2011 போய் 2012 வா! - ரெடி ஜூட்!

வணக்கம் நண்பர்களே...





உங்கள் அனைவருக்கும் விக்கியின் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...சில விஷயங்களை பற்றி....!


அன்பு - இது பதிவுலகில் 2012 ல் மேலும் தழைக்க வேண்டுகிறேன்...


நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!


படைப்புகள் - மிகச்சிறந்த படைப்பாளிகள் பலர் வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் ஒரு வட்டத்தில் தங்களை வைத்து இருக்கிறார்கள்...அவர்கள் வெளியில் வர வாழ்த்துக்கள்...!


மனம் - பல நேரங்களில் பல கருத்துக்கள் எனக்கு தவறாக தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக போகும் மனம் வேண்டுகிறேன்...!


சுதந்திரம் - என் மனைவி எனக்கு கொடுத்த சுதந்திரத்தை என்றும் பாதிக்காமல் நடந்து கொள்ளும் மன உறுதியை நான் தொடர விரும்புகிறேன்!


சத்தியம் - தேவையில்லாத சத்தியங்களை அலைஸ் வாக்குறுதிகளை யாருக்கும் நான் கொடுத்ததில்லை...அதே போல தொடர வேண்டுகிறேன்...!


தண்ணீர் தண்ணீர் - விட்டது விட்டதாக இருக்கும் நேரத்தில் அதை தொடராமல் இருக்க நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன் (ஹிஹி!)


கொள்கைகள்: இவை வெறும் கானல் நீராக போகாமல் துணிந்து முடிக்க முயற்சிக்கிறேன்...!


உறவுகள்: எந்த வித சோக கீதங்களோ அல்லது புகழுரைகளோ என்னை தாக்காத வண்ணம் என் வழியில் நான்...!


உதவிகள்: நான் புரிந்து வரும் விஷயங்கள் வெளி பார்வைக்கு தெரியாமல் அந்த மக்களுக்கு நல்லது செய்வதாக தொடர வேண்டுகிறேன்..!


வெற்று புகழ்: நாலு பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அற்பத்தனமாக எல்லோரிடம் ஜல்லி அடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்..!


கடமைகள்: சொந்த கடமைகளை நிறைவேற்றுவதில் சரியான குடும்பஸ்தனாகவும்(!) அதே நேரத்தில் குடிமகனாக என் கடமையை சரியாக செய்து வருவதில் மனது சாந்தி பெறுகிறது..தொடர வேண்டுகிறேன்!


சமுதாயம்: என்னை தாக்கும் கண்ணாடி சில்!...


எதிரிகள்: என்னை வளர்க்கும் நல்லவர்கள்...!


நண்பர்கள்: என்னை பொறுமையானவனாக்க(!) துடிப்பவர்கள்..


கொசுறு: எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...இந்தப்பதிவில் உள்ளவை என் தனிப்பட்ட கருத்துக்களே!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

41 comments :

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  2. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சான் ))

    ReplyDelete
  4. அன்பு - இது பதிவுலகில் 2012 ல் மேலும் தழைக்க வேண்டுகிறேன்...///

    இதைவிட பதிவுலகில் புரிந்துணர்வு தழைக்க வேண்டும்...

    ReplyDelete
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!//
    இந்தப்பொழுதின் இன்றிமையாத வார்த்தை! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //மனம் - பல நேரங்களில் பல கருத்துக்கள் எனக்கு தவறாக தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக போகும் மனம் வேண்டுகிறேன்...!//

    உங்களை புரிந்து கொண்டவனாக சொல்கிறேன்..
    நம் இருவருக்குமே இது கஷ்டம் தான்...

    ReplyDelete
  8. தண்ணீர் தண்ணீர் - விட்டது விட்டதாக இருக்கும் நேரத்தில் அதை தொடராமல் இருக்க நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன் (ஹிஹி!)//

    யாரையோ பயங்கரமா தாக்குறானே...

    ReplyDelete
  9. புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  10. கடமைகள்: சொந்த கடமைகளை நிறைவேற்றுவதில் சரியான குடும்பஸ்தனாகவும்(!) அதே நேரத்தில் குடிமகனாக என் கடமையை சரியாக செய்து வருவதில் மனது சாந்தி பெறுகிறது..தொடர வேண்டுகிறேன்!//

    கரிக்ட்டு அண்ணே...

    ReplyDelete
  11. வெற்று புகழ்: நாலு பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அற்பத்தனமாக எல்லோரிடம் ஜல்லி அடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்..!//

    புத்தாண்டுக்கு ஜல்லி அடிக்காமல் தண்ணி அடிக்கவும் ஹி ஹி...

    ReplyDelete
  12. உனக்கும் உன் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  13. புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
    அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. //மனம் - பல நேரங்களில் பல கருத்துக்கள் எனக்கு தவறாக தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக போகும் மனம் வேண்டுகிறேன்...!//

    உள்ளதுஉள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன்....Why?

    ReplyDelete
  15. //தண்ணீர் தண்ணீர் - விட்டது விட்டதாக இருக்கும் நேரத்தில் அதை தொடராமல் இருக்க நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன் (ஹிஹி!)//

    விட்டாச்சில்ல அப்புறம் பிரிட்ஜ்ல இருக்குற சரக்க இங்க அனுப்புறது.....ஹிஹிஹி

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ...

    அமைதியும் அன்பும் அஹிம்சையும் எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. மாம்ஸ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...புத்தாண்டு வாழ்த்துகள்....
    நீங்கள் சரக்கடிக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்....ஸ்ஸ்ஸ்சபா.....

    ReplyDelete
  18. மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

    ReplyDelete
  20. கொள்கைகள்: இவை வெறும் கானல் நீராக போகாமல் துணிந்து முடிக்க முயற்சிக்கிறேன்...!

    >>>
    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய் வருத்த கூலி தரும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. விஜயாந்த் பட கோர்ட் சீன் க்ளைமாக்ஸ் பாத்த மாதிரி ஒரு பீலிங்!

    ReplyDelete
  22. மாம்ஸ் அடுக்கு நடையில டி.ஆரையே மிஞ்சிட்டீங்க

    புத்தாண்டு வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  23. ஒரு சபதத்துக்கே அவனவன் மூச்சு வாங்குறான் இது இவ்ளோ பெரிய பட்டியல் எப்பிடி தலைவரே?

    ReplyDelete
  24. நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!

    மாப்ள இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. வணக்கம்,விக்கி சார்! நானும் கூட உங்களைப் போல் உறுதி பெற விரும்புகிறேன்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  26. அனைவரும் கடைபிடிக்கக்கூடிய நல்ல உறுதிமொழிகள்.

    உங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  27. இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் புலர்ந்திருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கிறேன்.

    ReplyDelete
  28. நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!
    //

    இது சூப்பர் அண்ணா.
    கருத்துக்களில் மாற்றுக் கருத்துக்கள் அடிப்படையில் மோதினாலும் நட்பு எனும் போது ஒன்றாகத் திரள வேண்டும்! இதனை நான் முன் மொழிகிறேன்.

    ReplyDelete
  29. மனித மனங்களின் அடிப்படையில் பதிவுலக குணங்களை அலசியிருக்கிறீங்க.
    ரசித்தேன்.

    ReplyDelete
  30. வணக்கம்.இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.வாழ்த்துக்களும்,நன்றும்,ஒரு வட்டத்திற்குள் இருப்போரை அடையாளம் காண்பதுவும் அவர்களை வெளியே கொண்டு வருவதும் பதிவுலகின் மிக முக்கியகடைமையும்,அவ்சியமும் ஆகிறது.

    ReplyDelete
  31. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே.

    ReplyDelete
  32. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  33. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்!
    எல்லாமே புதுசா இருக்கே! கலக்கல் மாம்ஸ்! :-)

    ReplyDelete
  34. நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  35. நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  36. ஹேப்பி நியூ இயர் தம்பி, நீயும் லேப் டாப் மனோவும் ஏதோ சங்கம் ஆரம்பிசதா சொன்னாங்களே ஹி ஹி ஜ்ஹி

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி