குழந்தை உலகத்தை பற்றி விக்கி உலகம்!

வணக்கம் நண்பர்களே...
குழந்தைகள் உலகம் பற்றி ஒரு குழந்தையை(!) எழுத சொல்லிய நாஞ்சில் மனோ அண்ணனுக்கு முதல் நன்றி!

குழந்தைகளை பிடிக்காது என்று சொல்பவன் வாழத்தகுதி அற்றவன் என்பது என் தனிப்பட்ட கருத்து...

சிறு வயதில் கைப்பிடித்து விளையாடிய விளையாட்டுகள் நினைவுக்கு வருகின்றன...


அப்போது எல்லாம் எனக்கு தெரிந்த டிவி நிகழ்ச்சிகள் ஒளியும் ஒளியும் மற்றும் ஞாயிறு மாலை திரைப்படமும் மட்டுமே(ஓசியில்!)...அது தவிர மின்சாரம் திடீரென்று நின்று விட்டால் அனைவர் வீட்டிலும் இருந்தும் ஒரு ஒருமித்த சந்தோஷ கூக்குரல் கேட்க்கும்...அது தான் சிக்னல்...அதாவது அனைவரும் அந்த மிதமான இரவில் அந்த காம்பவுண்ட்டில் "அலைஸ் பாய்(Girls உட்பட!)" விளையாட எங்களுக்குள் கொடுக்கப்படும் சிக்னல்...அந்த விளையாட்டை இன்றும் என் மகனுடன் விளையாடி வருகிறேன்!


எப்பேர்ப்பட்ட பெரிய மனிதனானாலும் அவனுள் ஒரு குழந்தை மனது இருக்கும்...அதற்க்கு காரணம் அவனுடைய குழந்தை பருவத்து நிகழ்சிகளே...

கிரிக்கெட் மறக்க முடியாத விளையாட்டு என் வாழ்வில்...அதுவும் காலை பத்தாவது அரசு தேர்வு எழுதி விட்டு மதியம் கிரிக்கெட் விளையாட அடிச்சி பிடிச்சி ஓடி வந்ததை இன்று நினைத்தாலும் ஒரு நெகிழ்ச்சி....


அது ஒரு காலம்...ஏரிக்கு குளிக்க சென்று அங்கு இருக்கும் நண்டுகளை பிடித்து வந்து ஒரு பெரிய சட்டியில் போட்டு ஏரிக்கு பக்கத்திலேயே சமைத்து உண்டு இருக்கிறோம்...அங்கு கிடைக்கும் மூன்று கல்லை வைத்து நடுவில் கிடைக்கும் சிறு சிறு விறகுகளை போட்டு எரிய வைப்போம்...அன்றைய கால கட்டத்தில் சிறு சிறு பொட்டலங்களாக மிளகாய்த்தூள் மற்றும் உணவுடன் சேர்ப்பவைகளை ஆளாளுக்கு பங்கு பிரித்து வீட்டில் இருந்து கொண்டு வருவோம்...இன்று நினைத்தாலும் ச்சே மறக்க முடியாத நாட்கள்...


பெண் நண்பர்களுடன் கோகோ ஆடிய காலங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன...கொஞ்ச காலத்தில் ஆளான அவர்களை தொடுவது கூடாது என்று பெரியவர்கள் சொன்ன போது அது புரியாமல் நாங்கள் எப்போதும் போல் விளையாடி அடி வாங்கிய நாட்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன...


விளையாடிக்கொண்டு இருக்கும் போது என் சட்டையை நண்பன் கிழித்து(ஏற்கனவே பல இடங்களில் கிழிந்து இருக்கும் அது வேறு கதை ஹிஹி!) விட அதற்காக நான் சண்டையிட...அதன் காரணமாக என் பெற்றோருக்கும் அவன் பெற்றோருக்கும் வாய் சண்டை நடக்க...கொஞ்ச நேரத்தில் மீண்டும் நாங்கள் எப்போதும் போல தெருவில் கிரிக்கெட் விளையாட...கொஞ்ச நேரத்தில் அப்போ நாங்க தான் லூசா(!) என்று இரு வீட்டு பெரியவர்களும் நாணத்துடன் கிளம்பியது ஞாபகத்துக்கு வருகிறது... 


 படிப்பில் எப்போதும் மதிப்பெண் குறைவாக எடுத்து மூன்றாம் ரேங்க் வந்து கொண்டு இருந்த என்னை ஒரு பெண் குழந்தையை காட்டி அவள் போல உன்னால் முதல் ரேங்க் எடுக்க முடியுமா என்று அனைவரும் கிண்டல் செய்த போது கூட அதை கண்டுக்காத நான்...அதே அந்த நண்பியே அப்படி கிண்டல் செய்ய அடுத்த மாத தேர்விலேயே முதல் இடம் வாங்க அவளை ஒரு நாள் முழுக்க அழ வைத்தது ஏனோ இன்னும் கண் முன் வந்து செல்கிறது...(இன்று அவள் சூரிய டிவியில் செய்தி வாசிப்பாளர் ஹிஹி!)

பள்ளியில் ஒவ்வொரு குழந்தையும் தேச தலைவர்கள் போல வேடம் அணிந்து வர வேண்டும் என்று கூறிய போது...நான் தவிர மற்றவர்கள் அட்டகாச மான உடையுடன் வருவார்கள் என்று கூற...எங்க பக்கத்து காம்பவுண்ட் ராசு மாமா...தன் காவலாளி (காக்கி!) உடையை கொடுக்க அதை வைத்து சுபாஷ் சந்திர போஸாக நான் தோன்ற...அதற்காக எனக்கு முதல் பரிசு எவர்சில்வர் டம்பளர் வாங்கியது இன்றும் ஞாபகத்துக்கு வருகிறது...

பணக்காரன் ஏழை எனும் விஷயம் குழந்தை உலகத்தில் இல்லை...அதை உட் செலுத்துவதே பெரியோர்களின் தவறான அணுகுமுறை என்பது என் தாழ்மையான கருத்து...

என்னை பொறுத்தவரை குழந்தைகளுடன் நாம் பழக வேண்டுமானால் நாமும் குழந்தையானால்(மனதளவில்!) தான் முடியும்...அதை என் வீட்டில் தொடர்ந்து வருகிறேன்...நீங்களும் தொடருங்கள்!(இது அறிவுரை அல்ல நிகழுரை!)

கொசுறு: அன்று முதல் இன்று வரை என்னை சுற்றி இருக்கும் நண்பர்களை சந்தோஷமாக சிரிக்க வைத்துகொண்டு இருப்பதையே செய்து வருகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ஒரு பெருமை உண்டு...நான் நண்பர்கள் கூட இல்லையே என்று வருந்தும் பலர் புலம்புவதை கேட்கும்போது ஒரு வித மன நெருடல் ஏற்படும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. குழந்தை பருவ நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவைதான் ...பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. விக்கி மாமா விக்கி மாமா க...கத்துரை..சூப்பதா இருந்திச்சு....
  நான் போய்த்து நாளிக்கு வரேரே.....
  டாட்டா....

  ReplyDelete
 3. அன்று முதல் இன்று வரை என்னை சுற்றி இருக்கும் நண்பர்களை சந்தோஷமாக சிரிக்க வைத்துகொண்டு இருப்பதையே செய்து வருகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ஒரு பெருமை உண்டு.

  அழ்கான படங்கள்..
  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. குழந்தைகள் பற்றிய அருமையான பதிவு. குழந்தை பருவ நாட்களை அழகாக மீட்டிச்சென்றது உங்கள் பதிவு

  ReplyDelete
 5. Mamms ----- appaveva....????!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 6. >>பெண் நண்பிகளுடன் கோகோ ஆடிய காலங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன...கொஞ்ச காலத்தில் ஆளான அவர்களை தொடுவது கூடாது என்று பெரியவர்கள் சொன்ன போது அது புரியாமல் நாங்கள் எப்போதும் போல் விளையாடி அடி வாங்கிய நாட்கள்


  தக்காளி இப்போதான் கொஞ்ச கொஞ்சமா உண்மையை எல்லாம் சொல்றான் அடெய், இது நல்லால்லை ஹி ஹி

  ReplyDelete
 7. >.அன்று முதல் இன்று வரை என்னை சுற்றி இருக்கும் நண்பர்களை சந்தோஷமாக சிரிக்க வைத்துகொண்டு இருப்பதையே செய்து வருகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ஒரு பெருமை உண்டு.

  ஹி ஹி தாக்கறதுதான் உனக்கு சந்தோஷமா அடங்கோ

  ReplyDelete
 8. //பெண் நண்பிகளுடன்

  மாப்ள இதென்ன ஜாக்கி ஸ்டைலா? ஆண் நண்பி என்று வேறு தனியாக இருக்கிறதா என்ன?

  உங்கள் மழலை பருவம் என்னையும் பின்னோக்கி அழைந்த்து சென்றது. அருமை.

  ReplyDelete
 9. ஏற்றத்தாழ்வு தனை குழந்தைகளின்
  மனதில் விதைக்காதீர்கள் என்ற
  அருமையான ஒரு நல்விதை விதித்தீர்கள்
  மாம்ஸ்...
  அருமை.

  ReplyDelete
 10. அருமையான பதிவு! நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. இனிமேல் உங்களை சுபாஷ் மாமா என்று அழைக்கலாம்...

  ReplyDelete
 12. //குழந்தைகளை பிடிக்காது என்று சொல்பவன் வாழத்தகுதி அற்றவன் என்பது என் தனிப்பட்ட கருத்து...//
  உண்மை!

  //பணக்காரன் ஏழை எனும் விஷயம் குழந்தை உலகத்தில் இல்லை...அதை உட் செலுத்துவதே பெரியோர்களின் தவறான அணுகுமுறை என்பது என் தாழ்மையான கருத்து...//

  செம்ம கலக்கல் மாம்ஸ்!

  ReplyDelete
 13. அருமை!பசுமை கலந்த நினைவுகள்.அக்காலம்போல் இக்காலம் வாராது.Yoga.S.Fr

  ReplyDelete
 14. பசுமையான குழந்தைப் பருவத்து நினைவுகள்..

  பாராட்டுகள்..

  ReplyDelete
 15. எப்போதும் குழந்தைப் பருவ நினைவுகள் சுகமானது. உஙள் பதிவு அருமை. படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 16. சிறுவயது ஞாபகங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். மழலைகள் உலகம் என்பது மகத்தானது. சில நேரங்களில் நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று கூடத் தோன்றும். மீண்டும் மழலை நினைவுகளை தூண்டியதற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. விளையாடிக்கொண்டு இருக்கும் போது என் சட்டையை நண்பன் கிழித்து(ஏற்கனவே பல இடங்களில் கிழிந்து இருக்கும் அது வேறு கதை ஹிஹி!) விட அதற்காக நான் சண்டையிட...அதன் காரணமாக என் பெற்றோருக்கும் அவன் பெற்றோருக்கும் வாய் சண்டை நடக்க...கொஞ்ச நேரத்தில் மீண்டும் நாங்கள் எப்போதும் போல தெருவில் கிரிக்கெட் விளையாட...கொஞ்ச நேரத்தில் அப்போ நாங்க தான் லூசா(!) என்று இரு வீட்டு பெரியவர்களும் நாணத்துடன் கிளம்பியது ஞாபகத்துக்கு வருகிறது...
  //

  அதுதான் குழந்தை உலகம்...!!!

  ReplyDelete
 18. அருமையா எழுதி அசத்திபுட்டேய்யா...!!!

  ReplyDelete
 19. தம்பி, டவ்சர் கிளிஞ்சதை இன்னும் நீ சொல்லலை ஹி ஹி...

  ReplyDelete
 20. மாம்ஸ், உங்க சிறு வயது சேட்டைகளை, நகைச்சுவைகளை சூப்பரா சொல்லி இருக்கீங்க. குழந்தை பருவம் என்பது என்றும் சந்தோஷம் தரும் நினைவுகள்.


  நம்ம தளத்தில்:
  எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

  ReplyDelete
 21. மாம்ஸ் அருமை. உங்களை பத்தி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.. குட்

  ReplyDelete
 22. வணக்கம் பாஸ்,

  முன்னாடி பொதிகை தான் எல்லோர் வீடுகளிலும், நம்ம சிலோனுக்கும் பொதிகை சானல் கிடைக்கும்,
  வயலும் வாழ்வும்,
  அப்புறமா ஞாயிறு படத்திற்கு முன்பதாக சமையல் நிகழ்ச்சி வசந்த் அன்கோ ஆதரவில போடுவாங்க!

  ரசித்து பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 23. மழலை உலகம் தொடர்பான நினைவு மீட்டல் வாயிலாக எங்களையும் கடந்த காலம் நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறீங்க.

  நாம கூடுதலாக கள்ளன் போலீஸ் விளையாட்டுத் தான் விளையாடுவோம்.

  ஹி....ஹி....

  ReplyDelete
 24. நல்ல பதிவு பாஸ். !

  ReplyDelete
 25. ரசித்து படிக்கும் பதிவு...

  சூப்பர் மாம்ஸ்.....

  ReplyDelete
 26. மாம்ஸ் பசுமை நினைவுகளை சொல்லி அனைவரது பசுமை நினைவுகளை கிளறி விட்டீர்கள் .ஹும் ஏக்க பெருமூச்சு

  நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 27. குழந்தைகளைப் பற்றியோ நமது குழந்தைப்பருவத்தைப் பற்றியோ நினைக்க ஆரம்பித்தாலே
  மனசு கும்மாளம் போட ஆரம்பிச்சுடும்.
  இந்த பதிவைப்படிக்கும் போதும் அப்படித்தான் மாம்ஸ் இருக்கு.
  சூப்பர்.

  ReplyDelete
 28. குழந்தையாகவே மாறி எழுதி, எங்களையெல்லாம் குழந்தைப்பருவத்திற்கு அழைச்சிட்டுப் போய்டீங்க.

  ReplyDelete
 29. மாப்ள டிஸ்கி முற்றிலும் உண்மை.....

  ReplyDelete
 30. தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 31. //பணக்காரன் ஏழை எனும் விஷயம் குழந்தை உலகத்தில் இல்லை...அதை உட் செலுத்துவதே பெரியோர்களின் தவறான அணுகுமுறை என்பது என் தாழ்மையான கருத்து...//

  நல்ல கருத்தைச் சொன்னீர்கள் விக்கி. எல்லோரும் இதைப் பின் பற்றினால் நாடு முன்னேறிவிடும்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி