எனக்குள் நான் - பயங்கர (டாட்டா ச்சே!) டேட்டா!

வணக்கம் நண்பர்களே,என்னை இப்படி புலம்ப வைத்த பெருமைக்குரிய பதிவர் http://www.tamilparents.com/  சம்பத்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி(ஹிஹி!)

பதிவுலகின் பெரிய பெரிய ஜாம்பவான்களை பேட்டி எடுத்தவர்கள், இந்த அமைதியான(!) பதிவரை கண்டு கொள்ளாத காரணத்தால் வருத்தப்பட்ட தக்காளியை தேற்றிய ஒரே மனைவி(!)...அழுகாத செல்லம் நான் இருக்கேன்னு சொல்லி எடுத்த பேட்டி தான் இந்த பயங்கர டேட்டா ச்சே பயோ டேட்டா(சுய புராண விளக்கம்!)

விக்கி மனைவி: பேட்டிய ஆரம்பிக்கலாமா...

விக்கி: சரி பிய்யிங்க...!


பிறந்தது: அரசு மருத்துவமனை எழும்பூர்...சென்னை..

உதித்த நாள்: அக்டோபர் 12....வருடம் - ? = உபயம் tamilvaasi அறிவுரை = வருஷம் சொல்லக்கூடாதாமே!

இயற்ப்பெயர்: வெங்கட்குமார்....பதிவுலக நண்பர்களால் அழைக்கப்படுவது தக்காளி தி கிங் ஒப் சாஸ்!(ஹிஹி!)

பிறந்து வளர்ந்த இடம்: பிறக்கும் போதே வளர்ந்துட்டேன் வளர்ந்து கொண்டே பிறந்துட்டேன்..சாரிங்க...சிங்கார சென்னை(ஏங்க சர்தானே!)

வாழ்விடம்: தற்காலிகமாக புகலிடம் வியட்நாம்...நிரந்தர புகலிடம் சென்னை.

படிப்பு: நெறைய படிச்சிருக்கேங்க...கெடைக்கிற புத்தகம் எல்லாம் படிச்சிருவேன்!

நக்கலு...யோவ் தக்காளி ஒழுங்கா பதில சொல்லு...

சான்றிதழ் கொடுக்கப்பட்ட படிப்பு: இளகலை தத்துவவியல், தூரத்து இடி முழக்கம் மூலமாக முதுகலை வியாபார இயல்...(புரியலயா ஹிஹி!)

வேலை: எந்த வேலைய கேக்குறீங்க..ஒ சம்பளம் கொடுக்கற வேலைய கேக்குறீங்களா...

ஆமாயா வெண்ண(!),

அது வந்துங்க நெறைய வேலை பாத்துட்டேங்க...இப்போ ஒரு இந்திய நிறுவனத்துல மேலாளர் - Infrastructure development projects in Vietnam.


பிடிச்ச விஷயங்கள்: அழகா இருக்க அனைத்தும்(!), இப்போ லேட்டஸ்ட்டா பதிவுலக நண்பர்களின் கள்ளமில்லா அரட்டை!

பிடிக்காதது: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்...

சுற்றமும், நட்பும்: நான் என் சுற்றத்தாரை(சொந்தங்கள்!) நம்புவதை விட நண்பர்களை மட்டுமே நம்புவேன்...ஒரு நண்பனை தேர்ந்தெடுக்கும் போது யோசிக்க வேண்டுமே தவிர...அவன் நண்பனான பிறகு அவனை சந்தேகித்தல் கொடுமையானது...(இதுக்கும் விலக்கு உள்ளது!)

காதல்: உங்களுக்கு தான் தெரியுமே...

இல்ல அதை நீங்க மறுபடியும் சொல்லுங்க...


ஹாஹா...எது நடந்ததோ அது நல்லதற்கே நடந்தது...இப்போது எது நடந்து கொண்டு இருக்கிறதோ அதுவும் நல்லதற்கே...

அன்பு, பாசம், நம்பிக்கை: மனைவி..மற்றும் மகன்..

மறக்க முடியாதது: எனக்காக பலர் தங்கள் உயிர்களை துறந்து என்னை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருப்பது!

மறக்க நினைப்பது: துரோகங்களை!

சந்தோசம்: நான் வாழும் ஒவ்வொரு நிமிடமும்! (இறைவனின் கொடை இது!)

பலம்: தன்னம்பிக்கை!...முடிந்த வரை வாழ்வில் குறிக்கோள்களை வெல்கிறேனோ இல்லையோ...வறுமையை நிச்சயமா வெல்லுவேன்!

பலவீனம்: தவறோ சரியோ நேரிடையா சொல்லுதல்...(அது பதிவுலகமா இருந்தாலும் தனி உலகமா இருந்தாலும் ஹிஹி!)

கோபம்: இழந்தவை அதிகம்..அதனால் குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..,

ஏமாற்றம்: அப்துல்கலாம்!

பிடிச்ச தன்மொழி: அழகானவைகளை ரசிக்க மறக்காதே...ருசிக்க நினைக்காதே!

ரசிப்பது: என் மகனின் சேட்டைகளை...நான் சொல்லிய கதைகளை கொண்டே அவன் அதன் ஊடாக தன்னை இணைத்துக்கொண்டு மறுமுறை வித்தியாசமான கோணத்தில் கதை சொல்வான்!..

பொழுதுபோக்கு; குடும்பத்துடன் ஊர் சுற்றுதல்...பிகர்களை காணும்போது மனைவியை கிண்டல் செய்தல்...(வீட்டுக்கு வந்து பூரிக்கட்டையால் அடி வாங்குதல்!)

பிடித்த சுற்றுலாத்தலம்: ஏற்காடு மற்றும் ஹாலாங்பே(வியட்நாம்)

நிறைவேறாத ஆசை: என்னால் காப்பாற்ற முடியாது போன என் நண்பன் மானிட்டர் மூர்த்தி!


கடவுள்: மனிதனை தாண்டிய அற்புதம்...எல்லா கடவுள்களும்..(என்றும்...நான் இதை செய்கிறேன், நீ அதை செய் என்று வியாபாரத்தனமாக கேட்டது கிடையாது!)

சமீபத்திய பெருமை: என் வியட்நாமிய மழலை(!) பேச்சை பார்த்து வியட்நாமிய நண்பர்கள் குதூகலித்தது!

தற்போதைய சாதனை: 120 கிலோவிலிருந்து 100 கிலோவுக்கு வந்தது ஹிஹி!..(சீக்கிரத்துல 80 கிலோவுக்கு வருவேன்!)

விக்கி மனைவி: இவ்ளோ தான் இருக்கா இன்னும் ஏதாவது...

விக்கி: இல்லீங்க அவ்ளோதான்..விட்ருங்க...

கொசுறு: இந்த தொடரை தங்களை தில்லானவர்கள் என்று சொல்லி வரும்(!) மெட்ராஸ்பவன் சிவா, பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... பிரபா, வந்தேமாதரம் சசி தொடர்ந்து எழுத சொல்லி அழைக்கிறேன் ஹிஹி..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

59 comments :

 1. தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 2. வணக்கம் மாம்ஸ்

  தொடர் பதிவில் அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 3. //நான் என் சுற்றத்தாரை(சொந்தங்கள்!) நம்புவதை விட நண்பர்களை மட்டுமே நம்புவேன்...ஒரு நண்பனை தேர்ந்தெடுக்கும் போது யோசிக்க வேண்டுமே தவிர...அவன் நண்பனான பிறகு அவனை சந்தேகித்தல் கொடுமையானது...(இதுக்கும் விலக்கு உள்ளது!)//

  கலக்கிட்டீங்க..

  ReplyDelete
 4. //கடவுள்: மனிதனை தாண்டிய அற்புதம்...எல்லா கடவுள்களும்..(என்றும்...நான் இதை செய்கிறேன், நீ அதை செய் என்று வியாபாரத்தனமாக கேட்டது கிடையாது!)//


  சூப்பர் மாம்ஸ்..

  உங்க பயோ டாட்டாவும் சூப்பரு..

  ReplyDelete
 5. நல்லா சொல்றாரையா டீட்டைலு ..வாழ்த்துக்கள் மாம்ஸ் , மனம் நிறைந்த வாழ்க்கைக்கு!

  ReplyDelete
 6. Ithai thaan naan anrey sonnen....
  PUTHAANDU VARA POKIRATHU....
  KUDAVE THODER PAVTHIVU
  THOLLAIGALUM.....

  POI parungal......he....he...

  ReplyDelete
 7. /////
  அக்டோபர் 12....வருடம் - ? = உபயம் tamilvaasi அறிவுரை = வருஷம் சொல்லக்கூடாதாமே!

  ////////


  அதை நான் அம்பல படுத்துகிறேன்..
  வருடம் 1936....
  அதாங்க சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி...

  ஓ.. அப்ப ரொம்ப பழைய பீஸு

  ReplyDelete
 8. ////////
  ஆமாயா வெண்ண(!),
  ///////

  யோவ் தக்காளி... மனோ கூட இப்படி செல்லாம கூப்பிட்டது இல்ல..

  வீட்ல இப்படித்தான் கூப்பிடுவாங்களா...

  ReplyDelete
 9. ////////
  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்..
  ///////

  நம்பியாச்சி... நம்பியாச்சி....

  ReplyDelete
 10. //////
  தவறோ சரியோ நேரிடையா சொல்லுதல்...(அது பதிவுலகமா இருந்தாலும் தனி உலகமா இருந்தாலும் ஹிஹி!)

  /////////

  இந்த விஷயத்தில் நீர் மனிதன்யா..!

  ReplyDelete
 11. ///////
  120 கிலோவிலிருந்து 100 கிலோவுக்கு வந்தது ஹிஹி!..(சீக்கிரத்துல 80 கிலோவுக்கு வருவேன்!)

  ////////


  என்னது 120 கிலோவா...

  அப்ப இந்தியா வரனும்ன்னா கப்பல்லதானா...

  ReplyDelete
 12. அந்த மூணுப்பேரும் தில்லானவங்க இல்லீங்க...

  கோவக்கார பயபுளளிங்க....

  ReplyDelete
 13. தங்களின் பதிவுக்கு ஒரு சல்யூட்...

  மத்தபடி மேலே இருப்பது...
  சும்மாகாச்சிக்கும்...

  ReplyDelete
 14. மாம்ஸ் நிறைய பகிர்ந்து இருக்கீங்க அருமை..

  ReplyDelete
 15. அருமை மாம்ஸ்!
  அப்புறம் ....என்னோட ஏதாவது பிரச்சினையா மாம்ஸ்? :-)

  ReplyDelete
 16. //120 கிலோவிலிருந்து 100 கிலோவுக்கு//

  பீரால் வந்த அவஸ்தையா?

  ReplyDelete
 17. //மறக்க முடியாதது: எனக்காக பலர் தங்கள் உயிர்களை துறந்து என்னை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருப்பது!//

  என்ன மாப்ள சிட்டிசன் அஜித் ரேஞ்சுக்கு சொல்ற... அப்ப உனக்குள்ளும் ஏதோ மர்மம் இருக்கோ....

  ReplyDelete
 18. சூப்பர் டேட்டா!
  நல்ல வெயிட்டான விஷயமெல்லாம் சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete
 19. //சமீபத்திய பெருமை: என் வியட்நாமிய மழலை(!) பேச்சை பார்த்து வியட்நாமிய நண்பர்கள் குதூகலித்தது!//

  மழலை பேச்சா...எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது...

  ReplyDelete
 20. //ஏமாற்றம்: அப்துல்கலாம்!//

  ஏதாவது கடன் கொடுத்து தராம ஏமாத்திட்டாரா... ஹீ ஹீ

  ReplyDelete
 21. //(வீட்டுக்கு வந்து பூரிக்கட்டையால் அடி வாங்குதல்!)//

  மாப்ள அங்க பூரி கட்டையா..நீ பரவா இல்ல... என்னோடது வெளில சொல்ல முடியாது..ஹீ ஹீ

  ReplyDelete
 22. அழகா சொல்லி இருக்கீங்க ,தங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 23. நல்ல டேட்டா!(பயபுள்ள டேட்டா!)ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 24. "அழகானவைகளை ரசிக்க மறக்காதே...ருசிக்க நினைக்காதே!"

  அழகான வரிகள் ... நல்ல இருந்தது உங்கள் சுயபுராணம்

  ReplyDelete
 25. வருசம் செல்ல மாட்டிங்களா?ஏன் இந்த கொலைவெறி....

  கள்ளமில்லா அரட்டையா சரிதான்

  காதல் உங்களுக்குத்தான் தெரியுமே....
  அக்கா காதுல புகை வரலியோ?

  100 கிலோவா...நான்ந்தா தப்பா வரைஞ்சிட்டனோ...

  எங்க மனோ சிபிய காணம் வாங்க சீக்கிரம்....விக்கி ரெடியா இருக்காப்படி கும்முங்க...ஹிஹி

  ReplyDelete
 26. வருஷம் சொல்லாம தப்பிக்க எம்மேல பழியா? ம்ம்ம்... நடக்கட்டும்...


  நம்ம தளத்தில்:
  அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

  ReplyDelete
 27. நக்கலு...யோவ் தக்காளி ஒழுங்கா பதில சொல்லு...///

  ஹா..ஹா... பதில் எல்லாம் ஏதோ பரவாயில்ல...

  ReplyDelete
 28. எல்லாம் ஓகே! போட்டோ போடலையே ?

  ReplyDelete
 29. பதிவுலகின் பெரிய பெரிய ஜாம்பவான்களை பேட்டி எடுத்தவர்கள், இந்த அமைதியான(!) பதிவரை கண்டு கொள்ளாத காரணத்தால் வருத்தப்பட்ட தக்காளியை தேற்றிய ஒரே மனைவி(!)...அழுகாத செல்லம் நான் இருக்கேன்னு சொல்லி எடுத்த பேட்டி தான் இந்த பயங்கர டேட்டா ச்சே பயோ டேட்டா(சுய புராண விளக்கம்!)//

  அண்ணனுக்கு எங்கேயோ சொம்பு பலமா நெளிஞ்சாப்ல இருக்கே, அடி பலமா அண்ணே...?

  ReplyDelete
 30. தக்காளியை தேற்றிய ஒரே மனைவி(!)//

  இப்பிடி அழுத்தி அழுத்தி ஒரே மனைவின்னு சொல்லிட்டு இருக்கியே, சந்தேகமா இருக்கு பலமா....!!! எதுக்கும் அண்ணிகிட்டே போட்டு குடுக்கணும்...

  ReplyDelete
 31. மறக்க முடியாதது: எனக்காக பலர் தங்கள் உயிர்களை துறந்து என்னை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருப்பது!//

  நெகிழ்ச்சி..

  ReplyDelete
 32. ஏமாற்றம்: அப்துல்கலாம்!//

  அது காமெடி பீசு மக்கா விட்டுதள்ளு, இனி ஒரு பய அவரை நம்பமாட்டான்...!!!

  ReplyDelete
 33. பொழுதுபோக்கு; குடும்பத்துடன் ஊர் சுற்றுதல்...பிகர்களை காணும்போது மனைவியை கிண்டல் செய்தல்...(வீட்டுக்கு வந்து பூரிக்கட்டையால் அடி வாங்குதல்!)//

  இப்பெல்லாம் கொள்ளிகட்டை அடிவாங்குறதுதான் பேஷனாம்...

  ReplyDelete
 34. சமீபத்திய பெருமை: என் வியட்நாமிய மழலை(!) பேச்சை பார்த்து வியட்நாமிய நண்பர்கள் குதூகலித்தது!//

  ஆனந்தம், மகிழ்ச்சி....!!!

  ReplyDelete
 35. //இந்த தொடரை தங்களை தில்லானவர்கள் என்று சொல்லி வரும்(!) மெட்ராஸ்பவன் சிவா,//

  என்னது தில்லா? ரைட்டு.

  ReplyDelete
 36. மாப்ள கலக்கல் பேட்டி ....

  காதல்: எது நடக்க போகிறதோ அதுவும் நல்லதற்கே (கரெக்டா சொல்லிட்டேனா?)

  ReplyDelete
 37. //நெறைய படிச்சிருக்கேங்க...கெடைக்கிற புத்தகம் எல்லாம் படிச்சிருவேன்!
  //
  சமாளிக்காதிங்க .. நீங்க 2 std தானே

  ReplyDelete
 38. //கோபம்: இழந்தவை அதிகம்..அதனால் குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்..,
  //
  எனக்கும் தான்

  ReplyDelete
 39. மாப்ள வெயிட் எப்படி குறைஞ்ஜேன்னு ஒரு பதிவா போட்டா நம்ம பிரகாசுக்கு பயன்ப்படும்ல..

  ReplyDelete
 40. ரசிப்பது: என் மகனின் சேட்டைகளை...நான் சொல்லிய கதைகளை கொண்டே அவன் அதன் ஊடாக தன்னை இணைத்துக்கொண்டு மறுமுறை வித்தியாசமான கோணத்தில் கதை சொல்வான்!.

  ரச்னையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 41. சிறப்பான பதிவு பாரட்டுகள் கண்ணைகவரும் வியக்கவைக்கும் படங்கள் உண்மையில் பாராட்டுகள்

  ReplyDelete
 42. தற்போதைய சாதனை: 120 கிலோவிலிருந்து 100 கிலோவுக்கு வந்தது ஹிஹி!..(சீக்கிரத்துல 80 கிலோவுக்கு வருவேன்!)////////////////////அட ங்கோன்னியா. இத ஏன் கின்னச்சுக்கு அனுப்பல ...மனோவை விட நீ குண்டா? அதான் ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் ஆகுது ........

  ReplyDelete
 43. தங்களது பயாடேட்டா சுவையாக இருந்தது

  ReplyDelete
 44. வித்தியாசமான பதிவு. அருமை. நண்பா! கலக்குங்க... வாழ்த்துக்கள்.
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  ReplyDelete
 45. விக்கி மனைவி: பேட்டிய ஆரம்பிக்கலாமா...

  விக்கி: சரி பிய்யிங்க...!//

  பிச்சு உதறிட்டீங்க ..

  அங்கே எப்படி?ஹிஹி

  ReplyDelete
 46. பொழுது போக்கு செமையா இருக்கே.
  இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு மாம்ஸ்

  ReplyDelete
 47. பயோடேட்டா சூப்பர்... மாம்ஸ்...

  ReplyDelete
 48. // அக்டோபர் 12....வருடம் - ? = உபயம் tamilvaasi அறிவுரை = வருஷம் சொல்லக்கூடாதாமே!

  Read more: http://vikkiulagam.blogspot.com/2011/11/blog-post_29.html#ixzz1f8DWQNpg
  //

  இவரு என்னவோ கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரி... பொறந்த வருஷத்தை சொல்லமாட்டாராம்...

  ReplyDelete
 49. // இளகலை தத்துவவியல், தூரத்து இடி முழக்கம் மூலமாக முதுகலை வியாபார இயல்...(புரியலயா ஹிஹி!)

  Read more: http://vikkiulagam.blogspot.com/2011/11/blog-post_29.html#ixzz1f8DuqzoA
  //

  டபுள் MA வாங்கின ஆள்தானே நீங்க...

  ReplyDelete
 50. // பதிவுலக நண்பர்களின் கள்ளமில்லா அரட்டை //

  முரண்...

  ReplyDelete
 51. // தவறோ சரியோ நேரிடையா சொல்லுதல்... //

  இது உங்களுக்கு செட் ஆகாது... நீங்க என்னைக்கு எதை நேரடியா சொல்லியிருக்கீங்க...

  ReplyDelete
 52. // இந்த தொடரை தங்களை தில்லானவர்கள் என்று சொல்லி வரும்(!) மெட்ராஸ்பவன் சிவா, பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... பிரபா //

  கிழிஞ்சது... தல நாங்க எல்லாம் ஏற்கனவே நிறைய சொறிஞ்சாச்சு... இனிமே சொறியுறதா இல்ல... வேணும்னா சொல்லுங்க உங்களோட பயங்கரடேட்டா போடுறேன்...

  ReplyDelete
 53. பய சாரி பயோடேட்டாவை தங்களுக்கே உரிய நகைச்சுவை, நக்கல், நையாண்டி என நவரசம் கலந்து காக்டெயிலா கொடுத்திருக்கீங்க. அட்டகாசம்.

  ReplyDelete
 54. என்னது சசியும், பிரபாவும் தில்லானவங்களா? அய்யோ ஹய்யோ. லொள்ளானவங்கன்னு சொல்லு தம்பி..

  ReplyDelete
 55. மகா ஜனங்களே, ஏதோ சில ஆணீகளால் விக்கி தக்காளீ போஸ்ட்ட்க்கு வர முடியல. அதுக்காக தனி மெயில்ல கண்டபடி திட்டி தீர்த்துட்டான் அவ்வ்வ்வ்

  அதுல கவுரவமான லைன்ஸ் மட்டும்.. - விக்கி: pottathu
  naan mattum
  vidaama varanuma
  nee enna figaraa

  தமிழாக்கம் - போடா, நான் மட்டும் விடாம உன் பிளாக் வர நீ என்ன ஃபிகரா?

  ReplyDelete
 56. அழகா சொல்லி இருக்கீங்க ,தங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி