என்னைப்பாதித்த தோழிகள்!

வணக்கம் நண்பர்களே...



கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.

என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.


அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):

எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).
இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லப்படாதுள்ள!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப் பொளந்திடுவா! அவ்ளோ பொறுமைசாளின்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).


ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)

இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்ன நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு எங்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?
இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.


இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)

இவங்க பெரிய வரைகலை நிபுணிங்க, எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்ககாவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.

மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது....... அவ்வளவு கொடியவனா நான்.....

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

24 comments :

  1. காதல் தோல்வி என்ன எல்லாம் செய்ய தூண்டுகிறது. சோக பதிவு

    ReplyDelete
  2. சந்தோஷமாக படித்துக் கொண்டே வந்தேன்
    கடைசியில் மிச்சத்தைப் படித்தவுடன்
    மனம் உடைந்து போனேன்
    பொதுவாக என வேறு ஏதாவது இருந்து
    தொலைக்கக் கூடாதா என எரிச்சல் கூட் வந்தது
    மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

    ReplyDelete
  3. அவசர முடிவுகள். அபத்தமாயிற்று.

    ReplyDelete
  4. சில பேர் இப்படித்தான் காதல்ல...அவசரமா முடிவு எடுப்பாங்க..
    பிறகு இந்த பிரமாண்ட உலகத்தை எதிர்கொள்ளமுடியாமல்
    வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள் உமக்கு நான்
    ஆறுதல் தான் சொல்லமுடியும் நட்பை இழந்த வலி
    உங்களுக்குத்தான் தெரியும்...நன்றி

    ReplyDelete
  5. மனதிலுள்ளதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவர்கள் தான் தற்கொலை முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
    காலையில் இந்த பதிவின் 'மிச்சத்'தை பார்த்து விட்டேன் .கஷ்டமாத்தான் இருக்குது

    ReplyDelete
  6. மாப்ள இதை ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு. மீள் பதிவா? அப்போது படிக்கும்போதே மனதை கனமாக்கிய பதிவு. காலையிலேயே இப்படி பீல் பண்ண வக்கிறீங்களே?

    ReplyDelete
  7. சந்தோஷமா படிச்சா கடைசில ஆப்பு வச்சிட்டீங்க மாம்ஸ்!

    ReplyDelete
  8. இதுமாதிரி அவசபட்டு முடிவெடுத்தா ஆபத்துதான்.

    ReplyDelete
  9. மூவருக்கும் இறைவன் கொடுத்த அருமையான திறமைகள் இருந்தும் .. கோழையாக தற்கொலை செய்து சொய்துக்கொண்டார்களே......

    ReplyDelete
  10. ////இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது....... அவ்வளவு கொடியவனா நான்.....
    ////

    திறமையிருந்தும் வாழத்தெரியாத முட்டாள்கள் இவர்கள் மூவறும்(தப்பா நினைக்காதீங்க பாஸ்)

    ReplyDelete
  11. தங்கத் தோழிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
    அதிமேதாவிகளும் சில வேளைகளில் காதல் எனும் அரக்கனால்
    இவ்வாறு தவறான முடிவுக்கு செல்கிறார்கள்...
    பட்டபின் தெளிவது நன்றன்று...
    வருமுன் காத்திடுவோம்...

    ReplyDelete
  12. தோழிகளின் இழப்பு தாங்கமுடியாத சோகத்தை தரும்...

    மனதை சங்கடப்படுத்துகிறது...

    இந்த காதல் இன்னும் எவ்வளவு உயிர்களைத்தான் பலிகேட்குமோ..!

    ReplyDelete
  13. தோழிகளின் இழப்பு தாங்கமுடியாத சோகத்தை தரும்...

    மனதை சங்கடப்படுத்துகிறது...

    இந்த காதல் இன்னும் எவ்வளவு உயிர்களைத்தான் பலிகேட்குமோ..!

    ReplyDelete
  14. உண்மையான திறமைசாலிகள் வெளி உலகுக்கு தெரியாமலே இருப்பது ஆச்சயர்யமாக இருக்கிறது...!!!

    ஆனால் காதல் இவர்களை இப்படி பழி வாங்கிவிட்டதே....!!

    ReplyDelete
  15. கவலைபடாதேடா, இதுவும் கடந்து போகும், எத்தனையோ பிரிவுகளை நாம் சந்தித்தோம், சந்திக்க வேண்டிதான் இருக்கிறது இன்னும் கூட, தைரியமா இரு...

    ReplyDelete
  16. மிச்சம் என்று சொல்லி முன் சொன்ன அனைவரையும் இல்லாதவராக்கி மனதைக் கனமாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  17. நட்பின் இழப்பு கொடியது மாம்ஸ், மிச்சம் என்று நீங்கள் சொன்னது மிச்சம் இல்லை மாம்ஸ் நீங்கள் தான் நட்பின் மிச்சம்.

    ReplyDelete
  18. என்ன மாம்ஸ்... கடைசில இப்டி பண்ணிக்கிட்டாங்க... மனம் கனத்துவிட்டது...

    ReplyDelete
  19. மாப்ள இவுங்கள பத்தி ஏற்க்கனவே சொல்லி இருக்க தானே.. இல்ல அது வேறவா...

    ReplyDelete
  20. காதலனால பிரிந்த தோழிகள் என் வாழ்கையிலும் உண்டு.ஆனால் எல்லோரும் நல்லபடியாக வாழ்கிறார்கள் ..

    ReplyDelete
  21. முதல் படத்தைப் பார்த்ததும் ஏதாச்சும் நக்கல் பண்ணலாம்னு வந்தா சோகமா பீல் பண்ண வச்சிட்டுது பதிவு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி