பேச்சுலர் (BA - 2) - சென்னை to திண்டிவனம்!~

வணக்கம் நண்பர்களே...பேச்சி துணைக்கு ஆளில்லாத இளங்காளைகளை(!) பேச்சுலர் என்று அழைப்பது வாடிக்கை...நிகழ்ச்சிக்கு போவோமா...

ஏன் மாப்ள...என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட...

அத ஏன்டா கேக்குற...இன்னைக்கு சனிக்கிழம மீட்டிங்குன்னு சொன்ன GM திடீர்ன்னு பொண்டாட்டி கிட்ட இருந்து போன் வந்ததும் பதறி அடிச்சிட்டு ஓடிட்டாரு...அதான்...அது சரி நீ எப்படி இவ்ளோ சீக்கிரமா..

இன்னைக்கு லோடு இல்லன்னு சொல்லிட்டாங்க...அதான்..

(சதா வருகிறான்...இவன் ஒரு கார் ட்ரைவர்!)

டேய் ராஜேஷ் நல்ல வேல வீட்ல இருந்த..சரி வா பாண்டிச்சேரி வரைக்கும் ஒரு வேலை போயிட்டு வந்துருவோம்...

என்னா அப்படி ஒரு வேலை...?

ஒன்னும் இல்ல முதலாளியோட பொருள்களை கட்டி வச்சி இருக்காங்க போய் எடுத்துட்டு வரணும்...வாயேன் சும்மா தானே இருக்க...நைட்டு சரக்கும் ..பிரியாணியும் வாங்கித்தாரேன்...வரியா...!

டேய் எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு...

என்னது அது?

தூங்கனும்...இந்த வாரம் சரியாவே தூங்கல...


அடச்சீ வா நாளைக்கு ஞாயித்து கிழமைதானே...வா போயிட்டு வந்துடுவோம்...

போற வழியில் மாறனையும் சேர்த்து கூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்...

ஏன்டா இப்போ கெளம்பறோம்...எப்ப வருவோம்...மணி இப்பவே 9 ஆச்சி...

அட வாடா...

(போகும்போது பிரியாணியை மொக்கி விட்டு சென்றார்கள்...பாண்டியில் இருந்து திரும்பு வழியில்...திண்டிவனம் அருகில்...இரு ஒட்டி இருந்த தென்னை மரங்கள் இருந்த இடத்தில ஹை வேயில் காரை நிறுத்தினான் சதா...!)

டேய் இங்க எதுக்கு வண்டிய நிறுத்தறே....

ஹிஹி...எனக்கு கக்கா(!) போகணும் நானும் மாறனும்(!) போயிட்டு வாறோம்...நீ இங்கயே இரு...15 நிமிஷத்துல வந்துடுவோம்....

டேய் எனக்கென்னமோ நீங்க வேற எதோ காரணத்துக்காக போறாப்ல தெரியுது...நல்லதுக்கில்ல சொல்லி புட்டேன்...

இருடா வந்துடறோம்...

(கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ் பேட்ரோல் எதிர் வாடையில் சென்றது...சுரீர் என்று உறைத்தவனாக காருக்கு முன் சென்று கேபினெட்டை துறந்து கொண்டு நின்றான் ராஜேஷ்!..ஜீப் திரும்பி வந்தது அங்கு...)

டேய் தம்பி இங்க என்ன பண்றே...

ஒன்னுமில்லீங்கய்யா...கார்ல ரேடியேட்டர் தண்ணி தீந்து போச்சிங்க...அதான் ட்ரைவர் தண்ணி கொண்டார போயி இருக்காருங்க...

அப்படியா...சரி பாத்துக்க...சீக்கிரம் கெளம்பிடு..இந்த இடம் ஒரு மாதிரி...பாத்துப்பா!

(அந்த போலீஸ் மனிதரின் அட்வைஸ் அவனுக்கு புரிந்தது!)

கொஞ்ச நேரத்தில் அடித்து பிடித்து ஓடி வந்து கொண்டு இருந்தார்கள் அந்த இரு நண்பர்கள்...!

ச்சீ உங்க கூட நட்பு வச்சிகிட்டதுக்கு எனக்கு அசிங்கமா இருக்குடா....

டேய் இப்போ என்னா நடந்துடுசின்னு இப்படி பேசுறே...

ஏன்டா...வேசிகிட்ட(!) போகத்தானே இங்க வண்டிய நிறுத்திட்டு போனீங்க....

 டேய் வீட்டுக்கு போய் பேசிப்போம்...

இல்ல இனி உங்க கூட சங்காத்தமே வேணாம்..என்னைய தேடி ரூம்பக்கம் வந்துடாதீங்க...செருப்பால அடிப்பேன்...

(அவர்கள் அப்படியே உறைந்து நின்றார்கள்...ராஜேஷ் நடந்து போய் அடுத்த பஸ் ஸ்டாப்பில் நின்றான்..கொஞ்ச நேரத்தில் வந்த அந்த பஸ்ஸை பிடித்து கிளம்பினான்!)

கொஞ்ச வருடங்களில் ஒரு நண்பனை மருத்துவமனையில் பார்த்து தேம்பி தேம்பி அழுதான்...ராஜேஷ்!

(அன்று அங்கு போன அந்த இரு நண்பர்களுக்கும் எயிட்ஸ் தாக்கி இருந்தது...!)

கொஞ்ச காலம் கழித்து...


ஒருவன் தற்கொலை புரிந்து கொண்டான்...ஒருவன் எங்கு இருக்கிறான் என்று ராஜேஷுக்கு தெரியவில்லை!...

கொசுறு: நண்பர்களே...சில நிமிட சுகத்துக்காக உங்கள் அரிய வாழ்கையை இழந்து விடாதீர்கள்...தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. உயிரை ,கற்பைக் காப்பாற்றும் பதிவு !சூப்பர் மாம்ஸ்!

  ReplyDelete
 2. >>நண்பர்களே...சில நிமிட சுகத்துக்காக உங்கள் அரிய வாழ்கையை இழந்து விடாதீர்கள்...தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!

  கேட்சிங்க் லைன்ஸ்

  ReplyDelete
 3. // சில நிமிட சுகத்துக்காக உங்கள் அரிய வாழ்கையை இழந்து விடாதீர்கள்...தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்! //

  இதுதான் டாப்  செல்லக் குட்டி பிறந்தநாள்

  ReplyDelete
 4. ////கொசுறு: நண்பர்களே...சில நிமிட சுகத்துக்காக உங்கள் அரிய வாழ்கையை இழந்து விடாதீர்கள்...தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!////

  நல்ல அட்வைஸ் பாஸ்

  ReplyDelete
 5. அருமையான பதிவு. அவசரக்காரர்கள் படிக்கவேண்டியது

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு

  ReplyDelete
 7. //தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!//

  இதை பெரும்பாலானவர்கள் யோசிக்க தவறுகின்றனர்... நியுட்டனின் மூன்றாம் விதி தான் ஞாபகம் வருது...

  ReplyDelete
 8. அருமை மாம்ஸ் சூப்பர் அட்வைஸ்

  ReplyDelete
 9. அவசரக்காரர்களே ஆணுறை மறந்து விடாதீர்கள்.....!!!

  ReplyDelete
 10. சில நிமிட சுகத்துக்காக உங்கள் அரிய வாழ்கையை இழந்து விடாதீர்கள்...தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!//

  நல்ல அட்வைஸ் மக்கா....!!!

  ReplyDelete
 11. டேய் உனக்கும் தமிழ் பத்துக்கும் என்ன பிரசினை...? நான்தான் பஞ்சாயத்து பண்ணி சேர்த்து வச்சிருக்கேன் ராஸ்கல்...

  ReplyDelete
 12. சிறு மாற்றங்களுடன் மீண்டும் பாருங்கள்.கண்டுபிடியுங்கள் பிரபல பதிவர்களைhttp://www.thothavanda.blogspot.com/2011/12/blog-post_21.html

  ReplyDelete
 13. அன்பு நண்பரே வணக்கம்!

  உரையாடல் வடிவில் அமைந்த உங்கள் பதிவும், அதன் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும் அழகாக இருந்தது! ஒவ்வொருவரும் இது பற்றிச் சிந்திப்பார்களாக!

  உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  அன்புடன் ஈழவயல்

  ReplyDelete
 14. மாம்ஸ் வழக்கம் போல பதிவின் இறுதியில் டச், சோக வரிகள்...

  ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை நேசித்தாலே போதும். நோயை வெல்லலாம்.


  வாசிக்க:
  ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

  ReplyDelete
 15. கடைசி வரி எந்த படத்திலிருந்து எடுத்தது மாம்ஸ்!

  ReplyDelete
 16. /தன்னுடைய எதிர்கால மனைவி கற்புடையவளாக வரவேண்டும் என்று நினைப்பவர்களே...முதலில் நீங்கள் கற்ப்பு உடையவர்களாக இருங்கள்!
  //

  100 % உண்மை

  ReplyDelete
 17. இன்றைக்கு தேவையான சிறந்த பதிவு பாராட்டுகள் நன்றி ...

  ReplyDelete
 18. மாப்பு..கொசுறு செய்தி டாப்பு..

  வரவை எதிர்பார்க்கிறேன்..

  செத்தபின்புதான் தெரிந்தது..

  ReplyDelete
 19. எய்ட்ஸ் விழிப்புணர்வு இல்லையென்றால்...
  நாம் மட்டுமல்ல நம்முடைய
  மனைவியும் பாதிக்கப்படக்கூடும்...

  ReplyDelete
 20. அருமை
  பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 21. சிறந்த பதிவு.பகிர்விற்கு நன்றி!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி