எங்க மாமா(uncle!)..! - சுரீர் கதை!

வணக்கம் நண்பர்களே...கொஞ்ச நாளா கதை சொல்லனும்போல இருந்துது...நீங்க கேக்கலைன்னாலும் நானா சொல்றது தானே பதிவுலக நடைமுறை(!)...எனவே ஆ*ரம்பிக்கிறேன்!


ஒரு காலத்துல பணக்கார வியாபாரி ஒருத்தரு இருந்தாரு...அவரும் அவரோட முன்னோர்கள் போலவே நல்லா வியாபார தந்திரம் தெரிஞ்சவரு...அதனால அட்டகாசமா பொழச்சி வந்தாரு*...அப்போ வெளியூர்க்காரங்க ராஜாங்கம் நடந்துட்டு இருந்த காலம்...அதனால எதிர்த்து போராடுனா தன் குடும்பமும் காணாபோயிரும்னு அறிஞ்சி வச்சி இருந்தாரு அந்த வியாபாரி..எனவே, எந்த வித எதிர்ப்பும் காட்டாம வாழ்ந்து வந்தாரு...

அப்போ அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது(அவருக்குன்னா அவரோட மனைவிக்கு!)...அந்த குழந்த அம்புட்டு அழகா இருந்துது..நாளைய ராசா நீதான்ய்யான்னு சொல்லி பாராட்டி சீராட்டி வளத்தாங்க அந்த பணக்கார குடும்பத்துக்காரங்க...அந்த குழந்த பெரிய பையனா ஆனபோது சீமைக்கு(!) படிக்க(!) அனுப்பி வச்சாரு அந்த வசதிக்காரறு...


புள்ள அங்க போய் கஷ்டப்படக்கூடாதுன்னு எல்லா வசதியும் செய்ஞ்சி கொடுத்தாரு...அந்த சீமயோட ராசாவோட புள்ளையும் அந்த ஸ்கூல்ல படிச்சி வந்தாரு...ஒரு நாளு எதேச்சையா ராசாவோட புள்ள, வியாபாரி புள்ளைய பாத்து...

நீ எந்தப்பக்கமா இருக்குற வழியா வீட்டுக்கு போவேன்னு கேட்டாரு...

இந்த ஸ்கூலுக்கு நாலு வழி இருக்கு நீ வேணா பாரு...இருந்தாலும் நீ எந்தப்பக்கம் காட்டுறியோ அந்தப்பக்கம் போறேன்னு சொன்னாரு...

எதிர்பக்கமா காட்டிய ராசா மவன் கொஞ்ச நேரத்துல அதிர்ச்சி ஆயிட்டாரு...

என்ன விஷயம்னா ஸ்கூலோட நாலு பக்க வாசல்லயும் தனி தனி காருங்க அந்த வியாபாரி பையனுக்காக தினமும் வைட் பண்ணத பாத்து அதிர்ச்சி ஆயிட்டாரு...ராசாப்புள்ளயான எனக்கே ஒரு காருதான்..இந்த பய புள்ளைக்கு இத்தனயான்னு மயக்கமாயிட்டாரு!

மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தாரு அந்த வியாபாரி புள்ள...

இப்பேர்ப்பட்ட வரலாற்று பெருமை கொண்டவரோட ஒரு நண்பருக்கு நட்பு ஏற்ப்பட்டது...


நீயும் நானும் ஒன்னு நமக்கு நாலு கண்ணுன்னு சொல்லி வாழ்ந்து வந்தாங்க...

ஒரு நாளு வியாபாரிக்கு இந்த நட்பு பிடிக்காததால தாத்தாவ வச்சி ப்ளான் போட்டாரு...அதே போல தாத்தாவும் அரசியல்ல தனக்கு எதிரியான அந்த மனுசன எப்படி பிரிக்கலாம்னு அழகா சொல்லி கொடுத்தாரு...

அதே போல அந்த வெள்ளந்தி நண்பர், வெளியூரு போயிட்டு வர்றதுக்குள்ள வியாபாரியோட புள்ளாண்டான் நேரா போயி தாத்தா கிட்ட சரண்டர் ஆகிட்டாரு...இதுல ஒரு ப்ளாஷ் பேக் என்னன்னா...

அப்பா ஏன் அந்த நல்ல நண்பன விட்டு வர சொல்றீங்க...


அவன் நல்லவந்தான்...ஆனா நீ அவன்கூட இருந்தா நம்ம வாரிசுங்க இந்த நாட்ட வருங்காலத்துல ஆள முடியாது பாத்துக்க...ஏன்னா நமக்கு அதிகாரம் பண்ணி தான் பழக்கம்...உன்கிட்ட இருக்க குணங்கள் அவன்கிட்ட இருக்கா பாத்தியா(!)...ஏன்னா அவன் சாதாரண ஆளு நீ அப்படியில்ல மவராசன்...உனக்கு அந்தப்புரம் தனியா இருக்கு...இப்போ புரிஞ்சிதா நட்பு வேற தொழில் வேற....நமக்கு நட்ப விட தொழில் தான் முக்கியம்....நீ அந்த தாத்தாவோட போய் சேரு...மத்தத எல்லாம் அவரு பாத்துப்பாரு...எதிர்காலத்துல இந்த ஊரே நீ மற்றும் உன் சந்ததிங்க சொல்றத வேத வாக்கா நம்பும்...


சர்தாம்பா...நீங்க சொன்ன சர்தான்...என்னாலையும் அந்தப்புரத்த மறக்க முடியாது!

இப்பேர்ப்பட்டவர் எனக்கும்(!) ஒரு வகையில் மாமா!

ஒரு முடியாட்சியின் வரலாறு இது..

கொசுறு: தக்காளி இத படிச்சிட்டு புரியலன்னு சொல்றரவங்க...வரலாறு தெரியாதவங்கன்னு அர்த்தம் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

32 comments :

 1. முதல் வாசகன்.

  ReplyDelete
 2. நல்லாப் புரியுதுங்கோ!

  ReplyDelete
 3. நவம்பர் 14 மாமா கதை அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இந்தியாவில் நடந்த வரலாற்று சம்பவமா?

  ReplyDelete
 5. நீங்க இதுக்கு தெய்வ திருமகள் காக்கா கதை சொலியிருக்கலாம்....
  நேரு மாமா கதை நல்லாருக்கு மாமா

  ReplyDelete
 6. >>தக்காளி இத படிச்சிட்டு புரியலன்னு சொல்றரவங்க...வரலாறு தெரியாதவங்கன்னு அர்த்தம் ஹிஹி!

  enakku எனக்கு கதை புரிஞ்சுடுச்சு ஹி ஹி

  ReplyDelete
 7. மாம்ஸ் கதை ஆகா.. ஓஹோ...

  ReplyDelete
 8. நாட்டில நிறைய பேர் ஒண்ணுமே புரியலைனாலும் புரிஞ்ச மாதிரி தானே நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அதனால எனக்கும் புரிஞ்சிட்டது

  ReplyDelete
 9. மாப்ள மாமான்னு சொன்னப்புறமும் புரியாம இருக்குமா?...

  ReplyDelete
 10. நானும் "பெங்காலியின்(இந்தியன்னு சொன்னா மட்டும் என்ன பண்ணுவீங்க?)" தீவிர விசிறி மாம்ஸ்....

  #இன்னும் ராசவம்சம், அடடா.. குளுந்து போச்சு மாம்ஸ்...

  ReplyDelete
 11. //rufina rajkumar said...

  நாட்டில நிறைய பேர் ஒண்ணுமே புரியலைனாலும் புரிஞ்ச மாதிரி தானே நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அதனால எனக்கும் புரிஞ்சிட்டது///

  ஹா ஹா ஹா... வாழுக...

  ReplyDelete
 12. ///தக்காளி இத படிச்சிட்டு புரியலன்னு சொல்றரவங்க...வரலாறு தெரியாதவங்கன்னு அர்த்தம் ஹிஹி!
  //

  நல்ல புரியுது .. நான் வரலாறுல 90 mark

  ReplyDelete
 13. ஆமாம் அவரு பெரிய கப்பல் வியாபாரி .......நீர் சொல்வது ரோசாப்பூ ரவிக்கை காரரைதானே

  ReplyDelete
 14. தக்காளி இத படிச்சிட்டு புரியலன்னு சொல்றரவங்க...வரலாறு தெரியாதவங்கன்னு அர்த்தம் ஹிஹி!

  >>>
  இப்படி ஒரு பிட்டா சகோ? எனக்கு தெரியுது, புரியுது அவ்வ்வ்

  ReplyDelete
 15. மாப்ள எனக்கு வரலாறு தெரியல தட் மீன்ஸ் கதை புரியல...

  ReplyDelete
 16. சத்தியமா புரில மாம்ஸ்.. கொஞ்சம் நேரா பேர் சொன்னீங்கன்னா தேவலை ஹி ஹி ஹி

  ReplyDelete
 17. வணக்கம் அண்ணே,

  நல்லா இருக்கிறீங்களா?

  திமுக நொந்த நிலையினையும் மாமனால் மருமகன்களின் வாழ்வு செழித்த நிலையினையும் மறைமுகச் சாடலில் கதை உரைத்து நிற்கிறது.

  நல்லதோர் முயற்சி!

  ReplyDelete
 18. அந்த மாமாவை பாராட்டனும்ய்யா, அவரு வெளிநாட்டுகாரியை வெடி வச்சதோட விட்டுட்டாரு, கல்யாணம் இந்தியாகாரியை கட்டிகிட்டாரு, ஆனால் தறுதலை பேரன் சீமைகாரியை கொண்டு வந்தான், கொள்ளு பேரன் அடுத்து அமெரிக்கா சீமைக்காரியை கொண்டு வரப்போறான் என்னே குடும்பம்தா நாதாரிகளா, அடுத்த காங்கிரஸ் தலைவி அமெரிக்காகாரி ஸாரி உன் பாசையில பேரிக்காகாரி...எழுதி வச்சுக்கோடா தக்காளி....!!!

  ReplyDelete
 19. வரலாற புட்டு புட்டு வச்சிடிங்களே.... சூப்பர் மாம்ஸ்...

  ReplyDelete
 20. வரலாற்றுக் கதையா!..யாரையோ நல்லா வெளுத்து வாங்குறீங்க
  அதுமட்டும் புரியுது.வாழ்த்துகள் அருமையாக் கதசொன்னதுக்கு .

  ReplyDelete
 21. மாமா நல்லா கதை சொல்றீங்க...ஞாபகம் வச்சுக்க வேண்டிய கதைதான்... ஏன்னா இன்னமும் நாம அவங்க கீழதானே இருக்கோம்.

  ReplyDelete
 22. அப்ப எனக்கு வரலாறு தெரியலையோ?

  ReplyDelete
 23. அப்போ அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது(அவருக்குன்னா அவரோட மனைவிக்கு!)..//


  லொள்ளு தான் மாம்ஸ்

  ReplyDelete
 24. கதை புரிஞ்சிடுச்சி மாம்ஸ்

  ReplyDelete
 25. யாருக்குப் புரியுது இந்த அரசியல் கதையெல்லாம்!

  ReplyDelete
 26. மாமா கதை கலக்கல் மாம்ஸ்...

  ReplyDelete
 27. குழந்தைகள் தின விழா! வாழ்த்துக்கள்!!??

  ReplyDelete
 28. மாம்ஸ்... சாட்ல சொன்னத கேட்டுட்டு என்னை தாக்கி தான் ஏதோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன்... இங்க வந்து பார்த்தா மாமாவோட பைஜாமாவை கிழிச்சிருக்கீங்க...

  இந்தமாதிரி சுத்தி வளைச்சு போட்டு மண்டை காய வைக்காம நேரடியா தலைப்பு வச்சிருந்தா உங்க தைரியத்தை பாராட்டியிருப்பேன்...

  ReplyDelete
 29. @ நிரூபன்
  // திமுக நொந்த நிலையினையும் மாமனால் மருமகன்களின் வாழ்வு செழித்த நிலையினையும் மறைமுகச் சாடலில் கதை உரைத்து நிற்கிறது. //

  யோவ் நிரூபா உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா... தாத்தான்னா அவர் ஒருத்தர் தான்... இவர் தமிழ்நாட்டு தாத்தா இல்லை... இந்தியாவிற்கே தாத்தா... இந்தியன் தாத்தா அல்ல...

  ReplyDelete
 30. நீங்க கதை சொன்ன விதம் நல்லா இருக்கு மாமா...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி