சிறுவன் பார்த்த court!?


வணக்கம் நண்பர்களே...


நினைத்த காரியங்கள் எல்லோருக்கும் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். டிசம்பர் மாதம் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் நிகழ்ச்சி இது...

நீதிமன்றம் - அப்படிங்கற விஷயத்த பேசும்போது எனக்குள்ளே நான் பலமுறை சிரித்துக்கொண்டதுண்டு. காரணம்..

அது ஒரு டிசம்பர் மாத கடைசி வாரம், வெள்ளிகிழமை இரவு 7 மணி இருக்கும்...

அந்த வீட்டுல ஒரே கொண்டாட்டம்....

என்னா சித்தி இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்க.......


இல்ல கண்ணு சித்திக்கு இந்த மாசம் சீக்கிரமா சம்பளப்பணம் கொடுத்திட்டாங்க..... அதுனால நாம எல்லாம் கோயிலுக்கு போயிட்டு வரும் போது உனக்கு நெறைய இனிப்புகளெல்லாம் வாங்கிதாரேன் சரியா..

சரி சித்தி ....

பாட்டி... எல்லோரும் கோயிலுக்கு போறோமா .......

ஆமாண்டா கண்ணு ..... வா வந்து சட்டைய மாத்திக்க வா என்றாள் பாட்டி......

உனக்கு இன்னிக்கு ஜாலி தான் பெரிய சித்திக்கு பணம் வந்தாச்சி.....என்றாள் சின்ன சித்தி.

ஆமாம் சித்தி தாத்தா எப்போ வருவாங்க......

தாத்தா திருத்தணி போய் இருக்காருப்பா நாளைக்குதான் வருவாரு....என்றாள் சித்தி.

அந்தக்குடும்பம் - மொத்தம் பாட்டி, இரண்டு சித்திகள் மற்றும் அந்த வாண்டுடன் அந்த சின்ன அம்மன் கோயிலை நோக்கி பயணப்பட்டது.

அந்த சந்தோசமான குடும்பம் கிட்டத்தட்ட 2 கிமு தூரம் நடந்து அந்த இடத்துக்கு போய் சேர்ந்தது.

அந்த இடத்திற்க்கு பெயர் "டெலிபோன் குவாட்டர்ஸ்" என்று சொல்லப்படும் தேனாம்பேட்டை மெயின் ரோடு(இன்றும் இருக்கிறது அந்தக்கோயில்).

அங்கு சென்று சாமி(அம்மனை) கும்பிட்டு விட்டு திரும்பும்போது நேரம் 9.30 மணி....

வெள்ளிக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம்.....

அந்தக்கோயில் அமைந்திருந்தது பெரிய ரோட்டின் ஒரு புறத்தில்.......

அந்த நால்வரும் சாமியை தரிசித்துவிட்டு அந்த பெரிய ரோட்டை கடக்கும் பொழுது.....


அந்த நேரத்தில் எரிந்து கொண்டு இருந்த சிவப்பு நிற விளக்கை அலட்சியப்படுத்திவிட்டு இரு வெளியூர் செல்லும் அரசாங்க பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு புயல் வேகத்தில் அந்த சிறுவனைக் கடக்க முயன்றது ......

ஒரு நிமிடம் என்ன நிகழ்ந்தது என்று புரியவில்லை....

அந்த சாக்லேட் பாட்டி உடல் சிதறியது......

அந்த சின்ன சித்தியின் உடலும் சிதறியது .....

அந்தப்பொழுதில் அந்தச்சிறுவனை பற்றி இருந்த பெரிய சித்தி கையை விட்டு அந்த சிறுவன் பறந்தான் அவனுடைய உடல் மீது மிதமாக மோதிய அந்தப்பேருந்தால்........

பெரிய சித்தி இந்த விபத்தைப்பார்த்த அதிர்ச்சியில் பின்னோக்கி சாய்ந்தாள்......

அந்தச்சிறுவன் கண் விழித்து பார்க்கும் போது தலையில் பெரிய கட்டுடன்(வலியுடன்) இருப்பதை உணர்ந்தான்.

பாட்டியும், சின்ன சித்தியும் விபத்து ஏற்பட்ட போதே இறந்ததை அவனால் உணரவோ நம்பவோ இயலவில்லை....

பெரிய சித்தியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனை அவன் தாத்தா அடுத்த அறையில் படுக்கையில் படுத்திருந்த அவளை காட்டிய போது அந்தச்சிறுவனுக்கு உடல் பதறியது.....

காரணம் அவள் தலை முழுதும் பாண்டேஜ் சுற்றப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட ஒரு நாளில் அந்தச்சிறுவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு .....கேள்விகேட்க்கப்பட்டான்....

இவர் தான் அந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்.....நீ இவரை பார்த்திருக்கிறாயா..............

எனக்கு தெரியாது இவரை.....ஆனா அந்த வண்டி என் பாட்டியையும், சின்ன சித்தியையும் இடிச்சத நான் பார்த்தேன்.....


இந்த பதிலுக்காக காத்திருந்த அந்த நீதிபதி தன் தீர்ப்பை அந்த சிறுவன் சாட்சியை உறுதி செய்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்......

அந்த பெரிய சித்தியும் கொஞ்ச நாளில் மருத்துவ உதவி உதவாமல் இறந்துவிட்டாள்..........

கொசுறு: அந்த அபாக்கியவாதி சிறுவன் நானே! நான் பார்த்த கோர்ட்டு என் ஆறு வயதிலே!....

இது ஒரு மீள் பதிவு...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. கொடுமையிலும் கொடுமை இது.... சிலரின் வேகத்தால் பலிகடா ஆவது மக்களே

  ReplyDelete
 2. சிறு வயதில் இது இன்னும் கொடுமை. கண் முன்னே, சொந்தம் ஒன்றைக் காவு கொடுத்தது. :(

  ReplyDelete
 3. பொறுப்பற்ற மனிதர்கள்.

  ReplyDelete
 4. ////அந்த அபாக்கியவாதி சிறுவன் நானே! நான் பார்த்த கோர்ட்டு என் ஆறு வயதிலே!....////

  கொடுமையிலும் கொடுமை பாஸ் அதுவும் சின்னவயதில் கண்முன்னால் விபத்தில் சித்தியும் பாட்டியும் இறந்ததை 6 வயது சிறுவன் மனநிலை எப்படி இருக்கும் அந்த துர்பாக்கிய நிலை உங்களுக்கு வந்திருக்கு கொடுமை

  ReplyDelete
 5. நீதிமன்றம் - அப்படிங்கற விஷயத்த பேசும்போது எனக்குள்ளே நான் பலமுறை சிரித்துக்கொண்டதுண்டு./

  பட்டுத்தெரிக்கும் வலியான வேதனைப் பகிர்வு.. கனக்கிறது!

  ReplyDelete
 6. வேதனையான விசயம் மாம்ஸ்...

  ReplyDelete
 7. யாரோ ஒருவருடைய கவனகுறைவால் நமது சொந்தங்களை இழக்கும் போது ஏற்ப்படும் துயரம் சொல்ல முடியாது

  ReplyDelete
 8. டிரைவரை நீங்கள் பார்க்காததால் அவர் குற்றமற்றவர் அப்படித்தானே! நல்ல நீதி! நீதிபதி!
  நான் ஏற்கனவே வாசித்திருந்தேன் மாம்ஸ்! :-(
  அதெப்படி மாம்ஸ் எல்லாப்பக்கத்தாலையும் அடிவாங்கியிருக்கீங்க?

  ReplyDelete
 9. கலங்க வைத்துவிட்டீர் அண்ணே ....

  ReplyDelete
 10. 6 வயதிலேயே கோர்ட்டையும், 12 வயதிலேயே டாஸ்மாக்கையும் கண்ட எங்கள் மாபெரும் வீரர், அஞ்சா நெஞ்சர் மப்பு ,மாடசாமிக்கு வாழ்த்துகள், வீர வணக்கங்கள் ஹி ஹி

  ReplyDelete
 11. என்ன சொல்ல மாம்ஸ்.. தினமும் இந்த மாதிரி செய்தி பேப்பர்ல படிக்கிறப்ப தெரியாத வலி இப்போது உணர்கிறேன்

  ReplyDelete
 12. வெரி சாரி மாப்ள...

  வேறொன்னும் சொல்ல தெரியல

  ReplyDelete
 13. முன்பே படித்து வேதனிபட்ட கட்டுரை :-(

  ReplyDelete
 14. என்னய்யா இப்பிடி பதற வச்சுட்டே, ச்சே பாவம்ய்யா நீ...!!!

  ReplyDelete
 15. என்ன எழுதுரதுன்னே புரியலை, கையெல்லாம் நடுங்குது...!!!

  ReplyDelete
 16. பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 17. மனதை விட்டு என்றும் நீங்காத வேதனைதான்.வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி