விக்கியின் நினைவலைகள் - 500வது பதிவு!

வணக்கம் நண்பர்களே...

என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்...

என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) அனைவருக்கும் நன்றி.

என் இனிய சொந்தங்களே...இந்த விக்கி இதுவரை கிறுக்கிய பதிவுகளின் எண்ணிக்கை 500 ஐ தொட்டது உங்களால் தான்..!

என்னை போன்ற மாக்கானையும் உங்கள் அன்பால் கட்டிப்போட்ட இந்த பதிவுலகிற்கு என் நன்றிகள்!என்னுடைய(சுய திமிர் அலைஸ் அகந்தை எனக்கொள்க!) பதிவுகள் என்னை சுற்றியும், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை நான் பார்க்கும் பார்வையில் மட்டுமே இருக்கிறது...இதன் மூலம் பல நண்பர்களை பெற்று இருக்கிறேன்...பலருடன் முரண் பட்டு இருக்கிறேன்..என்னை பொறுத்தவரை ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு விஷயத்திலும் வேறு படுகிறது...


ஒருவர் சொல்வதை மற்றவர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று இல்லை...எதிர் கருத்துக்கள் மூலம் பல விஷயங்களில் தெளிவு பிறக்கும்..என்னால் முடிந்தவரை சினிமா விஷயங்களை தொடராமல் எழுத முயற்சிக்கிறேன்..


நாம் காணும் ஒலி,ஒளி காட்சிகளை பலரும் கண்டு களிக்க வேண்டும் என்ற ஒரு நப்பாசையில் தான் கிச்சிளிக்காஸ் என்பதை பதிகிறேன்...


கடந்து வந்த பாதையில் எவ்வளவோ நண்பர்களை என்னால் காண முடிந்தது..ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை கொண்டோரே...


என்னை பொறுத்தவரை பதிவுகள் எழுதிக்கொண்டு இருப்பது மூலம் தினமும் ஒரு புத்துணர்ச்சி பெறுகிறேன்...அதன் மூலம் மனசு லேசாகிறது...நண்பர்களை கேட்டுக்கொள்வதும் இதை சார்ந்தே...உங்களை நீங்கள் Refresh செய்து கொள்ள வேண்டும் என்றால் அடிக்கடி பதிவிடுங்கள்...அது உங்களை மேலும் உறுதிப்படுத்தும் இது என் தாழ்மையான வேண்டுகோள்... 


நமக்கு கிடைத்த அரிய விஷயம் இணையம்...இதை வைத்து அன்பை வளர்ப்போம்...மகிழ்ச்சியை பெருக்குவோம்...தாக்குதல் குறைப்போம்..உள்குத்துகள் நல்ல விஷயங்களை நோக்கி மட்டுமே இருக்கட்டும்..!(உள்குத்துகள் தொடரும்!)


ஒரு நாட்டை காப்பாற்ற எல்லையில் நிற்கும் வீரனுக்கு ஆசிர்வாதம் அந்த நாட்டில் உள்ள அனைத்து விதமான மனிதர்களே...இதில் இந்து, கிறித்துவன், முஸ்லீம் என்ற பாகு பாடு இல்லை...


படைவீரனை பொறுத்தவரை அவை உயிர்கள் அவற்றை காப்பாற்றுவது அவனுடைய கடமை...அதை விடுத்து இவர் என் மதத்தவர் எனவே இவரை தான் முதலில் காப்பாற்றுவேன் என்று எந்த நாட்டு வீரனும் சொல்லுவதில்லை..


அவரவர் வழி அவரவர்க்கு உகந்தது..அதை பழிப்பது என்பது நம்மை நாமே அசிங்கப்படுதிக்கொள்வதர்க்கு சமம்..


என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து  செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.

இந்த விஷயங்களை உலகில் எங்கோ இருந்தும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். என்னை என்றும் அன்புடன் அரவணைக்கும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்..


நாம் இங்க வரும்போது ஒன்றும் கொண்டுவர வில்லை...போகும்போதாவது அவன் அன்பானவன் அனைவருக்கும் பொதுவானவன் என்ற அன்பை பெற்று செல்வோமாக..நன்றி..!


கொசுறு: இன்றைய பொழுது நம்மோடு...அழகை ரசிக்க மறக்காதே, ருசிக்க நினைக்காதே!..நீ இம்மண்ணை விட்டு போகும்போது உனக்காக வருந்த உன் சொந்தம் தவிர்த்து நாலு பேராவது விட்டுச் செல்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

51 comments :

 1. >>.உள்குத்துகள் நல்ல விஷயங்களை நோக்கி மட்டுமே இருக்கட்டும்..!(உள்குத்துகள் தொடரும்!)

  hi hi hi ஹி ஹி ஹி இதை நீ சொல்றே?

  ReplyDelete
 2. >>நாம் இங்க வரும்போது ஒன்றும் கொண்டுவர வில்லை...போகும்போதாவது அவன் அன்பானவன் அனைவருக்கும் பொதுவானவன் என்ற அன்பை பெற்று செல்வோமாக..நன்றி..!


  கொசுறு: இன்றைய பொழுது நம்மோடு...அழகை ரசிக்க மறக்காதே, ருசிக்க நினைக்காதே!..நீ இம்மண்ணை விட்டு போகும்போது உனக்காக வருந்த உன் சொந்தம் தவிர்த்து நாலு பேராவது விட்டுச் செல்!

  பயபுள்ள தத்துவம் எல்லாம் சொல்லுதே?

  ReplyDelete
 3. இதுல இருந்து விக்கி அண்ணன் சிபி அண்ணனுக்கு சொல்லுறது என்னன்னா "ஓவர் வெளிப்படையா பேசுறது ஒடம்புக்கு ஆகாது".............!

  ReplyDelete
 4. விரைவில் 1000 தொட தம்பியின் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 5. ??>>>>Azhagesan Jayaseelan said...

  இதுல இருந்து விக்கி அண்ணன் சிபி அண்ணனுக்கு சொல்லுறது என்னன்னா "ஓவர் வெளிப்படையா பேசுறது ஒடம்புக்கு ஆகாது".............!

  என்னை அண்ணா என்றழைப்பதை தவிர்க்கவும், மீ யூத் ஹி ஹி

  ReplyDelete
 6. >>Azhagesan Jayaseelan said...

  விரைவில் 1000 தொட தம்பியின் வாழ்த்துக்கள்...!

  500லயே பலரை ஆட்டம் காண வெச்சுட்டான், 1000? உலகம் அழிஞ்சிடும்

  ReplyDelete
 7. 500வது பதிவுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்
  நான் விரும்பித் தொடர்கிற பதிவுகளில்
  தங்கள் பதிவு முதன்மையானது
  தங்களது காணொளிகள்தான் எனது முதல் விருப்பம்
  தொடர்ந்து பதிவுகள் தர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மாப்ள வாழ்த்துக்கள், ஐநூறு விரைவில் ஆயிரமாகட்டும்.

  ReplyDelete
 9. வணக்கம் அண்ணே,

  உங்களின் ஐந்நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்தும் பல சுவாரஸ்யமான பதிவுகளால் எம்மை மகிழ்வித்து, சமூகத்தின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டிட வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 10. Innum eppadi ungalai
  thuukkama
  irukkanuga...

  ReplyDelete
 11. ஐநூறு கண்ட எங்கள் மாமஸ்...க்கு
  மாப்பிளையின் இரண்டாவது வாழ்த்து!
  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
  அவர் மேலும் பல உள்குத்துகளையும்...
  கிச்சிளிக்கான்ஸ்களையும் வியட்நாம் அனுபவங்களையும் படைத்து..நம்மை மகிழ்வித்ததுக்கு..நன்றிகள்...

  ReplyDelete
 12. 500 பதிவுகள் வாழ்த்துக்கள்

  மாம்ஸ் கருத்துக்கள் மாப்ளக்கு . பிடிச்சிருக்கு முக்கியமாக:

  //ஒரு நாட்டை காப்பாற்ற எல்லையில் நிற்கும் வீரனுக்கு ஆசிர்வாதம் அந்த நாட்டில் உள்ள அனைத்து விதமான மனிதர்களே...இதில் இந்து, கிறித்துவன், முஸ்லீம் என்ற பாகு பாடு இல்லை...//

  சரியாய் சொன்னிங்க.


  //அவரவர் வழி அவரவர்க்கு உகந்தது..அதை பழிப்பது என்பது நம்மை நாமே அசிங்கப்படுதிக்கொள்வதர்க்கு சமம்.//

  அதே அதேதான்.

  //என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து//.

  வரவேண்டும்...வருவார்கள்... பிராத்திப்போம்.

  //நாம் இங்க வரும்போது ஒன்றும் கொண்டுவர வில்லை...போகும்போதாவது அவன் அன்பானவன் அனைவருக்கும் பொதுவானவன் என்ற அன்பை பெற்று செல்வோமாக//

  சபாஷ்.

  ReplyDelete
 13. 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் 1000 , 2000 என தொடரட்டும் உங்கள் பணி.


  //என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து. //

  உங்கள் சேவை, நாட்டுக்கு தேவை, வாங்க வாங்க சீக்ரம் குதிங்க அரசியல்ல..

  அரசியல்வாதி ஆகறது இந்தியா லதானே!!! வியட்நாம் ல இல்லையே!!!!!!!!!!!!

  ReplyDelete
 14. 500 பதித்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.//

  எனக்கும் சீட் உண்டு என்பதால், நானும் அரசியல் சாக்கடையை தூர் வார ரெடியாகி கொண்டு இருக்கிறேன்...!!!

  ReplyDelete
 16. டேய் ஒரு நாளைக்கு பத்து பதிவு உள்குத்தோடு போட்டா பத்தாயிரத்தை சீக்கிரம் தொட்டுரும் போ....

  ReplyDelete
 17. சி.பி.செந்தில்குமார் said...
  ??>>>>Azhagesan Jayaseelan said...

  இதுல இருந்து விக்கி அண்ணன் சிபி அண்ணனுக்கு சொல்லுறது என்னன்னா "ஓவர் வெளிப்படையா பேசுறது ஒடம்புக்கு ஆகாது".............!

  என்னை அண்ணா என்றழைப்பதை தவிர்க்கவும், மீ யூத் ஹி ஹி//

  ஆகிர்ர்ர்ர் த்தூ த்தூ.....

  ReplyDelete
 18. எனக்கு பிடித்தவை said...
  500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் 1000 , 2000 என தொடரட்டும் உங்கள் பணி.


  //என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே. அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து. //

  உங்கள் சேவை, நாட்டுக்கு தேவை, வாங்க வாங்க சீக்ரம் குதிங்க அரசியல்ல..

  அரசியல்வாதி ஆகறது இந்தியா லதானே!!! வியட்நாம் ல இல்லையே!!!!!!!!!!!!//

  ஆமாடா விக்கி எனக்கும் மைல்டா ஒரு டவுட் இருந்துச்சு ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 19. நல்லாயிருடே மக்கா வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. மாம்ஸ் வாழ்த்துக்கள்.....


  இனி வாரம் ரெண்டு உள்குத்து பதிவு போடபோறதா கேள்விப்பட்டேன், உண்மையா?

  ReplyDelete
 21. வணக்கம் மாம்ஸ்

  500 ஆவது ப்திவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. //நாம் இங்க வரும்போது ஒன்றும் கொண்டுவர வில்லை...போகும்போதாவது அவன் அன்பானவன் அனைவருக்கும் பொதுவானவன் என்ற அன்பை பெற்று செல்வோமாக..நன்றி..!//

  மிகச் சரியா சொன்னீங்க மாம்ஸ்

  ReplyDelete
 23. வாழ்த்துகள் விக்கி..கொசுறு செய்தியும் சிறப்பு.

  ReplyDelete
 24. // என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். //

  யோவ் என்னய்யா டிபிக்கல் அரசியல்வாதி மாதிரியே பேசுறீர்...

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் விக்கி... நானெல்லாம் வருஷக்கணக்குல எழுதியும் இன்னும் இருநூறு கூட தாண்டலை...

  ReplyDelete
 26. 500 அடித்ததற்கு வாழ்த்துகள் மாம்ஸ்.

  ReplyDelete
 27. //டேய் ஒரு நாளைக்கு பத்து பதிவு உள்குத்தோடு போட்டா பத்தாயிரத்தை சீக்கிரம் தொட்டுரும் போ....//

  உள்குத்து உலகநாயகன் விருதை விக்கிக்கு தருவதில் பெருமை அடைகிறோம்.

  ReplyDelete
 28. 500வது பதிவுக்கு வாழ்த்துகக்ள் பாஸ்

  நான் சில நாட்களுக்கு முன்பே எதிர் பாத்திருந்தேன் நீங்கள் 500வது பதிவாக என்ன எழுதுவீர்கள் என்று சிறப்பான நல்ல அறிவுரைகளை சொல்லியுள்ளீர்கள்

  மேலும் நீங்கள் பல நூறு பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் விக்கி அண்ணே!!!
  ஆயிரம் போடுங்க...போடுங்கன்னு எல்லாரும் வாழ்த்துரான்களே?
  அதுக்கு நாம எம்புட்டு கஷ்டப்படணும்னு உங்களுக்கு தானே தெரியும் பாஸ் :P

  ReplyDelete
 30. /////Philosophy Prabhakaran said...
  வாழ்த்துக்கள் விக்கி... நானெல்லாம் வருஷக்கணக்குல எழுதியும் இன்னும் இருநூறு கூட தாண்டலை...\\\\\

  பிரபா நீங்க சச்சின் மாதிரி.......
  தல விக்கி சேவாக் மாதிரி ............

  ReplyDelete
 31. 500க்கு வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் மாப்ள..

  அப்புறம் அந்த கொசுறு தத்துவம் சூப்பர்..

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் மாம்ஸ்! தொடர்ந்து தாக்குங்க! :-)

  ReplyDelete
 34. வாழ்த்துகள்.....

  ReplyDelete
 35. மாமா,வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது...

  ReplyDelete
 36. 500வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாம்ஸ்.

  ReplyDelete
 37. வணக்கம் விக்கி சார்!ஐநூறு கண்ட பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்!அரசியல் வாதியாக?ப் பரிணாமம் எடுக்க இருப்பதற்கும்(மாட்ன ராசா)வாழ்த்துக்கள்,ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
 38. 500 வது பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. உங்கள் எழுத்துக்களின் வசீகரம், ஐநூறு என்ன ஆயிரமாய் விரைவில் மலரும். அத்தனையையும் பதிவுலகம் மகிழ்வோடு தொடரும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. // சி.பி.செந்தில்குமார் said...

  என்னை அண்ணா என்றழைப்பதை தவிர்க்கவும், மீ யூத் ஹி ஹி//

  நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதாம்.

  ReplyDelete
 41. //நமக்கு கிடைத்த அரிய விஷயம் இணையம்...இதை வைத்து அன்பை வளர்ப்போம்...மகிழ்ச்சியை பெருக்குவோம்...//
  அரிய விஷயம். அதை நல்ல வழியில் பயன்படுத்துவோமென்ற எண்ணம் சிறந்தது. நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. 500 ஆவது பதிவுக்கு முதலில் வாழ்த்துகள் . தொடருங்கள் எழுதத் தொடங்கியவர்கள் எழுத்தை நிறுத்த முடியாது . நிறுத்தவும் கூடாது . உங்கள் பதிவுகளால் பலர் பயன் பட வேண்டும்.

  ReplyDelete
 43. நமக்கு கிடைத்த அரிய விஷயம் இணையம்...இதை வைத்து அன்பை வளர்ப்போம்...மகிழ்ச்சியை பெருக்குவோம்.../

  இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 44. 500வது பதிவுக்கு
  மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. நூறுகளை கடந்து பல்லாயிரம் பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 46. பதிவுக்கு வந்திருந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்...!

  ReplyDelete
 47. நான் இப்பதான் 250 ஆவது பதிவை கடந்தேன்.நீங்கள் 500 ஆவதை தொட்டிருப்பது எனக்கு மேலும் ஊக்கமளிக்கும். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
  ஐ போன்,ஐ பாட் களை எந்த கணிணியிலும் Pendrive ஆக பயன்படுத்த iExplorer இலவச மென்பொருள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி