சந்தோசம் Vs வருத்தம் (Indian!)

வணக்கம் நண்பர்களே...ஒவ்வொருவரும் அவர்தம் நாட்டை பற்றி நினைக்கும் பொழுது ஏற்ப்படும் நெகிழ்வையே இங்கு பதிந்துள்ளேன்...

இந்தியாவை நினைக்கும் பொழுது...ஏற்ப்படும் சந்தோஷங்கள்...


உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு...என் இந்தியா..

மிகப்பெரிய மனித வளங்களை கொண்ட...வளர்ந்து வரும் அளவிட முடியாத பலம் கொண்ட நாடு...

மலை முதல் கடல் வரை அனைத்து வித நில பங்கையும் கொண்ட நாடு...

22 வரயறுக்கப்பட்ட மொழிகள்...1600 உள் நாட்டு மொழிகள் மற்றும் 650 பழங்குடி மொழிகள் கொண்ட மிகப்பெரிய தேசம்...

ஒரே நாட்டில் கருப்பு, வெள்ளை, பழுப்பு, சிகப்பு என பல நிறங்களில் இருக்கும் மக்களை கொண்ட நாடு...

உலகத்திலேயே அதிகப்படியான மசாலாக்களை(படத்தில் அல்ல!) உணவு விஷயத்தில் வைத்திருக்கும் தேசம்...பல்வேறு வித விதமான உணவுகள் கொண்டது...

உலகத்தின் தர வரிசையில் 3 வது மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு...

குடும்பம் எனும் சொல்லுக்கு தனி மரியாதை உருவாக்கி வைத்து..அதை வைத்து உலகே இந்தியர்களை பார்த்து ஆச்சரியப் பட வைத்துக்கொண்டு இருக்கும் நாடு...

ஏழையும், பணக்காரரும் படிக்கும் பள்ளிகள் தனிதனியாகினும்(!)...வேலை எனும் வரும்போது அறிவு மிக்கவனாக ஏழை மாணவன் மிளிரும் அதிசய தேசம்...என் இந்தியா...

யார் எவ்வளவு தீமை செய்தாலும் தன் நிலை மறக்காமல் கடவுள் என்பவன் பார்த்துக்கொள்வான் என்று தான் தவறான பாதையில் செல்லாமல் நேர்மையாக வாழ்கையை நடத்தும் அப்பாவி மக்கள் நிறைந்தது என் இந்தியா....

பெண் என்பவளை தாயாக, மனைவியாக, மகளாக குடும்பத்தின் மைய சக்கரமாக கொண்ட பண்பாட்டுடன் இருக்கும் என் இந்தியா...

இனி வருத்தங்கள்....


ஒழுக்கம்(!) மிகப்பெரிய கேள்விக்குறி...குறிப்பாக சட்டங்களை சரியான படி மதிக்காமல்...அதன் மூலம் தனக்கு தானே வேதனைகளை சுமப்பவர்கள் - உதாரணம்- ஹெல்மெட் அணிவது!


அடுத்தவர்களின் தனி மனித சுதந்திரத்தை பற்றி கவலைப்படாதது...மிகப்பெரிய குறை...எ.கா - எதிலும் முண்டியடித்தல்(நொண்டி அடித்தல் அல்ல!)

இயற்கை மற்றும் சுற்றுப்புற தூய்மை - இதை பற்றி சரியான அளவுக்கு அறியாதவர்கள் கூட கிரிக்கட்டை பற்றி அறிந்திருப்பது..வேதனையின் உச்சம்!
உலக கருப்பு முதலைகள் பட்டியலில் அதிகம் பேர் இந்தியர்கள் - வெட்கக்கேடு...பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிக்கொண்டு இருக்கிறான் ஏழைகளின் அறியாமையை வைத்து!

ஏழ்மை - தொடர்ந்து கொண்டே இருத்தல்...அதனை மூடி மறைக்கும் நிர்வாகம்...!

கல்வி - ஏழைக்கும், வசதி படித்தவருக்கும் பாகு பாட்டுடன் வழங்கப்படுவது...

மருத்துவம் - உலக பணக்கார நாட்டு மக்கள் இங்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்(!)...நிலைமை இப்படியிருக்க...இன்னும் அடிப்படை சிகிச்சைகளே கிடைக்காத என் சராசரி இந்தியன்...!

இரு முகம் கொண்ட தலைவர்கள் - தன் குழந்தைகளை பல மொழி கற்று மேன்மக்கள் ஆக்கும் பிச்சைக்கார தலைவர்கள்...மக்களை என்றுமே ஆட்டு மந்தைகளா இருக்க வேண்டும் என்று நினைப்பது - தூ!

மக்கள் தொகையும்..மக்கள் பகையும் - கொளுத்திப்போடும் சந்தர்ப்ப வாதிகளை தலைவர்கள் என நம்பும் மக்கள் கூட்டம்...!

உலகமயமாக்கல் - இதன் மூலம் உள்ளூர் தற்கொலைகளை ஊக்கு விக்கும் நிர்வாக சீர்கேடு...

இதுவரை பொறுமையாக பதிவை வாசித்தததற்க்கு நன்றிகள்...


கொசுறு: காலம் இப்படியே செல்லாது என்று நம்பும் ஒரு இந்தியனாக...உங்களில் ஒருவன்..!

ஜெய் ஹிந்த்..
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. உலகத்தின் தர வரிசையில் 3 வது மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு...
  // unmaiyaa? wow...

  ReplyDelete
 2. //குடும்பம் எனும் சொல்லுக்கு தனி மரியாதை உருவாக்கி வைத்து..அதை வைத்து உலகே இந்தியர்களை பார்த்து ஆச்சரியப் பட வைத்துக்கொண்டு இருக்கும் நாடு...//

  நிதர்சனம் மாம்ஸ்

  நானும் ஓர் இந்தியன் என்பதில் கர்வம் கலந்த பெருமைதான்..

  எனினும்

  //உலக கருப்பு முதலைகள் பட்டியலில் அதிகம் பேர் இந்தியர்கள் - வெட்கக்கேடு...பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிக்கொண்டு இருக்கிறான் ஏழைகளின் அறியாமையை வைத்து!//

  எனக்கும் வருத்தமளிக்கத்தான் செய்கிறது

  வந்தேமாதரம்..!

  ஜெய்ஹிந்த்.

  ReplyDelete
 3. எப்படியெல்லாம் நாம் புகழப்படுகிறதோ அதேபோல் இகழ்ச்சிக்கு உள்ளாகிறது.


  அதிக தொலைத்தொடர்ப்பு பங்களிப்பு மற்றும் பயன்படுத்தும் விஷயத்தில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது..  அதே சமயம் தொலைத்தொடர்பில் உலகிலேயே மிகப்பெரிய ஊழலும் இங்குதான் நடந்திருக்கிறது என்று வேதனையோடு பதிவு செய்கிறேன்...


  வணக்கம் விக்கி...

  ReplyDelete
 4. Ithallam ennakku puriyathu
  mamms........
  Neenga ulkuthu pathivu
  podunga......
  Athan enakku puriyum......

  ReplyDelete
 5. >>இதுவரை பொறுமையாக பதிவை வாசித்தததற்க்கு நன்றிகள்...

  hi hi hi ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. இந்தியா பற்றி அருமையான தகவல்கள் பாஸ்

  ReplyDelete
 7. மாப்ள எங்க ஆப்ரிக்க தொடர் வரவே இல்ல .... அவ்ளோ தானா?? இவ்ளோ பெரிய பதிவு எழுதி இருக்க அதனால நேரம் இல்லைன்னு மட்டும் சொல்லாத..

  ReplyDelete
 8. ஆயிரம் ஆனாலும் இந்தியா இந்தியா தான்

  ReplyDelete
 9. நான் இருப்பதே இந்தியாவுக்கு பெரிய பலம் ( ஹீ ..ஹீ _

  ReplyDelete
 10. //சட்டங்களை சரியான படி மதிக்காமல்...அதன் மூலம் தனக்கு தானே வேதனைகளை சுமப்பவர்கள் - உதாரணம்- ஹெல்மெட் அணிவது!//

  இன்னும் அதைக் கட்டாயமாக்கலையா மாம்ஸ்? என்ன கொடுமை இது?

  ReplyDelete
 11. நீங்க நம்பிட்டே ஒக்காந்து இருங்க மாம்ஸ்...
  நானெல்லாம் மொரீசியஸ்ல செட்டில் ஆகப் போறேன்....

  ReplyDelete
 12. நிச்சமாக, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் கர்வம் கொள்ள வேண்டும்

  ReplyDelete
 13. காலம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான் பல்வேறு இந்தியனும் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்... அதை மாற்ற வைக்க சிலர் மட்டுமே முயற்சி செய்கிறார்கள்... பதிவுலகில் பலர் அந்த மாற்றத்தை நாடி மாற்ற முயற்சி செய்வது தெளிவாக தெரிகிறது

  ReplyDelete
 14. என்ன இருந்து என்ன பயன், கள்ளத்தனமா திங்குரவனுங்க இருக்குறவரை நாடு உருப்படாது இல்லையா...

  ReplyDelete
 15. சாப்பிட சாப்பாடு இல்லாமல் ஒருதாய் தன் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததும், இதையறிந்த மாமியாரும் தற்கொலை செய்து கொண்டதும், உலகத்திலயே 700 கோடி மக்கள்தான் இருக்கிறார்கள் ஆனால் நம்ம அரசியல்வாதி லட்சகணக்கான கோடிகளில் விளையாடி ஹாயாக திகார் ஜெயிலில் இருப்பதும் நம்நாட்டின் சாபக்கேடு....!!!

  ReplyDelete
 16. அருமையான ஒப்பீடு மாம்ஸ், உங்கள் வரிகளில் உங்கள் ஆதங்கம் வெளிப்படுகிறது.


  நம்ம தளத்தில்:
  நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?

  ReplyDelete
 17. good இது தானே மாம்ஸ் இந்தியா ரோட்ன்னு இருந்தா மேடு பள்ளம் சகஜம் தானே?

  ReplyDelete
 18. இது முரண்களின் தேசம்! சொர்க்கமே என்றாலும் பிறது நம்மூரைப் போல வருமா?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி