பேச்சுலர் = பேச்சி துணைக்கு ஆள் இல்லாதவர் - பாகம் 1

வணக்கம் நண்பர்களே...இந்த பதிவு பேச்சி துணைக்கு ஆள் இல்லாதவர்கள் அதாவது பேச்சுலர் எனப்படும் திருமணம் முடிக்காதவர்களின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யங்களை(!) உங்களுக்கு சொல்ல தோன்றியதின் விளைவே...இவை எல்லோர் வாழ்விலும் உண்டு..எனவே..படித்து பாருங்கள் இந்த மொக்கை பதிவை ஹிஹி!...

அப்போது பேச்சிலர் வாழ்கை வாழ்ந்து வந்த நேரம்...மொத்தம் 13 குடித்தனங்கள்(பேய் வீடோ!) இருந்த வீட்டில் குமாரும்(!) ஒரு அறையில் நண்பர்களுடன் வாழ்ந்து வந்தான்...

அடேய் யார்ரா வீட்ல....விளங்காதவனுங்களா...

அய்யா வாங்க சொல்லுங்க அய்யா...(வந்துட்டாரு விளங்குனவரு!)

ஆமா, கீழ பம்புல தண்ணி அடிச்சி குளிச்சிட்டு இருக்கானே...அவன் உன்னோட ரூமா...


(என்ன இன்னைக்கு காலையிலேயே சனி உச்சத்துல இருக்கே...இவருக்கா எனக்கா!)

ஆமாங்கய்யா...ஏங்க!

அங்கல்லாம் குளிக்கப்படாது...வேணும்னா மேல கொண்டாந்து வச்சிக்கிட்டு...பாத்ரூம்ல குளிக்க சொல்லு...

(அவன் என்ன நாய்க்குட்டியா!)

அய்யா...அவன் கீழ இருந்து வாளில தூக்கிட்டு வர முடியலங்க...அதனால தாங்க...கொஞ்சம் பொறுத்துக்கங்கய்யா...

அதெல்லாம் முடியாது...நான் யாரு தெரியும்லே...

ஹவுஸ் ஓனர்!...(இந்தாளுக்கு தெரியாது போல யாருன்னு...பல பேரு இப்படித்தான் சொல்லிட்டு திரியிறானுங்க!)

அதுக்கு மேல...நான் முன்னாடி ஒரு போலீஸ் மேன்...(நல்ல வேல மேன்!)

சரிங்க அதுக்கு...

கூட கூட பேசுன...தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்...(பய புள்ள இதே போற வயசுல இருக்கு..இது நம்மள ஸ் ஸ் அபா!)

இப்ப என்னாங்க பிரச்சன...அங்க குளிக்க கூடாது அவ்ளோ தானே...

ஆமா....அங்க தாங்க குளிப்போம்...அவன் மட்டும்ல இனி எங்க ரூம்ல இருக்க 4 பேரும் அங்கனதான் குளிப்போம்...நீர் முடிஞ்சத பாத்துக்கும்....(எவ்ளோ பாத்து இருக்கோம்!..இத பாக்க மாட்டமா!)

டேய்...#$#$#%%%$#%$##%^%(காதில் கேக்க முடியாத வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு கிறார்!)

அய்யா ஒரு நிமிஷம்....நீங்க பேசுற ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் அர்த்தம் சொல்றேன் கேளுங்க...

(அந்தப்பைய ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் தெளிவாக உரை வாசிக்க ...கடுப்பாகிறார் ஓனர்!)


டேய் என் பையன அனுப்புறேன்டா...

சரி கெளம்பு காத்து வரட்டும்...(இவரு கிழிசிப்புட்டாரு....ஆமா அவரு வந்து கிழிக்கப்போறாரு!)

எது....(டென்சனாக போயிட்டார்...ஸ் ஸ் அட வீட்டுக்குப்பா!)

மாலைப்பொழுதில்....

மாப்ளே...

என்னடா...

பன்னிகுட்டி வாரான்டா....(அவர்கள் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள்!)

வரட்டும்..எலேய் அந்த கிளாஸ எடு...அப்படியே கொஞ்சம் கூல் ட்ரிங்க ஊத்து...இப்ப பாரு!

எலேய் தம்பி...

வாங்க ஓனர்...எப்படி இருக்கீங்க...ஓனர்...(வாடி வா!)

இப்ப நல்லா மரியாதயாத்தான் பேசுறே...ஏன் எங்கப்பா கிட்ட மட்டும் அசிங்க அசிங்கமா பேசுன...

நீங்க என்னைய என்னான்னு சொல்லி கூப்டீங்க...(முதல்ல இருந்தா அவ்வ்!)


தம்பின்னு...

அவரு என்னான்னு சொல்லு கூப்டாரு தெரியுமா...

என்னான்னு கூப்டாரு...

"அடேய் யார்ரா வீட்ல....விளங்காதவனுங்களா.." - இப்படித்தான் ஓனர் எங்கள கூப்ட்டாரு...!

சரிப்பா...அதுக்காக..ஒரு பெரிய மனுசன இப்படியாய்யா மரியாத இல்லாம பேசுறது...

யாரு அவரு பெரிய மனுசனா...சும்மா நிறுத்துங்க ஓனர்...வாய துறந்தா கூவம் கணக்கா நாத்தம் புடிச்ச பேச்சி பேசுறாரு...

இப்போ நெஞ்ச புடிச்சிக்கிட்டு காலையில இருந்து உக்காந்து இருக்காருய்யா....அதுக்கு என்ன சொல்றே..

ஓனர் அது என் தப்பு இல்ல...அவரு பேசுன வார்த்தைகளுக்கு கோனார் உரை கணக்கா விளக்கம் சொன்னேன் அம்புட்டுதான்...

அவரு உன்னைய வீட்ட காலி பண்ண சொன்னாரு...

இதோடா..வாங்குன 5.000 ரூவா பணத்த நீர் இப்பவே எடுத்து வையும்...சரக்கடிக்க காசில்ல...அடுத்த மாசம் வீட்ட காலி பண்ணிக்கறேன்...

இது என்னய்யா இது கொடுமயால்ல இருக்கு...


ஏன் இருக்காது...இவருக்கு வேணும்னா சேத்துப்பாரு...வேணாம்னா காலி பண்ண சொல்லுவாரு...கெளம்புய்யா...

டேய் உன்னால தான் எல்லா பயலும் இந்த காம்பவுண்ட்ல கெட்டு போறானுங்க பாத்துக்க...எப்ப தான் காலி பண்ணுவ...

என்னய்யா மறந்துடுச்சா...வேலைக்காரி மேட்டரு...

ஸ் ஸ் அபா சாமி...போட்டு கொடுத்துடாத...நான் எங்கப்பா கால்ல விழுந்தாவது சமாளிச்சிக்கறேன்...ஆள விடு...

(ஓனர் ஓடியே பூட்டார்!)

என்னடா மேட்டரு...தல தெறிக்க ஓடுறார்..வேற ஒண்ணுமில்ல மாப்ள...நம்ம வீட்டுக்கு கக்கூஸ் கிளீன் பண்ண வந்த பொம்பளைய கட்டி பிடிச்சிகிட்டு இருந்தான்...அதான் அப்படியே நம்ம கோவாலு கேமரால போட்டோ எடுத்து வச்சேன்...எதிர்காலத்துல உதவும்ல...அதான் மேட்டர் தெரிஞ்சதுல இருந்து பய எப்படி ஓடுறார் பாரு ஹிஹி!...

கொசுறு: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் ஓட்டங்கள்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. Eppadi mamms neenga load
  pannathum nan vanthutten
  partheengala ?

  ReplyDelete
 2. சுவை..ஆங்காங்கே காணொளிகள் சிறப்பு..

  ReplyDelete
 3. Mamms eegappatta matter vaicheerukkeenga
  pola....

  ReplyDelete
 4. வணக்கம் மாம்ஸ்

  இங்க பதிவா இருக்கிறது கதையா அனுபவமா..? தெரியல..ஆனா ஒவ்வொரு பேச்சுலரா இருந்தவங்களுக்கும் இந்த அனுபவம் கண்டிப்பா இருக்கும்.

  நாங்க அஞ்சு பேர் தங்கவேண்டிய ரூம்ல 8 பேர் தங்க்கிக்கிட்டு 3 பேர் வாடகைகுடுக்காம காலம் கடத்துனது ஞாபகம் வந்திருச்சு..

  அதுலயும் ஓனர பார்த்தா அவனவன் த்ரிச்சு ஓடுறது இப்ப நினைவுக்கு வந்தது..

  நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 5. அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் ஓட்டங்கள்...! super..

  ReplyDelete
 6. பேச்சுலருக்கு மீனிங் சூப்பர்....

  ReplyDelete
 7. அனுபவம் நல்லாத் தான் இருக்கு.
  இடையில் வரும் காமெடிகள் இன்னும் அருமை.

  ReplyDelete
 8. வணக்கமுங்க!அப்புறம் வீடு காலி பண்ணவேயில்லல்ல????வாடகையைக் கூட கட் பண்ணியிருப்பீங்களே?

  ReplyDelete
 9. வீக்னஸ் பார்த்து ஆப்பு வச்சிட்டியேய்யா உன்கிட்டே கொஞ்சம் சாக்ரதையாதான் இருக்கணும் போல...!!!

  ReplyDelete
 10. அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் ஓட்டங்கள்...!//

  நீ எங்கெல்லாம் ஓடி இருக்கே அதைசொல்லு முதல்ல ஹி ஹி, அந்த அம்பது வயசு பாட்டி மேட்டரை சொல்லவா...?

  ReplyDelete
 11. ////

  இந்த பதிவு பேச்சி துணைக்கு ஆள் இல்லாதவர்கள் அதாவது பேச்சுலர் எனப்படும் திருமணம் முடிக்காதவர்களின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யங்களை(
  /////பேச்சுலர் லைப் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை நான் தற்போது அந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கேன் சுவாரஸ்யமான வாழ்கை இது

  ReplyDelete
 12. உள்குத்து...........மாம்ஸ் .....ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 13. அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் ஓட்டங்கள்...!!!!!!

  ReplyDelete
 14. கூட கூட பேசுன...தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்...(பய புள்ள இதே போற வயசுல இருக்கு..இது நம்மள ஸ் ஸ் அபா!)

  /

  அதானே உங்களையாவது தூக்குறதாவது ஆனாலும் அந்த ஒனருக்கு ரொம்பதான் குசும்பு

  ReplyDelete
 15. நான் படிக்கும் போது ஹவுஸ் ஓனர் தான் எங்களுக்கு டைம் பாஸ் அப்ப,

  ReplyDelete
 16. //டேய் உன்னால தான் எல்லா பயலும் இந்த காம்பவுண்ட்ல கெட்டு போறானுங்க பாத்துக்க..//. எங்க வீட்ல என்ன பார்த்து ஊரே கெட்டு போகுதுன்னு சொல்றாங்க..

  ReplyDelete
 17. ஹவுஸ் ஓனரை விட ஹாஸ்டல் வார்டன் செம்ம பீசு..:)

  ReplyDelete
 18. வந்தீங்கன்னா அப்டியே ஒரு இலவசமா......முத்தப் பரிசோதனை...

  ReplyDelete
 19. "வாங்க ஓனர்..."-அந்த ஓனர் நீங்கதானே...?

  ReplyDelete
 20. நல்ல ப்ளாக் மெயில் தான் மாம்ஸ்

  ReplyDelete
 21. ///அய்யா ஒரு நிமிஷம்....நீங்க பேசுற ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் அர்த்தம் சொல்றேன் கேளுங்க../// ஹாஹா கடுப்பாகாமல் என்ன செய்வாரு ))

  ReplyDelete
 22. மாம்ஸ், எப்படியெல்லாம் தலைப்பு கண்டுபிடிகறிங்க பதிவு எழுத... தொடரில் உங்க கேரக்ட்டர் அதிகமா வர்ற மாதிரி தெரியுதே

  ReplyDelete
 23. >>வேற ஒண்ணுமில்ல மாப்ள...நம்ம வீட்டுக்கு கக்கூஸ் கிளீன் பண்ண வந்த பொம்பளைய கட்டி பிடிச்சிகிட்டு இருந்தான்...அதான் அப்படியே நம்ம கோவாலு கேமரால போட்டோ எடுத்து வச்சேன்...எதிர்காலத்துல உதவும்ல...அதான் மேட்டர் தெரிஞ்சதுல இருந்து பய எப்படி ஓடுறார் பாரு ஹிஹி!...
  hi hi hi

  அது நீ தானே?ங்க்கொய்யாலே

  ReplyDelete
 24. கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 25. பேச்சி துணைக்கு ஆள் இல்லாதவர்கள் அதாவது பேச்சுலர் எனப்படும்!
  சரக்க போட்டா பேசுவாங்க பாருங்க...அய்யய்யோ குடும்பஸ்தானாகி வெளிய
  வந்தப்புறம்தான் நிம்மதியே!இருந்தாலும் பேச்சிலர் வாழ்க்கை வாழ்க்கதான்....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி