கடைசி இரவு...டிசம்பர் 31 (!?)

வணக்கம் நண்பர்களே...
வருடத்தின் கடைசி தினமான 31 என்பது பலருக்கு சந்தோஷமான நாளாகும்...புது வருடம் பிறக்க போகிறது என்ற மகிழ்ச்சி அனைவரையும் தொற்றிக்கொள்ளும் நாளிது...அப்படி ஒரு நாள் நடந்த சம்பவம் உங்களின் பார்வைக்கு...


ஹாய் கவி...என்ன இந்த பக்கம்..


சொல்லுங்க ரவி...


என்ன ப்ளான் பண்ணி இருக்கீங்க இந்த வருஷம் 31st க்கு...


ம்ம்..ஏன் தெரிஞ்சி என்ன பண்ணப்போறீங்க...


ஒரு ஆர்வம்தான்...நீங்க வேற நம்ம தோஸ்த் ஆயிட்டீங்க...


what?...


இல்லங்க எல்லோரும் பிரண்ட்ஸ் ஆச்சே அதான் கேட்டேன்...


அவசியம் சொல்லி ஆகணுமா...


விருப்பம் இருந்தா சொல்லுங்க...


நானும் கிருஷ் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்...அவரு இல்லையா...


இல்லைங்க...வேலை விஷயமா வெளிய போயி இருக்கான்...எதானாலும் சொல்லுங்க...அவன் வந்ததும் நான் சொல்லிடறேன்..


எப்படி சொல்றது...ப்ளீஸ் இந்த லெட்டர அவர்கிட்ட கொடுத்திடுங்க...தேங்க்ஸ்..


கொடுங்க..நீங்க என்னை நம்பலாம்..நான் பிரிச்சி படிச்சிட மாட்டேன் ஹிஹி!


(அவள் பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டாள்!)


டேய் மச்சி என்னடா இன்னைக்கு இங்க வரைக்கும் வந்துடுச்சி பொண்ணு...


எல்லாம் லவ் மேட்டர்தான்...நம்ம கிருஷ்க்கு லெட்டர் கொடுத்திட்டு போகுது பொண்ணு...


சரி பிரி படி...பாப்போம் என்னதான் சொல்லி இருக்குன்னு...


ஏய் வேண்டாம்டா...தப்பு...


அடச்சீ கொடு...(லெட்டர் பிடுங்கப்பட்டு படிக்கப்பட்டது...அதில்...
டியர் கிருஷ்...ஹாப்பி நியு இயர்..இன்னைக்கு இரவு நான் உங்களை சந்திக்க 9 மணிக்கு நம்ம பேசியது போல ECR ரோட்ல திருவான்மியூர் அடுத்த கோவில் ஸ்டாப்ல வைட் பண்றேன்...நீங்க சொன்னது போல மறக்காம வந்துடுங்க..மற்றவை நேரில் பேசுவோம்...பை...)


மச்சி...இன்னைக்கு அவனுக்கு வைப்போமா ஆப்பு...


டேய் வேனாண்டா அப்புறம் டென்சன் ஆயிடுவான்...


அடச்சீ...சும்மா இரு...இன்னைக்கு அவன் உன் பைக்க தான எடுத்திட்டு போயி இருக்கான்...


ஆமாம், அவனோடது நான்தான் மதியம் போயி சர்விஸ்ல இருந்து கொண்டு வரணும்...


ஹஹா நீ விடு நான் பாத்துக்கறேன்...இன்னைக்கு இருக்கு தீபாவளி...ஹஹா..


(நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு சிவா அங்கு செல்கிறான் முழுவதும் மறைக்கும் ஹெல்மெட்டுடன்)


ஹாய் கிருஷ்...


ம்ம்..


சரி சரி..திட்டாதே...இங்க எதுவும் பேசவேணாம்...தியேட்டர் போயி பேசிக்கலாம்...


ம்ம்...


(வண்டி தியேட்டரையும் தாண்டி ஆள் அரவம் அற்ற ஒரு இடத்துக்கு சென்று நின்றது...)


என்னாச்சி இன்னைக்கு உனக்கு...நான் கூப்டாலே இந்த மாதிரி தனிமையான இடத்துக்கு வரமாட்டியே...


ஹஹா..


ஹே நீ...யாரு...


நான் தான் சிவா..ஏன்டி நான் உனக்கு பின்னாடி சுத்துனேன்...என்னைய செருப்பால அடிப்பேன்னு சொல்லிட்டு..அந்த பிச்சக்காரப்பயல லவ்வருங்கரியா..இன்னைக்கு உனக்கு இருக்குடி..எங்க இப்ப அடி செருப்பால...


(அவள் பதில் சொல்லாது ஓடுகிறாள்...அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள்..திடீரென்று இரு கரிய உருவங்கள் அவளை பிடித்து நிறுத்து கின்றன..)


என்னம்மா பிரச்சன...


சார்(!) அவன் என்னை துரத்திட்டு வரான்...


அவர்கள் கொடுத்த அடியில் சிவா மயக்க மாகிறான்..!
அடுத்த நாள் கண் விழித்து பார்க்கும்போது அவனருகில் அவள் பிணமாக கிடக்கிறாள்...போலீஸ் அவனை கைது செய்கிறது...அவன் எவ்வளவு சொல்லியும் போலீஸ் நம்பவில்லை..அவன் கதி?..உங்கள் முடிவுக்கு..விட்டு விடுகிறேன்..!


கொசுறு: இது ஒரு உண்மை சம்பவம்...உங்கள் அன்பை(!) காட்ட வாழ்க்கை இழக்க வேண்டாம்...அறிவுரை அல்ல நிகழுரை...! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. வழக்கமா போஸ்ட்ல பயங்காட்டுவான், இந்த டைம் டைட்டில்லயே கொலை வெறி காட்றானே?

  ReplyDelete
 2. >>கொடுங்க..நீங்க என்னை நம்பலாம்..நான் பிரிச்சி படிச்சிட மாட்டேன் ஹிஹி!


  (அவள் பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டாள்!)

  அட அப்பாவிப்பொண்ணே, இவன் சேட்ல நாங்க பேசுனா அதையே ஒரு போஸ்ட்டா போடுவான், அவனை நம்பி லெட்டரை தந்துட்டியே அய்யோ பாவ்ம்

  ReplyDelete
 3. வருஷ கடைசி கொலை வெறி தான் போல...!!
  எப்பிடி அஸ்கு லஸ்க்கா பதிவு போடலாம்னு விக்கி அண்ணன்கிட்டே கேட்டு தெரிஞ்சுகிங்க ஆமா

  ReplyDelete
 4. வணக்கம் அண்ணை,

  தீய எண்ணங்கள் சில நேரங்களில் மனிதர்களைப் பாரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதனை இந்தக் கதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.

  ReplyDelete
 5. விளையாட்டு வினை ஆகிருச்சு.. ரெண்டு பேர் வாழ்க்கை போனது மட்டுமல்ல அந்த இரண்டு குடும்பங்களும் எவளவு வேதனை பட்டு இருப்பார்கள்.........

  ReplyDelete
 6. அருமையான பதிவு!!

  ReplyDelete
 7. அருமையான விழிப்புணர்வு கதை....

  ReplyDelete
 8. அட தென்டிகளா இப்பிடியாடா விளையாடுவாங்க...?

  ReplyDelete
 9. விளைட்டுல ரெண்டு பேர் வாழ்க்கை போச்செடா...?

  ReplyDelete
 10. வணக்கம்,விக்கி சார்!அருமையான திகிலூட்டும் கதையை சந்தடி இல்லாமல் சொல்லி,ஒரு "கொசுறு"ம் குடுத்திருக்கீங்க பாருங்க,ரியலி கிரேட்!

  ReplyDelete
 11. திகில் கதை மாதிரி பரபரப்பா படிச்சேன். உண்மை சம்பவம் மனசு கஷ்டமாச்சி மாம்ஸ்

  ReplyDelete
 12. மாம்ஸ், கடைசியில திருப்பம் வரும்னு எதிர்பார்த்தேன்... ஆனா இம்புட்டு கொடுமையா இருக்கும்னு நெனைக்கல...

  ReplyDelete
 13. பரிதாபகரமான முடிவு .நிஜக் கதை மனதைக் கனக்க வைத்தது .மிக்க நன்றி பகிர்வுக்கு .மலரும் புத்தாண்டு
  அனைவர்க்கும் மகிழ்வு தரும் ஆண்டாக மலர வேண்டும் .

  ReplyDelete
 14. மனது கனமானது இந்த பதிவால்

  ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 15. எல்லாம் முடிஞ்சு கடைசியில அறிவுரை அல்ல நிகழுரை சொன்னது டாப்பு..

  ReplyDelete
 16. மாம்ஸ்,இது புது வருஷத்துக்கு பயம் காட்டுற மாதிரி இருக்கு...

  ReplyDelete
 17. வருஷ கடைசி ராத்திரி வீட்டுக்குள்ளய சூதானமா இருந்துக்கனும் போல!

  ReplyDelete
 18. மனம் நெகிழ்ந்தது! நன்றி நண்பரே!
  தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி