசிக்கறேன் சொல்றது...இது என்ன துணிக்கடயா, பாத்திரக்கடயா....

பழம் பெருச்சாளிங்க கிட்ட இருந்து பிடுங்கிய பணங்கள் எங்கே...அதை ஏன் வெள்ளை அறிக்கையா வெளியிட மாட்டீங்கறீங்க(வேணும்னா பச்சைல!)...

எப்பத்தான் மக்கள் நிம்மதியா வாழ முடியும்...எப்ப பாரு கசப்பு மருந்து கொடுக்கரதுலையே உங்க நிர்வாகத்த ஓட்டிட்டு இருக்கீங்களே....பய புள்ள நெஜாறு(!) இல்லாம டவுனுக்கு வந்த ஆளுகிட்ட எடுத்தாலே ரெண்டு செம(!) பட்ஜெட் போடலாமே...

ஏன் செய்ய மாட்டீங்கறீங்க...என்ன பிரச்னை வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் அண்டர் ப்ளே அதாவது என்(!) சொத்தை நீ பிடுங்காதே...நீ கொள்ள அடிச்சத நான் பிடுங்க மாட்டேன்னு ஏதாவது MOU (Memorundum of Understanding) ஒப்பந்தம் போட்டு கிட்டு மக்களை முட்டாளாக்கிட்டு இருக்கீங்களா...

சின்ன நாடுகளில் எல்லாம் இன்று பெட்ரோல் விலை 1$(ரூபாய் 50!) இருக்கும்போது...இந்த அளவுக்கு அதிகமாக வசூலிப்பது ஏன் என்று மத்திய நிர்வாகத்தை கண்டித்து நடவடிக்கை எடுக்க வைக்க(ஸ் அபா!) போராட வேண்டியது உங்கள் கடமையல்லவா...


எதுக்கெடுத்தாலும் வேல வெட்டிய விட்டுபுட்டு மக்கள் தான் இறங்கி போராடனுமா....அதுக்கு தான் அரசியல்ல இம்மாம் பெரிய பொறுப்பான வேலைய உங்களுக்கு மக்கள் கொடுத்து அழகு பாக்குறாங்களா....

கொசுறு: பொறுப்பான பதிலை எதிர்ப்பார்க்கும் ஒரு தமிழன் அலைஸ் இந்தியனாக தக்காளி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

49 comments :

 1. அந்த பணத்தை பிடுங்கி அரசு கஜானாவுக்கு கொண்டு வரணும் என்பது ஏன் இன்னும் நினைவுக்கு வரலை.
  //


  இது நடக்க கூடிய காரியமா?

  ReplyDelete
 2. பய புள்ள நெஜாறு(!) இல்லாம டவுனுக்கு வந்த ஆளுகிட்ட//

  மாப்ள இது புரியலையே?

  ReplyDelete
 3. Poiducha.....
  Yovu...karunu....nanthan
  inga refresh pannikkittu
  irukkenla.....
  Athukkulla enna avasaram....
  Unakku ?????

  ReplyDelete
 4. எதுக்கெடுத்தாலும் வேல வெட்டிய விட்டுபுட்டு மக்கள் தான் இறங்கி போராடனுமா....அதுக்கு தான் அரசியல்ல இம்மாம் பெரிய பொறுப்பான வேலைய உங்களுக்கு மக்கள் கொடுத்து அழகு பாக்குறாங்களா....

  //
  மாப்ள நல்லாத்தான் கேட்குது, அம்மா இதை கேட்கணுமே?

  ReplyDelete
 5. NAAI-NAKKS said...
  Poiducha.....
  Yovu...karunu....nanthan
  inga refresh pannikkittu
  irukkenla.....
  Athukkulla enna avasaram....
  Unakku ?????// maapla kaalaiyilirunthu aaniyo aani.. vanthavudan thalaiverthaan pathivu pottu irunthaar.. he..hee..

  ReplyDelete
 6. Thakkalia..oru thodar pathivukku
  kuppittirukken......
  Thakkali pathivu continue
  pannala.....en diskiya pakkavum...

  Illatti antha online karan mathiri
  nanum arambichiduven......
  Antha payam irukkattum
  aama solliputten.....

  ReplyDelete
 7. 3 comment pottuten...
  Ini pathiva padikka polama..???????????

  ReplyDelete
 8. உங்க வேலையை சரியா பண்ணாம ஏன் இப்பிடி அடுத்தவங்களை குறை சொல்லுறீங்க மாம்ஸ்?

  ஓட்டு ஒழுங்கா போட்டு இருந்தா இன்னைக்கு இப்பிடி வருத்தப்பட்டு இருப்பீங்களா?

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....

  ReplyDelete
 9. Iyyoooooo
  ithu AMMA pathiva..????
  Thakkali...veli urrla irukkar....
  Nama ul nattila irukkom.....so.....
  All comments...go to spam....
  He...he.....

  ReplyDelete
 10. மாப்ள கேள்வியெல்லாம் நல்லாத்தான் கேட்டிருக்கீங்க, இப்பெல்லாம் ஆட்டோ கிடையாது பாஸ், நிலஅபகரிப்பு வழக்குதான், பார்த்து சூதானமா நடந்துக்குங்க.

  ReplyDelete
 11. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  ஏன்யா எது நடக்கதுங்கர...நேத்து வரைக்கும் பென்ஸ்ல போயிட்டு இருந்தவங்க...இன்னைக்கு ஜெயில் பெஞ்சுல உக்காந்து இல்லயா..அது போல ஹிஹி!

  ReplyDelete
 12. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  இதுக்கு தான் அடிக்கடி சென்னைக்கு போய் தமிழ் கத்துக்கன்னு சொன்னே கேட்டியா..உள்ளடைன்னு நீர் சொல்றத தான் நான் சொல்லி இருக்கேன் ஹிஹி!

  ReplyDelete
 13. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  கேக்கும்....ஆனா அந்த ஒலிபெருக்கி மண்டையன் கூட இருந்தா எப்படி கேக்கும் ஹிஹி!

  ReplyDelete
 14. @NAAI-NAKKS

  யோவ் அது தொடர் பதிவு இல்ல முடிவு தேடும் பதிவு ஹிஹி!

  ReplyDelete
 15. @ஜ.ரா.ரமேஷ் பாபு

  ஓட்ட ஒழுங்க போடுவது எப்படின்னு தான் அண்ணன் உணவு அவர்கள் ட்ரைனிங் கொடுத்தாரே...ஏன்யா உனக்கு ஞாபகமில்ல ஹிஹி!

  ReplyDelete
 16. @நண்டு @நொரண்டு -ஈரோடு


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க!

  ReplyDelete
 17. @NAAI-NAKKS

  அய்யயோ நான் தான் தெரியாம போட்டுட்டனா..இது தாத்தா ஆட்சின்னா பரவாயில்லையே...சாமி...என்ன நடக்கப்போகுதோ!..பதிவு போட்ட தக்காளியே இப்படி நடுங்கரான்னா..கமன்ட் போட்டவங்க நிலைமை...ஸ் அபா!

  ReplyDelete
 18. @கும்மாச்சி

  நான் என்னய்யா மாப்ள நிலசுவான்தாரனா...ஹிஹி!

  ReplyDelete
 19. புலம்பறது தவிர வேற ஒன்னும் பண்ண முடியாது...

  ReplyDelete
 20. வணக்கம் அண்ணே,
  நல்லா இருக்கிறீங்களா?

  ReplyDelete
 21. அண்ணே மக்கள் போரட வேண்டும் எனும் சமுதாய முன்னேற்றக் கருத்தினையும், தங்களின் இப் பதிவினையும் வரவேற்கிறேன்!
  ஆனால் அரசிற்கு எதிராக கிளம்பினாலே போதும்!
  நம்ம இரு நாடுகளிலும்
  ஒன்னு ஆளை முடிக்கிறாங்க இல்லேன்னா பணத்தை கொடுத்து ஆளை அரசின் பக்கம் வாங்கிடுறாங்களே!
  எப்போ நியாயத்தின் பக்கம் விடிவு கிடைக்கும் அண்ணே?

  ReplyDelete
 22. கத்தி போச்சு அருவாள் வந்தது டும் டும் டும் இனியும் என்னெல்லாம் வருமோ டும் டும் டும்...?

  ReplyDelete
 23. ஏன்யா எது நடக்கதுங்கர...நேத்து வரைக்கும் பென்ஸ்ல போயிட்டு இருந்தவங்க...இன்னைக்கு ஜெயில் பெஞ்சுல உக்காந்து இல்லயா..அது போல ஹிஹி!//

  அப்போ ஜெயில்ல அம்புட்டு வசதியும் இருக்கா...??

  ReplyDelete
 24. வழக்கம் போல் திட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்கவேண்டியதுதான்!

  ReplyDelete
 25. //தாத்தாவும் அவரு குடும்பமும் அடிச்சி வச்சி, பினாமி பேருல இருக்க சொத்தை எல்லாம் கண்டு பிடிக்க தெரிஞ்ச உங்களுக்கு..அந்த பணத்தை பிடுங்கி அரசு கஜானாவுக்கு கொண்டு வரணும் என்பது ஏன் இன்னும் நினைவுக்கு வரலை...//

  கரெக்ட்டான வழி மாம்ஸ்..

  இதை செஞ்சாலே விலையேற்றம் வர வாய்ப்பே இல்லை.

  லட்சத்தி எழுபத்தாராயிரம் கோடி இல்லைனாலும் கடைசிக்கு 2000 கோடியாவது இவர்கள் சுருட்டியிருப்பார்களே...!

  ReplyDelete
 26. ஸலாம் சகோ.விக்கி.
  கலக்கல் பதிவு. செமை கேள்விகள்.

  //... MOU (Memorundum of Understanding) ஒப்பந்தம் போட்டு கிட்டு மக்களை முட்டாளாக்கிட்டு இருக்கீங்களா...//---சரியா சொன்னீங்க சகோ...

  எனக்கும் இந்த டவுட்டு ஆரம்ப காலத்திலே இருந்துச்சு... ஆனால், அப்புறம் இல்லை. ஏன்னா மெய்யாலுமே இதுதான் இருக்குன்னு தெளிவா புரிஞ்சிரிச்சு. டவுட்டே இல்லாம..!

  ReplyDelete
 27. முதல் வரியில் "வாளா ?" "வாலா?" விக்கி வால் தான் சரி என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 28. //எதுக்கெடுத்தாலும் வேல வெட்டிய விட்டுபுட்டு மக்கள் தான் இறங்கி போராடனுமா....அதுக்கு தான் அரசியல்ல இம்மாம் பெரிய பொறுப்பான வேலைய உங்களுக்கு மக்கள் கொடுத்து அழகு பாக்குறாங்களா....
  //

  அவனுங்க தான் ஊழல் செய்வதே முக்குய வேலையா இருக்கே

  ReplyDelete
 29. // விக்கியுலகம் said...
  @ஜ.ரா.ரமேஷ் பாபு
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ஓட்ட ஒழுங்க போடுவது எப்படின்னு தான் அண்ணன் உணவு அவர்கள் ட்ரைனிங் கொடுத்தாரே...ஏன்யா உனக்கு ஞாபகமில்ல ஹிஹி!//
  அய்யா, நான் சொன்னது ஓட்டு போடுவது எப்படின்னு. ரமேஷ் பாபு சார் கேட்பது:ஓட்டு ஒழுங்கா போட்டு இருப்பீங்களா?ன்னு!நோட் திஸ் யுவர் ஆனர்.

  ReplyDelete
 30. இன்னும் கொஞ்ச நாள்கள் விலையேற்றம் பற்றி கத்திட்டு இருப்போம். அப்புறம் இன்னொரு பிரச்சனை வந்திரும். இத மறந்திருவோம்...

  ReplyDelete
 31. கொசுறு: பொறுப்பான பதிலை எதிர்ப்பார்க்கும் ஒரு தமிழன் அலைஸ் இந்தியனாக தக்காளி!////

  கொசுறு: பொறுப்பான பதிலை எதிர்ப்பார்க்கும் ஒரு தமிழன் அலைஸ் இந்தியன் அலைஸ் வியட்நாம் தக்காளி!

  ReplyDelete
 32. என்ன தேசமோ
  இது என்ன தேசமோ
  இங்கு பொய்கள் கூடியே
  ஒரு நியாயம் பேசுமோ
  தர்மம் தூங்கிப் போகுமோ
  நீதி வெல்லுமோ
  இங்கு வேதமாகுமோ
  என்ன தேசமோ
  இது என்ன தேசமோ

  ReplyDelete
 33. மாம்ஸ் நல்லா கேட்டீங்க போங்க, அதான் எலைட் மார்ட் வரப்போகுதுள்ள அப்புறம் என்னவாம்???? நமக்கு சரக்கு முக்கியம் மாம்ஸ்

  ReplyDelete
 34. மாமா..வியட்நாம்ல இருந்துட்டு எங்களுக்காக கூவற பாரு...எனக்கு அளுவாச்சி அளுவாச்சியா வருது...!!! நாங்க கூவுனா சிறக உடைச்சிடுவானுக...

  ReplyDelete
 35. பதிலில்லா கேள்விகள் ! அரசியலார் இங்கு கேலரியில் இருக்கும் ரசிகர்களுக்காக விளையாடுகின்றனர்! யாருக்கும் நிர்வாகத் திறமை இல்லை!

  ReplyDelete
 36. கரீட்டா சொன்னீங்க த்தலிவா!!

  ReplyDelete
 37. அயோக்கியர்களின் கடைசிபுகலிடம் அரசியல்என்றார் பொர்னாட்ஷா.தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால்தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் என்றார் கண்ணதாசன் இதில் தமிழக மக்கள் எந்த ரகம்.

  ReplyDelete
 38. எதுக்கெடுத்தாலும் வேல வெட்டிய விட்டுபுட்டு மக்கள் தான் இறங்கி போராடனுமா....அதுக்கு தான் அரசியல்ல இம்மாம் பெரிய பொறுப்பான வேலைய உங்களுக்கு மக்கள் கொடுத்து அழகு பாக்குறாங்களா....


  கேள்வி பிறந்தாயிற்று!

  பதில் எப்போ கிடைக்கும்????

  ReplyDelete
 39. நியாயமான கருத்துக்கள்

  ReplyDelete
 40. பதிவுல மானாவாரியா கேள்விக்குறிகளையும் ஆச்சர்யகுறிகளையும் அள்ளித் தெளிக்கிறீங்களே... இன்னா மேட்டர்...

  ReplyDelete
 41. கேள்விக்குறிகள் ஆச்சரியக்குறிகளாக நிமிரட்டும்!!??

  ReplyDelete
 42. மாப்ள நம்மளால புலம்பத்தான் முடியும் போலிருக்கிறது.

  ReplyDelete
 43. ஆனா ஊன்னா கசப்புமருந்து குடுக்குறாங்க ............
  உண்மையில் கசப்புமருந்து தேவைபடுவது மக்களுக்கள்ள உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்குதான் .
  மருந்து எல்லாம் ரெடியா இருக்கு. என்ன கருமம் அதை உங்களுக்கு குடுக்க ஒரு அஞ்சு வருஷம் காத்திருக்கணும் ..

  ReplyDelete
 44. அப்பாடா.. மக்களூக்கு யூஸ் ஆகற மாதிரி ஒரு போஸ்ட் போட்டிருக்கான் தக்காளி

  ReplyDelete
 45. வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி